டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது!!
டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரு இலங்கையர்கள் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயிலிருந்து மும்பை வழியாக நேற்று கோவா பனாஜி விமான நிலையத்தை...
யாழில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் மீது தாக்குதல் : ஆட்டோ எரித்து சாம்பல்!!
யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கபட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது.
பண்ணைப்பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சுயேட்சை...
தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது..!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 5 படகுகளுடன் நேற்று (18) இரவு காங்கேசன்துறை வடக்கு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டதாக...
வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும் வாக்களிக்கலாம்!!
வடமாகாண சபைத் தேர்தலில் உங்களுக்குரிய வாக்காளர் அட்டை இது வரையில் கிடைக்கவில்லையா? அப்படிக் கிடைக்காவிட்டாலும் கூட உங்கள் தேசிய அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்க முடியும்.
தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் தற்காலிக அடையாள...
வடமாகாணசபைத் தேர்தலை நிறுத்துமாறு கோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றில்!!
வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து இன்றைய தினம் உயர் நீதிமன்றில் விசாரணை நடைபெறவுள்ளது.
வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்...
தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!!
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று(18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இவ்வேளை தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும்...
இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!!
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கடலோர இந்திய கடலோர பொலிஸார் கைது செய்து படகினை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி பகுதியில் உள்ள கடலோர காவல் படையினர் கமாண்டோ ஆனந்த...
இலங்கையில் 25 வீத பெண்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்!!
இலங்கைப் பெண்களில் 25 வீதமானவர்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுகாதார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள எத்தனிக்கும் நபர்கள் ஏதேனும் ஓர் வகையிலான உளவியல்...
இலங்கை குறித்த பயண எச்சரிக்கையை நீடித்தது பிரித்தானியா!!
பிரித்தானியாவின் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தும் பேணப்பட்டுள்ளன. இறுதியாக பிரித்தானியா தமது பயண அறிவுறுத்தலை கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி மீளாக்கம் செய்துள்ளது.
இதில் புதிதாக...
பூநகரியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் : சந்தேக நபருக்கு மரபணு பரிசோதனை!!
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபரை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டார்.
பூநகரி பிரதேசத்தில் பனையோலை வெட்டச்...
ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு, மேலும் ஒருவரை காணவில்லை!!
ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை கடற் பகுதிக்கு குளிக்கச் சென்று காணாமற்போன நால்வரில் இரு மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நீரில் மூழ்கி காப்பாற்றப்பட்ட நிலையில் மாணவர் ஒருவர்...
வவுனியா இளைஞர் மன்னாரில் தூக்கிட்டு தற்கொலை..!
மன்னார் அடம்பன் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
27 வயதான சத்தியதேவா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், மன்னாரில் குடும்பத்தினருடன் தற்காலிகமாக வசித்து வந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக மனுத் தாக்கல்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது...
இலங்கையை பிளவுபடுத்த இந்தியா அனுமதிக்காது – ஜனாதிபதி..!
இலங்கையை இரண்டாக பிளவுபடுத்தும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ´ஹிந்துஸ்தான் ரைம்ஸ்´ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது செவ்வியில்,
வடமாகாண சபைத் தேர்தல்...
தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கக் கூடும் : கபே அச்சம்!!
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருப்பதாக கபே இயக்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு விடுவிப்பு..!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் வவுனியா நகர்ப்பகுதியில் நேற்று மும்முரமாக இடம்பெற்று வந்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) நேற்றையதினம் வவுனியா நகரெங்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில்...




