வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு திரு.க.சந்திரகுலசிங்கம் அவர்களினால் புத்தகப் பைகள் அன்பளிப்பு!!(படங்கள்)

கோவில்குள இளைஞர் கழகத்தின் மற்றுமொரு செயற்திட்டமாக இளைஞர் கழக ஸ்தாபகரின் நெறிப்படுத்தலில் வவுனியா சாந்தசோலை கலைவாணி முன்பள்ளிக்கு ஒருதொகை புத்தகபைகள் நேற்று முன்தினம் அன்பளிப்பு செய்யபட்டது. இவ் நிகழ்வில் கருத்து தெரிவித்த புளொட் அமைப்பின்...

ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இனம் படத்தில் இருந்து நீக்கம் : இயக்குனர் லிங்குசாமி!!

இனம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குனர் என். லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. அன்புள்ள தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள். இலங்கைத் தமிழர்களின்...

மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள், ஆசனங்கள் விபரம்!!

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி இரண்டு மாகாணங்களிலும் ஆளும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. மேல் மாகாண சபை தேர்தலில் வெற்றியடைந்த கட்சிகள் பெற்ற...

வவுனியாவில் பிரபல பாடசாலையின் உயர்தர மாணவனும் மாணவியும் விசம் அருந்தி, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

வவுனியாவில்  பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் வீட்டில் ஏற்பட்ட காதல் தகராறு காரணமாக நேற்று முன்தினம் விசம் அருந்தியுள்ளார். விசம் அருந்திய மாணவி தான் விசம் அருந்திய தகவலினை தொலைபேசியில்...

இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் வாகன விபத்தில் காயமடைந்தவரைப் பார்த்த அதிர்ச்சியில் மரணம்!!

இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் வாகன விபத்தில் காயமடைந்தவரைப் பார்த்த அதிர்ச்சியில் திடீரென மரணமடைந்துள்ளார். நேற்று முற்பகல் புத்தளம் - குருநாகல் வீதியில் கெப் வண்டியில் சென்ற பிரித்தானிய பிரஜையின் வாகனம் மோதி...

வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த தாய்!!

குடும்ப வறுமை காரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப்...

வவுனியா சிறுவர் இல்லம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் விளக்கம்!!

வவுனியா சிறுவர் இல்லம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான உத்தியோகபூர்வமாக சிறுவர் இல்ல நிர்வாகத்தினர் மூலம் வவுனியா நெற் இணையத்தளத்திற்கு கிடைக்க பெற்ற செய்தி வருமாறு.. எமது சிறுவர் இல்லம் தொடர்பாக வெளிவந்த...

வவுனியா தமிழ் மாமன்றத்தின் “இயல் விழா 2014″ வவுனியா நெற் இணையத்தினூடாக நேரடி ஒளிபரப்பு!!

வவுனியா தமிழ் மாமன்றம் பெருமையுடன் நடாத்தும் இயல் விழாவில், உலக அளவில் பிரசித்தி பெற்ற சிறந்த பேச்சாளரும், அகில இலங்கை கம்பன் கழகத்தினுடைய ஸ்தாபகருமான, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக...

மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு!!

காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் பாகம் ஒன்று இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நியுசிலாந்தின் விமானம் ஒன்று இதனை கண்டுபிடித்த நிலையில், ஐந்து விமானங்கள் இதனை உறுதிப்படுத்தி இருப்பதாக...

திருச்சி விமான நிலையத்தில் கொழும்பு பெண்கள் இருவர் கைது!!

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.20 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கொழும்பைச் சேர்ந்த இரு பெண்களிடம் விசாரணை நடந்து வருகின்றது. கொழும்புவிலிருந்து பிற்பகல் 3...

மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன் : பிள்ளைகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்தலாம் என்பதால் கொலை செய்த தாய்!!

தனது மகள்மார் வளர்ந்தபின் அவர்களை தனது கணவர் விபசாரத்தில் ஈடுபடுத்தக் கூடும் என்ற அச்சத்தில் சிறுமிகளான அவர்களை தாயொருவர் படுகொலை செய்த விபரீத சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பல்கீஸ் பீபி...

ஒபாமாவிடம் கதறிய சவுதி மன்னரின் முன்னாள் மனைவி!!

சவுதி மன்னரின் முன்னாள் மனைவி தனது மகள்களை மீட்டுத்தருமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் சவுதி அரேபிய அரண்மனையில் தனது 4...

பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓவியம்!!

அமெரிக்காவில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட பெண்ணின் உயிரை ஓவியம் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள ஓசோ என்ற இடத்தில் கடும் மழை காரணமாக சில நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது....

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் உறவினர்களினால் கடந்த 21ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

அதிமுகவில் இணைந்த நடிகை ஆர்த்தி!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அதிமுகவில் இணைந்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கனவே சில சினிமா நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நடிகையும்,...

சில்மிஷம் செய்த நபரை கன்னத்தில் அறைந்த நக்மா!!

தவறாக நடக்க முயன்ற காங்கிரஸ் தொண்டரை நடிகை நக்மா தாக்கியுள்ளார். நடிகை நக்மா உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஏராளமான கூட்டம் கூடுகிறது....