சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபுகார்த்திக், சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்திருக்கிறார்.
இரு தினங்களுக்கு முன் பெரியமேடு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்த பிரபு கார்த்திக், ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக தற்கொலை செய்துகொள்ளப்போவது குறித்து பேசி வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த அவர், புடவையால் தூக்கை தயார் செய்து அதனுடன் செல்பி எடுத்து, அதனையும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.
அதிர்ச்சியான நண்பர்கள் அவரை போனில் அழைத்தபோது பிரபு கார்த்திக் எடுக்காததால் விடுதிக்கு ஓடிச் சென்று அறைக்கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்படாத நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அங்கு பிரபு கார்த்திக்கின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. பிரபுகார்த்திக் தனது தாய்மாமன் மகளை காதலித்து வந்தார் என்றும் கடந்த மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படும் நிலையில், அந்த சோகத்தில் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலின் ஆறாவது மாடியிலிருந்து அழகி குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் குங்குன் உபாத்யாய்.
மாடல் அழகியான இவர் ரத்தனாடா பகுதியில் நட்சத்திர விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளார். அப்போது, விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து கொண்டு அவரது தந்தைக்குப் போன் செய்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும்,
உங்கள் முகத்தைப் பார்க்க ஆசையாக இருக்கிறது எனக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் போலிஸார் குங்குன் தங்கியிருந்த விடுதியை கண்டுபிடித்து வருவதற்குள் அவர் ஆறாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரை விடுதி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மாடல் அழகியான குங்குன் சுயநினைவு திரும்பிய பிறகே அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி கோவிந்தன் (27) என்பவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு அடுத்தடுத்து மூன்று மாதம் கீர்த்திகாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் மனமுடைந்த கீர்த்திகா கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனைவி இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்த ஹரி கோவிந்தன் சக நண்பர்களிடம் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், கீர்த்திகா இல்லாத உலகத்தில் தான் எப்படி வாழ்வது என்றும் மன வேதனையோடு கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் கீர்த்திகா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்ற ஹரி கோவிந்தன் கீர்த்திகாவின் ஆவி தனது உடலில் பற்றிக் கொண்டதாகவும்,
அதனால் கீர்த்திகாவின் குரலிலேயே தான் கீர்த்திகாவிடம் செல்லப் போவதாகவும் கூறி கதறி அழுதுள்ளார். இதை பார்த்த அவரது சக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து தொடர்ந்து அவர் உணவருந்தாமலும் கீர்த்திகா தன்னைப் பிரிந்து சென்றதால் அவருடனேயே செல்லப் போகிறேன் என்றும் புலம்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி ஆகியும் ஹரி கோவிந்தன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் நண்பர்கள் உறவினர்களும் ஹரி கோவிந்தனை பல இடங்களில் தேடி பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவரது வீட்டின் அருகிலுள்ள விவசாய கிணற்று பகுதியில் ஹரி கோவிந்தன் அணிந்திருந்த கைலி கிடந்துள்ளது.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் அந்த கைலியை எடுத்து பார்த்தபோது அதன் கீழே அவரது செல்போனும் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஹரி கோவிந்தன் உறவினர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றிலிருந்து ஹரி கோவிந்தனை சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து ஹரி கோவிந்தன் உடலை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எடைக்கல் போலீசார், ஹரி கோவிந்தன் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அப்போது ஹர கோவிந்தன் டைரியில் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீத்தலாவ மேல் பிரிவை சேர்ந்த 17 வயதான ஹசினிகா பிரபோதனி மாரசிங்க என்ற மாணவியே உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதல் விரக்தியால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மாத்திரைகளை பெருமளவு உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தனது காதலனின் செயற்பாடு காரணமாக விரக்தியடைந்த மாணவி உணவு எதுவும் உட்கொள்ளாமல் சில நாட்கள் இருந்துள்ளார். இந்நிலையில் தனது பாட்டி பயன்படுத்தும் நீரிழிவு, இரத்த அழுத்த மாத்திரைகளை பெருமளவில் உட்கொண்டுள்ளார்.
இதனையடுத்து மாணவி, உடனடியாக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் மெதிவக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
குறித்த யுவதி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் ஏற்பட்ட மாரடைப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நீதி வைத்திய அதிகாரி சாந்த ஹேரத் தெரிவித்தார்.
சுவிஸ்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக இலங்கை தமிழ் யுவதி சுபா உமாதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸ்லாந்தின் பிரபல நிதி நிறுவனமான ஆதா (Aadaa) நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் , முனைவர் கல்லாறு சதீஷ் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் முன்னனி பத்திரிகையின் இணைப்பிதழில் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் சிறப்பித்துள்ளது.
35 வயதான சுபா உமாதேவன், மூன்று ஆண்டுகள் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். ஜெனிவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்கள் மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான சிறப்பு முதுகலை பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.
கனடாவின் ஒட்டாவாவில் அமைந்துள்ள சர்வதேச கற்கைகள் மற்றும் நவீன மொழிகள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.
பெண் வர்த்தகர்களுக்கான சர்வதேச அமைப்பின் சட்ட ஆலோசகராக பணியாற்றி வரும் சுபா உமாதேவன், யுனைஸ்கோ அமைப்பு ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் சர்வதேச திட்டங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார். தனது புதிய பதவி தனது இதயத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் சார்ந்தது என சுபா உமாதேவன் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து இரண்டு வயதில் பெற்றோருடன் சுவிஸ் வந்த சுபா, கல்வியில் சிறந்தார்,பெற்றோரை வணங்கினார், சமூகத்தை,மனிதத்தை நேசித்துள்ளார்.
தனக்கு வாழ்வு தந்த தேசத்தை மதித்தார்.உலக மானுடத்தை நேசித்தார். பல்கலைக்கழகங்களில் இளமாணி,முதுமாணிப் பட்டங்களைப் பெற்று சுவிஸ்தேசம் போற்றும் பெண்ணாக இன்று உயர்ந்துள்ளார். தமிழ் மக்கள் நடாத்துகின்ற அதிக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
அத்துடன் , ஐந்து மொழிகளில் சரளமாக உரையாற்றும் இவர் , பல மில்லியன் பணத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
அது மட்டுமல்லாது சுபா உமாதேவன், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து சில நாடுகள் மற்றும் போராட்ட இயக்கங்களுடனான பேச்சுவார்த்தையில் இராஜதந்திரியாகக் கலந்து கொள்கிறார்.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் எமது சமூகத்திலிருந்து தோன்றிய சுபா உமாதேவன் தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் ‘தேவதை’யின் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவனின் உயரங்களைப் பேசியதானது,புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்திலும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.
இந்நிலையில் புலம் பெயர் தமிழர்களை பெருமைப்படவைத்த சுபா உமாதேவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
கனடா – அமெரிக்க எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்களை மானிடோபா பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இந்தியர்கள் எனவும், இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள்,ஒருவர் நடுத்தர வயது உடையவர், அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் என தெரியவந்துள்ளது.
ஜகதீஷ் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் எனவும்,சுமார் 65 இலட்ச ரூபாய் கொடுத்து அமெரிக்கா செல்ல முடிவு செய்து புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், கனடாவில் பனியில் உறைந்து உயிரிழந்த குடும்பத்தாரின் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பிலான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நால்வரின் உடல்களும் வின்னிபெக்கில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து வின்னிபெக்கிலேயே அவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் இவ்விடயத்தில் எந்தவொரு இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இதனிடையில், வின்னிபெக்கில் ஜகதீஷ் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இது தொடர்பான இறுதி முடிவை இந்திய உயர் ஸ்தானிகராலயம் எடுக்கும் என தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக $70,000 நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்துடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறை தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட வார இறுதி விடுமுறைக் காலத்தில் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இது குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வார இறுதி நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா செல்லும் நபர்கள் மிகுந்த சன நெரிசல் மிக்க இடங்களை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார். இலங்கையில் 15 மில்லியன் பேர் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ள போதிலும், பலர் மூன்றாம் டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என டொக்டர் ஹேரத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் சுகவீனம் காரணமாக மொனராகலை-சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி, என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொனராகலை மரக்கலையை சேர்ந்த தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை மேற்கொண்டார்.
பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (01.02.2022) மாலை 4.30 மணியளவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை வீதியூடாக ஓமந்தை பகுதி நோக்கி டிப்பர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக டிப்பர் வாகனத்தினை சாரதி திடிரேன பிரக் பிடித்துள்ளார்.
டிப்பர் வாகனத்திற்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மற்றுமொரு டிப்பர் குறித்த டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் இதனிடையே வீதிக்கு அருகே நின்ற மோட்டார் சைக்கிலும் டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கில் நின்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்பக்கமாக வந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கில் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காலி – பூஸா பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலியத்த பிரதேசத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலில் இந்த முச்சக்கர வண்டி இன்று மோதுண்டுள்ளது. பூசா பகுதியில் வைத்து இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது முச்சக்கர வண்டி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வு நேற்றைய தினம் (30.01.2022) முல்லைத்தீவு புதியநகர் புதியசூரியன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிசார்பில் பங்கேற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி என்ற யுவதி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றார்.
யுவதியினை கௌரவிக்கும் நோக்கில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றினை ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.
யுவதியின் வீட்டில் இருந்து விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். கிராமத்தில் இருந்து திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதுடன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் சிறப்பு விருந்தினராக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 நோய் காரணமாக 12 வயதான சிறுமி ஒருவர் மரணித்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக, சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், குறித்த சிறுமி அதீத நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இருந்த போதும் குறித்த சிறுமி அதிக உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், எவ்வாறாயினும் இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
உலகின் பல நாடுகள் 5 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. எவ்வாறாயினும் இலங்கையில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கவில்லை. அதற்கான விஞ்ஞானப்பூர்வ தரவுகள் பெறப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
இதேவேளை, சிறார்களுக்கு கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் எவையேனும் இருப்பின் அவர்களைப் பாடசாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அனுப்ப வேண்டாம் என்று வைத்தியர் விஜேசூரிய கோரியுள்ளார்.
மேலும் உரிய மருத்துவ ஆலோசனையின்றி, தமது பிள்ளைக்கு கொவிட் தொற்றியுள்ளதாகப் பெற்றோர் முடிவு செய்துவிட வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பதுளை – உமா ஓயா , கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில்,நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஐவரில், நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம் (29) கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், காணாமல்போன ஐந்தாவது யுவதியின் சடலம் பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான சில தகவல்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த வருடம் உயிரிழந்த ஒருவரது ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கடந்த 28 ஆம் திகதி கலந்து கொண்ட 11 பேர் சம்பவ தினம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெரண்டியல்ல, உமாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர். ஆற்றில் நீராடிவிட்டு 6 பேர் அக்கரைக்குச் சென்ற வேளையில் இளைஞர் ஒருவரும், 4 யுவதிகளும் ஆற்றிலிருந்த கற்பாறையொன்றில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் இளைஞர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.
இதன்போது குறித்த இளைஞரை காப்பாற்றுவதற்காக யுவதிகள் ஒவ்வொருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கிய வேளையில் திடீரென ஏற்பட்ட சுழியில் சிக்குண்டு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் தோட்ட இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டு உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஜெயராம் காஞ்சனப்பரியா (வயது21), செல்வகுமார் பரிமளாதேவி (வயது19), ஹட்டன், திம்புல பத்தனையைச் சேர்ந்த அடையப்பன் பவானி சந்திரா (வயது24),
அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவைச் சேர்ந்த வனராஜா டேவிட்குமார் (வயது 23) , நெலுவ, கின்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் சசிப்பிரியா (வயது20) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்டுள்ளார். 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கத்தியால் குத்திக் கொடூரமாக கொன்றதாகக் கூறப்படும் இரண்டு பெண்கள் உட்பட 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களான பெண்கள் மற்றும் ஆண்கள், அயல் வீட்டில் குடியேற வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துனகஹா கிழக்கு, பள்ளியப்பிட்டியவைச் சேர்ந்த கே. வின்சன் எனப்படும் 68 வயதான கொத்தனார் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவி உயிரிழந்த பின்னர் இந்த நபர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அயல் வீட்டில் வசிப்பவர் தனக்கு தொல்லை என கூறியமையினால் ஏற்பட்ட முரண்பாட்டினை அடுத்து, நேற்று முன்தினம் அதிகாலை வின்சனின் வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை கொலை செய்த பின்னரும் வீட்டில் இருந்த மிளகாய் தூள் அவர் மீது கொட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர்களின் வீட்டிற்கு யாரோ சிலர் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தனது இரு பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட இலங்கையரான இந்திக்க குணதிலகவின் மரணம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திக்கவின் நெருங்கிய நண்பர்கள், அவரது முன்னாள் மனைவியின் நண்பர்கள் மற்றும் அவர்களது அயலவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இந்திக்க குணதிலக்கவுக்கு காணப்பட்ட, அழுத்தம், குடும்பத்தின் பிரச்சினைகள் மற்றும் தற்கொலை செய்துக் கொள்வதாக கூறினார் என அவரது நண்பர் என கூறப்படும் நபர் வெளியிட்ட பதிவு ஒன்று அவுஸ்திரேலிய ஊடகங்களில் பதிவாகியுள்ளது.
“எனக்கு 3 அப்பாவி உயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. உயிரை விடப்போவதாகவும் அதற்கான திகதி கூறியிருந்த நிலையில், என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அனைவரையும் காப்பாற்றுமாறு கூறினேன்” என நண்பர் பதிவிட்டிருந்தார்.
அது மாத்திரமின்றி, இந்திகவின் வெளிநாட்டு மனைவி மற்றும் மனைவியின் தாயாரே இந்திகவின் மரணங்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என இந்திக்கவின் இலங்கை நண்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திக்கவின் மனைவியும் மாமியாரும் இந்திக்கவையும் அவரது இரண்டு குழந்தைகளையும் மனரீதியாக கடுமையாக சித்திரவதை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறையில் பணியாற்றுவதாக கூறிக்கொள்பவர்கள் சட்டத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட மன ரீதியான அழுத்தங்கள் காரணமாகவே இந்திக்க குணதிலக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தனக்கு எல்லாம் தெரியும் எனவும் அவர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த சமூக ஊடகப் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திகவின் மனைவி தரப்பினர் மற்றும் அயலவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல அவுஸ்திரேலியர்கள், தற்கொலை செய்த இந்திக்க நாசீசிசம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு 4 இல் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் அதிபர் மற்றும் அங்கு பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர் ஒருவர் விடுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அந்த கல்வி சாரா ஊழியருக்கு எதிராக இது வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அந்த ஊழியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த பாடசாலையில் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லையென தெரிவித்த பெற்றோர்கள், பாடசாலையில் பணியாற்றும் அனைத்து ஆண் ஊழியர்களையும் நீக்கிவிட்டு பெண் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், பாடசாலை வளங்களை துஷ்பிரயோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பேசுவதற்கும், பாடசாலைக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மாணவியின் தந்தை மறுப்பு : இந்த நிலையில், குறித்த சம்பவத்தை மாணவியின் தந்தை மறுத்துள்ளார். பாடசாலையின் அதிபர் மற்றும் குறித்த கல்வி சாரா ஊழியர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ள அவர், தனது மகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவினர் மாணவியின் தந்தையிடம் தொடர்புகொண்டு பேசியிருந்தனர். குறித்த பாடசாலையில் ஆசிரியர்கள் சிலர் அதிபரை பதவி விலக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படுவதாகவும், அதற்கு தனது மகளின் விடயத்தை பயன்படுத்திக்கொண்டதாகவும் கூறினார்.
துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கல்வி சாரா ஊழியரை தனக்கு தனிப்பட்ட முறையில் நன்கு தெரியும் என தெரிவித்த அவர், சிறு வயது முதல் தனது மகளை நன்கு அறிந்தவர் என குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பாடசாலையில் தனது மகளிடம் இருந்து கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு, பாடசாலையிலிருந்த இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் தனது மகளின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு தரப்பாக மாறிய பெற்றோர்கள் : இந்த போராட்டத்தின் போது பெற்றோர்கள் இரு தரப்பாக மாறியிருந்தனர். ஒரு தரப்பினர் அதிபருக்கு ஆதரவாக பேசியதுடன், மற்றைய தரப்பினர் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பாடசலையின் அதிபர் சிறப்பானவர் எனவும், பாடசாலைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அங்கிருந்த ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டனர்.
அரச அதிகாரிகள் தகவல் தர மறுப்பு : இந்த சம்பவம் தொடர்பில் வலய கல்வி பணிமனை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்ட போதும், இந்த சம்பவம் தொடர்பில் உரிய பதில் வழங்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.