மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு..

நாளைய தினத்துடன் ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்திற்குள் மின்சார கேள்வியை முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதன்படி, பெப்ரவரி மாதம் 4ம் திகதி வரை மின்சார விநியோக தடைக்கு அனுமதி வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

மின்சார தடை ஏற்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தாம் ஆராய்ந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததாகவும், அதனூடாக மின் தடை ஏற்படுத்த அனுமதி வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மின் துண்டிப்புக்கு இடமளிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காதலித்த இளைஞன் திருமணம் செய்த மறுத்தமையால் நஞ்சு மருந்து அருந்திய யுவதி!!

வவுனியாவில்..

காதலித்த இளைஞன் திருமணம் செய்ய மறுத்ததாக தெரிவித்து யுவதி ஒருவர் நஞ்சு மருந்து அருந்திய நிலையில் நேற்று (30.01) வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாய், தந்தையரை இழந்த நிலையில் வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 23 வயது யுவதி ஒருவரை அவரது உறவினரான பெண் ஒருவர் அழைத்து சென்று நேரியகுளம் பகுதியில் தன்னுடன் வைத்திருந்துள்ளார்.

இதன்போது வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்த குறித்த யுவதி மதவுவைத்தகுளம் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனிமையில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது தொலைபேசி மூலம் அறிமுகமாகிய வவுனியா, புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனுடன் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

குறித்த இளைஞனை திருமணம் செய்யுமாறு யுவதி கோரிய நிலையில் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், பிறிதொரு பெண்ணை பதிவுத் திருமணம் செய்து விட்டதாக அந்த யுவதியிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த யுவதி நஞ்சு மருந்து அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் 30 வயது இளைஞன் மாயம் : உதவிகோரும் குடும்பத்தினர்!!

பாலகிருஷ்ணன் நிரேஸ்..

வவுனியா – தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4 நாட்களாக காணவில்லை. இவர் கடந்த 27 ஆம் திகதி வவுனியா குருமன்காடு பகுதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

எனினும் அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் கடந்தும் குறித்த இளைஞர் வீட்டிற்கும் வராத நிலையில், இதனையடுத்து அவரது தாயாரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் பாலகிருஷ்ணன் நிரேஸ் (வயது 30) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0778013692, 0771014446 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்துமாறு அவர்களது குடும்பத்தினரால் கோரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள் : இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

லியோட் டிசோசா..

ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலில் குறுக்கே நுழைந்துள்ளார் மற்றொரு பெண்ணான டாக்லின். டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா மற்றும் டாக்லின் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது தனது எட்டு வருடக் காதலை பிரிக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்து அஸ்விதா கடலில் குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற காதலன் லியோ டிசோசா குதித்தார். அஸ்விதாவை உயிருடன் மீட்ட பின் லியோ டிசோசா மயக்கத்தில் இருந்துள்ளார்.

அவர்கள் இருவரையும் அங்குள்ள நபர்களின் உதவியோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் டாக்லின். ஆனால் வழியிலேயே லீயோ டிசோசா உயிரிழந்தார்.

அஸ்விதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக உல்லால் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசுப் பள்ளியில் படித்து வைத்தியராக ஏழை மாணவி!!

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களின் மகள் சத்யா மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். மாணவியின் பள்ளி படிப்பு செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி சத்யாவை மேற்கொண்டு படிக்க வைக்க சம்மதம் பெற்றனர்.

தொடர்ந்து நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி 600-க்கு 532 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நீட் தேர்வில் பங்கேற்று 720-க்கு119 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றார்.

அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பு களில் சீட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வியாழனன்று தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நடந்தது.

இதில், அரசு பள்ளி மாணவி சத்யாவுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 17 பேர் எம்.பி.பி.எஸ், 3 பேர் பி.டி.எஸ். படிப்பு படித்து வருகின்றனர்.

இந்த ஒதுக்கீட்டில் மாவட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த முதல் மாணவியாக மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்த முதல் மாணவியாக சத்யா விளங்குகிறார்.

இது குறித்து பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் கூறுகையில்..

மாணவி சத்யா மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர். ஆனால் அவரின் பெற்றோர் கூலி தொழிலாளி என்பதால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை இருந்தது.

தொடர்ந்து மாணவியின் பெற்றோரிடம் பேசிய ஆசிரியர்கள் மாணவியின் படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்தனர்.

மேலும் நீட் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் புத்தகங்கள் உதவியுடன் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளார்.

இந்த பள்ளியில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமைக்கு உரியவராக சத்யா விளங்குகிறார்.

இவர் பள்ளியில் படிக்கும் மற்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும் உத்வேகத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு!!

அதிகரிக்கும் கொரோனா..

நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

விசேட தடுப்பூசி திட்டம் ஒன்று அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் பூஸ்டர் தடுப்பூசிக்கான நடமாடும் தடுப்பூசி நிலையங்கள் செயற்படுத்தப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.

தியத்தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அண்மைய நாட்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுங்கள். “கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்னும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர் விரைவில் அதைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை இராணுவத்தின் தலைமையில் ஆயுதப்படையினரை களமிறக்கி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக விசேட நிலையங்களை நிறுவியுள்ளோம்.

அடுத்த 2 வாரங்களில் நடமாடும் வாகனங்களில் தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கிறோம் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மற்றும் ஏப்ரலில் மின் துண்டிப்பு கட்டாயம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

மின் துண்டிப்பு..

எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கட்டாயம் மின்சார துண்டிப்பை ஏற்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். இந்தியாவின் WION News ஊடகத்திடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் மின்சார தேவையானது வருடந்தோறும் 8 வீதமாக அதிகரித்து வருகிறது. மின்சார தேவைக்கு ஏற்ப மின்சாரத்தை விநியோகிப்பதற்காக நீர் மின் நிலையங்களோ, அனல் மின் நிலையங்களோ கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது போகும்.

இதனால், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான வறண்ட காலநிலை நிலவும் காலத்தில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்படும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளம் தமிழ் யுவதிகள் உட்பட 5 பேர் பலி : விபரம் வெளியானது!!

நீர்வீழ்ச்சியில் மூழ்கி..

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அட்டம்பிட்டிய பகுதியை சேர்ந்த 20 வயதான சஷிபிரியா, 21 வயதான திரிஷா 19 வயதான டேவிட் சஞ்சு ஹற்றன் பகுதியை சேர்ந்த 24 வயதான பவானி, 23 வயதான டேவிட் குமார் என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5 பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்தனர். மீட்புப் படையினரின் தீவிர தேடுதலை அடுத்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை நிமித்தம் மின் துண்டிப்பு இல்லை : வெளியான அறிவிப்பு!!

மின் துண்டிப்பு..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், கொவிட் தொற்று காரணமாக பரீட்சைகளை நடத்துவது தாமதமானதுடன்,

தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பரீட்சை தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து பிரபல வர்த்தகரின் மகன் பலி!!

கொழும்பில்..

கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (28) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பம்பலப்பிட்டி கிரெஸ்டர் பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் இருந்து குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அதே பகுதியில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் தந்தை வெள்ளவத்தையில் பிரபல வர்த்தகர் ஆவார். சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தங்கம்..

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதால் உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கௌரவிப்பு!!

கௌரவிப்பு நிகழ்வு..

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் நிலக்சன் தலைமையில் இன்று (29.01) இந்நிகழ்வு இடம்பெற்றது.

கோவிட் தொற்றுக்கு எதிராக இலங்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோவிட் தடுப்பூசியின் முதலாம், இரண்டாம் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பில் விளக்களிக்கப்பட்டதுடன்,

அதனை வெற்றிகரமாக செலுத்துவதற்கு காரணமாக இருந்த வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் ஆகியோருக்கும், ஒத்துழைப்பு நடவடிக்கைளை வழங்கிய பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், விமானப் படையினர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இதன்போது நினைவு கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து : இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி!!

விபத்து..

கற்பிட்டி, நாச்சிக்கள்ளி பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலக்குடா பகுதியில் திருமண நிகழ்வை முடித்துவிட்டு சென்ற காரொன்றே வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது காரில் பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுக்குள்ளாகிய மேலும் இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது காரின் சாரதி மேலதிக சிகிச்சகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்து தானும் விபரீத முடிவு எடுத்த இலங்கையர்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில், 40வயதான இலங்கையர் ஒருவர் தமது உயிரை போக்கிக்கொள்வதற்கு முன்னதாக தமது நான்கு வயது மகளையும் ஆறு வயது மகனையும் கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

அவுஸ்திரேலியாவின் பேர்த்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள எஸ்சிங்டன் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்ப விசாரணைகள், இருந்து இந்த இறப்புகளில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இலங்கையர் தமது குழந்தைகளுடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்கரைக்கு சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய சோறு சாப்பிடும் போது வந்த அதிர்ச்சி செய்தி : ஏழை குடும்பத்துக்கு கிடைத்த கோடிக்கணக்கான பணம்!!

இந்தியா..

இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்பட்ட குஷ்மீத் தனக்கு என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் அடிக்காதா என லொட்டரி சீட்டுகளை அவ்வபோது வாங்கி வந்தார்.

அந்த வகையில் நேற்று முன் தினம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது குஷ்மீத் லொட்டரி சீட்டு ஒன்று வாங்கினார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் உணவாக பழைய சோறு சாப்பிட்டார்.

அந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த இருவர் குஷ்மீத் வீட்டுக்கு ஓடி வந்து உனக்கு லொட்டரியில் ரூ 1 கோடி ரூபாய் விழுந்துள்ளதாக கூறினர். இதை கேட்டு ஒரு கணம் அதிர்ச்சி அடையந்த குஷ்மீத், சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு வெளியே ஓடினார்.

பின்னர் தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததை உறுதி செய்து கொண்ட அவர் பணத்தை பெற்றுள்ளார். அவர் கூறுகையில், கடவுள் என் வாழ்வில் கண் திறந்துவிட்டார். முதலில் ஒரு நல்ல வீட்டை கட்ட விரும்புகிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பிறந்தநாளன்று வெளியே அழைத்துச் செல்லாத கணவன் : இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னை..

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள், அதனால் வெளியில் அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார் தனுஜா. சாமுவேல் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் வெளியில் அழைத்து செல்லாததால் சண்டையிட்டுயுள்ளனர்.

இதனால் சமாதானம் செய்து வைக்க சாமுவேல் மாமியார் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்து பார்த்த போது தனுஜா தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாமுவேல் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்ததில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சென்ற சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் ஆகி நான்கு மாதமே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சாமுவேலை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.