ஸ்மார்ட் போனால் சீரழித்த இளம்பெண்ணின் வாழ்கை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருச்சி..

திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவில் வேலைக்கு செய்து அவர் அனுப்பும் பணத்தை வைத்து குழந்தைகளை நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக நடத்தி வந்தார் மீனா.

இந்த நிலையில் மீனா வாழ்க்கையில் செல்போன் மூலம் குட்டிச்சாத்தான் வீட்டிற்குள் புகுந்தது. கணவருடன் வீடியோ கால் பேசுவதற்காக வாங்கப்பட்ட அந்த ஸ்மார்ட் போன் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

கணவர் வெளி நாட்டில் இருந்த சமயத்தில் பலவிஷயங்களையும் , ஆண் நண்பர் சுரேஷிடம் மனம் விட்டு பேசி உள்ளார் மீனா. இந்த நிலையில் தானும் வெளி நாட்டில் வேலை பார்க்க விரும்புவதாகவும் அங்கு செல்வதற்கு பணம் கொடுத்து உதவும் படியும் கேட்டுள்ளார்.

மீனா தனது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் தனது ஆண் நண்பர் சுரேஷுக்கு 2 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து உதவி உள்ளார். உள்ளூரில் இருக்கும் வரை சற்று அடக்கத்துடன் இருந்த சுரேஷ் வெளி நாடு சென்ற பின்னர் மீனாவிடம் பேசுவதில் எல்லை மீறியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து மீனா தான் கொடுத்த 2 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் பணம் வேண்டுமானால் வீடியோ காலில் வா… என்று வற்புறுத்தி உள்ளான். அவனை நம்பி வீடியோ காலில் பேசிய போது , பணம் வேண்டுமானால் ஆடைகளை அகற்று என்று மிரட்டி உள்ளான்.

இதற்கு சம்மதிக்காமல் மீனா தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், மீனாவை தொடர்பு கொண்டு, நாம் இருவருக்கும் காதல் இருப்பதாகவும், நீ தான் என்னை மலேசியாவுக்கு பணம் செலவழித்து அனுப்பி வைத்தாய் என்றும் இங்கு வேலை பார்க்கும் உனது கணவரிடம் சொல்லி உன் வாழ்க்கையை சீரழித்து விடுவேன், உனது பணமும் கிடைக்காது என்று பிளாக் மெயில் செய்துள்ளான்.

இதனால் அதிர்ந்து போன மீனா, சுரேஷிடம் தூண்டிலில் சிக்கிய மீனாக துடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவனது கட்டாயத்தின் பேரில் வீடியோ காலில் அவன் விருப்பத்திற்கு ஏற்றார் போல தோன்றும் துர்பாக்கிய நிலைக்கும் மீனா தள்ளப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டில் சென்று பணம் வாங்கிக் கொள்ள கூறி உள்ளான் சுரேஷ் , வீட்டில் உள்ளவர்கள் சுரேஷ் உடன் மீனாவை இணைத்து பேசி அவமானப்படுத்தி துரத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் விட்டு கதறி வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார் மீனா.

ஆண் நண்பரிடம் கொடுத்த பணத்தையும் ஏமாந்து, ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி விரக்தி அடைந்த மீனா கழுத்தில் தூக்கிட்ட நிலையில் மரணவாக்குமூல வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்து விட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

மனைவியின் நடத்தை குறித்து ஊரார் நாலுவிதமாக பேசியதால் அதிருப்தி அடைந்த கணவர் பாலசுப்பிரமணியம் , மனைவியின் சாவுக்கு வராததால் உறவினர்கள் மீனாவின் சடலத்தை பிணகூறாய்வுக்கு பின் தகனம் செய்து விட்டனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் ஊருக்கு திரும்பிய பாலசுப்ரமணியம் தனது மனைவி பயன்படுத்திய செல்போனை சுவிட்ஜ் ஆன் செய்து பார்த்த போது அதில் இருந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கடந்த 22ந்தேதி லால்குடி டி.எஸ்பியிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தார்.

இதையடுத்து மலேசியாவில் இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது தாய் தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீது 8 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சுரேஷுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதே நேரத்தில் ஆண் நண்பருடன் பழகுவதிலும், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பெண்கள் உஷாராக இல்லையென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

நாட்டு மக்களுக்கு அவசர கோரிக்கை!!

பொதுமக்களுக்கு வேண்டுகோள்..

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை,

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி காமினி லொக்குகே நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால்,

இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மின் பிறப்பாகிகளில் இருந்து மின்சாரம் பெற்று பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இலங்கையில் தங்கத்திற்கு இணையாக மாறும் வாகனங்கள் : சர்வதேச ஊடகம் தகவல்!!

வாகனங்கள்..

இலங்கையில் பயன்படுத்தப்படும் வாகனத்தை தற்போது தங்கத்தை ஒத்ததாக பார்க்கப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனமான AFP தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கார்களின் விலைகள் வீடுகளின் விலைகளை விட அதிகமாக உயர்ந்துள்ளது.
22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு திவால் நிலையின் விளிம்பில் உள்ளது.

பணவீக்கம் அதிகமாக உள்ளது. உணவு, மருந்து மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை சேமிக்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை தடை செய்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை மோட்டார் சந்தையில் புதிய வாகனங்கள் இல்லை. தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடும் புதிய வாகனங்கள் இலங்கை வீதிகளில் இருந்து விலகியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு உலகிலேயே மிகவும் உயர்ந்த விலை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐந்து வருடங்கள் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா லேண்ட் குரூஸர் வாகனங்கள் தற்போது 62.5 மில்லியன் ரூபாய் (312,500 டொலர்) வரை விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி தடைக்கு முன்னர் இருந்த விலையை விட இது மூன்று மடங்கு அதிகமாகும். அந்த பணத்தில் நடுத்தர வர்க்கத்தினர் கொழும்பில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க முடியும் என AFP செய்தி ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

ஒமிக்ரோன்..

இலங்கையில் பதிவாகியுள்ள கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு ஒன்றில் இந்த தகவல் வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அதிகாரிகள் இலங்கை மக்களுக்கு அவதானமாக நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன் பகுதியில் பேருந்து விபத்து : ஒருவர் பலி : பலர் படுகாயம்!!

விபத்து..

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை – ஹட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன்,

16 பேர் காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு இடம் கொடுக்க முயன்ற போதே, குறித்த தனியார் பஸ் இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா போடைஸ் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெர்ணாண்டோ மரியசவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

திண்டுக்கல்..

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதற்கிடையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் கோபமடைந்த சங்கீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா, சென்னையில் வேலைபார்க்கும் தனது தோழிகளுடன் சேர்ந்து தானும் வேலை தேடி செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து, நாகர்கோவிலில் இருந்து ரெயிலில் புறப்பட்டு சென்ற சங்கீதா, செல்லும் வழியிலேயே கோபம் தனிந்து மனம்மாறிய அவர் மீண்டும் கணவரின் வீட்டிற்கே செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதனால், பாதிலேயே திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து சங்கீதா இறங்கியுள்ளார். ஆனால் மீண்டும் திண்டுக்கல் செல்வதற்கான ரெயில் இல்லாததால் சங்கீதா நீண்ட நேரம் ரெயில்வே பிளாட்பாரத்தில் செய்வதறியாது நின்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள் சங்கீதாவை சூழ்ந்ததும், பதற்றமடைந்த சங்கீதா உடனே ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறியிருக்கிறார். அந்த சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சங்கீதாவை மீட்டு, விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் கணவரிடம் சண்டைப்போட்டு கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும், பின்னர் மனம் மாறி மீண்டும் வீட்டுக்கே செல்ல முயற்சித்ததையும் சங்கீதா கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் கொடுத்த தகவலின் பேரில் திருச்சிக்கு வந்த யுவராஜ் தனது மனைவியை சமாதானபடுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

காதலை கைவிட மறுத்த இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!

வினோத்குமார்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த அவர், பலமுறை வினோத்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நேற்றிரவு வினோத்குமார் மற்றும் அவரது நண்பனான 18 வயது சிறுவன் என 2 பேரும் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக ஓசூர் அடுத்த வாசவி நகருக்கு சென்றுள்ளனனர்.

வாசவி நகர் வினோத்குமார் காதலித்து வந்த பெண்ணில் ஊர் என்பதால், அங்கு சென்ற வினோத்குமார் மதுஅருந்திவிட்டு காதலியின் அண்ணனுடன் மீண்டும் போனில் தொடர்புகொண்டு உங்கள் பகுதியிலேயே இருக்கின்றேன் தைரியமிருந்தால் வா என அழைத்ததாக சொல்லப்படுகிறது.

வினோத்குமார் வர சொல்ல இடத்திற்கு வந்த காதலியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர் இருவரும் வினோத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியநிலையில் காதலியின் அண்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியால், வினோத்குமாரின் மார்பில் இரண்டு இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் ரத்த் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்தி்ற்கு வந்த போலீசார், வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், கொலை குற்றவாளியான காதலியின் அண்ணன் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோதமான பெண் : வைரலாகும் வீடியோ!!

ஜேஸ்மின் அலிசியா..

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து குடித்தும் அதையே முகத்திற்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து. மேலும் ஒரு தாய் தனது ஆரோக்கியததை அதிகரிக்க மாதவிடாய் இரத்தம் உகந்தது என கூறினார்.

பெண்களுக்கு, சானிட்டரி ஆனது பயன்படுத்துவது கெடுதல் தான். அவை நம் புனித இரத்தத்தை மறைக்கின்றன. நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது.

உண்மையில், நமது மாதவிடாய் ரத்தத்தில் நமக்கு தேவையான ஊட்சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளது. புரதம் இரும்பு சத்து தாமிரம் செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது.

எனவே எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து அதை குடிப்பேன். எனக்கு அதிகமாக சத்துக்கள் தேவைப்பட்டால் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தின் புனிதத்தை உணர்ந்து மீட்டு எடுக்க பயிற்சியும் அளிக்கிறார் முகத்திற்கு அந்த இரத்ததை பயன்படுத்துவதால் தோல் பராமரிப்பு சிறந்தது. புத்துணர்சையும் குளிர்ச்சியையும் தரும் என கூறியுள்ளார்.

13 ஆவது திருத்த சட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரிய சுமந்திரன் : பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்!!

13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுமந்திரன் ஆதரவு கோரினார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (27.01) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தற்போது விழிப்படையக் கூடிய தருணம். 13 ஆவது திருத்தச் சட்டத்தை கஜேந்திரன் தரப்பு எதிர்க்கிறது. கூட்டமைப்பு அதனை ஆதரிக்கிறது.

நாடாளுமன்ற விருந்தினர் விடுதியில் நானும், எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இருந்த போது சுமந்திரன் வந்து ‘அண்ணா 13வது திருத்தச் சட்டம் சம்மந்தமாக தமிழ் எம்.பிமார் சேர்ந்து கலந்துரையாடி அதனை வலுப்படுத்துவோம் என்றார்’.

அப்போது நானும் அதற்கு உறுதுணையாக இருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். சுமந்திரன் சென்ற பின் எமது அமைச்சரிடம் ‘ எனக்கு அனுபவம் தெரிந்த நாள் முதல் நீங்கள் இதனைச் சொல்லி வருகிறீர்கள்.

இன்றைக்குத் தான் சுமந்திரனுக்கு ஞானம் பிறந்துள்ளது. இன்றைக்கு உங்களிடம் வந்துள்ளார்கள்.’ என்ற போது அவர்களுக்கு இப்போது தான் ஞானம் வந்துள்ளது.

அதனை நாமும் முன் மொழிவோம் என்றார். அப்படி தான் தற்பொழுது நடக்கிறது. 13 வது திருத்தச் சட்டம் அன்றிலிருந்து இன்று வரை நாம் சொல்லி வந்த விடயம்.

இப்போது அந்த இடத்திற்குத் தான் வந்துள்ளார்கள். மக்கள் தான் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பா, கஜேந்திரகுமாரா என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இரண்டும் தரப்பாலும் பயனில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீமெந்துக்கு பாரிய தட்டுப்பாடு!!

சீமெந்து..

இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்றிக் தொன் சீமெந்து பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த ரஞ்சித் லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, சிமெந்து உற்பத்தி திறன் மற்றும் இறக்குமதி குறைந்துள்ளது. எனவே, தேவையான கட்டுமானப் பொருட்களுக்கு தேக்கநிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டில், மாத்திரம், இலங்கையில் ஏழு மெற்றிக் தொன் சீமெந்து கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டது. இந்தநிலையில் தற்போதைய கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மூன்று மெற்றிக் டன் பற்றாக்குறையாக உள்ளது.

இதேவேளை சந்தையில் 1,575 ரூபாவாக இருந்த சீமெந்தின் விலை, சில இடங்களில் 2000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று லியனாராச்சி குறிப்பிட்டார்.

சீமெந்து வியாபாரிகளால் மக்கள் மத்தியில் அத்தியாவசியப் பொருளாக மாற்றப்பட்டு சீமெந்து மாபியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நாடு மீண்டும் முடக்கப்படுமா? புதிய அறிவிப்பு!!

கொரோனா தொற்று..

“நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.”

இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“நாட்டில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனைச் சமாளிக்கக்கூடிய வளம் உள்ளது.

பழைய நடைமுறை பின்பற்றப்படும். அத்துடன், வைத்தியசாலைகளில் போதுமானளவு ‘ஒட்சிசன்’ உள்ளது. எனவே, வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள போலியானவை.

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்க முடியாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்கப் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே நாடு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் இன்னும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன” – என்றார்.

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம் கொரோனா காரணமாக மூடப்பட்டது!!

குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம்..

கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்களுக்கு இன்று (27.01) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கடவு சீட்டு வீநிநோயகம், கடவுச் சீட்டு விண்ணப்பம் பெறுதல் என அனைத்து செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டு பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த உத்தியோகத்தர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யானையிடம் போராடி தன் மகளின் உயரை காப்பாற்றிய தாய்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் உயிரை பணயம் வைத்து யானையிடமிருந்து மகளை காப்பாற்றிய தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தம்புத்தேகம, தெக்கவத்தை கிராமத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

பாடசாலை செல்வதற்காக தயாராக இருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி தனது பாட்டியின் வீட்டில் இருந்து தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார்.

இதன் போது திடீரென அவ்விடத்திற்கு வந்த காட்டு யானை சிறுமியை பல மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசிய நிலையில் அவரை மிதித்து கொல்ல தயாராகியுள்ளது. உடனடியாக அவ்விடத்திற்கு வந்த தாய் மற்றும் பாட்டி யானையுடன் நீண்ட நேரம் போராடி மகளை காப்பாற்றியுள்ளனர்.

குறித்த சிறுமியின் பாட்டி வீட்டு பக்கம் காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய சிறுமியும் அவரது தாயாரும் பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தாய் பாட்டின் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சிறுமி தங்கள் வீட்டை நோக்கி சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த யானை சிறுமியை தும்பிக்கையால் தூக்கி வீசிவிட்டு மிதித்து கொல்ல அங்கு வந்துள்ளது.

சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு வந்த தாயும் பாட்டியும் யானையிடம் போராடி சிறுமியை காப்பாற்றியுள்ளனர். உயிருக்கு ஆபத்தின்றி சிறிய காயங்களுடன் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.

கதிர்காமம் ஆலயத்திற்குச் சென்ற பல்கலைக்கழக மாணவன் திடீர் மரணம்!!

பல்கலைக்கழக மாணவன்..

கதிர்காமத்தில் உள்ள மலையில் கடவுளை தரிசிக்க சென்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வந்த மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகயீனமடைந்த இளைஞன் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலங்கொட உஸ்மதுலாவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய சலித்த தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் 18 மாணவ, மாணவிகள் கதிர்காமத்தில் உள்ள உயரமான மலையில் கடவுளை திரிசிக்க சென்ற சந்தர்ப்பத்தில்,

திடீர் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போதே இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மின் துண்டிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!!

மின் துண்டிப்பு தொடர்பில்..

எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த பல வாரங்களாக டொலர் பற்றாக் குறையால் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாள் தோறும் மின்சார தடை ஏற்பட்டது. எனினும், கடந்த மூன்று நாட்களாக எரிபொருள் விநியோகம் சீர் செய்யப்பட்டமையால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி வரையிலும் மின்சாரம் துண்டிகப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக் குறையை நிவர்த்திகும் முகமாக இந்தியா, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை நிதியாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. எரிபொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்
ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் பகுதியில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் அவருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் அரச உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.