வவுனியாவில் இருந்து புறப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் வாகன ஊர்திப் பவனி!!

வாகன ஊர்திப் பவனி..

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்திப் பவனி வவுனியாவில் இருந்து ஆரம்பமானது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13 வது திருத்தச் சட்டத்தை நேடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில்,

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சமஸ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரியும் ஆரம்பிக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட ஊர்த்திப் பவனி இரண்டாவது நாளான இன்று (27.01) வவுனியா நகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவு தூபியடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் மரணித்தவர்கள் நினைவாக பொங்கு தமிழ் தூபி முன்பாக தீபம் ஏற்றப்பட்ட பின் அங்கிருந்து புறப்பட்ட ஊர்தி வவுனியா நகரப் பகுதியில் வலம் வந்து அங்கிருந்து ஏ9 வீதியூடாகச் சென்று நெடுங்கேணி ஊடாக முல்லைத்தீவு நோக்கி புறப்பட்டது.

குறித்த ஊர்தியில் ‘ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தத்தை நிராகரிப்போம். சமஸ்டியை வலியுறுத்துவோம்’ எழுதப்பட்ட பதாதைகளும், எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு யாழ் நல்லூரிரடியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் மக்களை அணிதிரளுமாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவை வந்தடைந்தது ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் வாகன ஊர்தி!!

வாகன ஊர்தி..

ஒற்றையாட்சிக்கு உட்பட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் என்பதை வெளிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஊர்த்திப் பவனி நேற்று (26.01) இரவு வவுனியாவை வந்தடைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில்,

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரித்து சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் யாழ்ப்பாணம் நல்லூரடியில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.30 இற்கு மாபெரும் பேரணி ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளான சமஸ்டி தீர்வை வலியுறுத்தியும், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை நிராகரிக்க கோரியும் அலகரிக்கப்பட்ட ஊர்திப் பவனி ஒன்று நேற்று (26.01) மாங்குளம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பவனி மல்லாவி, விடத்தல் தீவு, மன்னார் ஆகிய பகுதிகளுக்கு சென்று இரவு வவுனியாவை வந்தடைந்தது. வவுனியா நகரில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு நோக்கி சென்று அங்கிருந்து கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று (26.01) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 50 பேருக்கு எழுமாறாக துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில், மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தில் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் 20 பேருக்கும், வவுனியா பல்கலைக்கழகத்தில் 16 பேருக்குமாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், மீண்டும் வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பொறுப்புடனும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வவுனியா நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (25.01) இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியிலிருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக பூந்தோட்டம் வீதிக்குச் செல்ல முற்பட்ட போது,

வவுனியா நகரிலிருந்து வந்த பாரவூர்த்தி ஒன்று சுற்று வட்ட வீதியூடாக ஏ9 வீதியில் திரும்ப முற்பட்ட போது துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பெரியதம்பனை வீதிக்கு தற்காலிகமாக பூட்டு : மாற்று வீதியினை பாவிக்குமாறு கோரிக்கை!!

பெரியதம்பனை வீதி..

வவுனியா பிரமனாளங்குளம் மற்றும் பெரியதம்பனை ஊடான பரப்புக்கடந்தான் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மக்கள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு ஒப்பந்ததாரர்கள் அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

பெரியதம்பனை மற்றும் மருதங்குழி பகுதியில் வீதிக்கு தார் போடும் பணி நடைபெற இருப்பதால் இன்று 26.01.2022 பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எனவே இவ்வீதியூடான போக்குவரத்தில் ஈடுபடுவர்கள் மடு பிரதான வீதியினை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இந்து ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்த சிலை அகற்றம்!!

ஞாபகார்த்த சிலை அகற்றம்..

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பையடுத்து அகற்றப்பட்டது.

தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வளாகத்தில் மரக்காரம்பளை வீதியினை பார்த்த வண்ணம் வீதியின் அருகே காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காளியம்மன் சிலைக்கு எதிர்த்திசையில் (வீதியின் மறுபக்கத்தில்) பல வருடங்களாக பேரூந்து தரிப்பிடம் அமைந்திருந்தது.

குறித்த பேரூந்து தரிப்பிடம் அதன் உரிமையாளரினால் மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அவரின் அமரத்துவமடைந்த பெற்றோரின் திருவுருவ படத்தினை அகற்றி அவர்களின் ஞாபகாரத்த சிலையினை வைத்திருந்தனர்.

காளியம்மன் சிலைக்கு முன்பாக எதிர்த்திசையில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில்ஸ அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை வைத்தமை இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் செயற்பாடு எனவும்,

அத்துடன் குறித்த இந்து தெய்வம் கிழே இருப்பதுடன் அமரத்துவம் அடைந்தவரின் சிலை மேலே இருப்பது வேதனையளிக்கும் விடயம் எனவே இச் சிலையினை அகற்றுமாறு அப்பகுதி இளைஞர்கள் உரிய அதிகாரிகளுக்கு கடிதங்கள் வழங்கியதுடன் தங்களது எதிர்ப்பினையும் வெளிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா தெற்கு பிரதேச சபையின் உத்தரவிற்கமைய பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை அகற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் நீதி அமைச்சின் வடமாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவை ஆரம்பம்!!

நடமாடும் சேவை..

நீதி அமைச்சின் வடமாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவை வவுனியாவில் இன்று (26.01.2022) நடைபெற்றது.

நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊடான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் ‘நீதிக்கான அணுகல்’ எனும் விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வடமாகாணத்திற்கான முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகிணி கெட்டிகே தலைமையில் இன்று (26.01) காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது, பொதுமக்களை பாதிக்கும் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டல், நல்லிணக்கம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துதல், வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஆலோசனை வழங்கல்,

பிறப்பு- திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுதல், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சேவைகளை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்பட்டன.

நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சுக்களின் கீழுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் சேவை நிலையம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, இலங்கை மத்தியஸ்தர் சபைகள் ஆணைக்குழு,

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் கலந்து கொண்டு மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளையும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் தெளிவுபடுத்தினர்.

இந் நிகழ்வில் நீதி சேவை ஆணைக்குழு பணிப்பாளர் சந்திக்க லொக்கு கெட்டி, நீதி சேவை ஆணைக்குழுவின் சிரேஸ்ட உதவி செயலாளர் ரோகிணி கெட்டிகே,

நீதி சேவை ஆணை குழுவின் உதவி செயலாளர் சந்திர மாலனி, இழப்பிட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நாசிமா அகமட், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில் கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்!!

கனடா எல்லையில்..

கனடா – அமெரிக்க எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில், கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்களை மானிடோபா பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இந்தியர்கள் எனவும், இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள்,ஒருவர் நடுத்தர வயது உடையவர், அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் என தெரியவந்துள்ளது.

ஜகதீஷ் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் எனவும்,சுமார் 65 இலட்ச ரூபாய் கொடுத்து அமெரிக்கா செல்ல முடிவு செய்து புறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் குடிபுகுவது ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் இல்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருதுவதாகவும் கூறப்படுகின்றது.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தாய் : மகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

மாத்தறையில்..

மாத்தறையில் கடலில் நீராடும் போது உயிரிழந்த மாணவியின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அம்பேகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த இமல்ஷா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிகம, முதுகொட்டுவ கடலில் நீராடும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அவரது உறவுக்கார பெண் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போதே அவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் தாய் அண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார் என தெரியவந்துள்ளது. வாடகை வீட்டில் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தயாரிய கொண்டிருந்த மாணவி, இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த மாணவியின் திடீர் மரணத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாவும் மிகவும் திறமையான ஒரு மாணவியை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு 3 மணித்தியாலயத்திற்கு மேலாக போராட்டம்!!

போராட்டம்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று (26.01.2022) காலை 9.30 மணி தொடக்கம் 1.00 மணி வரையிலான சுமார் 3 மணித்தியாலயத்திற்கு மேலாக வவுனியா மாவட்ட செயலக வளாகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊடான நீதிக்கான அணுகல் (ACCESS TO JUSTICE) எனும் விசேட நடமாடும் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் விசேட செயற்றிடத்தின் கீழ் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பனவும் உள்ளடங்கி காணப்படுகின்றதுடன் காணாமல் போனவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களும் திரப்படுகின்றன.

இச் செயற்றிட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பாக காலை 9.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றினை செயற்படுத்தும் அதிகாரிகளுடன் தாம் கதைப்பதற்கு சந்தர்ப்பம் கோரி போராட்ட பதாதைகள் மற்றும் கறுப்பு கொடிகளுடன் மாவட்ட செயலகத்தினுள் செல்ல முற்பட்டனர்.

மாவட்ட செயலகத்தினுள் நுழைந்த அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் இருவரை மாத்திரம் உட்சென்று கதைக்குமாறும் கோரிக்கையினை முன்வைக்குமாறும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பொலிஸாரின் கோரிக்கைக்கு போராட்டகாரர்கள் மறுப்பு தெரிவித்து அனைவரும் உட்செல்லுவோம் அல்லது அவர்கள் இவ்விடத்திற்கு வருகை தரவேண்டும் என தெரிவித்தனர்.

போராட்டம் வலுப்பெற்றமையினையடுத்து மாவட்ட செயலகத்திற்கான பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டதுடன் மாற்று வீதியுடாக போக்குவரத்து ஏற்படுத்தி வழங்கப்பட்டிருந்தது.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் போராட்ட இடத்திற்கு வருகை தந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கலந்துரையாடினார் . எனினும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் ஒன்றாகவே செல்வோம் என தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரின் தடையினை மீறி மாவட்ட செயலகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

அதன் பின்னர் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் அலுவலகர்களுடன் கலந்துரையாடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள குறித்த காரியாலயம் வரை அழைத்துச் சென்றிருந்தனர்.

அதன் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் அலுவலகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் நோக்கம் மற்றும் செயற்றிட்டத்தினை தெளிவுபடுத்தியிருந்தனர்.

மேலும் நீதி அமைச்சர் எம்.யு.எம் அலி சப்ரியுடன் நேரில் கலந்துரையாடவும் கோரிக்கைளை முன்வைக்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்திருந்தனர்.

தமக்கு சர்வதேச ரீதியிலேயே விசாரணை வேண்டும் மற்றும் காணாமல் போனவர்கள் என அலுவலகம் வைக்க வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என அலுவலகம் வைக்க வேண்டும் எனவும் அரசின் செயற்பாடுகளில் எமக்கு நம்பிக்கையில்லை என தெரிவித்து மாவட்ட செயலகத்தினை விட்டு வெளியேறியிருந்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் மயங்கி வீழ்ந்த இருவர்!!

போராட்டத்தில்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் இருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மாவட்ட செயலக வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் பொலிஸாரினால் 1990 நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சுகாதார பணியாளர் சிகிச்சையளிக்க முயன்ற போதிலும் அவர்கள் சிகிச்சையினை மறுப்பு தெரிவித்ததுடன்,

சீனியின் அளவு மற்றும் இரத்த ஓட்டம் என்பவற்றினையாவது பரிசோதிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் முயன்ற போதிலும் அவர்கள் சம்மதம் தெரிவிக்காது போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் அவர்களுக்கு தண்ணீர் தெளித்து வழமை நிலமைக்கு திருப்பியிருந்தனர். மயக்கமடைந்து வீழ்ந்து வழமை நிலமைக்கு திரும்பிய இருவரும் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றியிருந்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் : பொலிஸார் குவிப்பு

போராட்டம்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிக்கான அணுகல் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்ட செயலத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது . இந் நிகழ்ச்சித்திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவனவும் உள்ளடங்கியுள்ளன.

இதனையடுத்து காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மாவட்ட செயலக வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் போராட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

திருமணமான 5 மாதத்தில் இளம் தம்பதிக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

தஞ்சாவூர்..

தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு பிரபாகரன் (32) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், பிரபாகரனுக்கும், தெக்கூர் பகுதியை சேர்ந்த மும்மூர்த்தி மகள் அஜிதா (27) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபாகரனின் தந்தை திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டதால், பிரபாகரன், அஜிதா மற்றும் பிரபாகரனின் தாயார் மகேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். மகேஸ்வரி ஒரத்தநாடு உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று வேலைக்காக மகேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அன்று மாலை, பிரபாகரன் உறவினர் ஒருவர் பிரபாகரனை தேடி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் அருந்தி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கன் வாங்கி சாப்பிட்ட இளைஞன் திடீர் மரணம் : கதறும் பெற்றோர்!!

சென்னை…

தமிழகத்தில் சிக்கனர் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர்களில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 22 வயது மதிக்கத்தக்க இவர், பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு கேமராமேனாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நேற்று மாலை பெரம்பூர் பிபி சாலையில் உள்ள தனது நண்பரான கிரிதரன் என்பவரது தனியார் மருந்தகத்திற்கு சென்று உள்ளார். அங்கிருந்த நான்கு நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் ஆன்லைன் மூலம் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

அதன் பின் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்ற அவருக்கு, இடது பக்கம் வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது, அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உடைந்து போயுள்ளனர். ரஞ்சித்தின் மரணத்திற்கு சிக்கன் தான் காரணம் என்று குறித்த ரெஸ்ட்டாரண்ட் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

சாப்பிட்ட மற்ற 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதால், பொலிசார் ரஞ்சித்தின் பிரேதபரிசோதனை முடிவுக்காக காத்துள்ளனர். அதன் முடிவு வந்த பின்னரே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

அங்கு 4 நண்பர்கள் சேர்ந்து பிரபல சிக்கன் ரெஸ்டாரண்டில் சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். பின்பு கடையில் அமர்ந்து அனைவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர்.

அதன் பின்பு அனைவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர் . இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் இடது பக்கம் முழுவதும் வலிக்கின்றது எனக் கூறியுள்ளார்.

65 வயது பாட்டியை காதலித்து கல்யாணம் செய்த 85 வயது தாத்தா : சுவாரஸ்ய சம்பவம்!!

மைசூர்..

மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார்.

பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகத்துக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதால் அவரும் இறந்துவிட்டார்.

இதன்பின்னர் அந்த வீட்டிற்குள்ளேயே தனியாகவே வசித்து வந்துள்ளார். தனிமை அவரை வாட்டியதனால் தனக்கு ஒரு துணை தேவை என்று முஸ்தபா உணர்ந்தார்.

இதையடுத்து அதே பகுதியில் வசித்து வந்த பாத்திமா பேகம் (65 வயது) என்ற பாட்டியை சந்தித்தார். அவரும் தனிமையில் வசித்து வந்துள்ளார். வயதான காலத்தில் துணைகளை இழந்த இருவரும், நன்றாக பழகி வந்துள்ளனர்.. ஒருநாள், தன்னுடைய விருப்பத்தை சொல்லியுள்ளார்.

எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது.. நமக்கு இப்போதுதான் ஒரு துணை தேவை.. நமக்குள் நல்ல புரிதலும் உள்ளது. இருவரும் கல்யாணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாமா?” என்று கேட்டுள்ளார். இதற்கு பாட்டியும் சம்மதம் சொல்லியுள்ளார்.

இந்த திருமணத்துக்கு தங்கள் பிள்ளைகளின் சம்மதம் தான் முக்கியம் என்று முஸ்தா தன்னுடைய வீட்டில் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் என அனைவரிடமும் தன் விருப்பத்தை தெரிவித்தார்.

அவர்கள் அனைவருமே தாத்தாவின் விருப்பத்திற்கு ஓகே சொன்னார்கள்.. இதையடுத்து, இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்ட மகன்கள், மருமகள்கள், மருமகன்கள், பேரப்பிள்ளைகள், முன்னிலையில்தான் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று முஸ்தபா விரும்பினார்.

அதன்படியே அனைத்து குடும்ப உறுப்பினர்களும் முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

புதுமண தம்பதியிடம், மொத்த குடும்பத்தினரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர். இப்போது மணமக்கள் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை துவங்கி உள்ளனர். இச்சம்பவம் அங்கு இருப்பவர்களை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

தற்கொலை செய்த 11 வயது மாணவி : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

வைஷ்ணவி..

சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா – வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற 11 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிட்டதால் சிறுவன் நவீன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாகச் சாத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து நவீன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, அவரது அக்கா வைஷ்ணவி தூக்கில் தொங்கிய இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வைஷ்ணவியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் அடிக்கடி வாலிபர் ஒருவருடன் பேசி வந்துள்ளார்.

இதைப்பார்த்த வைஷ்ணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அந்தப் பெண் வைஷ்ணவியைக் கண்டித்துள்ளார். இதில் மனவேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இதில் பக்கத்து வீட்டு அக்கா திட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.