இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை : மீண்டும் எப்போது மின்வெட்டு?

மின்வெட்டு..

இன்று முதல் நாளை மறுதினம் வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் ஜனவரி 27ஆம் திகதி பரிசீலிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எனினும், இந்த 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) தற்போதுள்ள எரிபொருட்களின் இருப்புக்கள், அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களும் கோரப்பட்டுள்ளன.

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு மசகு எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆம் அலகின் மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையர்களின் நெஞ்சங்களை கலங்க வைத்த இரட்டைக் குழந்தைகள்!!

இரட்டைக் குழந்தைகள்..

இலங்கையின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த இரட்டை குழந்தை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மாத்தளை, மடவல, உல்பத்தை பிரதேசத்தில் இரட்டை குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 14 நாட்களில் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகளை பிரவசித்த தாய் 14 நாட்கள் உடல் நலத்துடன் இருந்த நிலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 32 வயதான சுமித் குமார கருணாரத்ன என்ற தந்தையே குழந்தைகளை வளர்த்து வருகிறார்.

சுமித் குமார, நிரோஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கூலி வேலை செய்யும் சுமித்திற்கும் நிரோஷாவுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

சிஸேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளது. 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பின்னர் இரவு திடீரென ஏற்பட்ட உடல் நல பாதிப்பு காரணமாக தாய் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு சுயநினைவின்றி இருந்த பெண் உயிரிழந்துள்ளார். தனது மனைவி உயிரிழந்ததனை தன்னால் இன்னமும் நம்ப முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குழந்தைகளை வளர்ப்பதற்கு அவருக்கு போதுமான வருமானம் இன்மையால் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்ளு பால் பக்கட்கள் கொள்வனவு செய்வதற்கு கூட வசதி இல்லாத அவருக்கு அயலவர்கள் உதவி வருகின்றனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை அவரை இன்னும் பாதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில் இதன் உண்மையை அறிந்த ஊடக நண்பர்கள் தமது சமூக வலைத்தளங்களில் உதவி கோரி தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

பைசர் தடுப்பூசி பாலியல் பலவீனத்தை ஏற்படுத்துமா? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்!!

பைசர் தடுப்பூசி..

கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி வகைளில் ஒன்றான பைசர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனால் பாலியல் ரீதியாக பலவீனத்தை ஏற்படுத்தாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பைசர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் எனவும், பாலியல் ரீதியான பலவீனங்கள் ஏற்படும் எனவும், மாதவிடாய் சக்கரத்தில் மாற்றம் ஏற்படும் எனவும் செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் சர்மிளா டி சில்வா இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தொடர்ந்தும் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

எம்மிடம் சில நோயாளிகள் வருகின்றார்கள். இடுப்பு வலி, வயிற்றுவலி, இரண்டு மூன்று நாட்கள் இருமல் என கூறுகின்றனர். ஒரு மாத காலத்திற்கு முன்னர் எடுத்துக்கொண்ட தடுப்பூசியினால் இவ்வாறு ஏற்பட்டது என அவர்கள் கருதுகின்றார்கள்.

தடுப்பூசி ஏற்றிக்கொண்டதன் பின்னர் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தடுப்பூசியே காரணம் என கருதுகின்றார்கள். இது மக்களின் மத்தியில் நிலவி வரும் மூட நம்பிக்கையேயாகும்.

இளைஞர், யுவதிகள் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில்லை. பாலியல் பலவீனம் ஏற்படும், மாதவிடாய் சக்கரத்தில் மாற்றம் ஏற்படும், குழந்தை பேறின்மை ஏற்படும் என அவர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் பைசர் தடுப்பூசியினால் ஏற்படப்போவதில்லை என டொக்டர் சர்மிளா டி சில்வா கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதி சடலமாக மீட்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதியில் இன்று காலை முச்சக்கர வண்டி சாரதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த நிலையில் முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை கறுவப்பங்கேணியிலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பயணிகளை ஏற்றுவதற்காக சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவர் கறுவப்பங்கேணி நாவலர் வீதியை சேர்ந்த 49வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாசிலாமணி தர்மரட்னம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

திருடர்களினால் பறிபோன உயிர : யாழில் இடம்பெற்ற விபரீதம்!!

யாழில்..

சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார்.

சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் கொள்ளையிட்டு தப்பித்ததை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உள்ளிட்டோர் துரத்திச் சென்ற நிலையில், கொள்ளையர் பயணித்த மோட்டார் சைக்கிள் சுன்னாகம் சந்தி வீதி சமிஞ்சை விளக்கு பகுதியில் எதிரே வந்தவரை மோதித்தள்ளியது.

சம்பவ இடத்திலேயே அதிக குருதிப்போக்கு போன நிலையில் அவர் உயிரிழந்தார். கொள்ளையர்கள் இருவரும் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையில் மூன்றாவது லொக்டவுன் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

மூன்றாவது லொக்டவுன் தொடர்பில்…

இலங்கையில் மூன்றாவது முறையாக லொக்டவுன் செய்வதற்கு எவ்வித ஆயத்தங்களும் மேற்கொள்ளப்படாதென சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாடு மீண்டும் முடங்கினால் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்னும் வேகமாக முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ஒரு வருடத்திற்கு தடுப்பூசிகளை மிகவும் வெற்றிகரமாக செலுத்திய உலகின் முதல் 5 நாடுகளுக்கு இலங்கை உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நிலைமையை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதற்காக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது மக்களின் பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் உலகின் பணக்கார நாடுகளில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலைமையில் இருந்து தப்பி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

சிலர் பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் தேவையற்ற அச்சத்தையும் அடிப்படையற்ற பிரச்சாரங்களையும் முன்னெடுக்கின்றனர். அதில் எவ்வித உண்மையும் இல்லை என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

திருமணமாகி 8 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கதறும் உறவினர்கள்!!

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் சாஜன் (வயது28). நாகர்கோவில் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரும் பக்கத்து ஊரான பள்ளிக்கோணத்தை சேர்ந்த அனிஷாவும் (26) கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அனிஷ எம்.சி.ஏ. பட்டதாரி. கடந்த சில மாதங்களாக ஒரு வங்கியில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சாஜன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அனிஷா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இதற்கிடையே நேற்று மாலையில் சாஜின் வீட்டில் இல்லாத நேரத்தில் அனிஷா வெகுநேரமாக அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அனுஷாவின் மாமியார் பால் கொடுக்க அறைக்கு சென்றார்.

அப்போது, அனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 8-வது மாதத்தில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுத்த காதலன் வீட்டார் : விபரீத முடிவெடுத்த இளம் பெண்!!

திருநெல்வேலி..

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய கென்ஸ்லின். இவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அரவது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் ஆசிரியர் மரிய கென்ஸ்லின் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலுக்கு அந்த இளைஞனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மரிய கென்ஸ்லின் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாப்பிள்ளையை மாற்றிய மணப்பெண் : திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

கடலூர்..

தமிழகத்தில் மணமகன் கன்னத்தில் மாப்பிள்ளை அடித்ததால் மணமகனை மாற்றிய மணமகள் சம்பவத்தில் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும்,

காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் படி நேற்று முன் தினம் வரவேற்பு நிகழ்ச்சி காடாம்புலியூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் வந்திருந்ததால், ஆட்டம், பாட்டம் என சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது மணப் பெண், உறவினர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதால், இதைக் கண்ட மணமகன் ஏன் இப்படி செய்கிறாய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட, அதன் பின் ஒரு கட்டத்தில் அவரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மணப் பெண் வேதனையில் இருந்துள்ளார். மணப்பெண்ணின் தந்தை திருமணத்திற்கு முன்னரே இப்படி செய்தால் எப்படி என்று வாக்குவாதம் செய்ய, ஒரு கட்டத்தில் மணப் பெண் நான் இவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதையடுத்து, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் இரவோடு இரவாக கூடிப்பேசி, உறவினர் ஒருவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர் மறுநாளே அவருடன் திருமணத்தை முடித்திருந்தனர்.

இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் தீயாக பரவியதால், இது குறித்து மாப்பிள்ளையான ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர், இந்த சம்பவம் தொடர்பாக பண்ட்ருட்டியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு பேர் வீட்டிலும் பேசிதான் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திருமணத்திற்கு முன்பு டிஜே பார்ட்டி அவர்கள்தான் வைத்திருந்தனர்.

யாழில் புகையிரதத்தில் மோதி மாணவன் பரிதாபமாக பலி!!

யாழில்..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். காங்கேசன்துறை நோக்கி சென்ற உத்தரதேவி ரயில் கடவையை கடந்த மாணவன் மீது ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சாவகச்சேரி இந்துக்கல்லூரி முன்பாக மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தை சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாளை பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்வுக்கு ஒன்றுக்காக ஆடை வாங்கச் சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் காபெற் வீதிகளில் நெல் உலரவிடும் அவலம் இவ்வருடமும் தொடர்கின்றது!!

வீதிகளில் நெல் உலரவிடும் அவலம்..

வவுனியா மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் இவ் வருடமும் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாக வீதிகளில் நெல்லினை காய வைப்பதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற பல கூட்டங்களில் நெல் உலர வைப்பதற்கான தளங்கள் இல்லாததன் காரணமாகவே ஈரமாக நெல்லினை விற்பனை செய்வதாகவும் ஒவ்வொரு கமக்கார அமைப்புக்கும் குறைந்தது,

நெல் உலர வைப்பதற்கான ஒரு தளத்தினையாவது அமைத்துத் தாருங்கள் என விவசாயிகளினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவை நிறைவேறாததன் காரணமாகவே விவசாயிகள் நெல்லினை வீதிகளில் உலர வைக்கின்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வருடங்களிலும் இந்த நிலைமை தொடர்ந்தது. இந்த நிலைமையினால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புளியங்குளம் – நெடுங்கேணி பிரதான வீதியின் பரவலான இடங்களில் இவ்வாறு நெல் உலர விடப்பட்டுள்ளன.

வீடு இல்லாத இலங்கையர்களுக்கு வீடு வழங்கும் புதிய திட்டம் : உதவித் தொகை அதிகரிப்பு!!

வீடு வழங்கும் புதிய திட்டம்..

இலங்கையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 6,50,000 ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்காலிக வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 600,000 ரூபாய் உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நிர்மாணப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த உதவித்தொகையை 50,000 ரூபாவால் அதிகரிக்குமாறு வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு இந்த வருடம் முதல் தலா 650,000 ரூபாவை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் கடும் எரிபொருள் நெருக்கடி அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை!!

எரிபொருள் நெருக்கடி..

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, காணொளி தொழில்நுட்பம் மூலம் வாரத்தில் ஒரு நாள் பாடசாலையை நடத்துதல்,

போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நேரங்களில் அலுவலகங்களை திறப்பது, பொது நிறுவனங்களில் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு அதிகாரிகளை வரவழைப்பதை கட்டுப்படுத்துதல்,

பிரதேச செயலாளர்கள் போன்றவர்களை கொழும்பிற்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தி, இணையத்தில் கலந்துரையாடல்களை நடத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்தல்,

தொழிற்சாலைக்குத் தேவையான ஆற்றலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற தொழில்துறையினரை ஊக்குவித்தல் போன்ற யோசனைகளை அவர் முன்வைத்துள்ளார்.

எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், எரிபொருளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் எரிபொருள் பாவனை அதிகரிப்பிற்கு காரணமானதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக செலவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான மாற்று யோசனையாக அமைச்சர் இந்த முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

-தமிழ்வின்-

சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி : அதிர்ச்சியில் பிரபல நடிகை!!

தோசையில் தங்க மூக்குத்தி..

இந்தியாவில் பிரபல நடிகை ஒருவர் சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலத்தில் காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சூரிய தாரா.

இவர் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். நேற்று இரவு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடையில் நின்று தோசை மாவு வாங்கி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளுக்கு தோசை ஊற்றி கொடுத்து விட்டு அதன் பின்னர் தானும் தோசை ஊற்றி சாப்பிட்டிருக்கிறார். அப்போது சூரிய தாரா சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி கிடந்ததை கண்டு அவர் அதிர்ந்து போனார்.

இதையடுத்து அந்த மூக்குத்தியை புகைப்படம் எடுத்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த தோசையை குழந்தைகள் கவனிக்காமல் சாப்பிட்டு இருந்தால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும்.

தோசை மாவு தயாரிக்கும்போது எதிர்பாராவிதமாக மூக்குத்தி விழுந்திருக்கலாம் என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த நீராவி மூலம் இயக்கப்படும் பாரந்தூக்கி புகையிரதம்!!

பாரந்தூக்கி புகையிரதம்..

முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதமொன்று இன்று (24.01.2022) காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது.

1953 ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 100 அடி நீளமும், 35,000 kg திணிவை உயர்த்தக்கூடியதுமான பாரந்தூக்கி புகையிரமே இவ்வாறு வந்தடைந்தது.

இப் புகையிரதம் முற்றும் முழுதாகவே நீராவி மூலம் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு கட்டங்களாக மின்வெட்டு : சற்றுமுன்னர் நேர அட்டவணையை வெளியிட்டது!!

மின்வெட்டு..

சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது. மின்தடை இடம்பெறும் நேரங்கள் பின்வருமாறு,

A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை, B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை, C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை, D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை. முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்

முழுமையான விபரம்..