வவுனியா சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் அமைந்திருந்த இராணுவச் சாவடி அகற்றம்!!

இராணுவ சாவடி..

வவுனியா சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் அல் இக்பால் மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் இராணுவத்தினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவ் வீதியுடாக சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்கள் இராணுவத்தினரினால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து இவ் சோதனைச்சாவடி இராணுவத்தினரினால் அகற்றப்பட்டது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்த செட்டிக்குளம் – மதவாச்சி பிரதான வீதியிலுள்ள ஓர் சோதனை சாவடி உட்பட பல இராணுவ சோதனை சாவடிகளும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவின் உயர்கல்வி கல்வி வளங்களில் ஒன்று அழிவின் விளிம்பில்!!

உயர்தொழிநுட்பவியல் நிறுவகம்..

வவுனியா மாவட்டத்தின் ஒமந்தை பகுதியில் 2015 ஆண்டிலிருந்து இருந்து வெற்றிகரமாக இயங்கி வந்த இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் தருவாயில் உள்ளது.

2020 ஆண்டு வரையும் HNDA, HNDIT, HNDE ஆகிய மூன்று பாடநெறிகள் காணப்பட்டது. தற்போது HNDIT பாடநெறி நீக்கப்பட்டு HNDA மற்றும் HNDE ஆகிய பாடநெறிகள் மட்டுமே காணப்படுகின்றது.

இம்முறை 2021 கல்வியாண்டிற்கான மாணவர்கள் ஆட்சேர்ப்பு நடைபெறும் வேளையில், இலங்கை முழுவதும் 20000  மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்க பெற்ற வேளையிலும் ஓமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் பாடநெறியை தொடங்குவதற்கு தேவையான மாணவர் எண்ணிக்கையை பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணத்தால் ஓமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவகம் மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

2020 மற்றும் அதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியும். இங்கு முழுநேரம் மற்றும் பகுதிநேரமாக கற்றுக்கொள்ள முடியும்.

இங்கு கற்கைநெறிகளை இலவசமாக கற்றுக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பை நாங்கள் தவற விடுவதன் மூலம் வருங்காலகளில் கல்வி கற்ற உள்ள எமது மாணவர்களும் பாதிக்கபடுவார்கள் .

2015ம் ஆண்டிற்கு முன்னர் HNDA பாடநெறி கற்பதற்காக எம்மவர்கள் பலர் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் தேவைப்பாடு காணப்பட்டது .

அவர்கள் தற்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றார்கள். வவுனியா ஓமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் மூடப்படுமாக இருந்தால் வவுனியா மாணவர்களுக்கு அதே நிலைமை ஏற்படும்.

ஒமந்தை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தினர் கற்கை நெறி தொடர்பில் தெரிவிக்கையில், 2020 ம் ஆண்டு அல்லது அற்கு முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இலவச முழுநேர உயர்கல்வி வாய்ப்பினை தொடர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (முழுநேரம் /பகுதிநேரம்) 04 ஆண்டுகள் உயர் தேசிய ஆங்கில  டிப்ளோமா (முழுநேரம் / பகுதிநேரம்) 02½  ஆண்டுகள்.

இக்கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்கின்ற மாணவர்களில் HNDA பூர்த்தி செய்பவர்கள் பல்கலைக்கழக பட்டத்திற்கு பிரதியீட்டுத் தகைமையினை பெறுவதுடன் அரச துறையில் பட்டதாரிகள் நியமனத்தின் போதும் தனியார் துறைகளில் இடைநிலைக் கணக்காளர்களாக வரமுடியும்.

மேலும்; HNDE பூர்த்தி செய்பவர்கள் தற்பொழுது ஆசிரியர் சேவையில் தகைமையாக கருதப்படுவதுடன் தனியார் துறையின் எதிர்பார்க்கைகளுக்கிணங்க தகைமையுடையவர்களாக வெளியேறுகின்றனர்.

விண்ணப்ப முடிவுத்திகதி 𝟑𝟏.𝟎𝟏.𝟐𝟎𝟐𝟐 என்பதுடன் மேலதிக விபரங்களுக்கு 𝟎𝟐𝟒𝟐𝟎𝟓𝟐𝟕𝟑𝟑, 𝟎𝟕𝟕𝟔𝟏𝟔𝟐𝟎𝟏𝟎, 𝟎𝟕𝟕𝟐𝟑𝟏𝟑𝟏𝟖𝟗, 𝟎𝟕𝟕𝟎𝟐𝟓𝟕𝟑𝟏𝟒 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தவும்.

சிறுவனை துடிக்க துடிக்க கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த கொடூரம் : பதறவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவர் தற்போது வெளிநாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஜோகன் ரிஷி என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ரிஷி திடீரென மாயமாகி உள்ளார். சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சகாய சில்ஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுவனின் கழுத்தில் நகை இருந்ததால் நகைக்காக யாராவது கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பக்கத்து வீட்டு பாத்திமா என்ற பெண் மீது சிறுவனின் தாயாருக்கு சந்தேகம் வந்ததால் உறவினர்களோடு பார்த்திமா வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்த போது துணியால் வாய் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பொலிஸார் பாத்திமாவை உடனடியாக கைது செய்தனர். சிறுவன் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகைகாகத்தான் சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்ததாக பாத்திமா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்!!

பிள்ளையார் சிலை..

வவுனியா இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வரப்பட்டது.

வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், அப் பகுதியால் பயணத்தில் ஈடுபடும் மக்கள் என பலராலும் வழிபடப்பட்டு வந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் குறித்த சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன், சிலை இருந்த இடம் வெறுமையாக காட்சியளிக்கின்றது.

இலங்கையில் அமுலுக்கு வரவுள்ள மற்றுமொரு தடை!!

குளிரூட்டி பயன்பாடு..

இலங்கையில் அலுவலகங்கள், வீடுகளில் குளிரூட்டி பயன்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் தடையின்றி மின் பாவனையை குறைப்பதற்கான யோசனையை அடுத்த அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குளிரூட்டி பயன்பாட்டை நிறுத்துதல், அலுவலகங்களில் மின்சாதனங்களை அணைத்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான வீதிகளில் விளக்குகளை அணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கும் யோசனைகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

15 வயதுச் சிறுமியுடன் காதல் : 20 வயது இளைஞனை கொடூரமாக கொலை செய்த 19 வயது இளைஞன்!!

கடவத்தை பிரதேசத்தில்..

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தங்குமிடம் ஒன்றில் தற்காலிகமாக தங்கிருந்த 15 வயதுடைய சிறுமியுடன் இருந்த நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த சிறுமியின் காதலன் என கூறப்படும் 19 இளைஞன், குறித்த நபரை உடைந்த போத்தலில் ஒன்றில் குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் அதே பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் குறித்த சிறுமியுடன் ஏற்கனவே காதல் தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இளைஞன் மற்றும் 15 வயதுடைய சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுவதிகளை மிரட்டி இலங்கை இளைஞனின் மிக மோசமான செயல் : ‘கொடூரமான கோழை’ அவுஸ்திரேலிய நீதிபதி சீற்றம்!!

யுவதிகளின் ஆபாசமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு அவர்களை, வலியுறுத்தி பின்னர் அவற்றை, அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிய குற்றச்சாட்டை இலங்கை மாணவர் ஒருவர் ஏற்றுக்கொண்டதாக அவுஸ்திரேலிய செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

ரன்பதி அமரசிங்க என அடையாளம் காணப்பட்ட 24 வயதான அவர், அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாண நீதிமன்றத்தில் காணொளி இணைப்பு மூலம் முன்னிலையானார்.

இதன்போதே அவர், தமக்கு எதிரான 25 குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீக்கின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும், அவர் இளம் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

அவர்கள், தமது கோரிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், அவர்களுடன் தொடர்பு கொண்டமைக்கான ஆரம்ப சாட்சியங்களை, பெண்களின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அமரசிங்கவின் குற்றச்செயல் 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது, அவுஸ்திரேலிய காவல்துறையினரின் விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது ஆரம்பத்தில் 16 குற்றங்கள் சுமத்தப்பட்டன, எனினும் பின்னர் மேலதிக குற்றச்சாட்டுக்களும் சேர்க்கப்பட்டன.

அண்மையில் இடம்பெற்ற விசாரணையின்போது, நீதிபதி டக்ளஸ் ட்ராப்னெல் ரன்பதி அமரசிங்கவை ஒரு “கொடூரமான கோழை” என்று விவரித்தார்.

இந்தநிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் அமரசிங்கவுக்கு நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 24ம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளதாக அந்தச் செய்திச் சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்படப் போகும் பாரிய மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வார இறுதியில் சிறியளவை சரிவைக் கண்டிருந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,835 டொலரை எட்டியுள்ளது.

இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 டொலர் முதல் 1910 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றின் பின் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்து வருவதுடன் மீண்டும் விலை உயரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!!

த்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு..

வவுனியாவில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு பூராகவும் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்,

வவுனியாவில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு செல்லும் பலரும் அத்தியாவயசிப் பொருட்களை பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சீனி, பால்மா மற்றும் சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். பருப்பு மற்றும் பொன்னி அரசி என்பனவே அங்கு அதிகமாக கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

4 மணிநேர மின்வெட்டு உறுதி : வெளியானது அறிவிப்பு!!

மின்வெட்டு..

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இலங்கை மின்சார சபைியன் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை அறிவித்துள்ளார்.

நாளை (24) முதல் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருந்தாலும், அதனை மேலும் இரண்டு மணி நேரமாக நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இந்த செயன்முறையை தொடர முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் இலங்கை மின்சார சபை நிச்சயமாக 4 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது வறட்சியற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் நீர்மின் நிலையங்கள் முழு கொள்ளளவுடன் இயங்கி வருவதாகவும் அவர் எச்சரித்தார். இதனால் எதிர்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரினை வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு!!

புலமைப்பரிசில் பரீட்சை..

நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22.01.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445 பரீட்சாத்திகளும், சிங்களமொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளுக்கு 496 பரீட்சை மத்திய நிலையங்களில் பரிட்சைகள் நடைபெற்றது

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 16 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன்,

கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் பிரயோகப்படுத்தப்பட்டிருந்தன

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்பட்டிருந்தது.

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் விபத்து : ஒருவர் காயம்

ஏ9 வீதியில் ஹயஸ் வாகனம் விபத்து…

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று (22.01) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று கொக்காவில் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்து குறித்து மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் காஸ் அடுப்பு வெடிப்பு சம்பவம் : பொலிஸார் விசாரணை

வவுனியா தோணிக்கல் காஸ் அடுப்பு வெடிப்பு..

வவுனியா தோணிக்கல் , திருவள்ளுவர் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தேநீருக்காக தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த சமயத்தில் காஸ் அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தோணிக்கல், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் முதியவர் ஒருவர் தேநீருக்காக தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த போது இன்று (22.12) காலை திடீரென் காஸ் அடுப்பு வெடித்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட இரு முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட..

2021 ஆம் ஆண்டுக்குரிய கல்விப்பொதுதராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன ( L.M.D. Dharmasena) தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கடந்த ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பங்களுக்கான இறுதி திகதியாக இம்மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது www.onlineexams.gov.lk/eic அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலி ஊடாக (Mobile App ‘Exams) விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒரு நாள் சேவை ஊடாக பரீட்சை சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(24) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருப்பினும், சான்றிதழ்களுக்கு இணையம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக விண்ணப்பிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

தேவையான சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சுக்கு அல்லது விண்ணப்பதாரரின் முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் இலங்கையில் கடும் எரிபொருள் நெருக்கடி – வெளியான தகவல்!

இலங்கையில் கடும் எரிபொருள்…

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கையில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என எரிபொருள் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 100 டொலர்களை நெருங்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

குளிர் காலநிலை காரணமாக ஐரோப்பாவில் எரிபொருள் பாவனை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வாரம் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை 87 டொலர்களாக அதிகரித்தது. இது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட அதிகளவான விலை உயர்வு எனக் கூறப்படுகிறது.

டொலர் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் பொருளாதாரத்திற்கு இந்த நிலைமையால் பாதிப்பு ஏற்படும்.

இவ்வாறான நிலைமையில், இலங்கையில் எரிபொருளின் விலைகளை அதிகரிக்காது போனால், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் தேசிய கலை இலக்கியப்பேரவையின் அலுவலகம் திறந்து வைப்பு

தேசிய கலை இலக்கியப்பேரவையின்..

முற்போக்கு கலை இலக்கியச்செயற்பாடுகளின் முன்னோடியாக செயற்ப்பட்டுவரும் தேசியகலை இலக்கிய பேரவையின் அலுவலகம் வவுனியாவில் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.

பேரவையின் தலைவர் க.தணிகாசலம் தலைமையில் குடியிருப்பு வீதி பூந்தோட்டம் வவுனியா எனும் முகவரியில் குறித்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் வரவேற்புரையை சு.டொன்பொஸ்கோ நிகழ்த்தியிருந்தார். அதனை தொடர்ந்து பேரவையின் தலைவரால் அலுவலகம் உத்தியோகபூர்வமாக நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து வாழ்த்துரைகளும்,கவிதை அரங்கும் இடம்பெற்றிருந்தது.

அலுவலகத்தில் இ.கா.சூடாமணி அரங்கு மற்றும் மாவை வரோதயன் நூலகம் என்பன அமையபெற்றுள்ளது.

நிகழ்வில் சிரேஸ்ட பொதுவுடமைவாதி சி.கா.செந்தில்வேல்,ஓய்வுநிலை விரிவுரையாளர் நா.பார்த்தீபன்,தமிழ்மணி மேழிக்குமரன்,நி.பிரதீபன், கலை இலக்கியச்செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.