கணவனின் உயிரை காப்பாற்ற வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவி : பின்னர் நடந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாசிக்க போராடிய கணவனை காப்பாற்ற வாயோடு வாய் வைத்து சுவாவம் கொடுத்த மனைவியின் முயற்சி தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுபாடும் நிலவுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனையில் ரவி சிங்கேல் என்பவர் கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து செயற்கை சுவாசத்தின் தேவை அதிகரித்தது. இந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவரும் அவரது மனைவியும் பல மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சை பெற முயற்சித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டபோதும், அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் தனது கணவரைக் காப்பாற்ற மனைவி ரேணு சிங்கெல் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறினார். ஆனால் இவரது முயற்சி தோல்வியில் முடிந்து ரவி சிங்கேல் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஆக்ரா மருத்துவ அதிகாரி பாண்டே கூறுகையில் மாவட்டம் முழுவதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

தகனம் செய்ய சாலையில் நீண்ட வரிசையில் குவிந்து கிடக்கும் சடலங்கள் : நெஞ்சை உலுக்கும் காட்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் தகனம் செய்ய சாலையில் நீண்ட வரிசையில் சடலங்கள் குவிந்து கிடக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது. குறித்து வீடியோ தலைநகர் டெல்லியில் உள்ள சுபாஷ்நகர் சுடுகாட்டில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 3ம் திகதி வரை முழு ஊரடங்கை நீட்டிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஆக்ஸிஜனை விநியோகம் செய்யக்கோரி மருத்துவமனைகள் நீதிமன்றத்தை நாடின. மேலும், உதவிக்கரம் நீட்டுமாறு டெல்லி அரசு வெளிநாடுகளையும் நாடியது.

தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை கிடைக்காமல் கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர், இறந்தவர்களின் சடலங்களை குவியல் குவியலாக தகனம் செய்ய வேண்டிய துயர நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சுபாஷ்நகர் சுடுகாட்டில் தகனம் செய்ய சடலங்கள் நீண்ட வரிசையில் சாலையில் வைக்கப்பட்டிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சுடுகாட்டில் பல சடலங்கள் தகனம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், தகனம் செய்ய சாலையில் பல சடலங்கள் வரிசையாக காத்துக்கிடப்பதை வீடியோ காட்டுகிறது. குறித்த காட்சி தங்கள் இதயத்தை நொறுங்கச் செய்ததாக வீடியோவை கண்ட பலர் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு அழைக்கப்படுவது குறைக்கப்படவுள்ளது!!

அரச ஊழியர்கள்..

நாட்டில் காணப்படும் கோவிட் -19 தொற்று நோய் நிலைமையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது நாளைய தினம் முதல் குறைக்கப்படலாம் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இன்று அல்லது நாளை இறுதி தீர்மானம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னரும் கோவிட் பரவல் காரணமாக அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பது குறைக்கப்பட்டிருந்தது.

தொற்று நோய் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், அனைத்து அரச ஊழியர்களும் கடந்த மார்ச் 8 ஆம் திகதி , ஒரு வருட காலத்திற்குப் பின்னர் அலுவலகங்களுக்கு சமூகமளித்தனர்.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவும் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

அதேநேரம் அடுத்த இரண்டு வாரக்காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறையின் அனைத்து நிகழ்வுகளும் ரத்துசெய்யப்படவேண்டும் என்று நேற்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்தல் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கொரோனா வைரஸால் திணறும் இலங்கை : மேலும் 892 பேருக்குத் தொற்று!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 892 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதற்கமைய, இலங்கையில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 271 பேருக்கு இதுவரையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 266 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால், நாட்டில் இதுவரை கோவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 644 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

விடுமுறை..

மேல் மற்றும் வடமேல் மாகாண அனைத்து பாடசாலைகளும் தற்காலிகமாக மூடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகள் என்பன தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாடசாலைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா ஒமந்தை மத்திய கல்லூரியில் இரத்ததான முகாம்!!

இரத்ததான முகாம்…

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் பாக்கியம் அறக்கட்டளை மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இவ் இரத்தான முகாமில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் , ஆசிரியர்கள் ,பாக்கியம் அறக்கட்டளை அமைப்பினர் மற்றும் சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குருதி கொடையளித்தவர்களுக்கு ‘உயிர்நேய மாண்பாளர்’ எனும் சான்றிதழும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா ஆலங்களில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட சித்ரா பௌர்ணமி விரதம்!!

சித்ரா பௌர்ணமி…

சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பௌர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது.

மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்) சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

சிறப்புப் பொருந்திய இத் திருநாள் இன்றாகும். இந் நாளில் தாயை இழந்தவர்கள் தனது தாயாரிற்கு பிதிர் தர்பணம் செய்வது சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி விரதம் இருந்தால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும்.

அந்த வகையில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் சித்திரா பௌர்ணமி விரதம் இந்துக்களால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியாஇ குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் கருமாரி அம்மனுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் தாயாரை இழந்தவர்கள் பிதிர் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

அத்துடன் சித்ரா கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போது தாயாரை இழந்த பலரும் தமது தாய்காக விரதம் அனுஸ்டித்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 44 வது நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

ந்தை செல்வாவின் 44 வது நினைவுதினம்..

வவுனியாவில் தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத் தூபியில் இன்று (26.04.2021) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழரசு கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம் அன்னாரது சிலைக்கு மலர்மாலை அணிவித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் அதன் பின்னர் ஏனையவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம் மற்றும் தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா பாடசாலைகளில் 50 வீதமான மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி : அதிபர்களுக்கு அவசர அறிவித்தல்!!

வவுனியா பாடசாலைகளில்..

வவுனியா மாவட்டம் உட்பட நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் நாடு முழுவதும் பல நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று நாட்கள் விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் நாளையதினம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார்.

பாடசாலையில் கைகழுவும் ஏற்பாடு முழுமையாக செயற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருத்தம் பராமரிப்பு மேற்பார்வை வழிப்படுத்தல் என்பவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்,

பாடசாலையினுள் முழுமையாக முகக்கவசம் பயன்படுத்தப்படுவது உறுதிப்படுத்த வேண்டும். இது ஆசிரியர்கள் மாணவர்கள் சிற்றூழியர்கள் என சகலருக்கும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்,

வகுப்பறைகளில் 15 தொடக்கம் 20 மாணவர் வரையில் சமூக இடைவெளி பேணக்கூடியவகையிலான வகுப்புக்களே நடத்தப்பட வேண்டும். இதற்கு ஏற்றாற்போல் பிரிவுகளை பிரித்து 50 மாணவர் உள்ளடங்கிய பாடசாலை நாளாக திட்டமிட செயற்படுத்த அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தவிர்ந்த எவ்விதமான செயற்பாடுகளும் மேற்கொள்ளமுடியாது என அரசு அறிவித்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டுசெயற்படவும்.

மேற்படி விடயங்கள் தொடர்பாக அர்பணிப்பான சேவையினை ஆசிரியர்கள் வழங்க கூடிய வகையில் கலந்துரையாடி கோவிட் சவாலை முறியடித்து மாணவர்களுக்கான கல்வியை வழங்க வேண்டும் போன்ற அறிவித்தல்களை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ததில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து தம்புள்ளை சென்றுவந்த மொத்த வியாபாரிகளுக்கு பிசீஆர் பரிசோதனை!!

பிசீஆர் பரிசோதனை..

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டத்தையடுத்து அங்கு சென்று வந்த வவுனியாவைச் சேர்ந்த 112 மரக்கறி மொத்த வியாபாரிகளுக்கு இன்று (26.04) காலை பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவின் மூன்றாம் அலை தொற்றையடுத்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள், பழங்கள் என்பவற்றை கொண்டு செல்பவர்கள் மற்றும் தம்புள்ளையில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு வவுனியாவில் உள்ள மரக்கறி மொத்த நிலையத்தில் சுகாதார துறையினரால் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

112 பேருக்கு இவ்வாறு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் கோவிட்-19 தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் செயற்பாடு..

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (26.04.2021) காலை 8 மணியளவில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.

பழைய பேரூந்து நிலையத்தினை சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதுடன் நடைபாதைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்து வீசப்பட்டது.

வவுனியாவில் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 18 பேருக்கு கோவிட் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் கல்வியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 18 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளைச் சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் 18 பேருக்குத் தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் ரிஷாட் பதியுதீன் விடுதலையை முன்னிறுத்தி முனாஜித் மௌலவி கவனயீர்ப்பு போராட்டம்!!

முனாஜித் மௌலவி..

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற கு.ற்றச்சாட்டின் அடிப்படையில் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கடந்த 24ம் திகதி அதிகாலை ப.யங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவரின் விடுதலையினை முன்னிறுத்தி வவுனியாவை சேர்ந்த மௌலவி முனாஜித் அவர்களினால் தொடர் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பூட்சிற்றிக்கு முன்பாக இன்று (26.04.2021) காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. தனியொரு மனிதராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மௌலவி முனாஜித் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை இதற்கு முன்பு கைது மேற்கொண்டமைக்கு பல காரணங்கள் தெரிவித்தனர். இப்போது கைது செய்வதற்கு உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார் என கைது செய்துள்ளனர். நோன்பு மாதத்தின் இவ்வாறான செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டமையினை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ரிஷாட் பதியுதீன் அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு த.ண்டனை வழங்குங்கள் ஆனால் அவர் இப்படி செய்யமாட்டார். அவர்களை விடுதலை செய்து வி.சாரணைகளை மேற்கொள்ளுங்கள் அவரின் பாராளுமன்ற உறுப்புறுமையினை நீக்க வேண்டாம்.

அவர்களை விடுதலை செய்யும் வரை எனது போ.ராட்டம் தொடரும் 90 நாட்கள் ஆனாலும் இவ்விடத்தில் எனது போ.ராட்டம் தொடரும் என தெரிவித்து தனியொரு மனிதராக போ.ராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.

யாழில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து : இராணுவத்தினர் பலர் படுகாயம்!!

விபத்து..

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பலாலி நோக்கி பயணித்த இராணுவ வாகனம் ஒன்றும் கோப்பாய் – மருதனார்மடம் வீதியால் மருதனார்மடம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் உரும்பிராய் சந்தியை கடக்கும்போது விபத்துக்குள்ளாகி உள்ளன.

சம்பவத்தில் மணல் ஏற்றிவந்த டிப்பர் கவிழ்ந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தில் இருந்த 13 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 3 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் விபத்து : சிறுவன் உட்பட நால்வர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (25.04.2021) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியினை மாமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல் : நவரத்தினராசா சரஸ்வதி!!

அமரர். நவரத்தினராசா சரஸ்வதி

தோற்றம் 28.04.1954 || மறைவு 25.04.2021

யாழ்ப்பாணம் புங்குடுதீவு நடுவு திருத்தி 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 201/52 ,6ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம் வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நவரத்தினராசா சரஸ்வதி அவர்கள் 25.04.2021 ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் காலமானார்.

அன்னார் நவரத்தினராசா (செயலாளர்- கோவில்குளம் சிவன்கோவில்) அவர்களின் அன்புத் துணைவியாரும் புங்குடுதீவு நடுவுதிருத்தி காலஞ்சென்ற நமசிவாயம் அன்னம்மா இணையரின் அன்பு மகளும் நயினாதீவு 6ம் வட்டாரம் காலஞ்சென்ற ஆறுமுகம் வடிவாம்பிகை (ஆதின கர்த்தா நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில்)இணையரின்
அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரோஜினி தேவி மற்றும் ரதிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் விஷ்ணுகரன் (பிரான்ஸ்) விசாகை (ஆசிரியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) கௌசிகன் (பிரான்ஸ்) கார்த்திகாயினி (ஆசிரியை கோவில்குளம் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிருந்தா (பிரான்ஸ்) கஜேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு) சுஜிதா (பிரான்ஸ்), கேதீஸ்வரன் (சமுர்த்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சின்மகி,பார்கவி, ஜெஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், காசினி, சபரிவாசன், தர்மிகன், ஹர்சிகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.04. 2021 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகன கிரியைகளுக்காக கோவில்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.

தகவல்
குடும்பத்தினர்
201/52, 6ஆம் ஒழுங்கை
கோவில் புதுக்குளம்
வவுனியா.