வவுனியாவில் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களது பெயரில் அடையாள அட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

ஒருவர் கைது..

வவுனியாவில் 42 வயதுடைய நபர் ஒருவர் ப.யங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) நேற்று முன்தினம் (22.04) கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.யிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச் சீட்டுக்களை தயாரித்து நபர்களை வெளிநாடுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் ப.யங்கரவாத தடுப்பு பிரிவுப் பொலிசார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் : மருத்துவ சங்கம் எச்சரிக்கை!!

கொரோனா மூன்றாவது அலை..

அடுத்த மூன்று வாரங்களில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்று இலங்கை மருத்துவ சங்கம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பத்மா குணரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் நோயைத் தவிர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

கோவிட் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆய்வக அமைப்பு அறிக்கைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர். கொழும்பு மாநகர பிரதேசத்தில் கண்டறியப்பட்ட எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று பத்மா குணரத்ன கோடிட்டு காட்டினார்.

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் குழந்தைகளிடையே கோவிட் தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதைக் கவனித்ததாக அவர் கூறியுள்ளார்.

பூர்வாங்க ஆய்வக ஆய்வுகளைத் தொடர்ந்து விரைவான பரிமாற்றத்துடன் கூடிய புதிய கோவிட் மாறுபாட்டின் இருப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது இலங்கையில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டின் புதிய பிறழ்வு அல்லது மற்றொரு வெளிநாட்டிலிருந்து புதிதாக தோன்றிய ஒரு வைரஸ் என சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, ஒவ்வொரு குடிமகனும் மூன்றாவது அலையின் பேரழிவு விளைவுகளைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும் என்றும் வைத்திய கலாநிதி குணரத்ன வலியுறுத்தினார்.

கோவிட் டின் புதிய மாறுபாடு வயதானவர்களை விட இளைய மக்களை பாதிக்கக்கூடும் என்றும் வைத்திய கலாநிதி பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் யுவதியை பின் தொடர்ந்து சென்று மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளம் பெண்ணின் மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து இந்தச் சம்பவம் நேற்று (23.04) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை மூன்றாம் கட்டையகச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண் வேலை முடித்து வீடு திரும்பிய போது பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய கும்பல் அவரை வழிமறித்து தடுத்துள்ளது.

அவர்களிடமிருந்து த.ப்பிக்க மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு வீடொன்றுக்குள் குறித்த பெண் சென்ற போதே மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

முக்கிய அறிவித்தல்..

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பிறகு தென்படுகின்றன. ஆகையில் கட்டாய தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதன்படி, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 931 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கையில் 99,653 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 90,036 ஆகும். அதேபோல், நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளாகி 634 பேர் உ.யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகள் : இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!!

பேஸ்புக் கணக்குகள்..

நாட்டில் இயக்கப்படும் சுமார் 1,000 அங்கீகரிக்கப்படாத பேஸ்புக் கணக்குகளை கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த பேஸ்புக் கணக்குகளுக்கு இன்றுவரை உரிமையாளர்கள் இல்லை, எனவே இதுபோன்ற கணக்குகள் விரைவில் செயலிழக்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

த.ண்டனைச் சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சமூக ஊடக தளங்களை க.ண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே ஒரு பேஸ்புக் கணக்கை மட்டுமே இயக்க ஒரு நபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இதுபோன்ற பல கணக்குகள் ஒரு நபரால் இயக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு!!

பரீட்சை பெறுபேறுகள்..

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.

பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டார்.

இதேவேளை ,கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை 23 நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. 4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தனியார் வகுப்புகள், விருந்து நிகழ்வுகளுக்கு தடை : இலங்கையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..

இலங்கையில் கோவிட் – 19 வேகமாக பரவி வரும் நிலையில், தனியார் வகுப்புகள், விருந்து நிகழ்வுகள் மற்றும் பொது ஒன்றுகூடல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மே 31ம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மே 31ம் திகதி வரை செல்லுபடியாகும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கெசினோக்கள், இரவு நேர கிளப்புகள், உடற்பிடிப்பு நிலையங்கள் (spas) மற்றும் கடற்கரை விருந்துகளும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன, அத்துடன், நீச்சல் குளங்களும் மே 31ம் வரை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்படும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏனையவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கோரப்பட்டுள்ளது.

இடத்தின் அடிப்படையில் ஒரே நேரத்தில் 50 சதவீத ஆட்களை மட்டுமே அனுமதிக்க பல்பொருள் அங்காடிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் பாடசாலைகள் 50 சதவீத திறனுடன் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் அதிகபட்சம் 150 விருந்தினர்களுடன் நடத்தப்படலாம், இறுதிச் சடங்குகளில் எந்த நேரத்திலும் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் குடைசாந்த பாரவூர்தி : 3 மணிநேரமாக போக்குவரத்து ஸ்தம்பிதம்!!

பூந்தோட்டம் பகுதியில்..

வவுனியா பூந்தோட்டம் பிரதான வீதியில் பாரவூர்தியொன்று வீதியினை வீட்டு விலகி குடைசாந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீதியில் வயல் வெளியினை அண்மித்த பகுதியில் பாலம் நிர்மாண பணிகளுக்காக வீதியின் ஒர் பகுதியூடாக மாத்திரமே போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றையதினம் (24.04) பொருட்களை ஏற்றிய பாரவூர்தியொன்று பூந்தோட்டம் பிரதான வீதியூடாக பூந்தோட்டம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் பாலம் நிர்மானப் பணி இடம்பெற்று வருகின்ற பகுதியின் மறுபக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் பாரவூர்தியின் ஒர் பகுதி வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாந்துள்ளது.

இதன் காரணமாக வவுனியா – பூந்தோட்டம் வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணிநேரமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் பொதுமக்கள் மாற்று பாதையூடான பயணத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

ரிஷாட் பதியுதீன் அதிகாலையில் கைது : காரணம் வெளியானது!!

ரிஷாட் பதியுதீன்..

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ப.யங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

பதியுதீன் சகோதரர்கள் அவர்களின் பௌத்தலோகா மாவத்தை மற்றும் வெள்ளவத்தை இல்லங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தா.க்.கு.த.ல் ச.ம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற கு.ற்றச்சாட்டின் அடிப்படையில், ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ப.யங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் மேலதிக விசாரணைகள் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பது தொடர்பில் செயலமர்வு!!

செயலமர்வு..

வடமாகாணத்தில் தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகளை பொலிஸ் திணைக்களத்திற்குள் உள்ளீர்ப்பது தொடர்பான செயலமர்வு ஒன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (23.04) இடம்பெற்றது.

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் வடமாகாண பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண,

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

வடமாகாணத்தின் தமிழ் மொழி பேசும் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை பொலிஸ் திணைக்களம் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்ல்களை இளைஞர் யுவதிகளுக்கு வழங்குமாறும் இதன்போது பொலிஸ் அதிகாரிகளினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், வவுனியா வடக்கு கல்வி வலய அதிகாரிகள், படசாலை அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக இளைஞர் வலிவூட்டல் உத்தியோகத்தர்கள், கல்வி துறை சார்ந்தோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா : இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து வவுனியா, கற்பகபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு புது வருட கொண்டாட்டத்திற்காக சிலர் வந்து சென்றிருந்தனர்.

அவ்வாறு வந்து சென்றவர்களுக்கு திருகோணமலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் வவுனியாவில் வந்து சென்ற வீடுகளில் வசித்தவர்களுக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவர்களுடன் வருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கற்பகபுரத்தைச் சேர்ந்த 9 பேருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும், வவுனியா பழைய பேரூந்து நிலையத்தை அண்மித்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருக்கும் பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும் பிசீஆர் பரிசோதனையில் கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கும், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா நகரசபையால் 40 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு!!

கட்டாக்காலி மாடுகள்..

வவுனியா நகரசபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் போக்குவரத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்து நிலையில் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நகரசபையால் பிடிக்கப்பட்டன.

புதுவருடப் பிறப்பைத் தொடர்ந்து நகரில் அதிகரித்துள்ள வாகன நெரிசலின் போது கட்டாக்காலி மாடுகளினால் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் வவுனியா நகரசபையினால் இன் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட வவுனியா நகர், பட்டாணிச்சூர், வேப்பங்குளம், கோவில்குளம், குருமன்காடு, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு (21.04) 40 இற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள் வவுனியா நகரசபை வளாகத்திலும், வேப்பங்குளம் நகரசபை வளாகத்திலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

மாட்டின் உரிமையாளர்கள் பிடிகூலி 600 ரூபா, தண்டம் 1000 ரூபா, ஒரு நாள் பராமரிப்பு செலவு 300 ரூபா ஆகியவற்றினை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பராமரிப்பு செலவு நாளாந்தம் 300 ரூபாய் விதிக்கப்படுமென நகரசபையினர் தெரிவித்துள்ளனர்.

உட்கார்ந்த நிலையில் இறந்துபோன கொரோனா நோயாளி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

கொரோனா நோயாளி..

இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பா.திக்கப்பட்ட நபர் உட்கார்ந்த நிலையில் உ.யிரிழந்த சம்பவம் பரிதாப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம், ஜகல்பூரி நகரத்தில் கடந்த செவ்வாய்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 52 வயதான நபர், பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது அந்த மாவட்டத்திற்கே உள்ள ஒரே ஒரு கோவிட் சிகிச்சை மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அன்று அவரை அனுமதிக்கப்பட்ட பிறகு இரவு வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர், மறுநாள் (புதன்கிழமை) காலை அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்போது, அவர் தனது படுக்கையில் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு அ.திர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகில் சென்று பார்த்தபோது பேச்சுமூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்து அங்கிருந்த மருத்துவரை அழைத்துள்ளனர்.

ஒரு மருத்துவர் மற்றும் ஒரு நர்ஸ் வந்து அவரை சோதித்து பார்த்து, அவர் இ.றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இதனையடுத்து, அவர் இ.றந்ததற்கு மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணம் என அவரது உறவினர்கள் மருத்துவமனை வாசலில் மு.ற்றுகையிட்டு போ.ராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் எந்தவித தகவலும் பதிலும் கொடுக்கப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உட்கார்ந்தபடி ஒருவர் இ.றந்துபோன சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை தோ ழிக்கு தி ருமணம் செ ய்து வை த்த க ணவன் : பி ன்னர் ந டந்த வி.பரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான பெண் அதீத கடவுள் நம்பிக்கையால் தனது தோழியை திருமணம் செய்து கொண்டு கு.ழந்தைகளை ந.ர.ப.லி கொ.டுக்க திட்டமிட்ட அ.திர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு மகன்களும். இரண்டாவது மனைவி இந்துமதிக்கு இரண்டு கு.ழந்தைகளும் உள்ளனர்.

இரண்டாவது மனைவி இந்துமதியின் தோழி சசி என்பவர் அடிக்கடி இந்துமதியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும்போது ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவும், தோழி சசியும் சிவனும் சக்தியும் போல இருப்பதாக கூறி இரண்டு கு.ழந்தைகள் கண் முன்பாகவே ராமலிங்கமே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மேலும் சசியை அப்பா என்றும் தன்னை மாமா என்றும் அழைக்கும்படி குழந்தைகளிடம் கூறியுள்ளார். நாளாக, நாளாக பெற்ற மகன்கள் என்றும் பாராமல், தந்தை ராமலிங்கம் தாய் ரஞ்சிதாவும் தோழி சசியுடன் சேர்ந்து கொண்டு சி.றுவர்களை கொ.டு.மை.ப்.ப.டு.த்.த ஆ.ரம்பித்தனர்.

இரண்டு சி.றுவர்களுக்கும் மிளகாய் பொடி சாப்பாடு வழங்குவது, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யவைப்பது, உ.டலில் மிளகாய் பொடிபோட்டு மொட்டை மாடியில் வெயிலில் நிற்கச்சொல்வது, கழிவறையில் கு.ழந்தைகளை படுக்க வைப்பது என கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.யு.ள்.ள.ன.ர்.

இந்த நிலையில் கு.ழந்தைகளை ந.ர.ப.லி கொ.டுத்தால் ராஜயோகம் கிடைக்கும் என்று தன்னிடம் ஒரு ஜோதிடர் கூறியதாகவும், அதன் படி ரஞ்சிதாவுக்கு பிறந்த இரண்டு கு.ழந்தைகளையும் ந.ர.பலி கொடுத்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மூட நம்பிக்கை கண்னை மறைக்க சசியின் யோசனைக்கு சற்றும் தாமதிக்காமல் ராமலிங்கமும் ரஞ்சிதாவும் சம்மத்தித்துள்ளனர்.
இதனையடுத்து மகன்கள் இரண்டு பேரையும் ந.ர.ப.லி கொடுப்பது எப்பது குறித்து இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

மகன்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக நினைத்து அவர்களை ந.ர.ப.லி கொடுக்க மூன்பேரும் சேர்ந்து திட்டம் போட்டது ரஞ்சிதாவின் மூத்த மகன் காதில் வி.ழுந்துள்ளது. பயந்து போன சி.றுவன் செய்வது அறியாமல் தனது சகோதரனுடன் புளியம்பட்டியில் உள்ள தாத்தாவின் வீட்டுக்கு த.ப்.பி.ச் செ.ன்றுள்ளான்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராமலிங்கம் 2 கு.ழந்தைகளையும் தங்களோடு அனுப்பிவைக்குமாறு மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர். இதனைத்தொடர்ந்து இரு சி.றுவர்களும் தாத்தாவின் உதவியுடன் பெற்றோர் கொ.டு.மை.ப்.ப.டு.த்.து.வ.தா.க.க் கூறி பொலிசில் பு.கா.ர் அ.ளித்தனர்.

பு.காரின் அடிப்படையில் ராமலிங்கம் மற்றும் அவரது மனைவிகளான ரஞ்சிதா மற்றும் இந்துமதி அவரது தோழி சசி மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாரியப்பன் ஆகிய ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீ.விர வி.சாரணை நடைபெற்று வருகிறது.

காதலியை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன் : நடந்த வி.பரீதம்!!

ராஜஸ்ரீ..

கல்லூரி மா.ணவியை கா.தலன் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை சா.க்குமூட்டையில் க.ட்டி சுடுகாட்டில் வீ.சிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திருக்கனூரை அடுத்த சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவருக்கு ராஜஸ்ரீ(17) என்ற மகள் உள்ளார். ராஜஸ்ரீ சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன் தினம் வழக்கம் போல், கல்லூரிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி, வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். கல்லூரி முடிந்தும், அவர் வீட்டிற்கு திரும்பாத காரணத்தினால், குடும்பத்தினர், அவரை போனில் தொடர்பு கொண்ட போது, நான் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேம், வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர் வீடு திரும்பவேயில்லை, இதனால் ச.ந்தேகமடைந்த பெற்றோர், உடனடியாக காவல்நிலையத்தில் இது குறித்து பு.கா.ர் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், வில்லியனூரை அடுத்த பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் ம.ர்மமான முறையில் சா.க்கு மூ.ட்டை கி.டப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் அங்கு வி.ரைந்து சென்று, சா.க்குமூட்டை பிரித்து பார்த்த போது, பெண் ஒருவரின் ச.ட.ல.ம் இருப்பது க.ண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் நடத்தப்பட்ட வி.சாரணையில், அவர் கா.ணமல்போன ராஜஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரது உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து தீ.விர வி.சாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பெண்ணின் கல்லூரி சென்று திரும்பும் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது, பொறையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.

பொலிசார் உடனடியாக அவரைப் பி.டி.த்.து வி.சாரித்த போது, அந்த நபரின் பெயர் பிரதீஷ் என்பதும், அவரும் ராஜஸ்ரீயும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பிரதீஷை காதலித்து வந்த ராஜஸ்ரீ, வேறு ஒரு நபருடனும், பழகி வந்துள்ளார். இதனால் இது குறித்து பேசுவதற்காக, அவரை சுடுகாட்டு பகுதிக்கு ராஜஸ்ரீயை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே க.டும் வா.க்குவாதம் ஆகியதால், பிரதீஷ், ராஜஸ்ரீயை அ.டி.த்.து.ள்.ளா.ர். இதில், ராஜஸ்ரீயின் கா.தி.ல் இ.ர.த்.த.ம் வ.ழிந்ததில், அவர் ம.ய.ங்.கி வி.ழு.ந்.து.ள்.ளா.ர்.

அதன் பின் தன்னுடைய 14 வயது தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயின் உ.ட.லை ஒரு சா.க்குமூட்டையில் க.ட்டி, சுடுகாட்டில் இருக்கும் பள்ளம் ஒன்றில் தூ.க்கி வீ.சிச் செ.ன்றுள்ளது தெரியவந்தது. பொலிசார், தற்போது 14 வயதான பிரதீஷின் தம்பியை தீ.விரமாக தே.டி வருகிறார்கள்.

இலங்கை மக்களிடம் பொலிஸார் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!

முக்கிய கோரிக்கை..

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் தவறாக பயன்படுத்துவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளளார்.

பொது மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் திடீர் விபத்துக்கள், அனர்த்தங்கள் பாரிய குற்ற செயல்கள் தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துவததற்காக 2004ஆம் ஆண்டு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொது மக்கள் தவறான முறையில் இந்த இலக்கத்தை பயன்படுத்திக் கொள்வதாக நீண்ட ஆய்வின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு பொலிஸ் அவசர இலக்கத்திற்கு 123272 அழைப்புகள் கிடைத்துள்ளது. அந்த எண்ணிக்கையை ஆராயும் போது பொலிஸ் அவசர இலக்கத்திற்கு நாள் ஒன்றுக்கு 3000க்கும் அதிக தொலைபேசி அழைப்பு கிடைத்துள்ளது.

எப்படியிருப்பினும் தினமும் பொலிஸ் அவசர இலக்கத்தினை தொடர்பு கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 8000க்கும் அதிகமான முறை முயற்சிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இவ்வாறு வரும் அழைப்புகளில் 93 வீதமான அழைப்புகள் அடையாளங்களை உறுதிப்படுத்தாத அழைப்புகளாகும். இதனால் பொலிஸார் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகுகின்றனர்.

மக்கள் திடீர் விபத்துக்கள், பாரிய குற்ற செயல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்ற விடயங்களை அறிவிப்பதற்கு மாத்திரம் இந்த இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தவும்.

அவ்வாறு இன்றி காணி பிரச்சினை, ஒப்பந்த பிரச்சினை, காசோலை பிரச்சினை போன்ற விடயங்களுக்காக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைக்க வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.