முதன்முறையாக அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபாய்!!

இலங்கை ரூபாய்..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை விலை மீண்டும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் இலங்கை ரூபாயின் விற்பனை விலை 202.88 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 198.56 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.70 ரூபாயாக பதிவாகிய நிலையில் கொள்வனவு விலை 198 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை, வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 203.49 ரூபாயாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழகிய இளம்பெண்… ஆனால் அவரது வீட்டிலுள்ள பொருட்களை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்!!

பிரித்தானிய இளம்பெண்..

ஒரு அழகான பிரித்தானிய இளம்பெண், ஆனால் அவரைக் காதலிக்க முன்வருபவர்கள் எல்லாம் அவரது வீட்டில் அவர் வைத்திருக்கும் பொருட்களைக் கண்டதும், காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்களாம்.

அப்படி என்ன வைத்திருக்கிறார் அவர்? பர்மிங்காமைச் சேர்ந்த Jessica Powell (20)ஐப் பார்ப்பவர்கள், உடனே அவர் ஒரு மொடலாகத்தான் இருக்கவேண்டும் என முடிவு செய்துவிடுகிறார்களாம்.

ஆனால், அவரைக் காதலிக்க முன்வருபவர்கள், அவரது பொழுதுபோக்கைக் குறித்து அறிந்ததும், ஒன்றில் மெதுவாக எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம், அல்லது, நாம் நண்பர்களாக மட்டும் இருப்போமா என்று கேட்கிறார்களாம்.

அப்படி என்ன பொழுதுபோக்கு Jessicaவுடையது?
இறந்த விலங்குகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அதன் தோல் சதை எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எந்த மண்டையோடு முதலான எலும்புகளை சேகரிப்பதுதான் Jessicaவின் பொழுதுபோக்கு.

ஆக, அழகான Jessicaவை பார்த்து, ஹாய் காதலிக்கலாமா என முதலில் கேட்பவர்கள், அவரது வீட்டுக்கு வந்ததும் அவர்களுடைய காதலும், சில நேரம் அவர்களுமே காணாமல் போய்விட, தன் பொழுதுபோக்கைக் குறித்து மறைக்கவும் விரும்பாமல், அதை விடவும் விரும்பாமல், தனக்கேற்ற ஒருவர் ஒரு நாள் வருவார் என காத்திருக்கிறார்.

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி மூல பொலிஸார் இன்மை : மக்கள் அவதி!!

நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்..

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி மூல பொலிஸார் இன்மையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பிரிவு உட்பட வவுனியா மாவட்டத்தில் 90 வீதமான தமிழ் மொழி பேசும் மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழி பொலிஸார் இன்மையினால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

குறிப்பாக பொலிஸ் நற்சான்றிதழ், வாக்குமூலம் பதிவு, தண்டப்பத்திரம், முறைப்பாடு போன்றவற்றிற்கு சிங்கள மொழி பேசும் பொலிஸாரே கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் தொலைபேசியூடாக முறைப்பாட்டினை வழங்கும் சமயத்திலும் சிங்கள மொழியில் பொலிஸார் கதைப்பதினால் அவசர தேவையினையும் மக்களினால் நிவர்த்தி செய்ய முடியவில்லை.

கடந்த காலங்களில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய தமிழ் மொழி பேசும் பல பொலிஸாருக்கு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகளவில் தமிழ் மொழி பேசும் பகுதியில் பெருமான்மை சிங்கள மொழி பேசும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கனடாவிலுள்ள சகோதரிக்காக சாஸ்திரம் கேட்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

28 வயது இளைஞன்..

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் பரிகாரம் செய்யும் நிலையத்திற்கு சென்ற இளைஞன் ஒருவர் பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.தி.ற்.கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சோதிடம் பார்ப்பதற்காக சென்ற 28 வயதுடைய இளைஞனை சோதிடம் பார்க்கும் நபரே து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்ய முயற்சித்த நிலையில் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அங்கிருந்த 3 வா.ள்களும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

பா.திக்கப்பட்ட இளைஞர் பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் கனடாவில் இருந்து தனது சகோதரிக்கு நடந்துள்ள பிரச்சினை தொடர்பில் சாஸ்திரம் கேட்தற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த இளைஞன் உடனடியாக பியகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கைது செய்ய்பட்டவர் 50 வயதுடைய திருமணமாகியவராகும். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இணைய பாவனையாளர்ளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

ணைய பாவனையாளர்ளுக்கு..

எல்லையற்ற இணைய சேவை பெக்கேஜ் அடுத்த வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை முன்வைத்துள்ளன. அந்த திட்டங்களை மீளவும் ஆராய்ந்த பின்னர் அடுத்த வாரம் முதல் அதனை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதி தீர்மானத்திற்கு வர முடியும் என எதிர்பார்ப்பதாகவும், அடுத்த வாரம் முதல் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு அதிவேக இணைய வசதி மற்றும் எல்லையற்ற இணைய வசதியை ஏற்படுத்த முடியும் என ஆணையம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எப்படியிருப்பினும் இந்த வசதியை வழங்கும் பெக்கேஜின் பெயர்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!!

மூவர் கைது..

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று(07.04.2021) கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. அந்த வகையில் கடந்த 30 ஆம் திகதி வவுனியா, இலங்கை வங்கி விடுதியில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டி மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர்.

அத்துடன், கடந்த முதலாம் திகதி தேக்கவத்தையில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த தொலைகாட்சி பெட்டியையும், 8 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றிருந்தனர்.

மேலும், நேற்றைய தினம் (06.04) வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடர்கள் அங்கிருந்த டிவிடி பிளேயர் மற்றும் முக்கால் பவுண் தோடு என்பவற்றை திருடிச் சென்றிருந்தனர். குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்தன தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), ரஞ்சித் (14651),

டிலீபன்(614661), பொலிஸ் கான்ஸ்டபிள்களான அமரசூரிய (9423), பியங்கர்(47358), உபாலி (60954), விஜயசிங்க (74451), சமீர (75038), தயாளன் (91792), நிமலன் (91755), தம்மிக்க (93786), அஜத் (95766), மதுசானி (9928) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மதவுவைத்தகுளம், கற்குழி, தேக்கவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39, 28, 24 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல்போன மகனைத் தேடிய தந்தை மரணம்!!

சந்தணம் ராகவன்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டிருந்த தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் மகனை காணாமலேயே சுகவீனம் காரணமாக இன்று (07.04.2021) மரணமடைந்துள்ளார்.

வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!

பாரதிபுரம் பகுதியில்..

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் சொகுசுக் காரில் வந்த நபர்கள் தம்மை இராணுவம் என தெரிவித்து பல இலட்சம் பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர்.

பாரதிபுரம் பகுதியில் நேற்று (06.04.2021) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சொகுசுக் காரில் வந்த சில நபர்கள் தாம் இராணுவம் என அடையாள அட்டையினை காட்டியதுடன் வீட்டில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்,

வீட்டினை சோதனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து வீட்டிலிருந்தவர்களை அ.ச்சுறுத்தி வீட்டினுள் காணப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகள் , வீட்டினுள் காணப்பட்ட சில பொருட்கள் என்பவற்றினை களவாடிச் சென்றுள்ளனர்.

பகல் நேரத்தில் இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இராணுவத்தினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் இராணுவம், பொலிஸார் என தெரிவித்து நான்கு வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது!!

கலாநிதி நவரட்ணராஜா..

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரான கலாநிதி நவரட்ணராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக இந்த விருது கருதப்படுகின்றது.

சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் நேற்றைய தினம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மெய்நிகர் தொழிநுட்பத்தின் ஊடாக இந்த விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடினமான பாதையை கடந்து வந்து இவ்வாறு விருது வென்றெடுப்பது அளவில்லா மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த தருணத்தில் தனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கலாநிதி நவரட்ணராஜா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள கலாநிதி நவரட்ணராஜா தற்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி நவரட்ணராஜா டிக்கோயா போர்டைஸ் தமிழ் வித்தியாலயம், புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உயர்வடையும் சாத்தியம்!!

பேக்கரி உற்பத்தி..

பாம் எண்ணெய் மீதான தடை காரணமாக அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை உயர்வடையும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்தது.

அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பாம் எண்ணெய் பேக்கரி தயாரிப்புகளுக்கு இன்றியமையாத ஒரு மூலப்பொருளாகும். இந்நிலையில் பாம் எண்ணெய் மீதான தடை பேக்கரி தொழிற்துறையை பாதிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை ரத்து செய்யுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார், இந்தத் தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து பேக்கரிகளையும் மூட கட்டாயப்படுத்தும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்ஹபாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு செயலாளர் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

53 ஆசனங்கள் கொண்ட பேருந்தினை செலுத்திய 15 வயதான சிறுவன் கைது!!

சிறுவன் கைது..

ஹம்பாந்தோட்டை, மித்தெனியவில் 53 ஆசனங்களை கொண்ட பேருந்து ஒன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான பேருந்தை தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக் கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை, கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை பேருந்தை செலுத்த அனுமதி கொடுத்த தந்தையை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தமிழ் சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

அவுஸ்திரேலியாவில்…

அவுஸ்திரேலியாவின் – பெர்த் சிறுவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்தியப்பின்னணி கொண்ட தமிழ் சிறுமியொருவர் வைத்தியசாலையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பெர்த்தின் Morley பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான ஐஸ்வர்யா கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் காரணமாக பெர்த் சிறுவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கு சுமார் 2 மணி நேரமாக ஐஸ்வர்யா காத்திருந்ததாகவும், தனது மகளுக்கு உடனடியாக சிகிச்சை ஆரம்பிக்குமாறு அங்கிருந்தவர்களிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் தாயாரான பிரஷிதா சசிதரன் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஐஸ்வர்யாவை பார்வையிட்ட போது அவரது நிலைமை மிக மோசமடைந்திருந்ததாகவும், சிகிச்சை ஆரம்பித்து சில மணி நேரங்களுக்குள் ஐஸ்வர்யா உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தனது குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் உயிரிழந்திருக்க மாட்டார் எனவும், வைத்தியசாலையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் தமது மகளை இழந்துவிட்டதாகவும் தந்தையான முரளிதரன் அஸ்வத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு மேற்கு அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Roger Cook உத்தரவிட்டுள்ளார்.

வவுனியாவில் யாழில் இருந்து வருகை தந்து இரு வீடுகள் மீது வா.ள்வெட்டு குழு அட்டகாசம்!!

மூன்று முறிப்பு பகுதியில்..

யாழில் இருந்து வெள்ளை வானில் வா.ள்களுடன் வருகைதந்த குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை சே.தப்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (06.04.2021) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி குறித்த பெண்ணை அழைத்து வந்து பதிவு திருமணமும் செய்துள்ளார்.

இந்நிலையில், யாழில் இருந்து வெள்ளை நிற வான் ஒன்றில் வருகை தந்த குறித்த பெண்ணின் தந்தை, சகோதரி ஆகியோருடன் முகத்தை கறுப்பு துணியால் மறைத்து கட்டியபடி வா.ள்களுடன் வந்த 10 மேற்பட்ட இளைஞர் குழு பெண்ணை அழைத்து வந்த இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து,

யன்னல் கண்ணாடியை உடைத்து குறித்த பெண்ணும், இளைஞனும் எங்கே எனக் கேட்டு வா.ள் முனையில் அ.ச்.சு.றுத்தியதாகவும், இதன்போது வீட்டு உரிமையாளரின் மகள் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணின் க.ழுத்தில் வா.ளினை வைத்து அ.ச்.சு.றுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வீட்டு வளவில் அமைந்துள்ள இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்குள்ளும் வா.ள்களுடன் புகுந்த குறித்த குழுவினர், குறித்த இளைஞனும் பெண்ணும் சம்பவ நேரம் அங்கு இல்லாத நிலையில், வீட்டு அறையின் கதவுகளை உ.டைத்து சே.தப்படுத்தியுள்ளதுடன், அங்கு இருந்த வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு த.ப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டோர், குறித்த இளைஞர்கள் யாழில் இருந்து வருகை தந்த ஆவா குழுவா என அ.ச்சம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 119 பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை பார்வையிட்டதுடன், இது தொடர்பான வி.சாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி கொரோனா உடை அணிந்து வந்து வாக்களித்தார்!!

எம்.பி கனிமொழி..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி கொரோனா கவச உடையணிந்து படி வந்து வாக்களித்தார். கடந்த ஏப்ரல் 3ம் திகதி தூத்துக்குடி எம்.பி-யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்றுபாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவர் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சாரம் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி தனிமைப்படுத்திக் கொண்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கொரோனா கவச உடையணிந்து படி வந்து வாக்களித்தார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட தமிழகம் வந்த இளைஞர் : அவரது வாக்கு ஏற்கனவே பதிவானதால் அதிர்ச்சி : பின்னர் மேற்கொண்ட சாதுர்ய செயல்!!

தமிழகம்..

வெளிநாட்டில் இருந்து ஓட்டு போடுவதற்காக தமிழகம் வந்த இளைஞரின் வாக்கை வேறு யாரோ செலுத்திய நிலையில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு செலுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கனவே பதிவானது கண்டு ரமேஷ்குமார் என்ற இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தனது ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் ’49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார்.

அபுதாபியில் பொறியாளராக உள்ள ரமேஷ்குமார், வாக்களிப்பதற்காக திருச்சி வந்துள்ளார் என்பதும் இவரது பெயரில் போலியான ஆதார் அட்டையைக் காட்டி வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

கால்கள் இல்லாத மனைவியை வாக்குச்சாவடிக்கு முதுகில் சுமந்து சென்று ஓட்டு போட வைத்த முதியவர்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நடக்க முடியாத வயதான மனைவியை முதுகில் சுமந்து சென்று கணவர் வாக்களிக்கவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, இரண்டு கால்களையும் இழந்த சுமதி வயது முதிர்ந்த பெண், கணவரின் உதவியுடன் வாக்களித்தது சென்றுள்ளார்.

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்கு சுமதி, தனது கணவர் இராமசாமியின் மீன்பாடி வண்டியில் வந்து இறங்கினார்.

அந்த வாக்குச் சாவடியில் வில் சேர் எதுவும் இல்லாத நிலையில், தன் கணவன் தோல் மீது ஏறி வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள எந்த அடிப்படை வசதிகளும் இல்லமால் வாக்குச்சாவடிகள் இயங்குவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வுதளம், வில் சேர் போன்ற வசதிகள் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.