வவுனியாவில் பொலிஸார் எனக்கூறி நகை கொள்ளை!!

நகை கொள்ளை..

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் என தெரிவித்து 5 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கார் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள் வவுனியா, தம்பனை – புளியங்குளம் மற்றும் பத்தினியார் – மகிழங்குளம் பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்று தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்திக் கொண்டு, வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதனை நம்பி வீட்டின் உரிமையாளர்கள் அவர்களை அனுமதித்த நிலையில் வீட்டில் சோதனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்களை களவாடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இளம் பெண்ணுக்கு ஒரு குடும்பமே சேர்ந்து நிகழ்த்திய கொ.டூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இளம் பெண் ஒருவரை சந்தேகத்தின் காரணமாக குடும்பத்தினர் கண்மூடித்தனமாக தா.க்.கி.ய ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரை

தெலங்கானாவின் Kottagudem மாவட்டம் Illandu பகுதியில் இருக்கும் LBS நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், அங்கிருக்கும் மளிகை கடைய்ல் வேலை செய்து வந்துள்ளார்.

இப்பெண் தனி ஒருவராக வேலைக்கு சென்று, வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்துள்ளார். இந்நிலையில், அங்கிருக்கும் ஆர்.ஆர் காலனியில் வசித்து வரும் பொலிஸ் அதிகாரி நரேஷ், இவருக்கும் முறையற்ற உறவு இருப்பதாக அங்கிருக்கும் நபர்களால் கூறப்பட்டது.

அதற்கு ஏற்ற வகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை, அந்த பெண்ணின் வீட்டிற்கு நரேஷ் சென்றுள்ளார். இப்படி இவர் அடிக்கடி இங்கு வந்து செல்வதாக, நரேஷ் குடும்பத்தினர் காதில் பட, உடனே அவர்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, சந்தேகத்தால் ஒரு கயிற்றால் அவரின் கை.யை க.ட்.டி கண்மூடித்தனமாக தா.க்.கி.யு.ள்.ள.ன.ர்.

அப்போது அந்த பெண், நரேஷ் தனக்கு சில உதவிகளை செய்வதாக உறுதியளித்ததாகவும், இது தொடர்பாகவே அவரிடம் பேசியதாக கெஞ்சியுள்ளார். ஆனால் நரேஷ் குடும்பத்தினர் அப்பெண்ணை விட்டபாடில்லை.

இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து குறித்த பெண்ணை மீ.ட்டு வி.சாரணை மேற்கொண்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றிய 122 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் மரணம்!!

கொரோனா..

வெளிநாடுகளில் பணியாற்றி வந்த 122 இலங்கையர்கள் கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் 4431 இலங்கையர்களுக்கு இதுவரையில் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது எனவும், இதில் 4071 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக 14 நாடுகளில் பணியாற்றி வந்த 30831 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்ப விரும்பும் அனைத்து வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களுக்கும் அதற்கான வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

விபத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் படுகாயம்!!

விபத்து..

அம்பாறை – இறக்காமம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததையடுத்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் நேற்று (05.04.2021) வவுனியா கண்டி வீதியில் பிற்பகல் 12 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வங்கி ஊழியர்களிற்கான ஓய்வுதியத்திட்டம் தொடர்பான பிரச்சினை, வங்கி ஊழியர்களின் பயிற்சி காலத்தினை இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்துதல், மற்றும் இலங்கை மர்ச்சன்ட் வங்கியின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், குறித்த விடயங்களை தீர்ப்பதற்கு மிகவும் தெளிவான முறையில் பிரதமரால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும், அது செயற்படுத்தப்படவில்லை.

இவற்றை வலியுறுத்தி நாம் அந்தந்த வங்கிகளின் நிர்வாகத்தரப்புகளுடன் பல சுற்று கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தாலும், பிரதமரால் வழங்கப்பட்ட தீர்வுகளை செயற்படுத்துவதற்கு பதிலாக பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டு காலங்கடத்தப்பட்டு வருகின்றமையால், ஊழியர்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பிரதமர் உறுதியளித்து எட்டு மாதங்கள்ஆகியும் ஓய்வூதியம் எங்கே, இணக்கம் தெரிவிக்கப்பட்ட 96 இன் பின்னரான ஓய்வூதிய திருத்தங்களை உடனே செயற்படுத்துக,

பயிற்சிக் காலத்தை இரண்டு வருடங்களிற்கு மட்டுப்படுத்துக, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன்,கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

 

திருமதி உலக அழகி கரேலின் செயல் ஏற்புடையதல்ல : ரோசி சேனாநாயக்க!!

ரோசி சேனாநாயக்க..

திருமதி உலக அழகி கரோலின் ஜூரியின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல என முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் வெற்றியீட்டிய புஸ்பிகாவிடமிருந்து கிரீடத்தை பறித்து, இரண்டாம் இடம் வென்றவருக்கு கரோலின் கிரீடம் அணிவித்திருந்தார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் கரோலினது செயற்பாடுகளை முன்னாள் திருமதி உலக அழகி ரோசி சோனாநாயக்க கண்டித்துள்ளார்.

பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவ்வாறு முடியாவிட்டால் எங்களது வாய்களை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருந்தால் அது மேடைக்கு வெளியே வைத்து தீர்க்கப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் அனைத்து பெண்களின் சார்பிலும் புஸ்பிகாவிடம் மன்னிப்பு கோருவதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாயைள தினம் புஸ்பிகாவிற்கு அதிகாரபூர்வமாக கிரீடம் வழங்கப்படும் எனவும், ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடாத்தப்பட உள்ளதாகவும் போட்டி ஏற்பாட்டுக்குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேடையில் வைத்து ஒரு சில நிமிடங்களில் அகற்றப்பட்ட கிரீடம் மீண்டும் புஸ்பிகா டி சில்வாவிடம் ஒப்படைப்பு!!

திருமதி இலங்கை என்ற பட்டத்திற்கான இறுதிப் போட்டி நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற போது அழகு ராணியாக தெரிவான புஸ்பிகா டி சில்வா கிரீடம் பறிக்கப்பட்டது.

எனினும், தற்பொழுது அந்த கிரீடம் அவரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருமதி இலங்கை நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

திருமணமாகி விவாகரத்தான ஓர் பெண்ணுக்கு இந்த பட்டத்தை வழங்க முடியாது என கரோலின் ஜூரி, புஸ்பிகாவிற்கு வழங்கப்பட்ட கீரிடத்தை மீளப் பெற்று இரண்டாம் இடம் பெற்றவருக்கு வழங்கியிருந்தார்.

எனினும், புஸ்பிகா விவகாரத்தானவர் என்பதனை நிரூபிப்பதற்கு எவ்வித எழுத்து மூல ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதனால் அவருக்கே இந்த பட்டத்தை மீள வழங்க தீர்மானித்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் புஸ்பிகா டி சில்வா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாம் விவகாரத்து பெற்றுக்கொள்ளவில்லை எனவும், மேடையில் வைத்து அணிவிக்கப்பட்ட கிரீடம் அகற்றப்பட்டதனால் தமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக புஸ்பிகா தெரிவித்துள்ளார். இந்த அவமானத்திற்கான நட்டஈடு கோருவது குறித்து தாம் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரீடம் அணிவிக்கப்பட்டு பின்னர் அதனை அகற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில் புஸ்பிகாவிற்கு மீளவும் கிரீடத்தை வழங்கியதாக ஏற்பாட்டுக் குழு பணிப்பாளர் தினேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!!

பண்டிகை காலத்திற்குப் பின்னர் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை கோழி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஒப்புக்கொண்டதன்படி, மக்காச்சோளம் உத்தரவாத விலையில் வழங்கப்பட்டால் விலை அதிகரிப்பு இருக்காது” என்றும் கூறினார்.

வர்த்தமானி அறிவிப்பின்படி கோழி இறைச்சியின் விலைகள் பேணப்பட்டு வருவதாகவும், தோல் கொண்ட கோழி இறைச்சி 430 ரூபாவிற்கும், தோல் இல்லாத கோழி இறைச்சி 500 ருபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் மக்காச்சோளம் பற்றாக்குறை நிலவுகின்றது. அதன் விலையும் அதிகரித்து செல்கின்றது.

இந்நிலையில், கோழி இறைச்சியின் நிலையான விலையை பராமரிக்க, கோழிப்பண்ணையாளர்களுக்கு மக்காச்சோளத்தை 60 ரூபாவிற்கு வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புகையிரதத்தில் நசுங்கி உ யிரிழக்க வேண்டிய நபர் : நொடிப் பொழுதில் காப்பாற்றிய பொலிஸ்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரயிலில் சி.க்கி உ.யிரிழக்க வேண்டிய நபரை, பொலிசார் ஒருவர் தன்னுடைய சமயோசித செயலால் கா.ப்பாற்றிய வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூர் இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் இரயிலில் ஏற முயன்றாரோ அல்லது இறங்க முயன்றாரோ என்பது சரியாக தெரியவில்லை.

ஆனால், இரயில் புறப்படும் போது, திடீரென்று அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு நடைமேடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக ஓடி, சாமர்த்தியமாக செயல்பட்டு, அவரை இரயில் மற்றும் நடைமேடைக்கு இடையில் சிக்காமல் வெளியில் இழுத்தார்.

இந்த வீடியோ காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் இரயிலில் இருந்து தடுமாறிய நபர் சற்று தூரம் இழுத்துச் செல்வது போன்று உள்ளது. உடனே பொலிஸ் அதிகாரி ஓடி வந்து அவரை காப்பாற்றி வெளியில் இழுக்கிறார்.

நடைமேடைக்கும் அடியில் அவர் கால் சி.க்கியிருப்பது போன்று தெரிந்தாலும், அதன் பின் அந்த முதியவர் சாதரணமாக எழுந்து நடந்து செல்கிறார். இதைக் கண்ட இணையவாசிகள் சாதுர்யமாக செயல்பட்டு அவரைக் காப்பாற்ற உதவிய பொலிசாரை பாராட்டி வருகின்றனர்.

9 பெண்களை திருமணம் செய்து பா.லி.ய.ல் தொழிலில் தள்ளிய இளைஞன் : வி.சாரணையில் தெரியவந்த உண்மைகள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 9 பெண்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்திய நபரை பொலிசார் அ.திரடியாக கை.து செ.ய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் அருண்குமார். 32 வயதான இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பா.லி.ய.ல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி இவரது மனைவிகள் என கூறி 2 பெண்கள், விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையரிடம் சில தினங்களுக்கு முன்பு பு.கா.ர் அளித்தனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது, அடிக்கடி சினிமா பார்க்கும் பழக்கம் கொண்ட, அருண்குமார், பெண்களின் பின்னால் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அவர்களிடம் சினிமா வசனங்கள் பேசி, அவர்களை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை திருமணம் செய்தும் வாழ்ந்து வந்துள்ளார். அப்படி திருமணம் செய்த பெண்களிடம் குறிப்பிட்ட காலத்திற்கு வாழ்ந்த பின், அவர்களை பா.லி.ய.ல் தொழிலுக்குள் க.ட்டாயப்படுத்தி த.ள்ளியுள்ளார்.

இதுவரை அருண்குமார் இப்படி 9 பெண்களை திருமணம் செய்து அவர்களை பா.லி.ய.ல் தொழிலில் தள்ளியது வி.சாரணையில் தெரியவந்தது.

இதுமட்டுமின்றி, அருண்குமாருக்கு க.ஞ்.சா க.ட.த்.த.ல் கு.ம்பலுடன் பழக்கம் ஏற்பட்டு க.ஞ்.சா க.ட.த்.தி வ.ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது மேலும் வழக்கு பதிவு செய்து கைது செய்த பொலிசார், அவர் வீட்டில் சோ.தனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, து.ப்.பா.க்.கி, வீ.ச்.ச.ரி.வா.ள் உள்ளிட்ட பல்வேறு ஆ.யு.த.ங்.க.ள் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அருண்குமார் மீது பு.கா.ர் கொடுத்த பெண்கள் 2 பேரும், அவரது முதல் மற்றும் 2-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

வானிலை தொடர்பில் எச்சரிக்கை..

வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவ மற்றும் மொனராகல உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குத் தீவிர மற்றும் வெப்ப வானிலை எச்சரிக்கையை வானிலை அவதான மையம் விடுத்துள்ளது.

திணைக்களம் வெளியிட்ட வெப்பக் குறியீட்டின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி,திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அம்பாறை, பதுளை, கம்பஹா, கொழும்பு,களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவ,புத்தளம், குருநாகல் மற்றும் மொனராகல மாவட்டங்களும் வெப்பமான வானிலை காரணமாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பகுதிகளில், வெப்பப் பிடிப்புகள், சோர்வு மற்றும் திறந்த வெயிலில் தொடர்ந்து செயற்படுவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மனித உடலில் உணரப்படும் நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு கணக்கிடப்பட்டதென்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெளிப்புற தொழிலாளர்கள் தங்கள் கடினமான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், நிழல் பகுதிகளில் நீர் அருந்திய நிலையில் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

திருமணமான 40 நாட்களில் கணவன் கண் எதிரில் 23 வயதான மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமணமான 40 நாளில் கணவன் கண் எதிரில் புதுப்பெண் உ.யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் கோபிக். இவருக்கும் தனுஷா (23) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று புதுமணத்தம்பதி தங்கள் உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். அப்போது காரில் தனுஷாவின் உறவினர் சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோரும் இருந்தனர்.

அந்த சமயத்தில் கோழிகளை ஏற்றி கொண்டு வந்த ஒரு லொறி கார் மீது வேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் தனுஷா இ.ர.த்.த வெ.ள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் முன்னர் துரதிஷ்டவசமாக உ.யிரிழந்தார்.

மேலும் கோபிக், சுபலட்சுமி மற்றும் ரூபா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 40 நாளில் புதுப்பெண் தனுஷா உ.யிரிழந்தது குடும்பத்தாரை அ.திர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற வா.ள்.வெ.ட்.டி.ல் இருவர் கா.ய.ம்!!

காளிகோவில் வீதியில்..

வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் இடம்பெற்ற வா.ள்.வெ.ட்.டு.ச் சம்பவத்தில் இருவர் கா.யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் நேற்று (04.04.2021) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவயவருவதாவது,

வவுனியா, குருமன்காடு மற்றும் திருநாவற்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வா.ள், க.த்.தி.க.ளு.ட.ன் ஒரு குழுவினர், பொதுமக்களுக்கு அ.ச்.சு.று.த்.த.ல் ஏற்படுத்தியதுடன், அப்பகுதியால் செல்வோரை வா.ள்.க.ளை காண்பித்து அ.ச்.சு.று.த்.தி.யு.ம் உள்ளனர்.

இதன்போது குறித்த வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.லு.க்.கு இ.லக்காகி இருவர் கா.ய.ம.டை.ந்.து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து,

வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதிக்கு வருகை தந்த வவுனியா பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் வி.சாரணைகளை மேற்கொண்டதுடன், வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவத்துடன் தொடர்புடையவர்களை கை.து செ.ய்ய நடவடிக்கையும் எடுத்திருந்தனர்.

அத்துடன், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன் வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும், அதனை வவுனியாவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தீ.வி.ர வி.சாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிசார் கு.ற்.ற.ச் செயல்கள் மற்றும் வா.ள்.வெ.ட்.டு ச.ம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி முறைப்பாட்டு பிரிவின் 0766224949 மற்றும் 0766226363 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் பொலிசார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் : மக்கள் அனைவரும் முக்கிய அறிவிப்பு!!

கடுமையான வெப்பம்..

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதனால் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்கள் கட்டாயமாக அதிக நீர் அருந்த வேண்டும் என திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலநறுவை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் மக்களுக்கு உடலுக்கு உணரக்கூடிய கடுமையான வெப்பமான காலநிலை நிலவும்.

இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெளியிடங்களில் வேலை செய்யும் மக்கள் அதிகமாக நீர் அருந்த வேண்டும். நிழல் உள்ள பிரதேசங்களில் மாத்திரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகள்தொடர்பில் அவதானம் எடுக்க வேண்டும். கடினமாக வேலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அல்லது இளம் நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

மேலதிக தகவல்கள் அவசியமாக இருந்தால் 011-7446491 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அறிந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் சட்டத்தை கடுமையாக்கும் இலங்கை அரசாங்கம்!!

சமூக வலைத்தளங்களில்..

சமூக வலைத்தளங்களில் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பில் போலி குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இவ்வாறான செயற்பாடு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் என அறிவிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு அவசியமான திருத்தம் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நபர்களுக்கு சேறு பூசும் நடடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சமூக அமைப்பு, வல்லுணர்கள் உட்பட நிபுணர்கள் பலர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம்!!

விபத்தில்..

திருகோணமலை கண்டி வீதி நான்காம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 2 சிறுவர்களோடு, தாயும், தந்தையும் பயணித்ததாகவும் ,தந்தையும், ஒரு பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா காட்டுப்பகுதியில் பாரிய மரக்கடத்தல் முயற்சி முறியடிப்பு!!

புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில்..

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் காட்டுப் பகுதியில் பாரிய மர கடத்தல் முயற்சி பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால்த சில்வாவின் வழிகாட்டலில்,

கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாறசிங்க பிரேமசிறி தலைமையிலான பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் பெறுமதியான 50 முதிரை மரக்குற்றிகள் காட்டுப்பகுதியில் வெட்டப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக காணப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரங்களை வெட்டிய சந்தேக நபர்களோ வாகனங்களோ அவ்விடத்தில் இல்லாத நிலையில் பொலிஸார் மரக்குற்றிகளை பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றி வந்துள்ளனர்.

குறித்த மரங்களை இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பொலிஸாரால் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.