சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச் சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் பொலிஸார் தெரிவிக்கையில்,
நேற்று (25.03) மாலை கோதண்ட நொச்சிகுளம் காட்டுப் பகுதியிலிருந்து கூமாங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக ஈச்சங்குளம் இராணுவத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலிற்கமைய,
அப் பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் இராணுவத்தினர், அம்மிவைத்தான் பகுதியில் வைத்து நூதனமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரை வாகனத்துடன் கைது செய்து ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மரக்கடத்தலில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், பட்டா ரக வாகனம் ஒன்றும் 15 அடி நீளமுடைய 15 அரி மரங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்ல பிள்ளைகளிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (26.03) பிற்பகல் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கொரோனா தொற்றையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்த காலப்பகுதியில் அவர்களது ஆக்கத்திறன் மற்றும் கலைதிறனை மேம்படுத்தும் நோக்கில் பிரதேசமட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்லங்களில் இருந்த பிள்ளைகளிடையே வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஐஓஎம் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அணுசரணையில் சித்திரப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.
குறித்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாங்குளம், கொல்லர் புளியங்குளத்தைச் சேர்ந்த த.ஜதுசா என்ற மாணவிக்கு 15 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும், இரண்டாம் இடத்தைப் பெற்ற நெடுங்கேணி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கே.மகிழன் என்ற மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணப் பரிசிலும்,
மூன்றாம் இடத்தைப் பெற்ற அல்ஹாமியா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.எவ்.நுஹா என்ற மாணவிக்கு 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும் வழங்கப்பட்டதுடன் வெற்றியீட்டிய 47 பேருக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, ஐஓஎம் நிறுவன நிகழ்சித்திட்ட பணிப்பாளர் எஸ்.ஜமீன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சபரிஜா, வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ரி.தர்மேந்திரா,
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, மாவட்ட சிறுவர் கழக தலைவி சசிராஜ் அக்சயா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரின் துவிச்சக்கர வண்டியும் இன்று (26.03) திருடப்பட்டுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம், கதிரேசு வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்ற மாணவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி விட்டு வகுப்பறைக்கு சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கற்றல் செயற்பாடு முடிவடைந்து வீடு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியை எடுக்க வந்த போது குறித்த துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி நிலைய நிர்வாகி ஊடாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த புதன்கிழமை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று 201 ரூபாயை கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.60 ரூபாயாக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றைய தினம் 196.72 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாற்றில் முதல் முறையாக 201 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா குளத்தில் தொடர் ஆக்கிரமிப்பு இடம்பெற நகரசபையின் அசமந்த போக்கே காரணம். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா குளத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மாவட்ட செயலகம் முன் இன்று (26.03) இடம்பெறும் சத்தியாகிரகப் போராட்ட தளத்திற்கு வருகை தந்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா குளத்தில் தொடர் ஆக்கிரமிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது சம்மந்தமாக இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் நானும் இருக்க வேண்டிய ஒருவர். வேலைப்பளு காரணமாக இருக்கவில்லை. ஆரம்பம் முதல் குள ஆக்கிரமிப்புக்கு எதிர்பானவர்களில் நானும் ஒருவன். ஆனால் வவுனியா நகரசபையின் அசமந்த போக்கினால் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது.
உத்தரவுகளை மீறி குளத்துக்குள் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன. நானும் சென்று பார்த்தேன். வருகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து இதற்கு உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வவுனியா குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு : சத்தியாக்கிரப் போராட்டம் ஆரம்பம்!!
சத்தியாக்கிரப் போராட்டம்..
வவுனியா குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்துநிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரகப்போராட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று (26.03.2021) காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்..
வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல்போய்க்கொண்டிருக்கின்றன.
தற்போது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.
இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழைய நிலைக்கு கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்குப் பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
எனவே வவுனியா குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம் காப்போம், குலம் காப்போம், வலிந்து காணமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வவுனியா குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்துநிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரகப்போராட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று (26.03.2021) காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்..
வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல்போய்க்கொண்டிருக்கின்றன.
தற்போது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.
இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழைய நிலைக்கு கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்குப் பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
எனவே வவுனியா குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம் காப்போம், குலம் காப்போம், வலிந்து காணமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஆர்யாவின் மோ.சடிக்கு ஆதாரமாக 70 பக்க ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெண்கள் ரசிகர்களின் கூட்டத்தைக் கொண்ட ரசிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. இவருக்கு என்று ஒரு தனி பெண் ரசிகர்களின் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியில் இருக்கும் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாக பழகிய நிலையில் விட்ஜாவுக்கு ஆன்லைன் மூலம் காதல்வலை விரித்த நடிகர் ஆர்யா அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய்யை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் ஆர்யா பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால், அதன் பின் அவரை திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏ.மாற்றி வந்துள்ளார். இதனால் அவர் தன்னை ஏ.மாற்றிவிட்டதாக கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு பு.கா.ர் வந்ததால், அந்த புகார் பற்றிய தகவல்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர் அந்த புகாரில், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும் சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்கு தெரிய வந்ததால், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.
அதற்கு, ஆர்யாவின் தாயார் என்னை மோ.சமாக தி.ட்டியதுடன், ஸ்ரீலங்காகாரி நீ…உலகமெல்லாம் போய் அ.சிங்கப்படுறீங்க என்று மோ.சமான வார்த்தைகளால் தன்னை தி.ட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.
பு.கா.ர் தொடர்பாக பெருநகர சென்னை பொலிசார் விசாரணையை தாமதப்படுத்தி வந்த நிலையில் ஆர்யா மீதான மோ.சடி பு.கா.ர் தொடர்பான வி.சாரணையை விரைவுபடுத்தக்கோரி ஈழத்தமிழ் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடினார்.
இதையடுத்து ஆர்யா மீதான மோ.சடி புகாரை வி.சாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்யா மீதான பண மோ.சடி பு.காருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டிங், குரல் பதிவுகள் உள்ளிட்ட 70 பக்க ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
இதற்கிடையே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அ.ச்சத்தில் ஆர்யாவின் உதவியாளர் முகமது அர்மான் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். நிஜத்தில் ஜம்சத் என்ற பெயரில் உள்ள ஆர்யா காவல்துறையினரின் வி.சாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகின்றது.
வி.சாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள ஆர்யாவை பி.டித்து வி.சாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் 38 வயதான தாயார் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். ராணிப்பேட்டையின் கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரின் மனைவி பொற்கொடி (38).
இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகள் திருமணத்துக்கு எந்தவித பண ஏற்பாடும் ஆனந்தன் செய்யாமல் இருந்துள்ளார்.
இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் வெளியில் சென்ற போது வீட்டில் இருந்த பொற்கொடி மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் ம.னமுடைந்த நிலையில் எ.லி ம.ருந்தை சா.ப்பிட்டு ம.ய.க்கமடைந்து கி.டந்தார்.
அவரின் நிலையை வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அ.திர்ச்சியடைந்தனர். பின்னர் பொற்கொடியை மீ.ட்.டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கொடி உ.யிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து அநாதைகளான மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.
பதுளை – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்து லுனுகலையில் பாட்டியுடன் வாழ்கின்றமை அனைத்து ஊடகங்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இதையடுத்து குறித்த குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.
மூன்று குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று கூறி அவர்களை தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, டாக்டர் வஜிர ராஜபக்ஷவின் கோரிக்கை குறித்து பசறை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் கோவிட் – 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி, கோவிட் – 19 தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பாடசாலைகளில் காலை நேர பிரார்த்தனைகளுக்காக மாணவர்களை ஒருங்கிணைத்து நடாத்துவதை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி எதிர்வரும் 31.05.2021 வரை வகுப்பறைகளிலேயே காலை நேர பிரார்த்தனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி முதல் பத்து வாரங்களுக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக சுமார் 400 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 2021 ஜனவரி முதல் மார்ச் முதல் வாரம் வரை நாடு முழுவதும் 369 ஆபத்தான விபத்துக்களில் மொத்தம் 379 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பதிவான சிறிய விபத்துக்கள் மற்றும் கடுமையான விபத்துக்களின் எண்ணிக்கை முறையே 1,939 மற்றும் 789 ஆகும்.
கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பல வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன, மார்ச் 20ம் திகதி பசறையில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்தனர். .
இதற்கிடையில், கடந்த ஆண்டில் மட்டும் 2,040 ஆபத்தான விபத்துக்களில் மொத்தம் 2,141 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்.
இதன்படி, மொத்தம் 803 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் உயிரிழந்தனர். 538 பாதசாரிகளும் வீதி விபத்துக்களில் பலியானார்கள். மேலும், 263 பயணிகள், 196 ஓட்டுநர்கள், 159 சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 147 பின்னிருக்கை பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தம் 8,909 சிறு விபத்துக்கள் மற்றும் 6,619 கடுமையான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சேதங்களை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கை 5,817 ஆகும்.
யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தற்போது கோவிட் – 19 அதிகரித்துவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் கோவிட் – 19 தொற்று உச்சபட்ச நிலைமையில் காணப்படுகின்றது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 150 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலகட்டமாக காணப்படுகின்றது. பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அத்தோடு ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது.
இடர் காலமாக இருக்கின்ற இக் காலப்பகுதியில் மிகவும் அவதானமாக பொதுமக்கள் செயற்பட வேண்டும்.
அதே போல அரச தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பையும் பொது பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய செயற்பாடுகளை செயற்படுத்தி கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் விடுகின்ற அறிவுறுத்தல்கள் அதேபோல சமூக இடைவெளி பேணுதல் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றி தங்களையும் தங்களுடைய உறவினர்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கின்றது.
போக்குவரத்தின் போதும் ஏனைய செயற்பாடுகளின் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் அவசியமாகும். அத்தோடு அத்தியாவசியமான தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்த்தல் சிறந்தது.
பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் வேண்டும். அத்தோடு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனுப்புதல் சாலச் சிறந்தது.
அத்தோடு பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் அத்தோடு ஏனைய தரப்பினரும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் அதேபோன்ற வீட்டில் இடம் பெறும் நிகழ்வுகள், அரச கூட்டங்கள் ஏனைய கூட்டங்களில் பொதுமக்கள் கூடும் போது மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளை அனுசரித்து பொது சுகாதாரப் பரிசோதகர்களின், பொது வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.
பொதுமக்கள் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களும் அனைத்து தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் கோவிட் – 19 தொற்றுக்குள்ளாவோரின் தொற்று மூலங்கள் இனங்காணப்படுகிறது. எனவே அது ஒரு சமூக தொற்றாக கருத முடியாது.
ஏற்கனவே சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
எனவே அவற்றை முறையாகப் பின்பற்றி அமுல்படுத்தினால் தொற்று நிலைமையிலிருந்து யாழ்ப்பாண மாவட்ட கட்டுப்படுத்த முடியும். யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் சற்று வித்தியாசமான நிலைமை காணப்பட்டது.
எனவே யாழ்ப்பாண மாவட்டத்தினை கோவிட் – 19 தொற்றிலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். இந்த விடயத்தில் சுகாதார தரப்பினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியமான விடயமாகும்.
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை சகல நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெறுகின்ற நிலையில் பெரும் தொற்று ஏற்படும் நிலைமையானது மீண்டும் முடகத்தினை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இது மக்களை அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவே தொற்றினை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் முடக்க நிலைமை கட்டுப்படுத்தி தொற்று நிலைமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல்,
புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை எமது பிராந்திய செய்தியாளர் ஒளிப்பதிவு செய்த படங்கள், இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவதற்குறிய நடவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்வார்களா என சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி கடந்த பல வருடகாலமாக போக்குவரத்துக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில் கூமாங்குளம் பிரதான வீதியினை செப்பனிடும் பணிக்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.
வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடாக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடனான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தினூடாக கூமாங்குளம் பிரதான வீதியின் 1.65 கிலோமீற்றர் தூரத்தினை காபட் வீதியாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீன அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
கடந்த வருடம் (10.03.2020) அன்று குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் இன்று (26.03.2021) வரை குறித்த வீதியினை காபட் வீதியாக செப்பனிடும் பணிக்குரிய எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் , சாரதிகள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் குறித்த சீன அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் எமது நிறுவனத்தினராலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குறித்த வீதியினை செப்பனிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு மாத காலத்தினுள் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தனர்.
ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற தகுதிவாய்ந்த இளம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (25.03) வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்கள் சிலவற்றின் பெண் பிரதிநிதிகள் சிலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.
உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதமான இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் 2018ஆம் ஆண்டு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
என்றாலும், குறித்த 25வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 25 பெண் பிரதிநிதிகள் உள்ளனர்.
இது மொத்த உறுப்பினர்கள் தொகையில் 22 வீதமாகும். இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் முகமாக பெண் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை நாம் கட்சி பேதமற்ற முறையில் முன்னெடுக்க முன்வரத் திட்டமிட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
2018 ஆண்டு சட்ட மூலம் அமுலுக்கு வந்ததன் பின்னர் அரசியலில் பிரவேசிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு மகத்தான வாய்ப்பாக கருதினாலும் சில பெண்கள் சட்ட நிர்ப்பந்தத்தால் சந்தர்ப்பவசமாக அரசியலில் பிரவேசித்தனர்.
என்றாலும் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அரசியலில் களமிறங்கி பிரதிநிதிகளாகச் செயற்பட்டு பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தேவையை அனுபவரீதியாக உணர்ந்துள்ளோம்.
நாம் அரசியலில் ஈடுபட்ட பின்னர் மக்கள் அபிவிருத்திக்காக குரல் கொடுக்கும் சந்தர்ப்பமும், பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி உரிய இடங்களில் பேசும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.
ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அரசியலில் பெண்கள் இருப்பது பெண்களின் உரிமையை பாதுகாக்கவும் பெண்களை பாதிக்கும் விடயத்தில் தீர்மானம் எடுக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வ.ன்முறையற்ற சூழலை உறுதிப்படுத்தவும் இது தேவையாக இருக்கின்றது
அந்த வகையில் நான்கு அம்சங்களைக் கொண்ட ஒரு பிரேரணையை முன்வைத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் நான்கு அம்ச பிரேரணைகள் பின்வருமாறு..
சட்டம் இயற்றப்படும் பாராளுன்றத்திலும் உள்ளுர் மக்களுக்குத் தேவையான முக்கிய தீர்மானங்களை எடுக்கும் இடங்களான உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபையிலும் பெண்களின் பரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும். இது தொடர்பாக உள்ளுராட்சி மன்றங்கள், தேர்தல் திணைக்களம், கட்சித் தலைமைகள் மற்றும் சமூகமட்டத்தில் இயங்கும் சகல நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்.
ஜனநாயக விழுமியங்களை மதிக்கக் கூடிய, பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக திகழும் தகுதிவாய்ந்த இளம் பெண்கள் அரசியலில் முன்வர வேண்டும். அதேநேரம், அரசியல் கட்சிகள், குடும்ப உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்பினர் அதற்கான ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.
சமூகத்தில் வ.ன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர் பெண்களுக்குக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வ.ன்முறைகளை தடுத்து, அவர்களின் பா.துகாப்பை உறுதிப்படுத்தி, வ.ன்முறைகளுக்கு எ.திரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
அத்தோடு பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை சமூகத்தின் தேவையாகவும் பெண்களின் முக்கிய உரிமையாகவும் கருத வேண்டும்.
தற்போது, அரசியலில் உள்ள பெண்களின் தீர்மானம் எடுக்கும் ஆற்றலையும் பொதுத்தளத்தில் தாக்கமான முறையில் இயங்கும் ஆற்றலையும் ஊக்குவிக்க கட்சிகளும் ஏனைய நிறுவனங்களும் முன்வர வேண்டும். என்ற நான்கு அம்ச பிரேரணைகளும் முன்வைத்திருந்தனர்.
திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் வகையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறு நகரசபையால் கோரப்பட்டுள்ளது.
நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் நகரசபை கழிவு அகற்றும் வாகனங்களுக்கு வழங்கும் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வாகனங்களுக்கு வழங்க வேண்டும்.
உணவுக் கழிவுகள் காலையிலும், ஏனைய கழிவுகள் மாலையிலும் சேகரிக்கப்படும் என்பதுடன், தரம் பிரித்து வழங்கப்பட்டாத திண்மகக் கழிவுகள் அகற்றப்படாது எனவும் நகரசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பச்சை நிறப் பைகளில் உணவுக் கழிவுகளையும், சிவப்பு நிறப் பைகளில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளையும், மஞ்சள் நிறப் பைகளில் கடதாசி கழிவுகளையும், நீல நிறப் பைகளில் கண்ணாடி மற்றும் உலோகக் கழிவுகளையும் போடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உணவுக் கழிவுகள் அகற்றுவதற்கான பை 10 ரூபாய் வீதமும், ஏனைய கழிவுகள் அகற்றுவதற்கான மீள் பாவனைக்கு உட்படுத்தக் கூடிய பை ஒன்று 40 ரூபாய் வீதமும் செலுத்தி தேவையானவர்கள் நகரசபையிடம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.