யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவும் கோவிட் தொற்று : அரச அதிபர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது கோவிட் – 19 அதிகரித்துவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் கோவிட் – 19 தொற்று உச்சபட்ச நிலைமையில் காணப்படுகின்றது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 150 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலகட்டமாக காணப்படுகின்றது. பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, அத்தோடு ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது.
இடர் காலமாக இருக்கின்ற இக் காலப்பகுதியில் மிகவும் அவதானமாக பொதுமக்கள் செயற்பட வேண்டும்.

அதே போல அரச தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பையும் பொது பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய செயற்பாடுகளை செயற்படுத்தி கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் விடுகின்ற அறிவுறுத்தல்கள் அதேபோல சமூக இடைவெளி பேணுதல் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றி தங்களையும் தங்களுடைய உறவினர்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கின்றது.

போக்குவரத்தின் போதும் ஏனைய செயற்பாடுகளின் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் அவசியமாகும். அத்தோடு அத்தியாவசியமான தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்த்தல் சிறந்தது.

பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் வேண்டும். அத்தோடு பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனுப்புதல் சாலச் சிறந்தது.

அத்தோடு பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் அத்தோடு ஏனைய தரப்பினரும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் அதேபோன்ற வீட்டில் இடம் பெறும் நிகழ்வுகள், அரச கூட்டங்கள் ஏனைய கூட்டங்களில் பொதுமக்கள் கூடும் போது மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளை அனுசரித்து பொது சுகாதாரப் பரிசோதகர்களின், பொது வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

பொதுமக்கள் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களும் அனைத்து தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

யாழ் மாவட்டத்தில் கோவிட் – 19 தொற்றுக்குள்ளாவோரின் தொற்று மூலங்கள் இனங்காணப்படுகிறது. எனவே அது ஒரு சமூக தொற்றாக கருத முடியாது.

ஏற்கனவே சுகாதார வழிகாட்டல்களையும் நடைமுறைகளையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளோம். அதேபோல அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே அவற்றை முறையாகப் பின்பற்றி அமுல்படுத்தினால் தொற்று நிலைமையிலிருந்து யாழ்ப்பாண மாவட்ட கட்டுப்படுத்த முடியும். யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் சற்று வித்தியாசமான நிலைமை காணப்பட்டது.

எனவே யாழ்ப்பாண மாவட்டத்தினை கோவிட் – 19 தொற்றிலிருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். இந்த விடயத்தில் சுகாதார தரப்பினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியமான விடயமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை சகல நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெறுகின்ற நிலையில் பெரும் தொற்று ஏற்படும் நிலைமையானது மீண்டும் முடகத்தினை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே இது மக்களை அசௌகரியத்தை ஏற்படுத்தும் எனவே தொற்றினை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் முடக்க நிலைமை கட்டுப்படுத்தி தொற்று நிலைமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

 

வவுனியா புகையிரத கடவையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத மக்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!

புகையிரத கடவையில்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல்,

புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை எமது பிராந்திய செய்தியாளர் ஒளிப்பதிவு செய்த படங்கள், இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்துவதற்குறிய நடவடிக்கையினை உரிய தரப்பினர் மேற்கொள்வார்களா என சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கியும் ஒரு வருடமாக புனரமைப்பு காத்திருப்பில்!!

கூமாங்குளம் பிரதான வீதி..

வவுனியா கூமாங்குளம் பிரதான வீதி கடந்த பல வருடகாலமாக போக்குவரத்துக்கு ஒவ்வாத வகையில் பழுதடைந்து குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில் கூமாங்குளம் பிரதான வீதியினை செப்பனிடும் பணிக்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.

வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினுடாக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடனான இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டுத் திட்டத்தினூடாக கூமாங்குளம் பிரதான வீதியின் 1.65 கிலோமீற்றர் தூரத்தினை காபட் வீதியாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீன அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கடந்த வருடம் (10.03.2020) அன்று குறித்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் இன்று (26.03.2021) வரை குறித்த வீதியினை காபட் வீதியாக செப்பனிடும் பணிக்குரிய எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக குறித்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் , சாரதிகள் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் குறித்த சீன அரச கட்டுமான பொறியியல் நிறுவனத்தினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,

வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் எமது நிறுவனத்தினராலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக குறித்த வீதியினை செப்பனிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இரு மாத காலத்தினுள் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தனர்.

வவுனியா உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் ஊடகவியலாளர் சந்திப்பு : இளம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தல்!!

பெண் பிரதிநிதிகள்..

ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற தகுதிவாய்ந்த இளம் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (25.03) வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்கள் சிலவற்றின் பெண் பிரதிநிதிகள் சிலர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதமான இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் 2018ஆம் ஆண்டு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

என்றாலும், குறித்த 25வீத ஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுக்கொள்வதிலும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. வவுனியா மாவட்டத்தில் மொத்தமாக 25 பெண் பிரதிநிதிகள் உள்ளனர்.

இது மொத்த உறுப்பினர்கள் தொகையில் 22 வீதமாகும். இந்நிலையில் பெண் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் முகமாக பெண் வேட்பாளர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தை நாம் கட்சி பேதமற்ற முறையில் முன்னெடுக்க முன்வரத் திட்டமிட்டுள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பெண் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

2018 ஆண்டு சட்ட மூலம் அமுலுக்கு வந்ததன் பின்னர் அரசியலில் பிரவேசிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்தது. பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு மகத்தான வாய்ப்பாக கருதினாலும் சில பெண்கள் சட்ட நிர்ப்பந்தத்தால் சந்தர்ப்பவசமாக அரசியலில் பிரவேசித்தனர்.

என்றாலும் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் அரசியலில் களமிறங்கி பிரதிநிதிகளாகச் செயற்பட்டு பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தேவையை அனுபவரீதியாக உணர்ந்துள்ளோம்.

நாம் அரசியலில் ஈடுபட்ட பின்னர் மக்கள் அபிவிருத்திக்காக குரல் கொடுக்கும் சந்தர்ப்பமும், பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றி உரிய இடங்களில் பேசும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது.

ஆகவே எதிர்கால தேர்தல்களில் பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அரசியலில் பெண்கள் இருப்பது பெண்களின் உரிமையை பாதுகாக்கவும் பெண்களை பாதிக்கும் விடயத்தில் தீர்மானம் எடுக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வ.ன்முறையற்ற சூழலை உறுதிப்படுத்தவும் இது தேவையாக இருக்கின்றது

அந்த வகையில் நான்கு அம்சங்களைக் கொண்ட ஒரு பிரேரணையை முன்வைத்து நாம் செயற்பட விரும்புகின்றோம் நான்கு அம்ச பிரேரணைகள் பின்வருமாறு..

சட்டம் இயற்றப்படும் பாராளுன்றத்திலும் உள்ளுர் மக்களுக்குத் தேவையான முக்கிய தீர்மானங்களை எடுக்கும் இடங்களான உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபையிலும் பெண்களின் பரதிநிதித்துவம் உறுதிசெய்யப்பட வேண்டும். இது தொடர்பாக உள்ளுராட்சி மன்றங்கள், தேர்தல் திணைக்களம், கட்சித் தலைமைகள் மற்றும் சமூகமட்டத்தில் இயங்கும் சகல நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கக் கூடிய, பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக திகழும் தகுதிவாய்ந்த இளம் பெண்கள் அரசியலில் முன்வர வேண்டும். அதேநேரம், அரசியல் கட்சிகள், குடும்ப உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்பினர் அதற்கான ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.

சமூகத்தில் வ.ன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர் பெண்களுக்குக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வ.ன்முறைகளை தடுத்து, அவர்களின் பா.துகாப்பை உறுதிப்படுத்தி, வ.ன்முறைகளுக்கு எ.திரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

அத்தோடு பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை சமூகத்தின் தேவையாகவும் பெண்களின் முக்கிய உரிமையாகவும் கருத வேண்டும்.

தற்போது, அரசியலில் உள்ள பெண்களின் தீர்மானம் எடுக்கும் ஆற்றலையும் பொதுத்தளத்தில் தாக்கமான முறையில் இயங்கும் ஆற்றலையும் ஊக்குவிக்க கட்சிகளும் ஏனைய நிறுவனங்களும் முன்வர வேண்டும். என்ற நான்கு அம்ச பிரேரணைகளும் முன்வைத்திருந்தனர்.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறு கோரிக்கை!!

திண்மக் கழிவு..

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் வகையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குமாறு நகரசபையால் கோரப்பட்டுள்ளது.

நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் நகரசபை கழிவு அகற்றும் வாகனங்களுக்கு வழங்கும் திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வாகனங்களுக்கு வழங்க வேண்டும்.

உணவுக் கழிவுகள் காலையிலும், ஏனைய கழிவுகள் மாலையிலும் சேகரிக்கப்படும் என்பதுடன், தரம் பிரித்து வழங்கப்பட்டாத திண்மகக் கழிவுகள் அகற்றப்படாது எனவும் நகரசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பச்சை நிறப் பைகளில் உணவுக் கழிவுகளையும், சிவப்பு நிறப் பைகளில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளையும், மஞ்சள் நிறப் பைகளில் கடதாசி கழிவுகளையும், நீல நிறப் பைகளில் கண்ணாடி மற்றும் உலோகக் கழிவுகளையும் போடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உணவுக் கழிவுகள் அகற்றுவதற்கான பை 10 ரூபாய் வீதமும், ஏனைய கழிவுகள் அகற்றுவதற்கான மீள் பாவனைக்கு உட்படுத்தக் கூடிய பை ஒன்று 40 ரூபாய் வீதமும் செலுத்தி தேவையானவர்கள் நகரசபையிடம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘’நாங்க ரெண்டு பேரும் வேற ஜாதினு வீட்ல ஒத்துக்கல : இளம் காதல் ஜோடிக்கு நடந்த விபரீதம்!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெற்றோர் எ.திர்ப்பு தெரிவித்த காரணத்தால் இளம் ஜோடி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோல் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஷ்னுவர்தன் ரெட்டி. இவருக்கும் நாகினேனி இந்து(18) என்பவருக்கும் சுமார் 9 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது.

இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாற, இருவராலும் பிரிய முடியாத அளவுக்கு நெருக்கமாகியுள்ளனர். இவர்களின் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, இருவரும் வேறு சமூகம் என்பதால், இருவருக்கும் பெற்றோர்களிடம் இருந்து எ.திர்ப்பு வந்துள்ளது.

ஆனால் திருமணம் செய்து கொள்வதில் காதலர்கள் பிடிவாதமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற சூழலில், இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ளும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, திங்கட்கிழமை கல்லூரிக்கு சென்ற விஷ்னு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அன்றைய நாள் இரவு, சுமார் 10.30 மணிக்கு பால் வாங்கி வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய இந்து, பின்னர் வீடு திரும்பவில்லை.

இருவரும் அந்த இரவு ஒன்றாக சந்தித்து, பின்னர் சுராரெட்டி ரயில் நிலையத்திற்கு சென்று, இரவு நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் த.லை வை.த்து ப.டுத்துள்ளனர்.

காலையில் அந்த வழியாக வந்த அப்பகுதி கிராம மக்கள் உ.ட.ல் சி.தை.ந்.த நிலையில் கி.டந்த இளம் ஜோடிகளை க.ண்டு, உடனடியாக ரயில்வே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், உ.ட.ல்களை மீ.ட்.டு, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மட்டுமின்றி, அவர்கள் தொடர்பில் தகவல் சேகரித்து, பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அதன் பின்னர் நடந்த வி.சாரணையிலேயே, இவர்களின் காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டு தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!!

துவிச்சக்கர வண்டி திருட்டு..

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றை அடையாளம் தெரியாத நபரொருவர் திருடிச் சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையம் அம்மாச்சி உணவகத்திற்கு முன்பாக நேற்று மாலை இளைஞரொருவர் துவிச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் இரவு 10.30 மணியளவில் திரும்பிய சமயத்தில் துவிச்சக்கரவண்டி களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞனால் இன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் காணப்படும் சீ.சி.ரீ.வியின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

விடுமுறை..

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி மேல் பாமாகாணத்திலுள்ள டசாலைகளின் தரம் 5, 11 மற்றும் 13 அகிய வகுப்புகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டதையடுத்து மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 29ஆம் திகதி திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த கொரோனா தோற்றாளர்கள் : யாழ்.மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம்!!

அதிகரித்த கொரோனா தோற்றாளர்கள்..

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

கே.கே.எஸ் வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாட்களுக்கு இடை நிறுத்தப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுகின்றதுடன், வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மரண வீடுகளில் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விசேட அ.திரடிப் ப.டையினரால் ஒருவர் கை.து!!

மடுகந்தைப் பகுதியில்..

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரள க.ஞ்.சா.வு.ட.ன் இ.ளைஞர் ஒ.ருவர் வி.சேட அ.திரடிப்ப.டையினரால் நேற்று இரவு கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இ.ளைஞனை மடுகந்தை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வி.சேட அ.திரடிப்ப.டையினர் வ.ழிமறித்து மேற்கொண்ட சோ.தனையின் போது 275 கிராம் கேரள க.ஞ்.சா.வை உ.டமையில் வை.த்திருந்தமை க.ண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கேரள க.ஞ்.சா.வை உ.டமையில் வை.த்திருந்த கு.ற்றச்சாட்டில் 28 வ.யதுடைய இ.ளைஞரும் கை.து செய்யப்பட்டார்.
கை.து செ.ய்யப்பட்ட இ.ளைஞரையும், அவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் மற்றும் உடமையில் இருந்து மீ.ட்.க.ப்பட்ட கேரள க.ஞ்.சா எ.ன்பவற்றை விசேட அ.திரடிப்படையினர் வவுனியா பொலிசில் ஒ.ப்படைத்துள்ளனர்.

மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? : ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத ஒரு பெண்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத ஒரு பெண் இருக்கிறாராம்.. இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா, அதுவும் பிரித்தானியாவிலா? என்றெல்லாம் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றுவிடாதீர்கள்.

உண்மையில், பிரித்தானியாவைச் சேர்ந்த Kirsty Brown (32)என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம்.

(உன் அழகைப்பார்த்து மயங்கிவிட்டேன் என்றெல்லாம் சொல்வார்களே, அது இதுதானோ?) Kirstyக்கு ஒரு அபூர்வ மூளைக் கோளாறு உள்ளது.

எந்த உணர்ச்சியானாலும், அது கோபமோ, சிரிப்போ அல்லது பயமோ, ஏன் கவர்ச்சியாக இருந்தால்கூட அவரை மயங்கி விழச்செய்துவிடும்.

ஆகவே, பெரும்பாலும் Kirsty வெளியே செல்வதே இல்லையாம். அப்படியே சென்றாலும் தலை குனிந்தே செல்கிறாராம். தனது சோகத்தை மறைத்துக்கொண்டு, இதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது என்கிறார் Kirsty.

யாராவது என்னுடன் ச.ண்டைக்கு வந்தால், நான் வாக்குவாதம் பண்ணத்தொடங்கியவுடனேயே மயங்கி விழுந்து விடுவேன், உடனே சண்டை நின்றுவிடும் என்கிறார் வேடிக்கையாக.

வீட்டுக்குள் அழகிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : காதலன் கைது!!

கனடாவில்..

கனடாவில் இளம்பெண் வீட்டில் வைத்து அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவத்தில் அவர் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொண்ட்ரியலை சேர்ந்தவர் ரிபக்கி ஹாரி (29). இளம்பெண்ணான இவர் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை பொலிசாருக்கு போன் வந்தது.

பொலிசார் அங்கு சென்ற போது ரிபக்கி ப.டு.கா.ய.ங்.க.ளு.ட.ன் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய நிலையில் இருந்தார். அவரின் வீட்டில் பிராண்டன் மெக்லிண்டயர் (32) என்பவரும் இருந்தார்.

அவர் ரிபக்கியின் காதலன் என தெரியவந்தது. பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரிபக்கி சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரை தா.க்.கி.ய.தா.க பிராண்டனை பொலிசார் கை.து செ.ய்துள்ளனர். ஏற்கனவே கொ.ள்.ளை மற்றும் போ.தை ம.ரு.ந்.து வழக்கில் பிராண்டன் சி.க்.கி.யு.ள்.ளா.ர் என தெரியவந்துள்ளது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆ.ஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

முல்லைத்தீவில் மரம் விழுந்து கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!!

பூதன் வயல் பகுதியில்..

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் மரம் அறுக்கும் கூலித்தொழிலாளி ஒருவர் மரம் அறுத்துக்கொண்டிருக்கும் போது மரம் விழுந்து உ.யிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24.03.2021) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தின் போது முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் ஜனார் குடியிருப்பு முள்ளியவளையினை வசிப்பிடமாகவும் கொண்டு சொக்கன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய குடும்பஸ்தரான கணபதிப்பிள்ளை ஜெயசீலன் என்பவர் உ.யிரிழந்துள்ளார்.

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. குறித்த விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாட்டில் தாய் : இலங்கையில் பரிதாபமாக உ.யிரிழந்த மகள் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

பெரியகல்லாறு பிரதேசத்தில்..

கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின், பெரியகல்லாறு பிரதேசத்தில் 12 வயதுடைய சிறுமி உ.யிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

சி.றுமியின் ம.ரணத்தில் காணப்பட்ட சந்தேகத்திற்கமைய மட்டக்களப்பு வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியினால் நேற்றைய தினம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த சி.றுமி நீண்ட காலமாக தா.க்கப்பட்டு கா.யமடைந்துள்ளார். அந்த கா.யங்களுக்கு ஊடாக உ.டலுக்குள் கிருமிகள் நுழைந்து இந்த ம.ரணம் ஏற்பட்டுள்ளதாக வி.சாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சி.றுமியின் மரணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி பெண்கள் மூவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.றுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளமையினால் தாயின் சகோதரனினால் சி.றுமி வளர்க்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசாதனையின் பின்னர் கொ.லை கு.ற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர்கள் மீது வழக்கு தா.க்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இருவருக்கு கொரோனா தொற்று : ஒருவர் உயிரிழப்பு : வடக்கில் மேலும் 44 பேருக்கு தொற்று!!

கொரோனா..

வடக்கு மாகாணத்தில் நேற்று ((24.3.2021) மட்டும் 44 பேருக்குக் கோவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 284 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போதே 44 பேருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவருக்குக் கோவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு இன்று பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியிலுள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். இவர் மண்டைதீவுக்கு கடலுணவு வாங்கச் சென்றவர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் மூவருக்குக் கோவிட் – 19 தொற்று கண்டறியப்பட்டது. யாழ்ப்பாணம் மருத்துவபீட மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் மூவர் புதுக்குடியிருப்பிலும், இருவர் மல்லாவியிலும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

கிளிநொச்சி மாவட்டம், பளையில் நால்வருக்குக் கோவிட் – 19 தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் ஒருவர் உயிரிழந்தார்” – என்றார்.

மரத்துடன் மோட்டர் சைக்கிள் மோதியதில் ஒருவர் பரிதாபமாக பலி!!

கதிரவெளி பிரதேசத்தில்..

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிலிலுள்ள கதிரவெளி பிரதேசத்தில் மோட்டர் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாகரையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆனந்தராஜா பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளார். குறித்த நபர் வாழைச்சேனை திருகோணமலை வீதியிலுள்ள கதிரவெளிபகுதில் சம்பவதினமான நேற்று மாலை மோட்டர் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கபட்டிலுள்ள மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே உ.யிரிழந்துள்ளார்.

இவ்வாறு உ.யிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ச.டலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வி.சாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.