வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று (27.03.2021) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று, பக்தர்களின் ஆரோகரோ கோசத்திற்கு மத்தியில் கருமாரி அம்மன் தேரில் எழுந்தருளினார்.
ஆண்களும், பெண்களும் என பக்த அடியார்கள் புடை சூழ்ந்து கருமாரி அம்மனை தாங்கிய தேரின் வடத்தை பிடித்து இழுத்து வீதி உலா வந்தனர்.
இதன்போது அடியார்கள் தமது நேர்திக்கடன்களை தீர்க்க கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும், விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டும் கருமாரி அம்மனின் அருட் கடாற்சற்சத்தைப் பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, குறித்த ஆலயத்திற்கு தாமரை பூ பறிக்கச் சென்ற நிலையில் ஆசிரியர் ஒருவர் குளத்தில் மூழ்கி காலை மரணமடைந்தமையால் அமைதியான முறையில் தேர்த் திருவிழா நடைபெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா வைத்தியசாலை தாதி ஒருவருக்கு இன்று (27.03) காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர் சிலருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று காலை வெளியாகின.
அதில், வவுனியா வைத்தியசாலையில் நோயாளர் விடுதி ஒன்றில் கடமையாற்றும் தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த தாதியுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரத் துறையினர் முன்னெடுத்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான தாதியை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம், இத்தாவில் பகுதியில் அதற்கு நேரெதிரே பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வீதியை விட்டு விலகிய டிப்பர் வாகனம், மோட்டார் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் பளை – தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார்.
இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.
குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார். குறித்த ஆசியர் குளத்திற்கு சென்ற நிலையில் குளத்தில் நடமாட்டதைக் காணாமையால்,
அயலவர்கள் மற்றும் குறித்த குளத்தின் கமக்கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடிய போது நீரில் முழ்கிய நிலையில் ஆசிரியர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ஆசிரியர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னேரே நீரில் முழ்கியதால் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, குறித்த ஆசிரியர் இன்று ஆரம்பிக்கும் கல்விப் பொது சாதரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கும் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி – முகமாலை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் சற்றுமுன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனது .
இதன்போது மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை செலுத்திச் சென்ற தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா, முருகனூர் பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமிக்கும் 34 வயதுடைய தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் தாயாருக்கு கடந்த 11 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,
தாயார் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன், தந்தை உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் சுகாதார பிரிவினரால் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இன்று (26.03) காலை அவர்களிடம் மேற்கொண்ட பிசீஆர் முடிவுகள் இன்று இரவு வெளியாகின. அதில் 2 வயது சிறுமிக்கும், சிறுமியின் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் இறந்துள்ளனர் மற்றும் 66 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ரயில் விபத்தில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், சோஹாக் மாகாணத்தில் சம்பவம் நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் பல பயணிகள் இன்னமும் சிக்கியுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பலர் சுய நினைவின்றி உள்ளதாகவும், பலர் ரத்த காயங்களுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எகிப்தின் ரயில்வே அமைப்பு பொதுவாக மோசமாகவே நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு காலாகாலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
2016 ல், கெய்ரோ அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர். 2017ல் பயணிகள் ரயில் இரண்டு விபத்துக்குள்ளானதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2017ல் மட்டும், எகிப்தில் மொத்தம் 1,793 ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, எகிப்திய ரயில் நிர்வாகத்தை மொத்தமாக சீரமைக்க 14.1 பில்லியன் டொலர் தொகை தேவை எனவும், ஆனால் தற்போதைய சூழலில் அந்த தொகை தங்களிடம் இல்லை என எகிப்திய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2002 ல், கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்கு பயணித்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதே எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்து என கருதப்படுகிறது.
இந்தியாவில் தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்த நபர் மீது காதலி ஆ.சி.ட் ஊ.ற்றி கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா நகரத்தில் உள்ள அவரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுபவர் சோனம். அவரும், அதே மருத்துவமனையின் ஆய்வகத்தில் உதவியாளராக பணியாற்றும் தேவேந்திரா என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் தேவேந்திரா தான் வேறொரு பெண்ணை மணந்துகொள்ளப் போவதாக சோனமிடம் கூறியுள்ளார். இதனால், மிகுந்த கோ.ப.த்.து.க்.கு ஆளான சோனம், வியாழக்கிழமை ஒருமுறை தன்னை வந்து சந்திக்குமாறு தேவேந்திரனை கேட்டுள்ளார்.
தேவேந்திராவும் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை ஏ.மா.ற்.றி.ய.தா.ல் க.டு.ம் ஆ.த்.தி.ர.த்.தி.ல் இருந்த சோனம், தி.ட்டமிட்டு தேவேந்திரா மீது ஆ.சி.டை ஊ.ற்றியுள்ளார். பின்னர், மு.க.ம் க.ரு.கி.ய நி.லையில் Sikandra-வில் உள்ள ம.ருத்துவமனையில் அ.னுமதிக்கப்பட்ட தேவேந்திரா சி.கிச்சை ப.லனின்றி உ.யிரிழந்தார்.
சோனம் மீதும் ஆ.சி.ட் ப.ட்.டு கா.ய.ங்.க.ள் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் சி.கிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னை ஏ.மாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைத்த காதலனை ஆ.சி.ட் ஊ.ற்.றி செவிலியர் கொ.லை செ.ய்.து.ள்.ள சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அரிமரங்களை கடத்திச் சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் பொலிஸார் தெரிவிக்கையில்,
நேற்று (25.03) மாலை கோதண்ட நொச்சிகுளம் காட்டுப் பகுதியிலிருந்து கூமாங்குளம் நோக்கி சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக ஈச்சங்குளம் இராணுவத்திற்குக் கிடைத்த இரகசிய தகவலிற்கமைய,
அப் பகுதிக்கு சென்ற ஈச்சங்குளம் இராணுவத்தினர், அம்மிவைத்தான் பகுதியில் வைத்து நூதனமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட நபரை வாகனத்துடன் கைது செய்து ஈச்சங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மரக்கடத்தலில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், பட்டா ரக வாகனம் ஒன்றும் 15 அடி நீளமுடைய 15 அரி மரங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்ல பிள்ளைகளிடையே நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (26.03) பிற்பகல் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கொரோனா தொற்றையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்த காலப்பகுதியில் அவர்களது ஆக்கத்திறன் மற்றும் கலைதிறனை மேம்படுத்தும் நோக்கில் பிரதேசமட்ட சிறுவர் கழக மற்றும் சிறுவர் இல்லங்களில் இருந்த பிள்ளைகளிடையே வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஐஓஎம் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அணுசரணையில் சித்திரப் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.
குறித்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாங்குளம், கொல்லர் புளியங்குளத்தைச் சேர்ந்த த.ஜதுசா என்ற மாணவிக்கு 15 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும், இரண்டாம் இடத்தைப் பெற்ற நெடுங்கேணி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கே.மகிழன் என்ற மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணப் பரிசிலும்,
மூன்றாம் இடத்தைப் பெற்ற அல்ஹாமியா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.எவ்.நுஹா என்ற மாணவிக்கு 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசிலும் வழங்கப்பட்டதுடன் வெற்றியீட்டிய 47 பேருக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, ஐஓஎம் நிறுவன நிகழ்சித்திட்ட பணிப்பாளர் எஸ்.ஜமீன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சபரிஜா, வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் ரி.தர்மேந்திரா,
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி, மாவட்ட சிறுவர் கழக தலைவி சசிராஜ் அக்சயா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், சிறுவர் கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரின் துவிச்சக்கர வண்டியும் இன்று (26.03) திருடப்பட்டுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம், கதிரேசு வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்ற மாணவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி விட்டு வகுப்பறைக்கு சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
கற்றல் செயற்பாடு முடிவடைந்து வீடு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியை எடுக்க வந்த போது குறித்த துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கல்வி நிலைய நிர்வாகி ஊடாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த புதன்கிழமை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று 201 ரூபாயை கடந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.60 ரூபாயாக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்றைய தினம் 196.72 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வரலாற்றில் முதல் முறையாக 201 ரூபாயை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா குளத்தில் தொடர் ஆக்கிரமிப்பு இடம்பெற நகரசபையின் அசமந்த போக்கே காரணம். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா குளத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மாவட்ட செயலகம் முன் இன்று (26.03) இடம்பெறும் சத்தியாகிரகப் போராட்ட தளத்திற்கு வருகை தந்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா குளத்தில் தொடர் ஆக்கிரமிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது சம்மந்தமாக இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் நானும் இருக்க வேண்டிய ஒருவர். வேலைப்பளு காரணமாக இருக்கவில்லை. ஆரம்பம் முதல் குள ஆக்கிரமிப்புக்கு எதிர்பானவர்களில் நானும் ஒருவன். ஆனால் வவுனியா நகரசபையின் அசமந்த போக்கினால் இவ்விடயம் இடம்பெற்றுள்ளது.
உத்தரவுகளை மீறி குளத்துக்குள் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்றுள்ளன. நானும் சென்று பார்த்தேன். வருகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து இதற்கு உறுதியான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வவுனியா குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு : சத்தியாக்கிரப் போராட்டம் ஆரம்பம்!!
சத்தியாக்கிரப் போராட்டம்..
வவுனியா குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்துநிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரகப்போராட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று (26.03.2021) காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்..
வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல்போய்க்கொண்டிருக்கின்றன.
தற்போது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.
இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழைய நிலைக்கு கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்குப் பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
எனவே வவுனியா குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம் காப்போம், குலம் காப்போம், வலிந்து காணமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வவுனியா குளம் சுற்றுலாமையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்துநிறுத்துமாறு கோரும் சத்தியாக்கிரகப்போராட்டம் ஒன்று வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று (26.03.2021) காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியால் குறித்த சத்தியாக்கிரகப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்..
வவுனியா மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கான நிலத்தடி நீருக்கும், விவசாய நீர்ப்பாசனத்திற்கும் கால்நடை வளர்ப்பிற்கும் குளங்களே ஆதாரமாக உள்ளன. இந்த நிலையில் வவுனியாவிலுள்ள பல குளங்களும் விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு எங்கள் கண்முன்னேயே இல்லாமல்போய்க்கொண்டிருக்கின்றன.
தற்போது சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா மையம் வியாபார நோக்கில் தொடர்ந்து விஸ்தரிக்கப்படுமாயின் குளத்தின் நீரேந்து பகுதி மென்மேலும் குறைவடைந்து செல்லும் அபாயமுள்ளதையும், சுற்றுலாமையத்தின் குத்தகைதாரர் நகரசபையுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை மீறிக் கட்டடங்களை அமைத்துள்ளதையும் நாங்கள் சுட்டிக்காட்டியே வந்திருந்தோம்.
இதனால் குளத்தில் போடப்பட்ட மண் முற்றாக அகற்றப்பட்டு குளத்தின் நீரேந்து பகுதி பழைய நிலைக்கு கொண்டுவரப்படவேண்டுமென்பதையும் நீர்ப்பரப்பிற்குப் பாதிப்பின்றிய முறையில் மிதக்கக்கூடிய பொறிமுறைகளால் பூங்காவை அமைக்கலாம் என்றும் எமது கோரிக்கைகளில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
எனவே வவுனியா குளம் மீதான ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குளங்களை சாக்கடை ஆக்குவதா அபிவிருத்தி, அடுத்த தலைமுறைகளை குடிநீருக்கு கையேந்தவிடாதே, குளம் காப்போம், குலம் காப்போம், வலிந்து காணமல் ஆக்கப்படும் வவுனியாக்குளம், குளமா?குதூகலமா? போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் மாவட்டத்தினை சேர்ந்த பொது அமைப்பினர், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்புகள், குளத்திற்கான மக்கள் செயலணியினர், பெண்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பிரபல திரைப்பட நடிகரான ஆர்யா மீது ஈழத்தமிழ் பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரிக்க சிபிசிஐடி பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஆர்யாவின் மோ.சடிக்கு ஆதாரமாக 70 பக்க ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெண்கள் ரசிகர்களின் கூட்டத்தைக் கொண்ட ரசிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஆர்யா. இவருக்கு என்று ஒரு தனி பெண் ரசிகர்களின் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், ஜேர்மனியில் இருக்கும் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஈழத்தமிழ் பெண் விட்ஜாவிடம், 3 வருடங்களாக பழகிய நிலையில் விட்ஜாவுக்கு ஆன்லைன் மூலம் காதல்வலை விரித்த நடிகர் ஆர்யா அவரை காதலிப்பது போல நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 70 லட்சத்து 40,000 ரூபாய்யை வெஸ்டர்ன் யூனியன் மணிடிரான்ஸ்பர் மூலம் ஆர்யா பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால், அதன் பின் அவரை திருமணம் செய்து கொள்ளாமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏ.மாற்றி வந்துள்ளார். இதனால் அவர் தன்னை ஏ.மாற்றிவிட்டதாக கூறி, பிரதமர் அலுவலகத்திற்கு பு.கா.ர் வந்ததால், அந்த புகார் பற்றிய தகவல்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர் அந்த புகாரில், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறி தன்னிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும் சில மாதங்கள் கழித்து தன்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தனக்கு தெரிய வந்ததால், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன்.
அதற்கு, ஆர்யாவின் தாயார் என்னை மோ.சமாக தி.ட்டியதுடன், ஸ்ரீலங்காகாரி நீ…உலகமெல்லாம் போய் அ.சிங்கப்படுறீங்க என்று மோ.சமான வார்த்தைகளால் தன்னை தி.ட்டியதாக குறிப்பிட்டிருந்தார்.
பு.கா.ர் தொடர்பாக பெருநகர சென்னை பொலிசார் விசாரணையை தாமதப்படுத்தி வந்த நிலையில் ஆர்யா மீதான மோ.சடி பு.கா.ர் தொடர்பான வி.சாரணையை விரைவுபடுத்தக்கோரி ஈழத்தமிழ் பெண் சார்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் ஆனந்தன் நீதிமன்றத்தை நாடினார்.
இதையடுத்து ஆர்யா மீதான மோ.சடி புகாரை வி.சாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்யா மீதான பண மோ.சடி பு.காருக்கு ஆதாரமாக வாட்ஸ் அப் சாட்டிங், குரல் பதிவுகள் உள்ளிட்ட 70 பக்க ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.
இதற்கிடையே சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற அ.ச்சத்தில் ஆர்யாவின் உதவியாளர் முகமது அர்மான் முன் ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். நிஜத்தில் ஜம்சத் என்ற பெயரில் உள்ள ஆர்யா காவல்துறையினரின் வி.சாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகின்றது.
வி.சாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள ஆர்யாவை பி.டித்து வி.சாரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் 38 வயதான தாயார் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். ராணிப்பேட்டையின் கலவையை அடுத்த நல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தன். இவரின் மனைவி பொற்கொடி (38).
இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகள் திருமணத்துக்கு எந்தவித பண ஏற்பாடும் ஆனந்தன் செய்யாமல் இருந்துள்ளார்.
இதனால் வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆனந்தன் வெளியில் சென்ற போது வீட்டில் இருந்த பொற்கொடி மகள் திருமணத்துக்கு பணம் இல்லாததால் ம.னமுடைந்த நிலையில் எ.லி ம.ருந்தை சா.ப்பிட்டு ம.ய.க்கமடைந்து கி.டந்தார்.
அவரின் நிலையை வந்து பார்த்து அக்கம் பக்கத்தினர் அ.திர்ச்சியடைந்தனர். பின்னர் பொற்கொடியை மீ.ட்.டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொற்கொடி உ.யிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.