கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். 82 வயதுடைய முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அவருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச பிரச்சினை காரணமாக அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர் தொற்றாளர் என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த நபருக்கான தகன நடவடிக்கை அனுராதபுரம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சி.றுவன் மு.தலையின் தா.க்.கு.த.லு.க்.கு உ.ள்ளாகி உ.யிரிழந்த நி.லையில் இன்று (28.03.2021) மீ.ட்.க.ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீ.ட்.க.ப்.ப.ட்.ட சி.று.வ.ன் தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது..
இரண்டு சி.று.வ.ர்.க.ளு.ட.ன் இத்திகுளம் குளத்துக்கு குளிக்கச் சென்றபோது குளித்துக் கொண்டிருந்த சி.று.வ.னை மு.த.லை இ.ழுத்துச் சென்றதாகவும் இதனை அடுத்து அச் சி.று.வ.ன் உடன்சென்ற சி.று.வ.ர்.க.ள் வீட்டுக்குச் சென்று கூறியதையடுத்து அங்கு ஓடிச் சென்ற சி.று.வ.னி.ன் த.ந்.தை தன்னுடைய ம.க.னை மு.த.லை இ.ழுத்துச் செல்வதை அவதரித்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முதல் கா.ணாமல் போயிருந்த சி.று.வ.னி.ன் ச.ட.ல.ம் இன்று காலை கிராம மக்களின் உதவியுடன் மு.த.லை க.டி.த்.த நிலையில் மீ.ட்.க.ப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த ச.ட.ல.த்.தை பார்வையிடுவதற்காக தோப்பூர் தி.டீ.ர் ம.ர.ண வி.சாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூறுல்லாஹ் சென்று பார்வையிட்டதுடன், வி.சாரணையின் பின்னர் ச.ட.ல.த்.தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் உள்ளதாகவும் வி.சாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் விடத்திற்கு தீர்வு காண அமெரிக்கா தலையிட வேண்டும் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மதியம் (28.03) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 1500 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் 1500 ஆவது நாளை முன்னிட்டு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நினைவாக வழிபட்டு தேங்காய் உடைத்து வணக்கிவிட்டு அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக ஊர்வலமாக வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்ட கொட்டகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், எங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா தேவை என்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது தாய்மார் கண்ணீர் மல்க கதறி அழுத்து தமது பிள்ளைகள் தமக்கு வேண்டும் எனக் கோரியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம். எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு தொடர் போராட்டம் 1500 வது நாளை எட்டியது. தமிழர்கள் விரும்பும் தீர்வுகள் இல்லாவிட்டால், நம்முடைய மற்றும் பிற தமிழர்களின் போராட்டங்கள் தொடரும்.
ஒரு புதிய தலைமுறையினரும் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் போராட்ட வடிவம் நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நவீனமானதாக இருக்கலாம்.
காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க இப் போராட்டத்தின் முதல்நாள் முதல் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழைத்தோம்.
தமிழர்களைக் கொ.ல்வது, நமது பொருளாதாரத்தை அ.ழிப்பது, சிங்கள இராணுவத்தால் தமிழ் பெண்களின் பாதிப்பு, நமது நிலத்தை கையகப்படுத்த புத்த மதகுருவின் ஆ.க்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் மட்டுமே தடுக்க முடியும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவான நேட்டோவைக் கொண்டுள்ளன. அவை உலகில் பல சிக்கல்களைத் தீர்த்தன. இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் யு.என்.எச்.ஆர்.சி அமர்வில் அவர்களின் போலி நடுநிலைமை தமிழர்களுக்கு உதவ இந்தியா தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியா ஸ்ரீலங்காவுடன் நட்பாக இருக்க விரும்புகிறது. அதாவது அவர்கள் தமிழர்களை ஆதரிக்கவில்லை என்பதாகும்.
7கோடி தமிழர்களைக் கொண்ட நாடு. தமிழர்களுக்கு உதவ இந்தியாவை அழைப்பது எங்கள் கடமை. 13 ஆவது திருத்தம் 5 வீத பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும். ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும்.
எங்களைப் பொறுத்தவரை, இரண்டு மொழிகள் இருக்கும்போது, சமஷ்டி ஒரு நிரந்திர தீர்வாக இருக்க முடியாது. தமிழ் இனப் ப.டு.கொ.லை.யை.த் தவிர்க்க, சமஷ்டிசிக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு நமக்குத் தேவை. இது கனேடிய மாதிரியான பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தமிழ் தாயகம் மாதிரியாக இருக்கலாம்.
யு.என்.எச்.ஆர்.சி தீர்மானம் பற்றியது என்னவெனில், ஐ.நா எந்த இனப் பிரச்சினையையும் அமெரிக்க தலையீடு இல்லாமல் தீர்க்கும் வரலாறு இல்லை. எனவே எங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவை அழைக்கிறோம்.
பல தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அமெரிக்காவை அழைக்கும் எங்கள் கருத்தை எப்போதும் நிராகரித்தனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் எங்கள் பந்தலுக்கு வர விரும்பவில்லை. ஏனெனில் அமெரிக்கக் கொடியுடன் படம் எடுப்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிடியாது என்பதால்.
இப்போது அவர்களில் பெரும்பாலானோர் நமது அரசியல் பிரச்சினையை அமெரிக்காவால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இந்த உரையை விட்டுச் செல்வதற்கு முன், மாகாணத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற சுமந்திரனும் சாணக்கியனும் செயல்படுகிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.
சுமந்திரன் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர் என்றும் சாணக்கியன் ஒரு முன்னால் ராஜபக்ச கட்சி உறுப்பினர் என்றும் நாம் அனைவரும் அறிவோம். சிங்கள சூழலில் ஆடம்பர வாழ்க்கை வாழ இருவருக்கும் ஒரே குறிக்கோள் உள்ளது.
சுமந்திரன் ஆட்சி மாற்றத்தைப் பெற முயற்சிக்கிறார். தமிழர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு பேரழிவு தரும்.
1000 விகாரைகள், நெடுங்கேணியில் 4000 சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்த மதத்திற்கு முதன்மையான இடம், வட கிழக்கு பிரிவினை, ஏக்கியா ராஜ்ஜிய இவை யாவும் முன்னைய ஆட்சி மாற்றத்தின் விளைவு.
இதை தான் ரணில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்றாலும், பௌத்த நாடு என்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது பெரு வெற்றி என்றார்.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்திற்கு மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கோவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான க.மகேசன் இன்று தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோர் ஆராய்ந்தே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
அதற்கமைய தற்போதுள்ள இடர் காலத்தைக் கருத்தில் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை யாழ். கல்வி வலயப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் விமான நிலையங்களில் உள்ள தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இரு நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தால் இந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபையின் இணையத்தளம் ஊடாக பதிவு செய்து விமான நிலையங்களில் உள்ள தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்களில் அனைத்து சேவைகளை பெற்றுக் கொள்ள முடீயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் அறிந்து கொள்வதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 01122263017 என்ற இலக்கம் ஊடாக இந்த தகவல் அறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஆலயம் ஒன்றின் தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் மரணமடைந்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் 2ஆம் லெப்டினன் ப.பரந்தாமன் (வயது 33) அவர்களுக்கு மாணவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் குளத்தில் ஆலயத்திற்கு தாமரைப் பூ பறிக்க சென்ற நிலையில் நீரில் மூழ்கி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர் நேற்று (27.03) காலை மரணமடைந்துள்ளார்.
குறித்த ஆசிரியர் ப.பரந்தாமன் அவர்களின் இறுதிக் கிரியைகள் ஆதிவிநாயகர் கோவில் வீதியில் உள்ள அரவது இல்லத்தில் இன்று (28.03) இடம்பெற்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பிரதான நுழைவாயில் வரை எடுத்துச் செல்லப்பட்டு பாடசாலையின் கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டதுடன்,
மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஆரம்ப பாடசாலையில் அவரது உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது கடேற் அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து பிரதான வீதி வழியாக தட்சனாங்குளம் இந்து மாயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வு மற்றும் சடலம் ஊர்வலமாக கொண்டு சென்ற போது பெருமளவானோர் கலந்து கொண்டமையால் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிப் போக்குவரத்தும் அரை மணிநேரம் பாதிப்படைந்திருந்தது. இதன்போது போக்குவரத்து பொலிசார் போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கருமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக சென்ற ஆசிரியர் வைரவபுளியங்குளம் குளத்தில் முழ்கி மரணமடைந்துள்ளார்.
இன்று (27.03.2021) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.
குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார். குறித்த ஆசியர் குளத்திற்கு சென்ற நிலையில் குளத்தில் நடமாட்டதைக் காணாமையால்,
அயலவர்கள் மற்றும் குறித்த குளத்தின் கமக்கார அமைப்பினர் இணைந்து குளத்தில் தேடிய போது நீரில் முழ்கிய நிலையில் ஆசிரியர் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட ஆசிரியர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னேரே நீரில் முழ்கியதால் மரணமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
இதேவேளை, குறித்த ஆசிரியர் இன்று ஆரம்பிக்கும் கல்விப் பொது சாதரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுக்கும் செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாணத்தில் இன்று 143 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வடமாகாணத்தில் 743 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 143 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் யாழ்.மாவட்டத்திலேயே இவ்வாறு 143 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் வட மாகாணத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில்,
இன்றைய தினம் அதிகூடிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் நோயாளர் விடுதியில் கடமையாற்றும் இரு தாதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (27.03) மதியம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனை என்பவற்றில் மேலும் இரு வவுனியா வைத்தியசாலை தாதியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் பிசீஆர் பரிசோதனையில் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியாவில் இன்று நான்கு தாதியர்கள் உட்பட 6 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
பளை, இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தந்தையும், அவரது இரண்டு மகன்களும் உ.யிரிழந்தனர். பளை, தர்மகேணியை சேர்ந்த மணல் வியாபாரியான அழகரத்தினம் சற்குணநாதன் (34) என்பவரே உ.யிரிழந்தார்.
அவரது இரண்டு மகள்கள் உ.யிரிழந்ததாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதும், உ.யிரிழந்தவர்கள் அவரது மகன்கள் என்பது தெரிய வந்துள்ளது.
9, 12 வயதுடைய மகன்களே உ.யிரிழந்தனர்.மணல் வியாபாரியான அவர் காரில் சென்று கொண்டிருந்த போது, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானார்.
இந்த டிப்பர் இவரது பாவனையில் இருந்த நிலையில் அண்மையிலேயே அவரால் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அந்த டிப்பரை விற்பனை செய்த பின்னர் கொள்வனவு செய்த காரில் பயணித்த போதே விபத்தில் சிக்கினார்.
கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் வாகனம், இத்தாவில் பகுதியில் அதற்கு நேரெதிரே பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வீதியை விட்டு விலகிய டிப்பர் வாகனம், மோட்டார் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் பளை – தர்மங்கேணி பகுதியை சேர்ந்த சற்குணம் சாருஜன், சற்குணம் சாரங்கன் என்ற 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலி!!
கிளிநொச்சி – முகமாலை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் மோட்டார் வாகனமொன்றும் டிப்பர் வாகனமொன்றும் சற்றுமுன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனது .
இதன்போது மோட்டார் வாகனத்தில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் வாகனத்தை செலுத்திச் சென்ற தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
திருகோணமலை, ஹபரன பிரதான வீதியில் கொள்கலன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் அவ்வாகனங்களில் சென்ற மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஹதரஸ் கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(27.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு வாகனங்களும் விபத்துக்குள்ளாகி பாலமொன்றினுள் விழுந்துள்ளது.இதில் பயணம் செய்த லொறியின் சாரதியொருவருக்கும்,கொள்கலனில் பயணித்த சாரதிக்கும், அதன் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ஹபரன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருகோணமலையிலிருந்து ரத்மலான பகுதிக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலனும்,குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற லொறியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் காவலாளி இரவு நேரத்தில் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட நிலையில் அவர் மனைவி நூலிழையில் உ.யி.ர் த.ப்.பிய திக் திக் நிமிடங்கள் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ் (55) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவி சித்ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்தார்.
30 ஏக்கர் கொண்ட இந்த பண்ணைக்குள் 3 வீடுகள் மட்டுமே உள்ளன. வழக்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வழக்கம். அதன்படி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் புறப்பட்டார்.
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ச.ந்தேகம் அடைந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை த.ட்டும் ச.த்தம் கேட்டது.
வழக்கமாக செல்வராஜ் இரவு நேரத்தில் வீட்டு கதவை தட்டும்போது சித்ரா என மனைவியின் பெயரை சொல்லி அழைத்து தட்டுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கதவு தட்டப்பட்டதால் அவர் திறக்கவில்லை. இதனால் பெரும் பீ.தி.யி.ல் உறைந்த சித்ரா அருகே உள்ள சரஸ்வதி என்பவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்.
உடனே அவர் தனது மகன் ஸ்ரீகாந்தை அங்கு அனுப்பி வைத்தார். அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், ஸ்ரீகாந்தை கண்டதும் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி.னார்கள்.
இதையடுத்து சித்ரா, ஸ்ரீகாந்த், சரஸ்வதி மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் அவர்களை து.ர.த்தினார்கள். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே த.லையில் க.ல்.லா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு ர.த்.த வெ.ள்.ள.த்தில் செல்வராஜ் பி.ண.மா.க கி.டப்பதை பார்த்து அ.திர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வி.சாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் செல்வராஜ் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொ.லை செ.ய்.த.வ.ர்.க.ள் யார்? எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர்? என்பது தெரியவில்லை. மேலும் சித்ரா வீட்டின் கதவை தட்டிய 2 நபர்கள் யார் என்பது குறித்தும் வி.சாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தி.ருமணமான பெ.ண்ணையும் அவரின் கு.ழந்தையையையும் கொ.லை செ.ய்.து உ.ட.ல்.க.ளை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கூ.று போ.ட்ட நபரின் செயல் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (24). இவர் கல்லுாரியில் படித்தபோது, சின்னமனுாரைச் சேர்ந்த, இறைச்சிக் கடை உரிமையாளர் சிலம்பரசன் (32) என்பவரை காதலித்துள்ளார்.
ஆனால், 2018ல் காசிராஜாவிற்கு, கலைச்செல்வியை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு, 1 வயதில் ஆண் கு.ழந்தை இருந்தது. அதன் பின்பும் சிலம்பரசனுடன், கலைச்செல்வி தொ.டர்பில் இருந்து உள்ளார். அவருக்கு, நகை, பணம் கொடுத்து உதவியுள்ளார்.
கடந்த, 2020 மார்ச்சில், கணவருடன் த.க.ரா.று செய்து, புதுப்பட்டியில் தந்தை வீட்டில் தங்கினார். அங்கு, சிலம்பரசனை அடிக்கடி சந்தித்தார். அவருக்கு ஏற்கனவே மனைவியும், மூன்று கு.ழந்தைகளும் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி ம.னைவி, கு.ழந்தைகளை வெளியே அனுப்பிய சிலம்பரசன், கலைச்செல்வியை, கு.ழந்தையுடன் சின்னமனுாரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, தன்னை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறும், அல்லது பணம், நகைகளை திருப்பி தருமாறும் கலைச்செல்வி கேட்க, இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இ.ருவரையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன்.
பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சி.று.வ.னை க.த்.தி.யை கொ.ண்டு வர கூறி க.த்.தி.யா.ல் இ.ரு.வ.ரி.ன் உ.ட.ல்.க.ளை.யு.ம் து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி ச.தை, எ.லு.ம்.பு எ.ன பி.ரி.த்.து, சா.க்கு மூ.ட்டைகளில் க.ட்டி கு.ளத்தில் வீ.சியுள்ளனர்.
இதற்கிடையே, கலைச்செல்வியை கா.ணவில்லை என அவர் தந்தை கருப்பையா தொடுத்த பு.கா.ரையடுத்து பொலிசார் செய்த வி.சாரணையில் சிலம்பரசன் சி.க்.கி.னா.ர்.
இதையடுத்து சிலம்பரசன் மற்றும் உ.டந்தையாக இருந்த சி.று.வ.னை கை.து செ.ய்தனர். உ.ட.ல் எ.லு.ம்.பு.க.ள் அ.ட.ங்.கி.ய சா.க்.கு மூ.ட்டையைக் கை.ப்.ப.ற்.றி, த.டயவியல் துறையினர் ஆ.ய்வு செய்து வருகின்றனர்.
கொழும்பு நகரத்தின் சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் போ.தை.க்.கு அடிமையான சுமார் 8,000 பேர் சுற்றித் திரிவதால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நேற்று முதல் அந்த அறிவிப்பை வெளியிட பல காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி காவல்துறையினர் பேருந்துகளில் ஏறி, பயணிகள் தங்களுக்குச் சொந்தமான உடமைகள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.
போ.தை.க்.கு அடிமையானவர்கள் எளிதான பணத்திற்காக மொபைல் போன்கள், பெண்களின் கைப்பைகள், நகைகள் மற்றும் ஆண்கள் பணப்பைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை தேடுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 100,000 ரூபா மதிப்புமிக்க பொருட்கள் தி.ருடிய சம்பவங்கள் குறித்து பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சொந்த ம.கள்களை நி.ர்.வா.ண.ப்.ப.டு.த்.தி கொ.லை செ.ய்.த வ.ழக்கில் மன நல மருத்துவமனையில் சி.கிச்சை பெற்றுவரும் அந்த பெற்றோர், நடந்த ச.ம்பவத்தில் கு.ற்.ற உ.ணர்வு கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
படித்த தம்பதியான புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா ஆகியோர் ஜனவரி 24ம் திகதி தங்களது பிள்ளைகளான அலேக்கியா(27) மற்றும் சாய் திவ்யா(22) ஆகிய இருவரையும் விசித்திர காரணங்களுக்காக கொ.லை செ.ய்.த.ன.ர்.
இந்த வழக்கில் கை.தா.ன இருவரும் ஜனவரி 26 முதல் தனித்தனியாக சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளனர். இதில் பத்மஜா உளவியல் ரீதியாக க.டு.மை.யா.க பா.தி.க்.க.ப்பட்டுள்ளதாக அறிந்த சிறை அதிகாரிகள்,
குறித்த தம்பதியை சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அந்த தம்பதியின் தற்போதைய நிலையில் உரிய சிகிச்சைக்கு தேவையான வசதிகள் இல்லை என்பதால் ருயா மருத்துவமனை நிர்வாகம்,
அவர்களை விசாகபட்டணத்தில் அமைந்துள்ள அரசு உளவியல் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் சுமார் 56 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர், இருவரும் சாதாரண நிலைக்கு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள மிகப்பெரிய கப்பலை உடனடியாக நீக்க முடியவில்லை என்றால் அது இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கொள்கலன் கப்பல் நான்கு கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும்.
இதன் விளைவாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் ஏற்கனவே அதிகரித்து வருவதாகவும், உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
400 மீற்றர் நீளமும் 59 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் செவ்வாயன்று சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் துறைமுகத்திற்குச் சென்ற போது சூயஸ் கால்வாயின் இரு கரைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது. திடீரென அந்த பகுதியில் ஏற்பட்ட காற்று காரணமாக கப்பல் இவ்வாறு சிக்கியுள்ளது.
தைவானின் எவர்க்ரீன் மெரைன் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி. எவர்கிவன் என்ற இந்த கப்பல் சுமார் 20,000 கொள்கலன்களைக் கொண்டுள்ளதுடன், அது சுமார் 200,000 டன் எடை கொண்டதென தெரிவிக்கப்படுகின்றது.
கால்வாயில் ஏற்பட்ட கப்பல் விபத்து காரணமாக கிட்டத்தட்ட 200 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன, இது கடலில் அண்மையில் ஏற்பட்ட மிகப்பெரிய கப்பல் நெரிசல் என்று கருதப்படுகிறது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று இந்த நாசகார செயலை அவர்கள் செய்துள்ளனர்.
அதன்படி நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஆயிலை விசமிகள் ஊற்றிவைத்துள்ளனர்.
இந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றும் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் இந்த செயலுக்கு சமூகஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் நல்லூர் ஆலயத்தின் புனித்தன்மையை கெடுப்பதற்காக இவ்வாறு கழிவு ஆயிலை ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.