வவுனியாவில் மூன்று சிறுவர்களை தேடும் பொலிஸார்!!

வவுனியா பொலிஸாரால்..

ஆலய உண்டியல் திருட்டு சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் மூன்று சிறுவர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் உண்டியல் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆலயப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட சிசிடிவி காணொளி காட்சிகளைச் சோதனையிட்ட பொலிஸார் குறித்த சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

14 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட சிலரே குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை சிசிடிவி ஊடாக அறிய முடிவதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனைவி மற்றும் மாமியார் கொ.டு.மை தாங்கமுடியாமல் கணவன் எடுத்த வி.பரீத முடிவு!!

இந்தியாவில்..

இந்தியாவில் மனைவி மற்றும் மாமியார் து.ன்.பு.று.த்.தி.ய.தா.ல் கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வடோதராவை சேர்ந்தவர் ஷிஷிர் தர்ஜி. இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் ஒரு கு.ழந்தை உள்ளது.

இந்த நிலையில் தர்ஜி இரு தினங்களுக்கு முன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில்,

என் மனைவி, மாமியார், மாமனார் டார்ச்சர் மற்றும் து.ன்.பு.று.த்.த.லா.ல் தான் த.ற்.கொ.லை மு.டி.வை எடுக்கிறேன் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து தர்ஜி தாய் கூறுகையில், தர்ஜியின் மனைவி மோனிகா ஒரு ஆண்டாக தனது பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்தார். தனது கு.ழந்தையை காண தர்ஜி சென்ற போது கூட அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து என் மகனை து.ன்.பு.று.த்.தி வந்தனர் என கூறியுள்ளார்.
பொலிசார் இனி தான் மோனிகா மற்றும் அவர் பெற்றோரிடம் வி.சாரணையை துவங்கவுள்ளனர்.

மேலும் தர்ஜியின் இறுதிச்சடங்கு தொடர்பான விடயங்கள் முடிந்த பின்னர் அவர் தாயாரிடம் வி.சாரணை நடத்தி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

விவாகரத்துக்கு பின் மறுமணம் செய்த 32 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட அ.திர்ச்சி : வீட்டுக்குள் பு.தைக்கப்பட்ட ச.டலம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் க.ணவரை கொ.லை செ.ய்.து ச.டலத்தை ஒரு மாதம் வீட்டுக்குள் பு.தைத்து வைத்திருந்த மனைவி கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தின் வனஸ்தாலிபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதீப் (38). இவர் மனைவி மரியதா (32).மரியதாவுக்கு முதல் திருமணம் மூலம் 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கணவரை விவாகரத்து செய்த பின்னர் மரியதா கடந்தாண்டு கங்காதீப்புடன் காதலில் விழுந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரை மணந்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 8ஆம் திகதி கங்காதீப் கா.ணாமல் போனார், இது குறித்து கடந்த 24ஆம் திகதி அவரின் சகோதரர் ஆகாஷ் பொலிசில் பு.கா.ர் அளித்தார்.

பொலிசார் கங்காதீப் வீட்டுக்கு வந்து வந்து அவர் மனைவி மரியதாவிடம் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வந்தனர். முதலில் சமாளித்து வந்த மரியதா ஒருகட்டத்தில் க.ணவரை கொ.லை செ.ய்.த.தை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், என் இரண்டு மகள்களிடம் கங்காதீப் த.வ.றா.க நடந்து கொண்டார், இதனால் எனக்கு அ.திர்ச்சி ஏற்பட்டது.
சம்பவத்தன்று கங்காதீப் மற்றும் அவர் நண்பர் சுனில் வீட்டில் ம.து அ.ரு.ந்தினார்கள்.

பின்னர் சுனில் கிளம்பி சென்றுவிட்டார், இதன் பிறகு என் கணவர் கங்காதீப் என்னிடம் ச.ண்.டை போட்டார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை க.த்.தி.யா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.தே.ன்.

இதன்பிறகு வீட்டுக்குள்ளேயே அவர் ச.ட.ல.த்.தை பு.தைத்தேன் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து கங்காதீப்பின் ச.டலத்தை அ.ழுகிய நிலையில் பொலிசார் கை.ப்.ப.ற்றினார்கள். மேலும் மரியதாவை கை.து செ.ய்து அவரிடம் மேலும் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் முடிந்த 2 ஆண்டுகளுக்கு பின் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : மனைவி திருநங்கை என்ற உண்மை அம்பலம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின், மனைவியிடம் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முயன்ற கணவனுக்கு பெரும் அ.திர்ச்சி காத்திருந்தது.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பரின் மகள் அன்புச்செல்விக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

அன்பு செல்வி தடகள வீராங்கனை என்பதால், மேற்படிப்பு படித்து விளையாட்டு பிரிவில் நான் அரசு வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை, இதனால் இருவருக்குள்ளும் இப்போதைக்கு தாம்பத்யம் வேண்டாம் என்று அன்பு செல்வி செல்வத்திடம் கூறியுள்ளார்.

செல்வமும் அதற்கு ஒப்புக் கொள்ள, இரண்டு ஆண்டுகள் மேற்படிப்பை அன்பு செல்வி முடித்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆனதால், செல்வம் வ.லுக்கட்டாயமாக அன்புசெல்வியிடம் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முயன்ற போது, அவர் திருநங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது.

இதனால், அ.திர்ச்சியடைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடத்தில் இது குறித்து கேட்ட போது, அவர்கள் கொ.லை மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளனர். இதனால், வே.தனையடைந்த செல்வம் காவல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு புகாரளித்தார்.

இது தொடர்பான வழக்கு வி.சாரணை நடந்து வந்தது. அப்போது, மருத்துவ பரிசோதனையில் அன்பு செல்வி திருநங்கை என்பது தெரிய வந்தது. வழக்கில் செல்வம் தரப்பில் நியாயம் இருந்ததால்,

அவரை ஏ.மாற்றி திருமணம் செய்த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சி.றைத.ண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

பரபரப்பான சாலையில் உ.யிருடன் எ.ரிந்து சாம்பலான நபர்: அ.திர்ச்சி சம்பவம்!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு லொறிகள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட ப.யங்கர வி.பத்தில் சி.க்கி ஒருவர் உ.யிருடன் எ.ரிந்து ம.ரணமடைந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் மேட்சல் மாவட்டத்தில் ஷமிர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் வியாழக்கிழமை பகல் ந.டுங்க வைக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தின் சேலம் பகுதிக்கு செல்லும் ஒரு லொறியை முந்திச்செல்ல முயன்ற ஒரு லொறி, இன்னொரு லொறியுடன் நேருக்கு நேர் மோ.தியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோதிய வேகத்தில் இரு லொறிகளும் பற்றிஎரிய, அதில் பயணம் செய்த ஒருவர் த.ப்பிக்க முடியாமல் நெ.ருப்பில் சி.க்கி உ.யிருடன் எ.ரிந்து ம.ரணமடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சில மணி நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ப.லியான நபர் தொடர்பில் பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதான சாலையில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுவரெலியாவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் தீ விபத்து!!

நுவரெலியாவில்..

நுவரெலியா, இராகலை தோட்டத்தின் இரண்டாம் பிரிவில் 16 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தோட்டத்தில் முதலாம் இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரியவகையில் இருக்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட்தேசங்கள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேசசபை ஆகியன ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப் பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் எ.ரிந்த நிலையில் காரிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பில்..

கொழும்பு – கொஹூவல ஆசிரி மதவத்தையில் ம.ர்மமான முறையில் தீ.ப்பற்றி எ.ரிந்த காரில் இருந்து க.ண்டெடுக்கப்பட்ட ஒருவரின் சடலம் குறித்து பொலிஸார் சிறப்பு வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

33 வயதான நாசர் முகமது ஹஃபன் என்ற வர்தகர் ஒருவரே இவ்வாறு ச.டலமாக மீ.ட்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

களுபோவில – பாதிய மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான இவர், திருமணத்தின் பின் கொஹுவல பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார். தீ விபத்தின் போது வெ.டி.ப்.பு ச.த்தம் கேட்டதாக சம்பவ இடம்பெற்ற பகுதியிலுள்ள அயலவர்கள் தெரிவித்தனர்.

ஒரு நபர் ஒரு மரம் விழுந்ததைப் போல ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், வீட்டிற்கு வெளியே யாரும் இல்லாததால் அவதானித்து பார்த்த போது கார் தீ.ப்பிடித்து எ.ரிவதை தெரிவித்துள்ளனர்.

குறித்த கார் குறுகிய சாலையில் தீ.ப்பிடித்ததால் யாரும் தீ விபத்துக்குள்ளான இடத்திற்கு செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.வ.ர.து உ.டல் அ.டையாளம் காண முடியாத அளவுக்கு எ.ரிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!!

விபத்து..

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12.03) காலை 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் வீதியில் இருந்து வைரவபுளியங்குளம், புகையிரத வீதி நோக்கி திரும்ப முற்பட்ட மோட்டர் சைக்கிளை,

குருமன்காடு சந்தியில் இருந்து வவுனியா நகரம் நோக்கு புகையிரத வீதியில் பயணித்த பிக்கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்றது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 30 வயது மதிக்கதக்க இளைஞன் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் ரக வாகனம் காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து உடனடியாகவே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கட்டடத்துறையில் பாரிய புரட்சி : இன்று திறக்கப்படும் பிரமாண்ட கட்டடம்!!

அல்டெயார்..

இலங்கையில் நிர்மாணத்துறையின் புரட்சியாக நிர்மாணிக்கப்பட்ட வித்தியாசமான தொடர்மாடி குடியிருப்பு இன்று திறக்கப்படவுள்ளது.

கொழும்பு கொம்பெனித்தெருவில் உள்ள அல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களான நாலக்க கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் இந்த திட்டம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும். இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.

ரஷ்யாவின் இரண்டாவது கோடீஸ்வரர் இலங்கையில் ஏற்படுத்திய குழப்பம்!!

நீராவி ரயில்..

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த வைஸ்ரோய் நீராவி ரயில் இயந்திரத்தில் நேற்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதில் பயணித்த ரஷ்யாவின் இரண்டாவது கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து கோடீஸ்வரர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட பா.துகாப்பு பிரிவு உறுப்பினர்கள் 8 பேருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அவர்கள் சுற்றுலா சபையின் அனுமதியுடன் நீராவி ரயில் என்ஜின் கொண்ட வைஸ்ரோய் ரயிலில் 10ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓய ரயில் நிலையம் வரை பயணிப்பதற்கு ரயில்வே திணைக்களத்திற்கு பணம் செலுத்தியுள்ளனர்.

குறித்த ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது நீராவி என்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோ.பமடைந்த ரஷ்ய நாட்டு கோடீஸ்வரர் அங்குள்ள அதிகாரிகளை தி.ட்டியுள்ளார். அத்துடன் கு.ழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். இரண்டு மணித்தியால தாமத்தின் பின்னரே அவர் உட்பட குடும்பத்தினர் தங்கள் இலக்கை சென்றடைந்துள்ளனர்.

சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம்!!

கம்பளம்..

இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை சந்தையில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் கம்பளத்தை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை இலங்கைக்கு அனுப்பி வைக்க 9.20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றன. அமேசான் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன், அந்த நிறுவனத்தில் 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.

இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பா.உ சுரேன் ராகவன் நியமனம்!!

கலாநிதி சுரேன் ராகவன்..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் (வெளிநாட்டு விவகாரம்), வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் நேற்று (11.03) வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான நியமனக் கடிதத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனிடம் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுவரும் மகா சிவராத்திரி!!

மகா சிவராத்திரி..

வவுனியாவின் சிறப்பு வாய்ந்த ஆலயமான கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடும், சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் இன்று (11.03.2021) சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா, கோவிற்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்த அடியார்கள் புடைசூழ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானுக்கு மேள தாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகம் மற்றும் பூஜைகளும் இடம்பெற்றன.

அத்துடன் இந்துக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகிய சிவதீட்சை வழங்கும் நிகழ்வும் சிவராத்திரி நன்நாளில் ஆலயத்தில் இடம்பெற்றது.

அந்தண சிவாச்சாரியார்கள் முன்னிலையில் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றாகிய தீட்சையினை பக்த அடியார்கள் பலரும் அமர்ந்து இருந்து குரு சீட முறையில் சிரத்தையுடன் பெற்றுக் கொண்டனர்.

மேலும், அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களையும் இதன்போது நிறைவேற்றி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் பெருமானின் அருட் கடாற்சத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் சுகாதாரப் பிரிவினரும், பாதுகாப்பு கடமையில் பொலிசாரும் ஈடுபட்டிருந்தமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

பெற்றோரின் இழப்பால் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய இ ளைஞன் : பொலிஸ் அதிகாரிகளின் நெகிழ்ச்சியான செயல்!!

கேகாலை..

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பொலிஸ் பிரிவில் மன விரக்தியினால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதற்குத் தூ.க்.கி.ட்.ட இ.ளைஞனின் உ.யி.ரை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கா.ப்பாற்றியுள்ளனர்.

அரநாயக்க பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதுடைய நபரே இவ்வாறு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அவரது தாய் உ.யிரிழந்த நிலையில் அதற்கு முன்னர் தந்தை உ.யிரிழந்துள்ளார். மூத்த சகோதரனின் வீட்டில் வாழும் அவருக்கு உ.டல் உ.பாதைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் உ.யிரிழந்த பின்னர் சகோதரனே அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார். திடீரென மன வி.ரக்தியடைந்த அவர் தனது வீட்டிலேயே தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த சகோதரர் கத்தி கூ.ச்சலிட்டமையினால் அயலவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அ.றிவித்துள்ளனர். உடனடியாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் தூ.க்.கி.ட்.ட.வ.ர் இன்னமும் உ.யிரிழக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

எனினும் அவரது க.ழுத்தை இ.றுக்கியுள்ள க.ம்பியை அகற்றுவதற்காக உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு உடனடியாக வைத்தியர்கள் சிகிச்சையளித்தமையினால் நோயாளியின் உ.யி.ர் கா.ப்பாற்றப்பட்டுள்ளது.

அவசரத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் தங்கள் வாகனத்திலேயே நோயாளியை ஏற்றிச் சென்று கா.ப்பாற்ற உதவியமை குறித்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தங்கள் கடமைக்கு அப்பால் சென்று உதவியமை நெகிழ வைத்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சி றுவர்களால் க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்காகி கு.டும்பஸ்தர் ப.லி : கிளிநொச்சியில் சம்பவம்!!

வட்டக்கச்சி பகுதியில்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் க.த்.தி.க் கு.த்.து.க்.கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உ.யிரிழந்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூ.ரி.ய ஆ.யு.த.த்.தா.ல் தா.க்.கி.ய.தா.க பொலிசில் மு.றைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த சம்பவத்தில் ப.டுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உ.யிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உ.யிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உ.யிரிழந்தவரின் ச.டலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பி.ரேத ப.ரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக வி.சாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவன் பரிதாபமாக மரணம்!!

விபத்து..

ஹொரவப்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (11.03.2021) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உ.யிரிழந்த மாணவன் ருவன்வெளி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்று வந்த ஹொரவப்பொத்தானை-1ம் கட்டை மொரகொட , மூதலான பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.கே.எம்.த.சில்வா (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஹொரவப்பொத்தானையிலிருந்து வாகொல்லாகட பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் உழவு இயந்திரம் மற்றும் கெப் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பேருந்து சாரதியின் அசமந்தப் போக்கினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சாரதியை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.