வவுனியா செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் ச.டலம் மீ.ட்பு!!

செட்டிக்குளம் காட்டுப்பகுதியில்…

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிக்குளம் பொது மயானத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ஆண் ஒருவரின் ச.டலத்தினை பொலிஸார் மீ.ட்டெடுத்துள்ளனர்.

பொது மயானத்தில் இன்று (11.03.2021) மாலை 4.00 மணியளவில் மீ.ட்கப்பட்ட ச.டலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மரம் ஒன்றில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில்,

நபர் ஒருவரின் ச.டலம் காணப்படுவதாக பொதுமகனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் ச.டலத்தினை அவதானித்தனர்.

குறித்த நபரின் ம.ரணம் தொடர்பில் அ.ச்சம் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவருவதுடன் த.ற்.கொ.லை.யா? கொ.லை.யா? என பொலிஸார் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ச.டலம் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியினையும் செட்டிக்குளம் பொலிஸார் கோரியுள்ளனர். இவ்வாறு ச.டலமாக மீ.ட்கப்பட்டவர் 52 வயதுடைய செல்வகுமார் என பொலிஸார் ச.டலத்தினை அடையாளம் கண்டுள்ளனர்.

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவர்கள் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் உட்பட 8 பேருக்கு இன்று (11.03) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (11.03) இரவு வெளியாகிய நிலையில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றுபவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வவுனியாவில் இன்று (11.03) 08 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா கண்டி வீதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையயை சேர்ந்த 14 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் காட்டுத் தீ : கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்புப் பிரிவினர்!!

காட்டுத் தீ..

வவுனியா சிதம்பரபுரம் பழைய கற்குளம் கிராமத்திற்கு அருகேயுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதனையடுத்து தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வனப் பகுதியிலிருந்து புகை வருவதனை அவதானித்த அயலவர்கள் அருகே சென்று பார்வையிட்ட சமயத்தில் வனப்பகுதி தீப்பற்றி ஏரிந்து கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வவுனியாவில் நிலவிவருகின்ற வெப்பநிலையினால் காட்டுத்தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா கண்டி வீதியில் பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்து : பெண் காயம்!!

விபத்து..

வவுனியா கண்டி வீதியில் (ஏ9) தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு முன்பாக இன்று (11.03.2021) மதியம் 2.20 மணியளவில் இடம்பெற்ற பட்டா – மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்,

தெற்கு வலயக்கல்வி அலுவலத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிலின் பின்புறமாக வந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியுள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளின் சாரதி போக்குவரத்து வீதி விதிமுறைகளை மீறி (முன்னால் திருப்பத் தடை) மோட்டார் சைக்கிலை வீதியின் மறுபக்கம் மாற முற்பட்டமையே விபத்துக்கு காரணமென வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் சிவராத்திரி வழிபாட்டில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை!!

சிவராத்திரி..

வவுனியாவில் இடம்பெறும் சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்பவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கையில் சுகாதார பரிசோதர்களும், பொலிசாரும் ஈடுபடுபட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் – 19 அச்சுறுத்தல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. வவுனியாவிலும் கடந்த சில நாட்களாக புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு சுகாதாரப் பிரிவினர் மக்களை கோரியுள்ளதுடன், சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ளும் போது இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கோரியுள்ளனர்.

குறிப்பாக கைகளை கழுவுதல், முககவசம் அணிதல், உடல் வெப்பம் பரிசோதித்தல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு கோரியுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்க,

ஆலயங்களில் சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் பிறந்த கு.ழந்தையின் ம.ரணத்தில் ச.ந்தேகம் : தாயின் முறைப்பாட்டையடுத்து வழக்கு வி.சாரணை!!

வவுனியா வைத்தியசாலையில்

வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 14.12.2020 அன்று ம.ரணித்த கு.ழந்தை தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் நேற்று (10.03) அழைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு திகதியிடப்பட்டது.

குறித்த கு.ழந்தை கடந்த 14.12.2020 அன்று நண்பகல் 12 மணியளவில் பிறந்து அதே தினம் மலை 4.45 மணியளவில் ம.ரணித்திருந்தது. குழந்தையின் தாய்க்கு சத்திர சிகிச்சையின் மூலமே கு.ழந்தையை பிரசவிக்க முடியும் என மகப்பேற்று வைத்தியர் கூறிய நிலையில்,

வைத்தியசாலையில் இருந்த வைத்தியர்களால் சாதாரண பிரசவத்தின் மூலம் கு.ழந்தையை பிரசவிக்க முயன்றுள்ளதாக தாய் கு.ற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

ஏழு மணி நேரத்தின் பின்னர் பிறந்த கு.ழந்தை சில மணி நேரத்திலேயே இ.றந்துவிட்டது. தனக்கு சத்திர சிகிச்சை மூலமே கு.ழந்தை பிரசவிக்கப்பட வேண்டும் என மகப்பேற்று வைத்தியர் பரிந்துரைத்திருந்ததாக சம்பவதினமான அன்று வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரிடம் தான் தெரிவித்த போதும், அவர் அதனை கண்டுகொள்ளவில்லை என தாய் தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் அலட்சியத்தாலேயே தனது கு.ழந்தை ம.ரணித்தது என பெற்றோர்கள் ச.ந்தேகித்த காரணத்தால் பெற்றோரின் வேண்டுதலின் பேரில் கடந்த 16.12.2020 அன்று கு.ழந்தையின் உ.டல் சட்டவைத்திய ப.ரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ம.ரண ப.ரிசோதனை அறிக்கையில் Fetal distress following obstructed labor due to clinically diagnosed shoulder dystocia காரணமாக பிள்ளைக்கு மரணம் ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் வழக்கு தொடர்பான வி.சாரணைகள் வவுனியா நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் 07.07.2021 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளதாக கு.ழந்தையின் தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும் கு.ழந்தையின் பெற்றோரால் கு.ழந்தையின் ம.ரணம் குறித்து வடமாகாண ஆளுநர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் மு.றைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (10.03) இரவு வெளியாகிய நிலையில் ஓமந்தை அரச வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஈரப்பெரியகுளம், நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டமை இன்று (11.03) காலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்ட நான்கு பேருடனும் தொடர்புகளைப் பேணியவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

விடைத்தாளில் மா ணவன் எழுதியிருந்ததை பார்த்து அ.திர்ச்சியடைந்த ஆசிரியர் : அவமானத்தில் உ.யிரைவிட்ட பரிதாபம்!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் பள்ளி தேர்வில் சினிமா பாடலை எழுதிய மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 12ஆம் வ.குப்பு ப.டித்து வ.ந்தார்.

சமீபத்தில் பள்ளியில் தாவரவியல் தேர்வு நடந்த நிலையில் அதில் கார்த்திக் பங்கேற்றார். அந்த தேர்வில் கேட்கப்பட்ட தெரியாத கேள்வி சிலவற்றுக்கு கார்த்தி சினிமா பாடல்களை எழுதியுள்ளார்.

இதையடுத்து, விடைத்தாள்களை திருத்திய தாவரவியல் ஆ.சிரியர் சகாதேவன் அதை க.ண்டு அ.திர்ச்சியாகி மா.ணவனை அழைத்து க.டிந்துள்ளார்.

மேலும், கார்த்திக்கின் விடைத்தாளை வகுப்பில் மற்ற மா.ணவர்களுக்கு முன்பு படிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவனின் அச்செயலை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடமும் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

இதனால் அ.வமானமடைந்த கார்த்திக் வீட்டில் வெகுநேரம் அ.ழுத நி.லையில் நள்ளிரவு 1 மணிக்கு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். மேலும் அவர் ச.டலத்தை யாருக்கும் தெரியாமல் குடும்பத்தார் தகனம் செய்துள்ளனர்.

இது குறித்து கார்த்திக் பெற்றோர் பு.கா.ர் கொடுக்காததால் எப்படி நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் பொலிசார் கு.ழம்பி வருகின்றனர்.

புழக்கத்தில் போலி நாணயத்தாள்கள் : பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!!

போலி நாணயத்தாள்கள்..

நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாகவும், பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹனவினால் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐயாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் நேற்றைய தினம் இரண்டு சந்தேகநபர்கள் களனி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் இந்த பணத்தைக் கொடுத்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஆயிரம் ரூபா மற்றும் ஐயாயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாணத்தாள்களைப் பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியம்!!

வாகனங்களின் விலை..

தற்போது உயர்ந்துள்ள வாகனங்களின் விலை அடுத்த வாரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஓரளவு குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்னகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என்று தான் நம்புகிறோம்.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய வங்கி ஆகியன வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கான ஒழுங்குமுறை குறித்து கலந்தாலோசித்து வருகிறது.

ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பேச்சுவார்த்தையானது மிகவும் பயனுள்ளதாக அமையும். அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் சாதகமான தீர்வு எட்டப்படலாம். இதனடிப்படையில் தற்போது நியாயமற்ற முறையில் உயர்த்தப்பட்டுள்ள வாகனங்களின் விலை ஓரளவு குறையும் என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பரீட்சை நிலையங்களைச் சுற்றி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார்!!

பரீட்சை நிலையங்களைச் சுற்றி..

வவுனியாவில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை நடைபெற்ற நிலையங்களை சுற்றி பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைந்தது. அந்தவகையில் பரீட்சை நிறைவடைந்ததும் பரீட்சை நிலையத்திலோ அல்லது வளாகத்திலோ,

கலகத்தில் ஈடுபடும் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் ரத்து செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் இன்று பிற்பகல் பரீட்சை முடிவடைந்த நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு பணித்திருந்தனர்.

கிளிநொச்சியில் கனரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட இளைஞன் விபத்திற்குள்ளாகி பலி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இன்று (10.03.2021) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனத்துடன்,

மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிள் கனரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் விசுவமடு பகுதியை சேர்ந்த குணராஜா ஜெனோயன் (20 வயது) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியான இளைஞனின் சடலம் கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு : 10 நாட்களில் 45 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

விபத்துக்கள்..

கொரோனா நிலைமையால் இலங்கை முடங்கியிருந்த போது வாகன விபத்துக்களும் குறைவடைந்திருந்தன. ஆனால், நாடு திறக்கப்பட்ட பின்னர் நாள்தோறும் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களில் இளைஞர்களே அதிகமாகவுள்ளனர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கதிரையில் அமர்ந்தவாறு உ.யிரிழந்த இளைஞன்!!

கொழும்பில்..

மஹர மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீட்டின் முன் கதிரையில் அமர்ந்தவாறு நபரொருவர் உ.யிரிழந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. கடவத்தப் பொலிஸார் இதுகுறித்து தெரிவிக்கையில்,

வீதியில் நடந்துசென்றுகொண்டிருந்த குறித்த இளைஞன் நெஞ்சுப் பகுதியை கையால் பிடித்தவாறு மிகவும் சிரமத்துடன் நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

குறித்த இளைஞன் அங்கிருந்த வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவேளை இறந்துவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

34 வயதான குறித்த இளைஞன் கடவத்த கோபியாவத்த பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.யிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்றும் கடவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் தனிமையில் நின்ற இளைஞன் அதிரடியாக கைது!!

செட்டிகுளம் பகுதியில்..

வவுனியாவில் இளைஞரொருவரை ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ருளுடன் கை.து செய்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா – செட்டிகுளம் – ஆண்டியாபுளியங்குளம் விசேட அதிரடி ப.டையினருக்கு இது தொடர்பில் இ.ர.கசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று வவுனியா – செட்டிகுளம் பகுதியில் தனிமையில் நின்ற இளைஞரிடம் சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரிடமிருந்து 800 மில்லிக்கிராம் ஹெ.ரோ.யி.ன் போ.தை.ப்.பொ.ரு.ள் கை.ப்.ப.ற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 26 வயது இளைஞரொருவரே கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக வி.சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், வி.சாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

9 நாட்களின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட த.லையில்லா பெண்ணின் ச.டலம்!!

கொழும்பு டாம் வீதியில்..

கொழும்பு டாம் வீதியில் பயண பைக்குள் இருந்து க.ண்டுபிடிக்கப்பட்ட த.லை து.ண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் ச.டலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த பெண்ணின் ச.டலம் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் ச.டலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.ரேத ப.ரிசோதனையின் பின்னர் ச.டலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் த.லையை தே.டி கிடைக்காத நிலையில் ச.டலத்தை குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 நாட்களின் பின்னர் த.லையில்லாத பெண்ணின் ச.டலம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.