வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் ஐந்து பேருக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில் அங்கு பணியாற்றும் வவுனியா, சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து குறித்த ஆடைத்தொழிற்சாலையில் தொற்றாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு தொகுதி முடிவுகள் நேற்றிரவு வெளியாகிய நிலையில் அதில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்கள் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற போதும் அவர்கள் மருதமடு, கல்நாட்டாங்கல், பதவியா, மதவாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.அவர்களுடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இளம்பெண்ணிடம் தொ.ல்லை செய்த ம.ர்ம நபர்: சமயோகிதமாக கா.ப்பாற்றிய பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

நியூயோர்க்கில்..

நியூயோர்க்கில் இளம்பெண் ஒருவரிடம் இரவு நேரத்தில் வ.ம்பு செய்துகொண்டிருந்தார் ம.ர்ம நபர் ஒருவர். அதை தற்செயலாக கவனித்த Pika என்ற இளம்பெண், அவரைக் கா.ப்பாற்ற முடிவு செய்துள்ளார்.

இரவு நேரம், உதவிக்கு யாருமில்லை, ப.யம்தான்… என்றாலும் அந்த பெண்னை அப்படியே விட்டுவிட்டால் அவருக்கு ஆ.பத்து ஏற்படலாம் என்பதை அறிந்த Pika, சமயோகிதமாக ஒரு விடயம் செய்தார்.

தனது காரை அவர்களுக்கு அருகே கொண்டு நிறுத்திய Pika, அந்த பெண்ணிடம், நான் உனக்காக காரில் காத்திருக்கிறேன், நீ இங்கே யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாய்? யார் இது என கேட்க, அந்த ஆண், சும்மா பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

இவரை உனக்குத் தெரியுமா என மெதுவாக Pika அந்த பெண்ணிடம் கேட்க, இல்லை என்று அவரும் கூற, போகலாம் என அவரை அங்கிருந்து அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார் Pika.

பின்னர், அந்த பெண்ணிடம் உங்களை காரில் கொண்டு விடவேண்டுமா என்று அவர் கேட்க, அவரும் ஆம் என்று கூற, இருவருமாக விட்டால் போதும் என காரில் ஏறி அங்கிருந்து இடத்தைக் கா.லி செய்திருக்கிறார்கள்.

இந்த வீடியோவை Pika சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய, ஆயிரக்கணக்கானோர் அவரை தைரியமான பெண் என பாராட்டியிருக்கிறார்கள். நீங்கள் அந்த பெண்ணை அப்போது கா.ப்பாற்றியிருக்காவிட்டால், அவர் ஒருவேளை க.ட.த்.த.ப்பட்டிருக்கலாம் என்கிறார் ஒருவர்.

வவுனியாவில் இன்று நான்கு கொரோனா தொற்றாளர்கள்!!

கொரோனா..

வவுனியா தனிமைப்படுத்தில் முகாமை சேர்ந்த 4 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பலருக்கு பிசிஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அதன் முடிவுகள்இன்று வெளியாகியது. அதனடிப்படையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வடமாகாணத்தில் இன்று மேலும் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ் பல்கலை மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று (09.03.2021) 705 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா ஆய்வுகூட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோனையில் வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 22 பேருக்கும் (வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 11 பேருக்கும்), மன்னார் மாவட்டத்தில் 17 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 04 பேருக்கும் இவ்வாறு இன்றைய தினம் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தையை பார்க்க வீட்டிற்கு வந்த மகளுக்கு தாயால் காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் உ.யிரிழந்த சம்பவத்தில், அவரை நான் தான் சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து கொ.ன்.றே.ன் எ.ன்று வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பளாகுரிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து(45). இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பெருமாள்(23) என்ற மகனும், பூவரசி(21) என்ற மகளும் உள்ளனர்.

மருதமுத்துவுக்கு ஒரு மாடி வீடும், ஒரு கூரை வீடும் உள்ளதால், கூரை வீட்டில் அவரது மகனும் மருமகளும் வசித்து வருகின்றனர். மாடி வீட்டில் மருதமுத்து அவரது மனைவி சித்ராவுடன் வசித்து வருகிறார்.

மருதமுத்துவுக்கு ம.து அ.ருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அ.டிக்கடி த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே த.கராறு ஏ.ற்பட்டுள்ளது. இதனால் மனைவி சித்ரா, கோபித்துக்கொண்டு சென்று, உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளார்.

நேற்று காலை 7 மணி அளவில் இவர்களது மகள் பூவரசி தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மருதமுத்து சு.த்.தி.ய.லா.ல் தா.க்.கி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு கி.டப்பதைக் க.ண்டு அ.திர்ச்சியடைந்து, உடனே, இது குறித்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பின் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து பொலிசார், மருதமுத்துவின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வி.சாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மருதமுத்துவின் மனைவி சித்ரா, நான் தான் க.ணவரை சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து கொ.லை செ.ய்.தே.ன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு விருப்பமில்லை… கண்டுகொள்ளாத பெற்றோர் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

பரிமளா..

வேலூர் சத்துவாச்சாரியில் திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இ.ள.ம்.பெண். தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் சண்முகம்.

இவருடைய மகள் பரிமளா (24) தனியார் நிறுவனததில் வேலை செ.ய்.து வ.ந்துள்ளார். தந்தை சில வருடங்களுக்கு முன்பு இ.றந்துவிடவே அவரது தாய் கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இ.ள.ம்பெ.ண் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் திருமணம் என்று முடிவு செ.ய்.து.ள்ளனர்.

இதற்கிடையே பரிமளாவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்தினரிடமும் அவர் தெரிவித்த நிலையில், அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்கும்படி கோரியுள்ளனர்.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு தொடங்கிய போது பரிமளா ஏற்பாடுகள் எதுவும் செ.ய்.ய வேண்டாம் என்று கூறியுள்ளார். அவரின் பேச்சை, குடும்பத்தினர் பொருட்படுத்தாததால், வி.ர.க்.தி..யடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் து.ப்.ப.ட்.டா.வால் தூ.க்.கு.ப்போட்டு கொண்டுள்ளார்.

பின்பு பரிமளாவை மீ ட் டு த னி யார் ம.ரு.த்.து.வமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு, மேல் சி.கி.ச்.சைக்கு அ.ர.சு ம.ரு.த்து.வமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அப்போது அவரைப் ப.ரி.சோதித்த ம.ரு.த்.துவர் அவர் ஏற்கெனவே இ.ற.ந்.து.விட்.டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக பொ.லி.சார் வ.ழ.க்கு ப.தி.வு. செ.ய்.து வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டு வருகின்றனர்.

காதலனிடம் தன் காதல் உண்மை என நிரூபிக்க சிறுமி செய்த விபரீத செயல்!!

ரியா..

இந்தியாவில் இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க வி.ஷ.ம் கு.டித்த சி.றுமி உ.யிரிழந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா.

பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இந்த நிலையில் அந்த இளைஞர் ரியாவிடம், நீ உண்மையிலேயே என்னை காதலிக்கிறாயா? உன்னுடைய உண்மை காதலை நிரூபிக்க வி.ஷ.ம் கு.டிப்பாயா என கேட்டுள்ளார்.  இதையடுத்து பக்குவம் அடையாத சி.றுமியான ரியா காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் வி.ஷம் கு.டித்திருக்கிறார்.

பின்னர் உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை ப.லனின்றி உ.யிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பதவி விலகினார்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசம் உள்ள வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் பதவி விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு ஆட்சி செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

அதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தனது பதவியை ராஜினமா செய்துள்ளதுடன், அது தொடர்பாக அவர் கையெழுத்திட்ட கடிதம் இன்றையதினம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திடம் கையளிக்கப்பட்டு பிரதேசசபையின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதசே சபையின் தவிசாளர் பதவியிலும் மாற்றம் ஏற்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் 19 வயது பெண் உயிரிழப்பு!!

கொரோனா…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹெம்மாத்தகமை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த இந்த யுவதியின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று கிடைத்துள்ளன.

கோவிட் நிமோனியா, ஆஸ்துமா, இரத்த அழுத்தம் என்பன இந்த மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் 507 பேர் உயிரிழந்துள்ளனர்.

86 ஆயிரத்து 39 பேர் கோவிட் தொற்று உள்ளாகியுள்ளதுடன் இவர்களில் 82 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 19 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் ச.டலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் ச.டலம் கரை ஒதுங்கியுள்ளது.

குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள ச.டலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் ச.டலத்துடன் க.ண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் ம.ரணம் தொடர்பிலான வி.சாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ச.டலத்தைக் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் ம.ரண வி.சாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில் வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கோர விபத்தில் தம்பியின் கண் முன் உயிரிழந்த அண்ணன்!!

விபத்தில்..

புத்தல பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. புத்தல பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உட்பட மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். புத்தல பொலிஸ் பிரதேசத்தை சேர்ந்த பெல்வத்தை சீனி நிறுவனத்திற்கு அருகாமையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது தம்பியின் கண் முன்னே அண்ணன் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. காயமடைந்த தம்பியினால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. காயமடைந்த பாடசாலை மாணவன், உயிரிழந்தவரின் கடைசி சகோதரன் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்றையதினம் வெளிவந்திருந்தது.

அதனடிப்படையில் அங்கு பணியாற்றும் வவுனியா சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.

வவுனியாவில் வன்செயலால் ஏற்பட்ட பா.திப்புக்கான இ.ழப்பீடு கோரி 1333 பேர் விண்ணப்பம்!!

வன்செயலால்..

வ.ன்செயலால் ஏற்பட்ட பா.திப்புக்கான இழப்பீடுகள் கோரி வவுனியாவில் 1333 பேர் விண்ணப்பித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு முதல் நாட்டில் இடம்பெற்ற வ.ன்செயல் மற்றும் யு.த்.த.த்.தா.ல் உ.யிரிழப்பு மற்றும் உ.டல் அ.வயங்களை இ.ழந்தோர், சொத்துக்களை இ.ழந்தோர்,வழிபாட்டிடங்களின் அ.ழிவு என்பனவற்றுக்கான இழப்பீடுகள் தொடர்பான விபரங்கள் கோரப்பட்டு, இழப்பீட்டு திணைக்களம் ஊடாக இ.ழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் சொத்து மற்றும் உடமைகள் அ.ழிவுக்காக 1032 பேரும், உ.யிரிழப்பு மற்றும் அவயங்களை இ.ழந்தமை தொடர்பில் 119 பேரும், வழிபாட்டு தளங்களின் அ.ழிவுக்கான இழப்பீடு கோரி 182 பேரும் என 1333 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் சொத்து மற்றும் உடமை அ.ழிவு தொடர்பில் 137 பேருக்கும், உ.யிரிழப்பு மற்றும் அவயங்களை இ.ழந்தமை தொடர்பில் 82 பேருக்கும், வழிபாட்டிடங்களின் அ.ழிவுக்காக 83 பேருக்கும் என 302 பேருக்கு இ.ழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி : மின் தடையால் நடந்த விபரீதம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால் அவரை அவசரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனதால் அதிக குருதிப்போக்கால் உ.யிரிழந்துள்ளார் என்று வி.சாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்றது. சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிக்கும் சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் தூ.க்கில் தொ.ங்கிய நிலையில் கு.டும்பஸ்தரொருவர் ச.டலமாக மீ.ட்பு!!

இத்திகுளம் பகுதியில்..

வவுனியா – சமளங்குளம், இத்திகுளம் பகுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் கு.டும்பஸ்தரொருவர் நேற்று (08.03) ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அஜந்தகுமார் வயது 40 என்ற நபரே இவ்வாறு ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தே.டி.யு.ள்.ள.ன.ர்.

இந்நிலையில் இத்திகுளம் குளக்கட்டு பகுதியில் அவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர். இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ச.ட.ல.த்.தி.னை மீ.ட்.டு வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழப்பு!!

பஜிர் நாதிர்..

இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவில் காதியார் வீதியை அண்டி வசிக்கும் பஜிர் நாதிர் எனும் மாணவனே இவ்வாறு நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

மிக திறமைசாலியான மாணவன் என பாடசாலை நிருவாகத்தால் கணிக்கப்பட்ட இவர் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முதல் நாள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்!!

நாயாற்று பாலத்திற்குள்..

வெலிஓயாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் நேற்று (08.03.2021) விபத்திற்குள்ளாகியுள்ளது.

வெலிஓயாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் வேகக்கட்டுப்பட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளை ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். வாகன சாரதியான தந்தை எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாெதுமக்கள், இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த விபத்து அதிவேகம் காரணமாக நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்திருக்கலாம் என கூறியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.