வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்கள வாயிலில் நீதி கோரி காத்திருந்த ஆசிரியர்!!

கல்யாணி திருநாவுக்கரசு..

வவுனியா தெற்கு வலய கல்வித் திணைக்களத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியராகிய கல்யாணி திருநாவுக்கரசு என்பவர் கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தின் வாயில் முன்பாக இன்று காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையிலான காலப்பகுதி வரை கவனயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

வவுனியா சூடுவெந்தபுலவு அல் இக்பால் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியினை சேர்ந்த பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்திற்குட்பட்ட காலப்பகுதியில் பணியாற்றிய சம்பள பதிவேட்டின் பிரதி மற்றும் நியமன பதவி உறுதிப்படுத்தல் கடிதம் போன்ற பல கோரிக்கைகளை வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திடம் கோரிய போதிலும்,

அவர்கள் வழங்க மறுத்துள்ளதாகவும் தெரிவித்து அவரது கோரிக்கைக்கு உரிய தீர்வினை கோரி கல்வித் திணைக்களத்தின் வாயிலின் முன்பாக அமர்ந்திருந்து கவயீர்ப்பு போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.

போ.ராட்டத்தில் ஈடுபட்ட குறித்த ஆசிரியர் 2014 ,2015 ஆம் ஆண்டு சம்பள விபரம் வழங்குக, எனது சம்பள நிலுவை வழங்கப்பட்ட 2,37,000 ரூபாவிற்குரிய ஆவணங்களின் பிரதியிளை உடனடியாக வழங்குக, நான் உடனடியாக பாடசாலை செல்ல வேண்டும் தாமதம் வேண்டாம் போன்ற வாசகங்களை தாங்கிய பாதாதையினை ஏந்தியவாறு போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

கிளிநொச்சி நகரில் அதிகாலையில் இடம்பெற்ற பாரிய விபத்து!!

விபத்து..

கிளிநொச்சி நகரில் இன்று (19.02.2021) இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியின் பின்பகுதியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. நெல் ஏற்றி சென்ற பார ஊர்தியின் சாரதி துயில்வதற்காக வீதியின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

யாழிலிருந்து தெற்கு நோக்கி பயணித்த மற்றுமொரு பார ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதியுள்ளது. குறித்த விபத்தில் மோதிய பார ஊர்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,

சாரதி சிறிய காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

காதலுக்கு எதுவுமே தடையில்லை : காதலர் தினத்தில் நடந்த அசத்தலான திருமணம்!!

காதலர் தினத்தில்..

காதலுக்கு வயது, மதம், மொழி என எதுவும் த.டை என்பதை காதலர் தினத்தன்று நிரூபித்து காட்டியுள்ளது ஒரு அசத்தல் ஜோடி. அவர்கள் யார், ‘எப்படி சந்தித்து காதல் வயப்பட்டார்கள்?’ என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

திருச்சியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர், கேரள மாநிலம் பம்பை பகுதியில் சபரிமலை சீஸனின் போது அங்கு ஹோட்டல்களில் சமையல்காரராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சபரிமலை சீசனில்லாத சமயத்தில், சொந்த ஊருக்கு செல்லாமல் கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் சமையல்காரராக பணிபுரிந்து, அதில் வரும் பணத்தை அவரது சகோதரியின் திருமண மற்றும் இதர செலவுகளுக்கும் அனுப்பி வந்துள்ளார் ராஜன்.

இதனால், தனது வாழ்க்கை பற்றியும், திருமணத்தை குறித்தும் ராஜன் எண்ணவேயில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, வேலையில்லாமல் தவித்த ராஜனை போலீசார் மீ.ட்டு பத்தனம்திட்டா பகுதியிலுள்ள மகாத்மா ஜனசேவன கேந்திரம் என்னும் மை.யத்தில் சேர்த்துள்ளனர்.

அந்த மையத்தில் முதியவர்களை பராமரித்து, அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் மேற்கொண்டு வருகிறார். அதே மையத்தில், பெற்றோர்கள் இ.றந்துபோனதால், சரஸ்வதி என்ற 64 வயது பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வந்துள்ளார்.

சரஸ்வதிக்கு பேச்சு கு.றைபாடு உள்ளது. இதனைத் தொடர்ந்து, ராஜனுக்கும், சரஸ்வதிக்கும் காதல் தோன்றியுள்ளது. இருவரும் தங்களது காதலை அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்த நிலையில், அவர்களின் காதலுக்கு எந்த எ.திர்ப்பும் தெரிவிக்காமல், திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

காதலர் தினமான 14ம் திகதி இவர்களின் திருமணம், அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் நிகழ்ந்தது. தாங்கள் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பப்பட்ட போது, எந்த எ.திர்ப்பும் வரவில்லை என்றும், எந்தவித கே.லி கி.ண்டலுக்கும் ஆளாகவில்லை என்றும் ராஜன் – சரஸ்வதி தம்பதியினர் கூறியுள்ளனர்.

காதலுக்கு வயதில்லை என்பதையும், இந்த உலகெங்கும் காதல் நிறைந்தே இருக்கிறது என்பதையும் இந்த வயதான தம்பதியர்கள் நிரூபித்துள்ளனர்.

ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண் : அணியும் கவர்ச்சி ஆடையால் ஏற்பட்ட பரிதாபம்!!

கனடாவில்..

கனடாவில், ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர், அவர் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளார்.

லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்தவர் இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான சப்ரினா சக்கு (29). கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சி மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கிறார் சப்ரினா.

ஆனால், அவர் எப்போதும் கவர்ச்சி உடைகளையே அணிவதால், அவரை சம்பாதிக்கும் பெண்ணாக யாரும் ஒப்புக்கொள்வதில்லை என்றும், யாரோ ஒரு பணக்கார ஆணை சார்ந்திருக்கும் பெண் என்றே தன்னை மக்கள் கருதுவதாகவும் வருந்துகிறார் அவர்.

தனது ஆடம்பர வாழ்வுக்காக ஒரு ஆணை சார்ந்து வாழ தனக்கு எப்போதுமே ஆசை இல்லை என்று கூறுகிறார் சப்ரினா.

ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன் ஆறு இலக்க ஊதியம் பார்த்த பின்னரே செட்டில் ஆகவேண்டும் என்றும், எப்போதுமே தான் நம்புவதாக தெரிவிக்கிறார் சப்ரினா.

ஒரே நாளில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த 25 வயது இளம் பெண் : அவர் சொன்ன ஆச்சரிய காரணம்!!

இந்தோனேஷியாவில்..

இந்தோனேஷியாவில் இளம் பெண் ஒருவர் கருவுற்ற இரண்டு நாட்களில் குழந்தை பெற்ற நிலையில், நான் கர்ப்பம் ஆனதற்கு காற்று தான் காரணம் என்ற விசித்திர காரணத்தை கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவின் சியாஜூர் என்னும் நகரில் கடந்த வாரம் சிட்டி ஜைனா என்ற 25 வயது மதிக்கத்தக்க பெண், தான் கர்ப்பமானதை உணர்ந்த சில மணி நேரத்திலே குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து அவர் உள்ளூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அன்று தனது வீடு முழுவதும் காற்று பயங்கரமாக வீசியதாகவும், அதன் பின் அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு அவரது வயிற்றில் வலியை உணர்ந்தாக கூறிய அவர், அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வயிறானது பெரிதாக வளர்வதை கண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு குழந்தை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிற்பகல் வேளையின் தொழுகைக்கு பிறகு நான் படுத்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது பிறப்பு உறுப்பிற்குள் காற்று புகுவதை நான் உணர்ந்தேன், அதுவே என் கர்ப்பத்திற்கு காரணம் என்பது போல் கூறியுள்ளார். இவரின் இந்த விளக்கம் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.

திருமண நேரத்தில் ஓட்டம் பிடித்த மணப்பெண் : அவரின் 15 வயது சகோதரிக்கு தாலி கட்டிய மணமகன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருமண நேரத்தில் மணப்பெண் காதலனுடன் ஓ.ட்டம் பிடித்ததால் அவரின் 15 வயது தங்கையை மணமகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தின் கலாஹாண்டி மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளைஞன் ஒருவருக்கும், இளம்பெண்ணுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடக்கவிருந்தது.

திருமண சடங்கு தொடங்கவிருந்த சில மணி நேரத்துக்கு முன்னர் ஆண் ஒருவருடன் மணப்பெண் ஓ.ட்டம் பிடித்துள்ளார். இதனால் மணமகன் உள்ளிட்ட அனைவரும் அ.திர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து ஓடிபோன மணப்பெண்ணின் குடும்பத்தார் ஒரு அ.திரடியான முடிவை எடுத்தனர். அதன்படி மணப்பெண்ணின் 15 வயது சகோதரியை மணமகனுக்கு அதே முகூர்த்தத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

மைனர் பெண்ணை திருமணம் செய்து வைத்தது குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து வி.சாரணை நடத்தினார்கள். பின்னர் பொலிசார் கூறுகையில்,

சிறுமி தனது பெற்றோர் வீட்டிலோ அல்லது விடுதியிலோ தங்கலாம். அவருக்கு 18 வயது ஆன பின்னரே கணவர் மற்றும் குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கப்படுவாள் என கூறியுள்ளனர்.

குழந்தை பெற்று வீட்டுக்கு திரும்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் தனது இரண்டாவது குழந்தையை பிரசவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெண் ஒருவருக்கு, வாழ்நாளுக்கும் மறக்காத ஒரு அ.திர்ச்சி காத்திருந்தது.

Gloucestershireஐச் சேர்ந்த Jess Aldridge (24), தனது இரண்டாவது பிரசவத்திற்குப் பின் குழந்தையுடன் வீடு திரும்ப, வீட்டில் தன் கணவரான Ryan Shelton (29)ஐக் கா.ணாமல் தே.டியிருக்கிறார்.

பிறகுதான் அவருக்கு தெரியவந்துள்ளது, தன் கணவரும் தன் தாயும் வேறொரு வீட்டில் தம்பதியராக வாழ்க்கையைத் தொடங்கியுள்ள விடயம்.

ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் மட்டுமின்றி, மாமியாரான Georgina (44)ம் வாழ்ந்துவந்த நிலையில், மகள் பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் தாய்க்கு மருமகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

மனம் நொந்துபோன Jess, ஒரு பாட்டிக்கு புதிதாக பிறந்த குழந்தை மீது காதல் ஏற்படும், இங்கே என்னவென்றால் குழந்தையின் தந்தையுடன் காதல் வந்திருக்கிறது, இது பச்சைத் துரோகம் என்கிறார்.

காதலித்ததற்காக பெற்ற மகளை க.ழுத்தை அ.றுத்து கொ.ன்ற தந்தை : பிரித்தானியாவின் முதல் கௌரவக் கொ.லை!!

பிரித்தானியா..

பிரித்தானியாவின் முதல் கௌரவக் கொ.லை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கொ.லை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சக மாணவரும் பிபிசி தொலைக்காட்சிக்காக ஆவணப்படங்கள் எடுப்பவருமான Athar Ahmad என்பவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

குர்திஷ் இஸ்லாமியரான Abdalla Yones என்பவர், சதாம் உசேனின் கொ.டூ.ர இ.ராணுவ ஆட்சிக்கு ப.யந்து ஈராக்கிலிருந்து பிரித்தானியாவுக்கு அரசியல் அகதியாக வந்தவர். அவரது மகள் Heshu (16).

பள்ளிக்கு வரும் Heshu, நேர்த்தியாக சீருடை அணிந்து, அமைதியாக முன்னுதாரணமான மாணவியாகத்தான் முதலில் இருந்துள்ளார். ஆனால், காலப்போக்கில் மேலை நாட்டு கலாச்சாரத்தால் கவரப்பட்டு, வசீகரிக்கும் மேக் அப் அணிந்து தன்னை வெளிக்காட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாள்.

பள்ளியில் அவளைத் தெரியாத ஆண்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான Heshuவுக்கு, 18 வயதான லெபனான் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞன் ஒருவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய பெண்ணாக காட்டிக்கொண்ட Heshu, வெளியே மேற்கத்திய பெண்ணாக நவநாகரீகமாக உலாவந்துள்ளார்.

தான் மீண்டும் குர்திஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதையும், அங்கு தனக்கான கணவன் காத்திருப்பதையும் அறிந்து கடும் அ.திர்ச்சியடைந்திருக்கிறாள் Heshu.

இந்நிலையில், கிறிஸ்தவ இளைஞன் ஒருவனுடன் அவளுக்கு காதல் ஏற்பட, குடும்ப விதிகளை மீறிய Heshu குடும்ப கௌரவத்தை களங்கப்படுத்தியதற்காக 2002ஆம் ஆண்டு கொ.லை செய்யப்பட்டார்.

அவளை கொ.லை செ.ய்.த.து, அவளுடைய தந்தை! 17 முறை Heshuவைக் க.த்.தி.யா.ல் அவர் கு.த்.தி.யு.ம், அவரிடமிருந்து த.ப்.பி.ய Heshu குளியலறைக்குள் சென்று ப.துங்கிக் கொள்ள, குளியலறைக் கதவை உ.டைத்து உள்ளே நுழைந்த அவளது தந்தை, அவளை க.ழு.த்.தை அ.று.த்.து.க் கொ.ன்.றி.ருக்கிறார்.

2002ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, Heshuவைக் கொ.ன்.று.வி.ட்.டு, தனது க.ழுத்தையும் அ.றுத்துக்கொண்டு, லண்டனிலுள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கு.தித்து த.ற்.கொ.லை செ.ய்.ய மு.யன்றுள்ளார் Heshuவின் தந்தையான Yones.

ஆனால், அவர் உ.யி.ர் த.ப்பிவிட, பொலிசாரிடம் தன் வீட்டுக்கு அல் குவைதா தீ.விரவாதிகள் வந்து தன் மகளைக் கொ.லை செ.ய்துவிட்டு, தன்னையும் தா.க்.கி வீட்டின் மாடியிலிருந்து தள்ளிவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார் Yones.

ஆனால், வி.சாரணையில் உண்மை வெளியே வந்துவிட்டது. 2003ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் Yones. பிரித்தானியாவில் கௌரவக் கொ.லை.க்.கா.க முதன்முதலில் சிறை சென்றவர் Yonesதான்!

டாக்ஸி சாரதிக்கு பயணியின் வடிவில் வந்த துயரம் : பதைபதைக்க வைக்கும் சம்பவம்!!

லண்டனில்..

ருமேனிய மினிகாப் சாரதி தனது பயணிகளில் ஒருவரால் வடக்கு லண்டனில் கு.த்.தி கொ.லை செய்யப்பட்டதை அடுத்து பொலிசார் கொ.லை வ.ழக்கு வி.சாரணையைத் தொடங்கியுள்ளனர்.

டோட்டன்ஹாமில் உள்ள ஒரு பாடசாலைக்கு வெளியே நேற்று இரவு அவரது வாகனத்திலேயே ர.த்.த வெ.ள்ளத்தில் உ.டல் கண்டெடுக்கப்பட்டது.

ருமேனியரான 37 வயது கேப்ரியல் பிரிங்கி கடந்த 13 ஆண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார். மினிகாப் சாரதியான பிரிங்கி, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து பொலிசார், த.ப்பி ஓ.டிய ஒரு பயணியால் பிரிங்கி கொ.லை செ.ய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.

பேருந்து சாரதி ஒருவரே சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது உ.யிர் பிரிந்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2015-ல் இருந்தே பிரிங்கி மினிகாப் சாரதியாக பணியாற்றி வருகிறார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் இச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கொ.ள்.ளை நடந்ததாக எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், இது திட்டமிட்ட கொ.லை.யா.க இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லண்டனில் இந்த ஆண்டில் இதுவரை மினிகாப் சாரதி பிரிங்கியுடன் சேர்த்து 15 பேர் கொ.ல்.ல.ப்.ப.ட்.டு.ள்.ள.தா.க பொலிஸ் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

100 க்கும் மேற்பட்ட ஆ.ணு.றை.க.ளை பெ.ண் நீ.தி.ப.தி.க்.கு அ.னுப்பி வை.த்த பெ.ண்!!

பெண் நீதிபதிக்கு..

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருபவர் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா(51).

இவர் கடந்த .ஜனவரி மாதம் 19-ஆம் திகதி அன்று போ.க்சோ ச.ட்டத்தின் கீழ் பதியப்பட்ட வ.ழக்கு ஒ.ன்றை வி.சாரித்தார். அப்போது, தோ.லோடு தோ.ல் தொடர்பின்றி சி.று.மி.யை சி.ல்.மி.ஷ.ம் செ.ய்.வ.து போ.க்சோ ச.ட்டப்படி கு.ற்.ற.மி.ல்.லை எ.ன தீ.ர்ப்பளித்தார்.

5 வ.ய.து சி.று.மி பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வா.ல் பா.தி.க்.க.ப்.ப.ட்.ட ம.ற்றொரு வ.ழக்கை வி.சாரித்தவர், சி.று.மி.யி.ன் கை.யை பி.டித்திருப்பதோ, பே.ண்ட் ஜி.ப் தி.றந்திருப்பதோ பா.லி.ய.ல் வ.ன்.மு.றை ஆ.காது என கூறி கு.ற்றஞ்சாட்டப்பட்டவரை வி.டுவித்தார்.

இவரின் இந்த ச.ர்ச்சை தீ.ர்ப்புகளுக்கு க.டு.ம் க.ண்.ட.ன.ம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், ச.ர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது க.ண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக பெண்ணுக்கு தூ.க்குத் தண்டனை : அவர் செய்த கு.ற்றம் என்ன?

முதல் முறையாக..

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவரை தூ.க்கிலிடுவதற்கானப் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவில் இதுவரை பலருக்குத் தூ.க்கு த.ண்டனை விதிக்கப்பட்டு, அவை நிறைவேற்றவும் பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இதுவரை எந்த பெண்ணுக்கும் தூ.க்குத் த.ண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. தற்போது முதல் முறையாக இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தப் பெண் ஒருவருக்கு தூ.க்குத் த.ண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாவன்கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம் அலி. பாடசாலை ஆசிரியையாக இருந்த இவர், சலீம் என்ற கூலித் தொழிலாளியைக் காதலித்து வந்துள்ளார். அதன்மூலம் கர்ப்படைந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் வீட்டார் சம்மதிக்கவில்லை.

இதனால் ஏழு வார கர்ப்பிணியான சப்னம் அலி, தனது குடும்பத்தினருக்குப் பாலில் ம.யக்க ம.ருந்தைக் கலந்துகொடுத்து அவர்களின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேரை இவ்வாறு கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் சப்னம் அலி. கடந்த 2008 ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவத்தை விசாரித்த உத்தரப்பிரதேச மாநில நீதிமன்றம், சப்னம் அலி மற்றும் சலீமிற்கு ம.ரண த.ண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து, சப்னம் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும், பிறகு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். அங்கும் ம.ரண த.ண்டனை உறுதிசெய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார்.

அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் சப்னம் அலி அடைக்கப்பட்டுள்ள மதுரா சிறை நிர்வாகம், அம்ரோஹா மாவட்ட நிர்வாகத்திடம் அவரது ம.ரண த.ண்டனைக்கான உத்தரவைப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் அவரை தூ.க்கிலிடுவதற்கான பணிகளையும் செய்து வருகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்தப் பெண்ணுக்கும் ம.ரண த.ண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை.

இதற்கு முன் பெண்களுக்கு ம.ரண த.ண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அவை ஆயுள் த.ண்டனையாக மாற்றப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடதக்கது.

சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளை குறிவைக்கும் கமல்!!

கமல்..

எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா எதிர்வரும் 21ம் திகதி ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.

அன்று, கூட்டணி கட்சிகள் குறித்து உறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. மட்டுமின்றி, அன்றை தினம், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களும் பெறப்படுகின்றன. ‘ஒன்லைனிலும்’ மனுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கமல் கட்சிக்கு ஓட்டு வங்கி அதிகமாக இருந்தது. இதனால் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகரிலோ அல்லது மைலாப்பூரிலோ அல்லது இரண்டிலுமோ போட்டியிட கமல் விருப்பப்படுகிறார் என அவரது கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் விண்கலம் : முக்கிய பங்கு வகித்த இந்திய பெண் விஞ்ஞானி!!

நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான சுவேதா மோகனுக்கு கிடைத்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “பெர்சவரன்ஸ்” என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் இன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

பெர்சவரன்ஸ் விண்கலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தை சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்து வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த திட்டத்தில் பங்கேற்று வழிநடத்திய இந்தியா வம்சாவளி பெண் விஞ்ஞானியான சுவேதா மோகன் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முதலில் இருந்தே சுவேதா மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.

ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவேதா மோகன் சிறு வயதிலேயே அமெரிக்கா சென்றுள்ளார்.

விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை தமிழ் வம்சாவளி இளம்பெண் ஒருவருக்கு டைம் பத்திரிகை அளித்துள்ள கௌரவம்!!

மைத்ரேயி இராமகிருஷ்ணன்..

2021ஆம் ஆண்டின், டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய மனக்காயங்களால், தன்னை தமிழ் கனேடியர் என அழைக்க விரும்பும் ஒன்ராறியோவைச் சேர்ந்த மைத்ரேயி இராமகிருஷ்ணன்தான் அந்த கௌரவத்தைப் பெற்றுள்ளவர்.

Never Have I Ever என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார் மைத்ரேயி. நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த தொடரில் நடிக்கும் மைத்ரேயி, ஒரு முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக நடிக்கிறார். 15,000 பேர் பங்கேற்ற ஒரு நேர்காணலில், 19 வயதான மைத்ரேயி அந்த கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரும் தொடரின் இணை தயாரிப்பாளருமான Mindy Kaling கூறும்போது, மைத்ரேயியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு ஜாலியான குட்டிப்பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கும்.

ஆனால், அவரை திரையில் பார்க்கும்போது, தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கும் ஒரு பெரிய கலைஞரை பார்க்கும் ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியாது என்கிறார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு : காரணம் என்ன?

கொரோனா..

பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்தார். அவர் மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் மரணம் தொடர்பில் சுகாதார பரிசோதர்களின் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. சுகாதார சேவையின் பலவீனமே மரணத்திற்கு காரணம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

“சிகிச்சை நிலையத்தில் 7 நாட்கள் இருந்த பெண் கடந்த 15ஆம் திகதி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த பெண் 16ஆம் திகதி மாலை மீண்டும் சுகயீனமடைந்துள்ளார்.

1990 என்ற அம்பியுலன்ஸ் ஊடாக பதுளை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் நோயாளி ஆபத்தான நிலைமையில் இருந்தமையினால் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்காமல் ஒரு மணித்தியாலம் நோயாளியை வைத்திருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சுகாதார பிரிவின் குறைப்பாடுகள் காரணமாகவே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த தொற்றாளர் 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு செல்லும் போது நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என்பது சிக்கலுக்குரிய விடயமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

மகனுக்கு வலிப்பு நோய் : தம்பதி எடுத்த விபரீத முடிவால், கதறும் உறவுகள்!!

தமிழகம்..

பிள்ளைகளுக்கு வி.ஷ.ம் கொ.டு.த்.து பெ.ற்றோர் த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சுண்டபட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.

இவர் அதே பகுதியில் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி.

இவர்களுக்கு அனுஷ்கா என்ற 10 வயது மகளும், விகாஷ் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், கண்ணனின் மகன் விகாஷ் கடந்த சில நாட்களாக வ.லி.ப்.பு நோ.யால் பா.திக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தாய் சரஸ்வதி வேலைக்குச் செல்லாமல் முழுநேரமும் தன் மகனை கவனித்துக்கொள்ள, மகனுக்கு வ.லி.ப்.பு வ.ரும்போதெல்லாம் பணியைத் துறந்துவிட்டு கண்ணனும் மகனை கவனித்து வந்துள்ளார்.

சில நேரங்களில் மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்ட வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், கண்ணனின் வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் தவித்த நிலையில், தம்பதிகள் கு.டும்பத்தோடு த.ற்.கொ.லை செ.ய்ய மு.டிவெடுத்துள்ளது. இதனையடுத்து, நேற்று கு.ழந்தைகளுக்கு வி.ஷம் கொ.டுத்த தம்பதிகள், தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளனர்.

காலையில் வெகு நேரம் ஆகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது விபரீதம் புரிந்துள்ளது.

இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், மேற்கூறிய சோக தகவல் தெரியவந்துள்ளது.