வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை!!

வெதுப்பக உற்பத்திகள்..

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெதுப்பக உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு ஆரம்பத்துடன் சகல வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என ஏற்கனவே அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அத்துடன், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வெண்ணைக்கு அறவிடப்பட்டு வந்த 200 ரூபாய் வரி 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

இதற்காக வழங்கப்பட்ட நிவாரண காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறமையால் வெதுப்பக உணவுகளின் விலை அதிகரிப்பை புதிய ஆண்டில் எதிர்பார்க்க முடியும் என கடந்த மாதம் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்பரப்பில் உயிரிழந்த இலங்கைத் தமிழன் : நிர்க்கதியாகியுள்ள மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை!!

சாம்சன் டார்வின்..

இலங்கையின் கடற்பரப்பில் உயிரிழந்த நான்கு மீனவர்களில் ஒருவரான சாம்சன் டார்வினின் மனைவி தனது கணவரை இழந்து கைக்குழந்தையுடன் நிர்க்கதியாகியுள்ளார்.

இலங்கைத் தமிழரான சாம்சன் டார்வின் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்கியிருந்துள்ளார்.

இதன்போது அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் சாம்சன் டார்வினுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

டார்வின் – விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்துள்ள நிலையில், தமது குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்ச கூட முடியாத நிலையில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கதறியழுகிறார் விஜயலட்சுமி.

இதேவேளை நிர்க்கதியாகியுள்ள சாம்சன் டார்வினின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள பகுதியில், கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின்,

உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் படகு இலங்கை கடற்படை கப்பலுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து படகு மூழ்கிய நிலையில் அதிலிருந்த நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மீனவர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சடலங்கள் இந்தியக் கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று : பல மாணவர்கள் பாதிப்பு!!

கொரோனா தொற்று..

காலி மாவட்டத்தில் 26 பாடசாலைகளில் கல்வி கற்கும் 43 மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது பாடசாலை தவணை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்த மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனை காலி மாவட்ட பிரதேச தொற்று நோய் வைத்தியர் உறுதி செய்துள்ளார். ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான கடந்த 14 நாட்களில் 43 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

போபே, பொத்தல சுகாதார வைத்திய பிரிவிலேயே அதிகமான மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்த பகுதியில் 5 பாடசாலைகளை சேர்ந்த 17 மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் கிங்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் 12 மாணவர்கள் கொரோனா தொற்றுள்ளாகியுள்ளனர். ஏனைய பாடசாலைகளில் ஓரிரு மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் குறித்து எச்சரிக்கை!!

புதிய வகை வைரஸ்..

இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த புதிய வகை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்க சுகாதார பிரிவினர் மிகவும் தாமதித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

புதிய வகை வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழு சில நாட்களுக்கு முன்னர் சுகாதார பிரிவுக்கு அறிவித்திருந்தது.

இருந்த போதிலும் இது தொடர்பில் சுகாதார பிரிவினர் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. பின்னர் ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பரிசோதனை குழுவினால் நேற்று இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட வைரஸ் வேகமாக பரவக்கூடியதாக கண்டறிப்பட்டுள்ளது என எச்சரித்துள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை!!

கொரோனா பரிசோதனை..

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பெப்ரவரி மாதம் 1ம் திகதி வரை இவ்வாறு பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

ரெபிட் அன்டிஜன் பரிசோதனை இவ்வாறு நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாணத்தின் பதினொரு வெளியேறும் பிரதான வழிகளில் இந்த பரிசோதனை நடாத்தப்பட உள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்திலிருந்து கொவிட் தொற்றாளிகள் வெளியேறுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குழந்தையை தூக்கி கூட கொஞ்சவில்லை : குழந்தை பிறந்த 20 நாட்களில் உயிரிழந்த தமிழர் : கதறும் மனைவி!!

சாம்சன் டார்வின்..

இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழரான மீனவர் ஒருவர் சமீபத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய தா.க்.கு.த.லி.ல் உ.யிரிழந்த நிலையில் அவரின் மனைவி மற்றும் 20 நாட்களுக்கு முன்னர் பிறந்த கு.ழந்தையின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் இருந்து சென்ற இவர்கள், அன்று இரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் வலைகளை பாய்ச்சியபடி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மா.யமான மீனவர்கள் நான்கு பேர் உ.யிரிழந்ததாக தகவல் கிடைத்தது. இலங்கை கடற்படையினர் தா.க்.கு.த.லா.ல் அவர்கள் உ.யிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

உ.யிரிழந்த நால்வரில் ஒருவரான சாம்சன் டார்வின், இலங்கைத் தமிழர். 2009ஆம் ஆண்டு அவர் தமிழகம் வந்துள்ளார். அங்கு வந்து இலங்கை தமிழர்கள் முகாமில் வந்து தங்கிய அவருக்கும், அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
டார்வின் – விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்சக் கூட முடியாத நிலையில் டார்வின் உ.யிரிழந்துள்ளார். அவரின் ம.ரணத்தால் வேதனையில் க.த.றி.து.டி.க்.கு.ம் விஜயலட்சுமியின் புகைப்படம் வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

வவுனியாவில் ஒருவர் உட்பட வடக்கில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 362 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவைச் சேரந்த ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 319 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மன்னாரைச் சேர்ந்த 15 பேருக்கும், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

வவுனியாவில் இரு கண்களும் பார்வையிழந்தவரின் வீட்டை எரித்த இனம் தெரியாத நபர்கள்!!

இராசேந்திரங்குளம் பகுதியில்..

வவுனியா – இராசேந்திரங்குளம் பகுதியில் இனம் தெரியாத நபர்களால் வீடு ஒன்று எ.ரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த நபர் நேற்றையதினம் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரது வீடு தீ.ப்.ப.ற்.றி எ.ரிவதை அவதானித்ததுடன், கூ.க்.கு.ர.லி.ட்.டு அயலவர்களிற்கு தெரியப்படுத்தினார்.

விரைந்துவந்த அயலவர்கள் வீட்டின் தீயை அணைத்திருந்தனர். சில வி.சமிகளால் தனது வீடு எ.ரிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர் இரு கண்களும் பார்வையிழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மேலதிக வி.சாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கணவனின் கனவில் தோன்றிய எண்களில் லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட் : 20 வருடமாக காத்திருந்த அதிர்ஷ்டம்!!

கனடாவில்..

கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர் 1980-இல் தனது 14 உடன்பிறப்புகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தை ஆதரிக்க கடுமையாக உழைத்து வந்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. அதை அவ்வப்போது அவர் தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார்.

இதனால், ஒரு நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக அந்த பெண் அதே எண்ணில் தொடர்ந்து லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். அவரது நம்பிக்கையும், அவரது கணவன் கண்ட கனவும் பலித்துவிட்டது.

கொரோனா லாக்டவுன் காலத்தில் கடந்த ஆண்டு தன்னை வேலையை இழந்து துன்பத்தில் இருந்த அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம், Ontario Lottery and Gaming லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக விழுந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு சில வைரங்களை வாங்குவதோடு, Pravatoudom அவரது கணவரும் முதலில் தங்கள் கடன்களை செலுத்தி தங்கள் குழந்தைகளுக்கு உதவுவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் தனது, அம்மாவும் அப்பாவும் 40 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து பல தியாகங்களைச் செய்துள்ளதாள் அவர்களும் இந்த மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள் என்று Pravatoudom பூரிப்படைந்துள்ளார்.

படிக்கும் ஆசையில் கடன் கேட்டு வந்த 16 வயது மாணவி : வங்கி முகாமையாளர் செய்த கொடூரம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கல்வி கடன் வழங்குவதாக வாக்குறுதியளித்து வங்கி மேலாளர் ஒருவர் 16 வயது சி.று.மி.யை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.த சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இந்தூர் பகுதியில் வசிப்பவர் பர்விந்தர் சிங். 53 வயதாகும் அவர் கடந்த 3 ஆண்டுகளாக இந்தூரில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.

இவரது வீட்டில் ஒரு பெண் வேலை செய்துவந்துள்ளார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அந்தப் பெண்ணின் மகள் கடந்த ஆண்டு தனது தோழி ஒருவரை, தனக்கு இந்த வாங்கி மேலாளர் கல்விக் கடன் பெற்று தந்ததாகவும்,

அவருக்கும் அவர் கடன் பெற்று தருவார் என கூறி, பவிந்தர் சிங் வீட்டிற்கு கூட்டிவந்து அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அந்த 16 வயதே ஆன அந்த சி.று.மி.யி.ன் மீது அந்த வங்கி மேனேஜர் ஆசைப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணிடம் அவருக்கு வங்கியில் கடன் வாங்கி கொடுத்து, உயர் படிப்பு படிக்க வைப்பதாக உறுதியளித்துள்ளார். படிக்கும் ஆசையில் அந்த பெண் மேலாளரின் ஆசை வார்த்தையில் ம.யங்கியுள்ளார்.

அவருடன் சேட் செய்ய தொடங்கிய அந்தப் பெண், அடிக்கடி அவருடன் ஷாப்பிங் சென்றுள்ளார். சி.று.மி.யி.ன் தேவையையும் நம்பிக்கையையும் பயன்படுத்திக்கொண்ட மேலாளர் ஆகஸ்ட் 2020ல், சி.று.மி.யை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.து.ள்.ளா.ர்.

அந்தக் காட்சிகளை வீடியோவாகப் பதிவுசெய்துக்கொண்டு சி.று.மி.யை மி.ர.ட்.டி வந்துள்ளார். பின்னர், அவர் சி.று.மி.யை மி.ர.ட்டி கோவாவிற்கு அழைத்து சென்று ஒரு ஹோட்டலில் வைத்து அவரை மூன்று நாட்கள் பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்.ளா.ர்.

மேலும் அந்த காட்சிகளையும் வீடியோ படமெடுத்து அவரை பலமுறை மி.ர.ட்.டி வந்துள்ளார். இதனால் மிகவும் மன உலைச்சலுக்கு ஆளான அந்த டீனேஜ் பெண், தனது ஆசிரியர் ஒருவருக்கு கடந்த வாரம் தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்ள இருப்பதாக மெஸேஜ் அனுப்பியுள்ளார்.

அதை பார்த்த அந்த ஆசிரியர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் இந்த விஷயத்தை கூறி அவரை த.ற்.கொ.லை.யி.லி.ரு.ந்.து கா.ப்.பா.ற்.றி.னா.ர். பின்னர் அனைவரும் சேர்ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த வங்கி மேனேஜர் மீது பு.காரளித்தனர்.

வழக்கு பதிவு செய்த பொலிஸார் பவிந்தர் சிங்கை இந்தூர் விமான நிலையத்தில் வைத்து கை.து செய்யப்பட்டார். மேலும், அவரிடம் அறிமுகப்படுத்திய அந்த பெண்ணையம் பொலிஸார் கைது செய்தனர்.

சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது : 2 மகள்களை நி.ர்வாணமாக்கி நரபலி தந்த பெற்றோர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் நன்கு படித்த பெற்றோர் தங்களது இரண்டு மகள்களை ந.ர.ப.லி கொடுத்த சம்பவத்தில் புதிய தி.டு.க்.கி.டு.ம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. எம்.எஸ்சி., பிஎச்டி பட்டம் பெற்ற புருசோத்தம், மதனப்பள்ளி அரசு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராக இருக்கிறார்.

முதுநிலை பட்டதாரியான பத்மஜா, பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றவர். இவர் உள்ளூர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மற்றும் முதல்வராக இருக்கிறார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள். அவர்களில் மூத்தவரான அலேக்கியா (27) முதுநிலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். இளைய மகள் சாய் திவ்யா (22), சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கே.எம். இசைக்கல்லூரியில் பயின்று வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது கொரோனா விடுமுறை காரணமாக மகள்கள் இருவரும் மதனப்பள்ளியில் பெற்றோருடன் தங்கியிருந்தனர். இந்நிலையில், புருசோத்தமும், பத்மஜாவும் நேற்று முன்தினம் இரவு 2 மகள்களின் சம்மதத்துடன் வீட்டில் வைத்து பூஜை செய்திருக்கின்றனர்.

அப்போது ஒரு மகளுக்கு தலையை முழுவதுமாக மொட்டை அடித்திருக்கின்றனர். பின்னர், பாசத்தாய் பத்மஜா, ஒரு சூலாயுதத்தால் இளைய மகளை கு.த்.தி கொ.ன்.றி.ரு.க்.கி.றா.ர். தொடர்ந்து, மூத்த மகளை ஒரு உடற்பயிற்சி எடைக்கருவியால் து.டி.து.டி.க்.க தா.க்.கி உ.யி.ரை ப.றித்திருக்கிறார்.

இருவரும் நி.ர்.வா.ண.மா.க்.கி கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.ன.ர். அதையெல்லாம், தந்தை புருசோத்தம் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார். ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மகள்கள் மாண்டபின், அதுகுறித்து புருசோத்தமே தன்னுடன் பணிபுரியும் ஒருவருக்கு தொலைபேசியில் கூறியிருக்கிறார்.

அ.தி.ர்.ச்.சி அடைந்தபோன அவர்கள், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். விரைந்து சென்று புருசோத்தம் வீட்டை அடைந்த பொலிசார் உ.யி.ர.ற்.ற ச.ட.ல.ங்.க.ளா.க இரு பெண்களையும் கண்டனர். சுற்றிலும் பல பூஜைப்பொருட்கள் காணப்பட்டன.

அப்போது கோபப்பட்ட கொ.டூ.ர தாய்-தந்தை, ஏன் எங்கள் பூஜைக்கு நடுவில் வந்தீர்கள்? ஒருநாள் பொறுத்தால் தங்கள் மகள்கள் மீண்டும் உயிர்பெற்று விடுவார்கள் என்று கூறி அ.திரவைத்துள்ளனர்.

மேலும் தனது இளையமகளின் தலைக்குள் தீயசக்தி இருந்தது எனவும் கூறினர். அப்போது அவர்கள் இருவரும் சிவப்பு நிற ஆடையில் இருந்துள்ளனர். கணவன்-மனைவியை கைது செய்த பொலிசார் 2 பெண்களின் உ.டல்களையும் பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

பொலிசாரிடம் தம்பதி கூறுகையில், எங்களுக்கு சொர்க்கத்திலிருந்து தகவல் வந்தது, இது அற்புதங்களின் வீடு. நிகழும் அற்புதத்துக்கு பிறகு உலகம் முழுவதும் நாங்கள் பேசப்படுவோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் மகள்களை கொ.ன்.ற பி.ன், தாங்களும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.ள புருசோத்தமும், பத்மஜாவும் முடிவு செய்திருந்ததாகவும், மகள்களுடன் தாங்களும் திரும்பவும் உ.யி.ர்.பெ.ற்.று விடுவோம் என்று நம்பிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் பொலிசார் உடனடியாக அவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் த.ற்.கொ.லை த.டுக்கப்பட்டுவிட்டது. பத்மஜாவுக்கு வலிப்புநோய் உள்ளதாகவும், அதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மகள்களை ந.ர.ப.லி கொடுத்தால் தாய்க்கு வலிப்பு சரியாகும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் கூறிய ஆலோசனையின் பேரில் அவர்கள் இந்த முட்டாள்தனமான முடிவுக்கு வந்ததாகவும் ஒரு ப.கீ.ர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடன் தொ.ல்லையால் கு.டும்பத்துடன் த.ற்கொ.லை : உயிர் பிழைத்தவர் ம.னவருத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகம்..

சென்னையில் உள்ள திரு வி.க நகர் ராமசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவானி.

இவர்கள் இருவருக்கும் தர்சினி என்ற மகளும், ப்ரகதீஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பழனியின் தந்தை சண்முகம் மாடிக்கு செல்கையில், மருமகள் பவானி, பேரக்குழந்தைகள் மற்றும் வளர்ப்பு நாய் பி.ணமாக இருப்பதை க.ண்டு அ.லறியுள்ளார்.

மேலும், சண்முகத்தின் மகன் பழனி கை.யை கி.ழி.த்.து இ.ரத்த வெ.ள்ளத்தில் உ.யிருக்கு போ.ராடி மய.ங்கி கி.டந்துள்ளார். விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், பழனியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பவானி, தர்ஷினி, ப்ரகதீஷ் ஆகியோரின் உ.டலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், க.டன் தொ.ல்.லை காரணமாக பழனி, தனது மனைவி மற்றும் மகளுக்கு வி.ஷம் கொ.டுத்து தா.னும் த.ற்.கொ.லை.க்கு மு.யன்றது தெரிய வந்துள்ளது. இதில், பழனியை தவிர மீதமுள்ள மூவரும் உ.யிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு பழனி மட்டும் உ.யிர் பி.ழைத்தார்.

இதன்பின்னர், நண்பர் வீட்டில் இருந்த பழனி, தன் மனைவி மற்றும் குழந்தைகள் இ.றந்து போனதற்கு தான் காரணம் என்ற ம.னம் வ.ருந்தி இ.ருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று திரு.வி.க நகரில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்று வருவதாக புறப்பட்ட பழனி, தந்தையின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்துவிட்டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே மருமகள், பேரன், பேத்தியை ப.றிகொடுத்த சண்முகம், தன் மகனின் உ.டலை பார்த்து க.தறி அ.ழுதது பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது. தற்போது 75 வயதாகும் முதியவர் சண்முகம் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறார். கடன் தொ.ல்லையால் கு.டும்பமே த.ற்.கொ.லை செய்துகொண்டது அப்பகுதியில் பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவை அச்சுறுத்தும் கொரோனா : இலங்கையிலும் ஆபத்தான புதிய வைரஸ்!!

புதிய கொரோனா வைரஸ்..

இலங்கையில் பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸை விட வித்தியாசமானதும் விரைவாக பரவக்கூடியதுமான கொரோனா வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து, ஜேர்மன், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் தற்போது இந்த கொரோனா வைரஸ் வகை பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களின் மாதிரிகள் கடந்த வாரம் சோதனைகளுக்காக பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பணிப்பாளர், மருத்துவர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் போது, குறித்த வைரஸ் இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸிலிருந்து மாறுபட்ட தன்மையைக் கொண்டிருப்பதாகவும் B1.258 பரம்பரையைக் கொண்டது எனவும் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி மூலமான நோய் எதிர்ப்பு சக்திக்கு அச்சுறுத்தலான செயற்பாட்டைக் கொண்டிராததால், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார். இது குறித்து தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருதாகவும் அவர் கூறினார்.

கம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் 34 பேருக்கு கொரோனா தொற்று!!

34 பேருக்கு கொரோனா..

கம்பஹா மாவட்டம் பூகொடை பிரதேசத்தில் இயங்கும் முகக்கவசங்களை தயாரிக்கும் ஆடை தொழிற்சாலையில் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிறுவனத்தில் முதலில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களின் இணைப்பாளர்களான ஏனைய ஊழியர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதேச சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் : மூன்று மாடுகள் பலி!!

விபத்து..

கிளிநொச்சி- பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை ,விபத்து சம்பவத்தில் சிக்கி மூன்று மாடுகள் பலியாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார், யாழ்ப்பாண பிரதான வீதியின் 4ம் கட்டை தெளிகரை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்திருந்த மாடுகளுடன் மோதிய வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் சிக்கிய வாகனம் கடுமையாகச் சேதமடைந்ததுடன், வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீன் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மரத்தின் கிளையொன்று கு.த்.தி ஒருவர் உ.யிரிழப்பு!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிரதான வீதியில் மரமொன்றுடன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மரத்தின் கிளையொன்று கு.த்.தி.ய.தா.ல் சாரதி உ.யிரிழந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு, வைத்தியசாலை வீதியை சேர்ந்த கே.சிறிக்காந்த் என்பவரே உ.யிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மண் ஏற்றும் கென்டர் வாகனத்தினை தும்பங்கேணி பிரதான வீதியூடாக ஓட்டுச்சென்று சிறிய வீதியொன்றின் ஊடாக செலுத்த முற்பட்டபோது மரமொன்றின் கிளை வானத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாரதியின் நெ.ஞ்சுப்.ப.குதியை தா.க்.கி.யு.ள்.ள.து.

இதன்போது வானத்தின் சாரதி ஸ்தலத்திலேயே உ.யிரிழந்துள்ளதாகவும், இதன்போது வாகனத்தில் சென்ற உதவியாளர் ம.யிரிழையில் உ.யிர் த.ப்.பி.யு.ள்.ள.தா.க.வு.ம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ச.டலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மண்டூர் திடீர் ம.ர.ண வி.சாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ச.டலத்தினை பார்வையிட்டதுடன்,

ம.ரண வி.சாரணையினை தொடர்ந்து பி.ரேத ப.ரிசோதனைகளுக்கான உத்தரவினை பிறப்பித்தார். இது தொடர்பான மேலதிக வி.சாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.