கொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகள் : நியூசிலாந்து முதலிடம், இலங்கைக்கு 10வது இடம்!!

கொரோனாவை சிறப்பாக கையாண்ட நாடுகள்..

கொரோனா வைரஸ் தொற்றுநோயை நியூசிலாந்து, உலகின் ஏனைய நாடுகளை விட மிகவும் திறம்பட கையாண்டுள்ளது என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோவி நிறுவனம் சுமார் 100 நாடுகளின் கொரோனா வைரஸ் நிலையை மதிப்பிடும் ஒரு புதிய தரவினை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் மற்றும் சோதனை விகிதங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கருத்திற்கொண்டுள்ளனர்.

இதில் நியூசிலாந்து முதல் இடத்திலும், வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. அவுஸ்திரேலியா இந்த பட்டியலில் 8வது இடத்தையும், இலங்கை 10வது இடத்தினையும் படித்துள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்கா 94வது இடத்திலும், இந்தோனேசியாவும், இந்தியாவும் முறையே 85 மற்றும் 86 இடங்களில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் பொதுவாக கொரோனா தொற்றை மிகவும் திறம்பட கையாண்டுள்ளன என்பதை இந்த ஆய்வு காட்டியுள்ளதாக நிறுவனத்தின் ஹெர்வ் லெமாஹியு தெரிவித்துள்ளார்.

“10 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நாடுகள், சுகாதார அவசரநிலையைக் கையாள்வதில், பெரிய நாடுகளை விட அதிக சுறுசுறுப்பானவை என்பதை நிரூபித்தன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி கற்க வந்த மாணவனுக்கு ஏற்பட்ட நிலை : கிராம சேவகர் ஒருவரின் மோசமான செயல்!!

மாணவனுக்கு ஏற்பட்ட நிலை..

16 வயது சிறுவனை பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ ய்ததாக சந்தேகிக்கப்படும் கிராம சேவகர் ஒருவரை ஹபரதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 37 வயதான கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ ய்யப்பட்ட சி.று.வ.ன் ஹபரதுவ – கட்டுகருந்த பகுதியில் வசிப்பவர் எனவும், குறித்த சி.றுவனுக்கு கிராம சேவகர் கணித பாடம் கற்பித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க ல்வி க ற்க வ ந்த மா.ண.வ.னை அ.ச்.சு.று.த்.தி, 2018 மு.த.ல் க.டு.மை.யா.ன பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.தி.ற்.கு உ.ள்.ளா.க்.கி.யு.ள்.ள.தா.க தெ ரிவிக்கப்படுகின்றது.

இ.ந்.த ச.ம்.ப.வ.ம் தொ.ட.ர்.பி.ல் மே.ல.தி.க வி.சா.ர.ணை.க.ளை மே.ற்.கொ.ண்.டு வ.ரு.கி.ன்.ற.ன.ர். சி.று.வ.ன் சோ.த.னை.க்.கா.க வை.த்.தி.ய.சா.லை.யி.ல் அ.னு.ம.தி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.ட.ன், ச.ந்.தே.க ந.ப.ர்  நீ.தி.ம.ன்.ற.த்.தி.ல் ஆ.ஜ.ர்.ப.டு.த்.த.ப்.ப.ட உ.ள்.ளா.ர்.

இலங்கையிலும் உருமாறிய புதிய வைரஸ் இருப்பது உறுதி : பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை!!

புதிய வைரஸ்..

ஐரோப்பிய நாடுகளில் இனங்காணப்பட்ட உருமாறிய புதிய வைரஸ் இலங்கையிலும் காணப்படுவதை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் அங்கிருந்து சென்றவர்களிடமும் மாதிரிகளை பெற்று பரிசோதித்து துரிதமாக முடிவுகளை வெளிப்படுத்த வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் பாரிய அச்சுறுத்தல்களுக்கு முங்கொடுக்க நேரிடும் என்றும், அத்தோடு புதிய வைரஸ் சமூகத்துக்குள் பரவக் கூடிய அபாயமும் ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

70 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

நாடு முழுவதும் 70 பாடசாலை மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோஷப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை மேலும் அதிகரிப்பதற்கு முன்னர் பரவலாக மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் சாதாரண தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இதனால் PCR பரிசோதனை நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கல்வி அமைச்சிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் தங்கையின் திருமணத்தில் திடீரென மரணடைந்த சகோதரன்!!

தங்கையின் திருமணத்தில்..

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் திருமண நிகழ்வின் போது மணமகளின் சகோதரனன் திடீர் மரணமடைந்துள்ளார். மஹர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு திடீர் மரணமடைந்துள்ளார்.

தனது தங்கையின் திருமண நிகழ்விற்காக பிலியந்தலை, வேவல பிரதேசத்தில் உள்ள நிகழ்வு மண்டபத்திற்கு அவர் சென்றுள்ளார். இதன் போது நல்ல உடல் நிலையும் இருந்தவர் திருமண நிகழ்விற்கு இடையில் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையிலும் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்தவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிலியந்தலை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பில் இருந்து வெளியேறுவோருக்கு முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளுக்கும் PCR பரிசோதனை அல்லது ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொச்சிக்கடை, மீரிகம, நிட்டம்புவ, தொம்பே, ஹங்வெல்ல, இங்கிரிய, பதுரலிய, மீகஹதென்ன, தினியாவல, கொட்டதெனியாவ, அழுத்கம ஆகிய பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இன்றைய தினம் நாடு முழுவதும் விசேட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மரணங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!!

கொரோனா மரணங்கள்..

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை ஆரம்பித்த பின்னர் இலங்கையில் ஏற்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மரண எண்ணிக்கை 200 நெருங்கி வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இலங்கையில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 277 பேர் இரண்டாவது அலையின் ஆரம்பத்துடன் இறந்துள்ளதாக கொவிட் – 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இரண்டாவது அலையில் மரணடைந்த 193 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரியவருகிறது. எவ்வாறாயினும் நடுத்தர வயதான 72 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 6 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதுடன் 10 முதல் 30 வயதுக்கு உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 வயதுக்கும் குறைந்த ஒரு கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் ஔவையார் நினைவு நாள் அனுஷ்டிப்பு!!

ஔவையார் நினைவு நாள்

வவுனியா சின்னப்புதுக்குளம், மாமடு சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் ஔவையார் நினைவு தினம் இன்று(28.01.2021) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

ஒளவையாரின் நினைவுப் பேருரை நிகழ்த்தப்பட்டமையினையத்து வருகை தந்த பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வவுனியா வேப்பங்குளத்தில் தீப்பற்றி எரிந்த வீடு : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

வேப்பங்குளத்தில்..

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் வீட்டின் சுவாமி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு தீப்பற்றி எரிவதினை அவதானித்த அயலவர்கள் வீட்டின் முன் கதவியினையுடைத்து தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் வீட்டினினுள் இருந்த குளிரூட்டி, சொகுசுக் கதிரைகள், உடைகள் என பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்ததுடன் அப்பகுதி கிராம சேவையாளரும் வருகை தந்து சேதங்களை பார்வையிட்டார்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை பண்டாரிக்குளம் காவலரண் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் ஒரு இலட்சம் இலவச காணித் துண்டுகள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு!!

நேர்முகத் தேர்வு..

இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுகள் வழங்கும் திட்டத்திற்காக ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வின் முதற்கட்டம் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (28.01.2021) காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரை இடம்பெறுகின்றது.

காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் விவசாயம் மற்றும் பண்ணை அமைக்கும் தொழில் முயற்சிக்காக அதிகளவிலான இளைஞர், யுவதிகள் காணி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் ஒரு தொகுதியினருக்கான நேர்முகத் தேர்வுகள் இன்று (28.01) ஆரம்பமாகியதுடன் நாளை , நாளை மறுதினம் (29, 30) மற்றும் 4 ஆம் திகதிகளில் வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்றையதினம் (28.01) பண்டாரிக்குளம், தோணிக்கல், மகாறம்பைக்குளம், ஆசிகுளம், கூமாங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 விண்ணப்பதாரிகளுக்கு இவ் நேர்முக தேர்வு இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு!!

பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு..

இலங்கையில் பொது மக்களுக்கு பொலிஸார் முக்கிய
அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். இதன்படி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏதேனும் விடயம் தொடர்பில் தகவல் இருந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறுகையில், தேசிய பாதுகாப்பு, போ.தை.ப்.பொ.ரு.ள் க.டத்தல் மற்றும் கு.ற்றக் கு.ம்பல்கள் அ.ச்சுறுத்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் சிறப்பு நடவடிக்கை மையம் நிறுவப்பட்டது.

எனவே இது தொடர்பான தவல்களை பொது மக்கள் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை மையத்தின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும்.

1997 என்பதே குறித்த அவசர இலக்கம் என்பதுடன், பொதுமக்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக சிறப்பு நடவடிக்கை மையத்தில் பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலி!!

கோர விபத்தில்..

யாழ்ப்பாணத்தில் இன்று (28.01.2021) அதிகாலை நடந்த கோர விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த இன்னொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி மக்கள் வங்கிக்கு அருகாமையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வவுனியாவை சேர்ந்த கண்ணன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

வீதி திருத்த பணியில் ஈடுபடும் கனரக வாகனமொன்றும், பிக்அக் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வவுனியாவில் இருந்து சென்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுகாட்டுக்குள் உதவி கேட்ட 7 வயது சிறுவன் : சடலமாக கிடைத்த 2 வயது பெண் குழந்தை : நடந்த விபரீதம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் ச.ண்.டை போ.ட்டுக்கொண்டு, கு.ழந்தைகளை நடுக்காட்டில் விட்டுச் சென்றதில் 2 வயது பெ.ண் கு.ழந்தை ப.ரிதாபமாக உ.யிரிழந்த ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஸ்கேட்ட கவுண்டி பகுதியில் நடுக்காட்டுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு 7 வயது சி.றுவன் அங்கிருந்த ஒரு வேட்டைக்காரரிடம் அ.ழுதுகொண்டு உதவி செய்யுமாறு கேட்டுள்ளான்.

அச் சி.றுவன் தனது கு.டும்பத்துடன் இந்த வழியாக வந்ததாகவும், தனது தாய் தன்னையும் தனது தங்கையை காட்டுக்குள் தனியாக விட்டுவிட்டு சென்றதாக கூறியுள்ளான். அதன்பிறகு பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் தே.டு.த.ல் நடத்தப்பட்டது.

அப்போது அவர்கள் வந்த டிரக் மிஸிஸிபி ஏரிக்கு அருகில் க.ண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து சிறிது துரத்தில் சி.றுவனின் தங்கையான 2 வ.யது கு.ழந்தை ச.ட.ல.மா.க கை.ப்.ப.ற்.ற.ப்.ப.ட்.டா.ர்.

வி.சாரணையில், நார்த் கரோலினா பகுதியைச் சேர்த்த ஜேம்ஸ் மற்றும் ஏமி ஹாரிசன் தம்பதி மிசிசிப்பி வழியாக பயணித்துள்ளனர். அவர்களுடன் 2 வயது பெ.ண் கு.ழந்தையும், ஏமியின் முன்னாள் கணவனுடன் பிறந்த 7 வயது சி.றுவனும் பயணித்துள்ளனர்.

அப்போது போ.தை.ப்.பொ.ரு.ள் தொ.டர்பாக தம்பதிகளிடையே வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் ச.ண்.டை மு.ற்றியதில், ஏமி தனது கு.ழந்தைகளை ஜேம்ஸ்சுடன் வண்டியிலேயே விட்டுவிட்டு, இரங்கி வேறொரு நண்பரை வரவழைத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர், ஜேம்ஸும் கு.ழந்தைகளை டிராக்கிலேயே தனியாக நடுக்காட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் தனியாக வண்டிக்குள் இருந்த கு.ழந்தைகள், இறங்கி உதவிதேடிச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த காட்டுக்குள் இருவரும் பி ரிந்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் சி.றுவன் ஒருவழியாக வே ட்டைக்காரரை அணுகினான். ஆனால், 2 வயது கு.ழ.ந்.தை hypothermiaவில் இ.ற.ந்.து.வி.ட்.ட.து.

கை.ப்.ப.ற்.ற.ப்.ப.ட்.ட கு.ழ.ந்.தை.யி.ன் உ.ட.ல் பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பெற்ற கு.ழந்தைகளை தனியாக த.விக்கவிட்டு சென்றதற்காகவும், 2 வயது கு.ழ.ந்.தை இ.ற.ப்.ப.த.ற்.கு காரணமாக இருந்ததாகவும் அவர்களது தாய் ஏமி ஹாரிசன் கை.து செய்யப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் ஹாரிசன் எங்கு சென்றார் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. அவரையும் கை.து செ.ய்.ய பொலிஸார் தே.டி வருகின்றனர்.

வாளிக்குள் தலைக்குப்புற தவறி விழுந்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் பெற்றோர்!!

தமிழகத்தில்..

தென்காசி சங்கரன்கோவிலில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் கு ழந்தை, தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் தவறி தலைக்குப்புற விழுந்து இ.றந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கக்கன் நகரை சேர்ந்த ஜெபஸ்டியான்-எஸ்தர் தம்பதியினரின் மகனான ஆரோன் என்ற அந்தக் கு ழந்தை, வீட்டின் பின்பக்கமுள்ள படிக்கட்டில் அமர்ந்தவாறு விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறான்.

படிக்கட்டின் அருகே தண்ணீருடன் இருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்து சிறிய பொம்மை கோப்பையில் தண்ணீரை இரைத்து விளையாடிக் கொண்டிருந்த கு ழந்தை தவறி அந்த வாளிக்குள் தலைக்குப்புற விழுந்ததாகக் கூறப்படுகிறது.

மகள்களை நி.ர்.வா.ண.மா.க ந.ர.ப.லி கொடுத்த தம்பதி : மனைவியின் செயலால் ஏற்பட்ட கு.ழப்பம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் பெற்ற மகள்களை ந.ர.ப.லி கொ.டு.த்.த வழக்கில் கை.து செய்யப்பட்ட தம்பதிகளில் மனைவி ம.னநோயாளி போல நடிப்பதால் பொலிசார் பெ.ரும் கு.ழ.ப்.ப.ம் அ.டைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புருசோத்தம் நாயுடு – பத்மஜா நாயுடு தம்பதியர் தங்களது இரு மகள்களான அலெக்கியா, சாய் திவ்யா ஆகியோரை நி.ர்.வா.ண.மா.க்.கி ந.ர.ப.லி கொ.டு.த்.த சம்பவம் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியது.

முன்னதாக வி.சாரணைக்கு கொ.லை ந.ட.ந்.த வீட்டுக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து புருஷோத்தம் நாயுடுவின் மனைவி பத்மஜா, காலில் ஷூ அணிந்து கொண்டு தமது பூஜை அறைக்குள் வருகிறார்கள், த.டுத்து நி.றுத்துங்கள் என்று சுய நினைவுடன் எ.தி.ர்.த்.தா.ர்.

வி.சாரணைக்கு பின்னர் முதல் கு.ற்.ற.வா.ளி.யா.க தந்தை புருஷோத்தம் நாயுடுவையும் இரண்டாம் கு.ற்.ற.வா.ளி.யா.க தாய் பத்மஜாவையும் கொ.லை வ.ழக்கில் கை.து செ.ய்த பொலிசார், இந்த வழக்கு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை பல்வேறு கோ.ணங்களில் வி.சாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெற்ற மகள்களை ந.ர.ப.லி.யி.ட்.ட கொ.டூ.ர கொ.லை.கா.ரி.யா.க காவல்துறையினரால் சுட்டிக்காட்டப்படும் பத்மஜா மருத்துவ ப.ரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது ம.னநிலை பா.திக்கப்பட்டவர் போல் பி.தற்றியுள்ளார்.

கொரோனா சோ.தனையின் போது தன்னை சிவனின் மறு அவதாரம் என்றும் மார்ச் மாதத்திற்கு பின்னர் கொரோனாவுக்கு மருந்தே தேவைப்படாது என்றும் கூறி அ.தி.ர.வை.த்.தா.ர்.

தெளிவாக இருந்த பத்மஜா உண்மையிலேயே ம.னநிலை பா.திப்பு ஏற்பட்டு விட்டதா அல்லது நடிக்கிறாரா என பொலிசாருக்கு கு.ழ.ப்.ப.ம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையில் அலெக்கியா, சாய் திவ்யா கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிசாருக்கு பலத்த ச.ந்.தே.க.ம் ஏற்பட்டுள்ள நிலையில் வி.சாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம்!!

கொரோனா தடுப்பூசியுடன்..

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக இந்தியாவின் தயாரிப்பான கொவிஷீல்ட் தடுப்பூசி நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

நாளை காலை 11 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பரவும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசாங்கம் உதவியாக இலங்கைக்கு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி இந்தியாவின் மும்பாயில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான A I 281 என்ற விமானத்தில் இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது. 1,323 கிலோ கிராம் நிறையுடைய இந்த தடுப்பூசிகள் விசேட குளிர்சாதனத்திற்குள் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

தரையிறக்கப்படும் தடுப்பூசி தொகையை விமான நிலையத்தில் உள்ள குளிர்சாதன களஞ்சிய அறைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.