வடக்கு மக்களுக்கு பெப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்!!

கொரோனா தடுப்பூசிகள்..

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,

நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன.முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை!!

பொலிஸ் சேவைக்கு..

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(26) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகின்றது. குறித்த பரீட்சையில் வடமாகாணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத்தேர்வுகள் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றையதினம் அவர்களிற்கான உடற்தகுதிகாண் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால்டி சில்வாவின் மேற்பார்வையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் சி.று.மி.யை வைத்து பெற்றோர் செய்த மோ.ச.மா.ன செயல் : CCTVயில் அம்பலம்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் சொந்த பிள்ளையை ஈடுபடுத்தி நகை கொ.ள்ளையில் ஈடுபட்ட பெற்றோரை கை.து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகைக் கடை ஒன்றில் தனது சிறிய மகளை ஈடுபடுத்தி தி.ருட்டு நடவடிக்கையில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களை செய்ய அனுராதபுரம் தலைமை கு.ற்ற வி.சாரணை பிரிவு வி.சாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நகை கடை உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் செய்த மு.றைப்பாட்னை அடுத்து 8 வயதுடைய சி.றுமி ஒருவரால் தங்க மோதிரம் ஒன்றை தி.ருடும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.

பாடசாலை வயதுடைய குறித்த மா.ணவியும் 4 வயதுடைய சி.றுமியும் பெற்றோருடன் குறித்த நகை கடைக்கு சென்றுள்ளனர். இதன் போது ஊழியரை திசை திருப்பிய பெற்றோர் சி.றுமிகளை திருட வைத்துள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் நகை கடையின் கொடுக்கல் வாங்கல் நிறைவு செய்து நகைகளை கணக்கிடும் போது தங்க மோதிரம் ஒன்று தி.ருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் இந்த தி.ருட்டிற்கு தொடர்புடைய குடும்பம் எந்த பிரதேசத்தை சேர்ந்ததென பொலிஸாரால் இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில், வி.சாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனுக்குக் கொரோனா தொற்று!!

கொரோனா..

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவில் அவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் 7 நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து அறிவியல் நகர் திரும்பியிருந்தார் என்று கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.சரவணபவன் தெரிவித்தார்.

தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவனைக் கிளிநொச்சியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மேலும் கூறினார்.

கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பின்னரும் மக்கள் இதை கடைபிடிக்க வேண்டும்!!

கொரோனா தடுப்பூசி..

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பின்னரும் மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான வெகுஜன தடுப்பூசி தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த விளைவை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள், சுகாதார மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார். தடுப்பூசி செலுத்துவது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைக் குறைக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த பண்டிகை காலங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு சட்டரீதியான தடைகள் மேற்கொள்ளப்படவில்லை.இதன் காரணமாகவே கொரோனா தற்போது அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டை மீறவில்லை என்று அவர் கூறினார். தினசரி அடிப்படையில் பதிவாகும் தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிவேக அதிகரிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கனடா செல்ல முயற்சித்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!!

கனடா செல்ல முயற்சித்தவர்..

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் ஊடாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான வர்த்தகராகும். கட்டார் நாட்டின் டோஹாவிற்கு செல்லவிருந்த கிவ்.ஆர்.669 ரக விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

அவர் விமான கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக கட்டார் விமான சேவை பிரிவிற்கு வருகைத்தந்துள்ளார். இதன் போது அவர் முன்வைத்த கனடா விசா தொடர்பில் ஏற்பட்ட சிக்கலுக்கு அமைய அந்த விமான சேவை அதிகாரி உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் குறித்த விசா பத்திரத்தில் போலித் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரிடம் விசாரித்த போது தான் இரண்டு லட்சம் ரூபாய் பணம் வழங்கி இந்த கனடா விசாவை தயாரித்ததாக குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் பெண்ணின் நான்கு பவுண் சங்கிலி அபகரிப்பு!!

கோவில்குளம் பகுதியில்..

வவுனியாவில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25.01.2021) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நகரில் பணியாற்றும் குறித்த பெண்மணி பணி முடிந்து தனது வீடு நோக்கிச் சென்றுள்ளார்.

இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த நான்கு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச்சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

பாடசாலை செல்லும் போது மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு சாதாரண தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய தாங்கள் கற்கும் பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தாலும் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக சென்று கற்க சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தயார் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்ளாமல் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று கற்பிக்க சந்தர்ப்பம் வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிப்பது மிகவும் கடினமான விடயம் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் நேற்றைய தினம் வெளியான முடிவுகளின்படி மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் நேற்று (25.01.2021) இரவு வெளியாகியது.
அதனடிப்படையில் வவுனியாவின் நகரப் பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 12 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

மேலும் மடுக்கந்தையில் ஒருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் என நேற்று மட்டும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நேற்று அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் கடந்த கடந்த 1ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது.

பெற்ற மகள்களை நி.ர்.வா.ண.மா.க்.கி து.டி.து.டி.க்.க ந.ர.ப.லி கொடுத்த பெற்றோர் : அ.திர்ச்சி சம்பவம்!!

ஆந்திர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் உள்ள ஆசிரியர் காலனியில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா தம்பதியினர் வசித்து வருகினற்னர்.

புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அலேக்கியா (27) MBA படித்துவிட்டு வடஇந்திய மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரகுமானின் இசைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்த லக்கடவுனில் இருவரும் கடந்த 9 மாதங்களாக பெற்றோர்களுடன் ஆந்திராவில் தங்கியுள்ளனர். ஆன்மீகத்தை அதிகம் நம்பும் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா இருவரும் சமீப நாட்களாக வீட்டில் சில பூஜைகளை நடத்திவந்துள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி என்ற சூழலில், வீட்டில் ரகசிய சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். திடீரென இவர்களது வீட்டிலிருந்து அ.ல.ற.ல் ச த்தம் கேட்டுள்ளது. இதனால் ப.யந்துபோன அக்கம் பக்கத்தினர், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்களது வீட்டுக்கு வந்த பொலிஸ் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்க மறுத்த தம்பதி ஏடாகூடமாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிஸார் கதவை உ.டைத்துக்கொடு உள்ளே சென்று பார்த்தால், இரண்டு மகள்களும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் நி.ர்.வா.ண.மா.க இ.ற.ந்.து கி.டந்துள்ளனர்.

அவர்களது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல போலீசார் முற்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும் ‘இந்த ஒரு இரவு காத்திருங்கள், எங்கள் குழந்தைகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்” என்று கூறி உ.டல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸார் அவர்களை கை.து செய்தனர். பின்னர் அலேக்கியா மற்றும் சாய் திவ்யாவின் உ.டல்களையும் பி.ரேத ப.ரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

மேற்பட்ட வி.சாரணையில், வீட்டிற்குள் பூஜைகளை செய்து கொண்டிருந்த தம்பதி, தங்களது இரண்டு மகள்களையும் முதலில் நி.ர்.வா.ண.மா.க்.கி தலையை மொட்டை அடித்துள்ளனர்.

பின்னர் பூஜையில் உட்காரவைத்து அவர்கள் இருவரது தலையிலும் உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பெல்களைக் கொண்டு அ.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர் என்பது தெரியவந்தது.

மேலும், இவ்வாறு செய்தால் மொத்த குடும்பத்தாரின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புவதாக கூறியுள்ளனர். வி.சாரணையின் போதும், தங்கள் பிள்ளைகள் மீண்டும் உ.யி.ரோ.டு வருவார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர்.

பட்டப்படிப்புகள் படித்திருந்தும், மூட நம்பிக்கையால் பெற்றோர்கள் சொந்த மகள்களையே ந.ர.ப.லி கொடுத்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்படுத்தியுள்ளது.

நீச்சல் பயிற்சி எடுத்த மூன்று பெண்கள் நொடிப்பொழுதில் பலியான சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்ட போது மூவரில் குளத்தில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி ராதா (வயது 38).

ராதா தனது மகள் பவ்யா (13) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகள் சரஸ்வதி (13) ஆகியோருடன் நேற்று அப்பகுதியில் உள்ள செங்குளத்துக்கு குளிக்க சென்றார்.

சிறுமிகள் இருவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர், அப்போது ராதா அவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. அப்போது தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதைப்பார்த்த ராதா பதறிப்போய் அவர்களை காப்பாற்ற முயன்ற போது அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த கிராம மக்கள் மூவரையும் மீட்க முயன்றனர்.

அதற்கும் மூவரும் தண்ணீர் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து சுமார் ½ மணிநேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம் தாய் மற்றும் மகன் எடுத்த விபரீத முடிவு!!

தாய் மற்றும் மகன்..

மாத்தறை – கன்தர – ஜயபோதிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாய் மற்றும் மகனின் ச.டலங்கள் மீ.ட்கப்பட்டுள்ளன. 24 வயதுடைய பெண் மற்றும் அவரது 4 வயதுடைய மகனே உ.யிரிழந்த நிலையில் ச.டலங்களாக மீ.ட்கப்பட்டுள்ளனர்.

அவரது கணவர் மீன்பிடித் தொழிலாளர் ஆவார். அவர் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளனர். உ.யிரிழந்தவர்களின் ச.டலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

கடன் பணம் செலுத்த முடியாமல் இவர்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட வி.சாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 இடங்களில் திருமண நிகழ்வினை நடத்திய தம்பதியால் ஏற்பட்ட பாதிப்பு!!

கொரோனா..

தென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன் காரணமாக 3 நிகழ்விலும் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரவு தெரிவித்துள்ளது.

கடுவெல, பாதுக்க மற்றும் வட்டரெக்க ஆகிய பிரதேசங்களில் இந்த திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த திருமண நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நிகழ்வு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்வில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதனை தொடர்ந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வவுனியா நகர்ப் பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!!

நகர் பகுதி..

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது.

வவுனியா, பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.

அத்தோடு வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில், பிரதான நகரம் உட்பட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையமும் மூடப்பட்டுள்ளது.

அத்தோடு ,வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாத பெருமளவு வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளதுடன்,

பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களைத் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் : ஒருவர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (வயது 62) என்பவரே சேறும், சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது மனைவி மற்றும் 9 வயது மற்றும் 13 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவருடனும், பிரப்பம் வளைவுப் பகுதியிலுள்ள வீதியைக் கடந்தபோது அங்கு தண்ணீர் நிரம்பியிருந்த வீதியிலுள்ள ஆழமான குழிக்குள் விழுந்து சேற்றில் மூழ்கியுள்ளார்.

வீதியால் தனது 9 வயதுப் பேரனை சுமந்து கொண்டு சென்ற கணவர் வீதியில் இருந்த குழிக்குள் விழுந்தவுடன், பின்னால் வந்த மனைவியும் விழுந்துள்ளார்.

இதனை அறிந்த மூன்றாவதாக வந்த 13 வயதான பேரன் தனது தம்பியின் தலைமுடி நீருக்கு வெளியே தெரியவர அவரைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு வந்து விட்டு பாட்டியின் தலைமுடியையும், பிடித்திழுத்து காப்பாற்றிவிட்டு பாட்டனாரைத் தேடிய பொழுது அவர் காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில் அயலில் நின்றவர்களின் உதவியுடன் தேடிய பொழுது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிரிழந்தவரின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் பிரதேசத்திலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் அந்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கி செயற்பட்ட மேலும் சில விமான நிலைய அதிகாரிகள் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் 140 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.