வவுனியாவில் கொரோனா அச்சம் : மறுஅறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்!!

மூடப்படும் பாடசாலைகள்..

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரிலிலுள்ள 5 பாடசாலைகள் மறுஅறிவித்தல் வரையும் மூடப்படுகின்றது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09.01.2021) காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள்கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை கடந்த (05.01.2021) இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01.2021) மதியம் வெளியானதில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலமையில் இன்று (09.01.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது,

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை தமிழ் கலவன் பாடசாலை,

காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (11.01) வழமை போன்று ஆரம்பமாகும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்!!

யாழ். பல்கலைக்கழகத்தில்..

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொது மக்கள் கூடுவதாகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதாகவும் தெரியவருகின்றது.

இதனை உறுதிப்படுத்துவதற்கு யாழ். துணைவேந்தரின் ஊடகப்பிரிவு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்ட போது யாரும் பதில் அளிக்கவில்லை.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.

யாழ். பல்கலை நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை இடை நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும் பல்கலை மாணியங்கள் ஆணைக்குழுவும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்கலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலை வளாகத்தில் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதானாலும் துணைவேந்தரின் ஒப்புதல் மிக முக்கியமானதாக இருக்கின்றது.

அதாவது ஒரு கட்டிடம் புதிதாக நிர்மாணிப்பதாக இருந்தாலும் சரி ஒரு கட்டிடத்தை அகற்றுவதானாலும் சரி உப வேந்தரின் அனுமதி மிக பிரதானம். எனினும், இந்த சம்பவம் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளிவரவில்லை.

-தமிழ்வின்-

வவுனியாவில் 276 ஆசிரியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

பி.சி.ஆர் பரிசோதனை..

வவுனியா,வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்குக் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது 276 பேருக்கு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

ஏனைய ஆசிரியர்கள், அதிபர்களுக்குப் பிறிதொரு தினத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, வடக்கு புளியங்குளம் இந்துக்கல்லூரியில் நேற்றும், இன்றும் ஆகிய இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது நேற்று 34 பேருக்கும், இன்று 242 ஆசிரியர்கள் அதிபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டவர்களும், மேற்கொள்ளத் தவறியவர்களும் தமது கடமைகளை மேற்கொள்வதற்குப் பாடசாலைக்கு வருகை தரலாம்.

எனினும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்களுக்குப் பிறிதொரு தினத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பன்றிக்கு வலை வைத்தவர் மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக மரணம்!!

மின்சார வேலியில்..

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தையொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தோனி சாமி வயது 62 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (08.01.2021) இடம்பெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் கூரையின் மீது ஏறி துணி காய வைக்கும் போது குறித்த நபர் மரக்கறி தோட்டத்தில் வீழ்ந்து கிடப்பதனை கண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து பிரதேசவாசிகளிடம் தெரிவித்த போது குறித்த நபர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதனை 3 மணியளவில் கண்டுள்ளனர். பின் பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, குறித்த நபர் தனது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளார்.

குறித்த நபர் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் இன்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு..

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

செயல்முறை பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் அனுமதி பத்திரத்திற்காக பரீட்சை திணைக்களத்திற்கு வருகைத்தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தனிமைப்படுத்தல் மற்றும் பயண கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்கள், பரீட்சை எழுதும் போது தேசிய அடையாள அட்டையை அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக தகவல் அவசியம் என்றால் 0112 784 208, 0112 784 537, 0113 188 350 அல்லது 1911 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரை மூடப்படும் வர்த்தக நிலையங்கள்!!

கொரோனா அச்சம்…

வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த பகுதி அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த 55 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினரும் பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றமையுடன் இனங்காணப்பட்ட 55 பேருடனும் தொடர்பில் உள்ளவர்களின் விபரங்களை சுகாதார துறையினர் திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இன்று (08.01) இரவு முதல் மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரினால் மூடப்பட்டுள்ளமையுடன் மக்கள் உள் நுழையவும் வெளிச்செல்லவும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்று கோடீஸ்வரர்களான இருவருக்கு பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்!!

பிரதமர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்..

அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்றுக மற்றும் ஜயோதா சீட்டிழுப்புகளின் மூலம் உருவான கோடீஸ்வர வெற்றியாளர்கள் இருவருக்கான காசோலைகளை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

652ஆவது கோடிபதி கப்றுக சீட்டிழுப்பின் வெற்றி பரிசுத் தொகையான 87,991,625 ரூபாயை வெற்றி கொண்ட அம்பன்பொல குமார பதிரன்னேஹேலாகே சுனில் மற்றும் 1717ஆவது ஜயோதா சீட்டிழுப்பின் வெற்றிப் பரிசுத் தொகையான 57,138,276 ரூபாயை வெற்றி பெற்ற கல்கமுவ ஏ.ஜி.பி.ஜி.கொடிதுவக்கு ஆகியோருக்கான காசோலைகள் பிரதமரினால் வழங்கிவைக்கப்பட்டன. வெற்றியாளர்களிடம் காசோலைகளை கையளித்த பிரதமர்,

சீட்டிழுப்பு வெற்றியாளர்கள் வெற்றி பெற்ற பணப் பரிசுத் தொகையை தனது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்கால அபிவிருத்திக்காக மாத்திரம் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி பெற்ற தொகையை தனிப்பட்ட ரீதியில் வெற்றி பெற்றிருப்பினும் இத்தொகையை முறையாக தமது வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள்.

பிள்ளைகள் மற்றும் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு இதனை சிறந்த முதலீடாக ஈடுபடுத்திக் கொள்ளலாம். பாரிய தொகை கிடைத்தவுடன் அதனை அநாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் இறுதியில் ஒன்றும் இல்லாத நிலைக்கு மீண்டும் தள்ளப்படலாம்.

சில கோடீஸ்வர சீட்டிழுப்பு வெற்றியாளர்கள் இவ்வாறான வெற்றிகளின் பின்னர் மோசமான நிதி மேலாண்மை காரணமாக ஏற்கனவே இருந்த நிலையைவிட கீழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் பல நேர்ந்துள்ளன. அதனால் இப்பணத்தை பிள்ளைகளதும், குடும்பத்தினதும் இறுதியாக நாட்டினதும் நலன் கருதி ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அம்பன்பொல விற்பனை முகவர் யூ.டி.எல்.தினேஷ் குமார மற்றும் கல்கமுவ விற்பனை முகவர் டி.எம்.எஸ்.பி.மெணிக்கே ஆகியோர் இந்த அதிஷ்டலாப சீட்டுக்களை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிக்குளத்தில் கேரள க ஞ் சாவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவர் கைது!!

செட்டிக்குளத்தில்..

வவுனியா செட்டிக்குளம் நகரில் இன்று (08.01.2020) மதியம் 700 கிராம்  கேரள க ஞ் சா வு ட ன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியில் கேரள க ஞ் சா வி னை தம்வசம் ஒருவர் வைத்திருப்பதாக செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட சோ தனை நடவடிக்கையின் போது 700 கிராம் கேரள க.ஞ்.சா.வி.னை மீ ட்டுள்ளனர்.

இதனை உடமையில் வைத்திருந்தார் என்ற கு ற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்ததுடன் குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கை ப்பற்றியு ள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதுடைய நபர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கை.ப்பற்றப்பட்ட கேரள க ஞ் சா மற்றும்,

குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் சந்தேக நபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 55 பேருக்கு கொரோனா தொற்று : அனைவரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

கொரோனா..

வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.

இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன், ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன்,

அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த 55 பேரையும், கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், வவுனியா நகரின் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள்வட்ட வீதி என்பன தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட 55 பேருடனும் தொடர்பில் உள்ளவர்களின் விபரங்களை சுகாதார துறையினர் திரட்டி வருகின்றனர்.

வவுனியா நகரில் 55 பேருக்கு கொரோனா தொற்று : நகரின் முக்கிய பகுதிகள் திடீர் முடக்கம்!!

நகரின் முக்கிய பகுதிகள் முடக்கம்..

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து பட்டாணிசூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபார நிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு நேற்று காலை வவுனியா பசார் வீதியின் ஒரு பகுதி தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டு, அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் முடிவுகள் இன்று (08.01.2021) வெளியான நிலையில் 55 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன். இச் செய்தி வவுனியா மக்களை பீதியடைய வைத்துள்ளது.

இந்த நிலையில் வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் இராணுவம், பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் இணைந்து முடக்கியுள்ளனர். முடக்கப்பட்ட பகுதிக்குள் யாரும் உட்செல்லவோ வெளியே வரவோ அனுமதிக்கப்படவில்லை.

 

வவுனியா நகரில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மக்களுக்கு எச்சரிக்கை!!

55 பேருக்கு கொரோனா தொற்று..

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை நேற்று முன்தினம் (05.01) இரவு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் நேற்று (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் இன்று மதியம் வெளியானதில் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவிக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

தம்பே பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கும் பாடசாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் மாணவிகள் உட்பட ஊழியர்கள் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நடைமுறை பரீட்சைக்கு அனுமதி பத்திரம் பெறுவதற்காக பாடசாலைக்கு வந்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார் என பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மாணவி வீட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அடையாளம் காணப்பட்டமையினால் ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டில் இருந்து கல்வி ஊழியர் ஒருவரும் பாடாலைக்கு வருகைத்தந்துள்ளளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் குறித்த மாணவிக்கும் ஊழியருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு குறித்த நபர்கள் தனிமைப்பத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

இடியுடன் கூடிய மழை..

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

பாடசாலை மாணவர்..

சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போதும்பாடசாலைகளில் இருக்கும் போதும் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு தொடர்ந்தும் முகக் கவசத்தை அணிந்திருப்பது அசௌகரியமாக இருக்குமானால் இடைவெளியை பேணும் சந்தர்ப்பங்களில் அதனை அகற்ற முடியும்.

பாடசாலைக்குள் பிரவேசிக்கும் போதும் அனைத்து மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதாக வகுப்பு மட்டத்தில் ஓய்வு நேரம் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தமது வீடுகளிலிருந்து எடுத்து வரும் உணவு, குடிநீர் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிமாற்றிக் கொள்ளக் கூடாது. தூர இடைவெளியை பேணி, உடற் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். பிள்ளைகளின் மனநல சுகாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகளின் அவசியம் குறித்தும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் உள்ள பிள்ளைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள், கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் ஆகியோர் சுகாதார ஆலோசனைகள் கிடைக்கும் வரை பாடசாலைகளுக்கு வருவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு கேட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று மாலை இடம்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாத்தளையைச் சேர்ந்த இந்த மாணவர் வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார். இதனையடுத்து தம்புள்ளையிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார் என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாணவனின் தாயாருக்கு கொரோனா தொற்று உள்ளது என கண்டறியப்பட்ட நிலையில் மாணவனிடமும் மாதிரிகள் பெறப்பட்டன.

அவரது மாதிரிகள் உடனடியாக பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் உணவு வாங்கச் சென்ற ஆனைப்பந்தி உணவகம் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

2 பெண்களை ஒன்றாக காதலித்து வாழ்ந்து வந்த இளைஞன் : அதிரடியாக கிராம மக்கள் செய்த செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நபர், அதன் பின் கிராம மக்கள் எழுப்பிய கேள்வியால், அவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் பஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் சந்து மவுர்யா. விவசாயியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 21 வயது மதிக்கத்தக்க சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணை காதலிக்க துவங்கியுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், உறவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற சந்து மவுர்யா அங்கிருந்த ஹசீனா என்ற பெண் மீது காதலில் விழுந்துள்ளார்.

சுந்தரி என்ற பெண்ணை காதலித்து வருவது குறித்து ஹசீனாவிடம் சந்து மவுர்யா உடனடியாக கூறியுள்ளார். இருப்பினும் இரண்டு பேருமே அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்க, மூன்று பேரின் காதலும் மொபைல் போனில் சென்றுள்ளது.

திடீரென ஹசீனா சந்துவுடன் வாழ்வதற்காக அவரது வீட்டிற்கே வந்துள்ளார். ஹசீனா சந்துவின் வீட்டிற்கு வந்துள்ள தகவலறிந்த சுந்தரியும், சந்துவுடன் இணைந்து வாழ அவரின் வீட்டிற்கே வந்துள்ளார்.

இதனால் மூன்று பேரும், இணைந்து திருமணம் செய்யாமலே ஒரு வாழ்ந்து வந்துள்ளனர். திருமணம் செய்யாமல் இரண்டு பெண்களுடன் இணைந்து வாழ்ந்து வந்ததை சந்துவின் கிராம மக்கள் கேள்வி எழுப்பிய போது, இருவரையும் திருமணம் செய்ய போவதாக சந்து தெரிவித்துள்ளார்.

இரண்டு பேரும் தன் மீது விருப்பம் கொண்டுள்ளதாகவும், அவர்களை ஏமாற்றாமல் இணைந்து சந்தோஷமாக வாழ்வேன் என்றும் சந்து குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 500 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் சந்து – ஹசீனா – சுந்தரிக்கு திருமணம் நடைபெற்றது. ஹசீனாவின் குடும்பத்தினர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுந்தரியின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.