கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த யாசகரின் பையில் இருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வைத்தியசாலை ஊழியர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
கிளிநொச்சியில் சில காலமாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 60 வயதுடைய நபர் திடீரென சுகயீனமடைந்துள்ளளார். குறித்த நபரை முச்சக்கர வண்டி சாரதிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிகிச்சை பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்கள் அவரை சடலத்தை தகனம் செய்துள்ளனர். பின்னர் யாசகரின் பையை சோதனையிட்ட போது இந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தினுள் 62 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்தும் வர்த்தக நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு நேற்றையதினம் (09.01) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகும் வரையிலும்,
இன்று (10.01) மதியம் தொடக்கம் நகரின் சில வீதிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த 55 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று முனதினம் (08.01) இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அப் பகுதியினுள் எவரும் உள் செல்லவும் வெளிச்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் நேற்றையதினம் (09.01) கந்தசுவாமி கோவில் வீதி, முதலாம் குருக்குத்தெரு, சூசைப்பிள்ளையார் குள வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி என்பனவும் பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் குறித்த வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகும் வரையும் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி கந்தசுவாமி கோவில் வீதி, முதலாம் குருக்குத்தெரு, சூசைப்பிள்ளையார் குள வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி என்பன இன்று (10.01.2021) காலை 10 மணி தொடக்கம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வவுனியா – திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியின் சில பகுதி முடக்கப்பட்டுள்ளமையினால் சாரதிகள் , பொதுமக்களை மாற்றுப்பாதையான இரண்டாம் குருக்குத்தெரு வீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா நகரின் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட வர்த்தக நிலையங்களை பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகும் வரை மூடுமாறு அரசாங்க அதிபர் தெரிவித்த போதிலும் அரசாங்க அதிபரின் உத்தரவினை மீறி பல வர்த்தக நிலையங்கள் நகரில் திறக்கப்பட்டுள்ளன.
வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் கடந்த புதன்கிழமை (06.01) காலை முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 54 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் (08.01) இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அப் பகுதியினுள் எவரும் உள் செல்லவும் , வெளிச்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் நேற்று (09.01) காலை 10.00 மணி தொடக்கம் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, முதலாம் குருக்குத்தெரு, கந்தசுவாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி என்பனவும் பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (09.01) அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கு அமைவாக நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக நிலையங்களில்,
பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு பி.சி.ஆர் பெறுபேறு வரும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மில் வீதி, முதலாம் குருக்குத்தெரு, கந்தசுவாமி கோவில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி ஆகிய பகுதிகளில் பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக நிலையங்கள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகாத நிலையில் அரசாங்க அதிபரின் உத்தரவினை மீறி இன்று (10.01) வழமை போன்று திறக்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்களின் அசமந்த போக்கான நிலையினால் அவர்களின் பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின்ற சமயத்தில் கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் வியாபார நிலையங்களுக்கு சென்று வந்த மக்களின் நிலமை கேள்விக்குறியே. எனவே இவ்வாறு அசமந்த போக்காக செயற்படும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
வவுனியா நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னரே வவுனியா நகரின் முடக்க நிலை தளர்த்தப்படும் என வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (09.01.2021) இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா நகரில் 54 கொவிட் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதன்படி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நகரில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிபவர்களின் சுகாதார தன்மையினை கருத்தில் கொண்டு அவர்களிற்கு பி.சி.ஆர்பரிசோதனை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நகரின் சில பகுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட சந்தியில் இருந்து இறம்பைக்குளம் மகளீர் பாடசாலை வரையான சந்தி,
தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வரையான பகுதி, காமினி மகா வித்தியாலயத்தை உள்ளடக்கிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு அரச அதிபர் பணித்துள்ளார்.
இதேவேளை, மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்படாத நிலையில் கூட்டுறவுசங்கங்கள், சதோச நிறுவனம், மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களிற்கு முதற்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, பழங்கள் மற்றும் மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடுபவர்கள் நாளையில் இருந்து காமினி மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள மைதானத்தில் அதனை முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் சாலை ஓரங்களில் வியாபாரம் மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நகர்ப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், மற்றும் ஆரம்ப பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை,
காமினி மகா வித்தியாலயம், முஸ்லிம் மகாவித்தியாலம் மற்றும் ஆரம்ப பாடசாலை ஆகிய ஏழு பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகுதியினரின் பிசீஆர் முடிவுகள் நேற்று (09.01) இரவு வெளியாகியுள்ளன.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் கிராமமும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய 140 பேரிடம் நேற்றுமுன்தினம் (08.01) பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் 100 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 40 பேரின் பிசீஆர் பரிசோதனைகள் மீளவும் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியா நகரில் 204 பேருக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் (08.01) 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 55 கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியா மாவட்ட சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் நேற்றையதினம் வவுனியாவிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முதல் வவுனியா ஜும்மா பகுதி, வவுனியா- கடைத்தெரு, தர்மலிங்கம் வீதி மற்றும் பொதுச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 47,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவு தூபியை இடித்து அழித்தமைக்கு எ திர்ப்பு தெரிவித்து வடக்கு- கிழக்கு பகுதியில் திங்கள் கிழமை இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போ.ராட்டத்திற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் லரீப் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய அரசாங்கமானது சிறுபான்மை சமூகத்தினது உரிமைகளை மதிக்காது பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையுடன் சிறுபான்மை சமூகத்தின் மீது அ டக் குமுறை ஆட்சியை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களாகிய தமிழ், முஸ்லிம் மக்கள் தமது உரிமைக்காக இந்த அரசாங்கத்திற்கு எ திராக கூட்டாக போ ராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கொரோனாவால் ம ரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வரும் நிலையில் கூட இந்த அரசாங்கம் ஜனநாயக வி ரோதமாக செயற்பட்டு வருகின்றது.
மக்களின் உரிமைகளையும், மத கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை தொடர்கின்றது. தமிழ் மக்கள் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட தமது உறவுகளின் நினைவாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைத்திருந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் தூபி கூட, இ றந்தவர்களின் நினைவு கூரும் உரிமையை மறுதலிக்கும் வகையில் இரவோடு இரவாக இ டித்து அ.ழிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதாவது தமது தாயகப் பிரதேசத்தில் கூட தமது உறவுகளை நினைவு கூர முடியாத நிலையில் சிறுபான்மை சமூகத்தை இந்த அரசாங்கம் அ டக்கி ஆளுகின்றது. இது ஒவ்வொரு தமிழ் மக்களின் மனங்களிலும் ப லத்த கா யங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எ திராக ஒட்டுமொத்த தமிழ் -முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு போ ராட வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முள்ளிவாய்கால் நினைவுத்தூபி அ ழிப்புக்கு எ திராக எதிர்வரும் திங்கள் கிழமை வடக்கு, கிழக்கு பகுதியில் பூரண கதவடைப்பு போ.ராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
குறித்த போ ராட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாமும் எமது ஆதரவைத் தெரிவிப்பதுடன், குறித்த கதவடைப்பு போ.ராட்டத்திற்கு அனைத்து தமிழ், முஸ்லிம் மக்களும் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஓருமித்த குரலில் தமது எ திர்ப்பை காட்ட முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக கூறப்பட்ட இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து 62 பயணிகளுடன் போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட இந்த விமானம் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இவ்விமானத்தில் 46 ஆண்களும் பெண்களும், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்கள் இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்துள்ளது.
இந்தநிலையில் ஜகார்த்தா விரிகுடாவில் வானூர்தியில் பயணித்தவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கு தழுவிய முழு கதவடைப்புக்கு தமிழ்த் தேசியத் தரப்பு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக குறித்த அழைப்பை விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.
இதன்போது அங்கு சென்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமைக்கு நீதிகோரி எதிர்வரும் 11ஆம் திகதி வடக்கு,கிழக்கு தழுவிய ரீதியிலான ஹர்த்தால் போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
அனைத்துத் தரப்பினரும் குறித்த கலந்துரையாடலில் இருந்தமையால் உடனடியாகவே மாணவர்களின் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு ஊடகச் சந்திப்பில் தேசியக்கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், செல்வராசா கஜேந்திரன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் மாணவப் பிரிநிதிகளும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு தழுவியதாக பூரணஹர்த்தால் போராட்டத்துக்கு வர்த்தக சங்கத்தினர், பஸ் உரிமையாளர்கள்உள்ளடங்கலாக அனைவரையும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
வவுனியாவின் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை சந்தை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக மறு அறிவித்தல் வரை இன்றிலிருந்து மூடப்பட்டுள்ளதால்,
காமினி மகாவித்தியாலய மைதானத்தில் மொத்த மரக்கறி கொள்வனவு மற்றும் விற்பனை இடம்பெறும் என உள்ளூர் விளைபொருள் மொத்த விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 தொற்று காரணமாக வவுனியா நகரப்பகுதி சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமது மொத்த விற்பனை சந்தையும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
எனவே, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் வவுனியா காமினி வித்தியாலயத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே நாளை (09.01) காலை 6 மணியிலிருந்து குறித்த மைதானத்தில் இச்செயற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது.
எனவே மக்களுக்கும் குறித்த பகுதிகளுக்கு வருகை தந்து தமக்கு தேவையான மரக்கறிகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட இடங்களில் தொற்று நீக்கும் செயற்பாட்டில் வவுனியா பொலிஸார் இன்று (09.01.2020) காலை ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 54 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் பணியாற்றிய மற்றும் நடமாடிய பகுதிகளான பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன வவுனியா பொலிஸாரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா நகரில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் உயரிய பணியில் வவுனியா சுகாதார திணைக்களம், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார், வவுனியா வர்த்தக சங்கத்தினர் ஆகியோரின் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்ட பொது மக்களுக்கானதும் ஏனையோருக்குமான சுகாதாரத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல் ஒன்றை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு நேற்றைய தினம் (08.01.2021) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே வவுனியா நகர்ப்பகுதிக்கு மிகவும் அவசியம் இன்றி வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மேற்குறிப்பிட்ட இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருள்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் யாவரும் தங்கள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக பிரிவினருடன் (சுகாதார மருத்துவ அதிகாரி,
பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை உத்தியோகத்தருடன் தொடர்புகொண்டு தம்முடைய தகவல்களை தெரிவிப்பதுடன் கோரோனாத் தொற்றை அறிந்து கொள்வதற்கான பிசிஆர் பரிசோதனையும் செய்துகொள்ள முடியும்.
அவ்வாறு தகவல் வழங்குவதில் ஏதும் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர அழைப்பெண்ணான 021 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு,
தங்கள் விவரங்களை தெரியப்படுத்துவீர்களாயின் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கான கடமையைச் செய்தவர்களாவீர்கள்.
வவுனியா மாவட்ட நகர்ப் பகுதியூடாக போக்குவரத்துச் செய்பவர்கள் வவுனியா நகர்ப்பகுதிக்குள் நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இவ் இக்கட்டான காலப் பகுதியில் நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எமது சமூகத்தை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்
09.01.2021
வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் மூடப்பட்டுள்ளது என எச்சரிக்கை அறிவித்தல் சுகாதார பிரிவினரினால் ஒட்டப்பட்டுள்ளன.
வவுனியா நகரப்பகுதியான பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 54 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் இன்று (09.01) காலை 10.00 மணி தொடக்கம் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, கந்தசாமி கோவில் வீதி, முதலாம் குறுக்குத்தெரு, சூசைப்பிள்ளையார் வீதி என்பன பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார பிரிவினரினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந் நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மூடும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் இவ் வியாபார நிலையத்தில் கடமைபுரிபவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் வரை இந்நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என்ற அறிவித்தல் சுகாதார பிரிவினரினால் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒட்டப்பட்டு வருகின்றன.
வவுனியா நகரின் சில பகுதியில் மறுஅறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (09.01.2021) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 6ம் திகதி தர்மலிங்கம் வீதி , பஜார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம் 204 நபர்களுக்கு பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது. அதில் 54 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில் இன்றையதினம் விசேடமான ஒர் கலந்துரையாடல் ஒன்று வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார பிரிவினர், வன்னி பாதுகாப்பு படை பிரிவினர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களுடன் இடம்பெற்றிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கு அமைவாக நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு பி.சி.ஆர் பெறுபேறு வரும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி முன்றயிலிருந்து குடியிருப்பு பிள்ளையார் கோவிலடி சந்தி வரையிலும், இறம்பைக்குளம் பெண்கள் பாடசாலை சந்தியடி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சந்தி,
மன்னார் வீதியில் காமினி மாகா வித்தியாலயம் வரையிலான வீதி, புகையிரத நிலைய வீதி ஆகியவற்றினை மறு அறிவித்தல் வரை மூடுவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இவ்விடயம் தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் பாதிப்படையாது இருக்கும் வகையில் கூட்டுறவு சங்கம், மருந்து விற்பனை நிலையம், சதொச விற்பனை நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் மாதிரிகளை பெற்று அதன் பெறுபேற்றினை முன்வைக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாளையதினம் முதல் (10.01) மொத்த மரக்கறிகள் , பழங்கள் விற்பனை செய்பவர்கள் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் வியாபாரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பாதையோர வியாபார நடவடிக்கைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறுகள் வரும் வரையில் வவுனியா நகரின் நிலமை மீள் திரும்புவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென என்பதுடன்,
பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படாத நபர்கள் மீதும் தனிமைப்படுத்தலை மீறி செயற்படுபவர்கள் மீதும் சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாகவும்,
மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை தமிழ் கலவன் பாடசாலை,
காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (11.01) வழமை போன்று ஆரம்பமாகும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் வவுனியா மாவட்டம் அபாயமான கட்டத்தில் இருப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் உருவான கொரோனா கொத்தணி 61 பேராக உயர்ந்துள்ளது. அவர்களில் வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் 54 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா நகரின் பசார்வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தைவீதி, ஆகியன முடக்கப்பட்டுத் தொற்று உறுதியானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை குறித்த வீதிகள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனேகமான பொதுமக்கள் தமது அன்றாடத் தேவைகளிற்காகத் தினமும் வந்துசெல்லும் பகுதியாக விளங்குகின்றது.
ஆடையகம், அடைவுக் கடை, நிதி நிறுவனங்கள், மரக்கறி விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு கடைத்தொகுதிகளை கொண்டமைந்துள்ளதாக இந்த வீதிகள் காணப்படுகின்றது.
இதேவேளை நேற்று மதியம் 1 மணியளவில் 54 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படும் வரை குறித்த வியாபார நிலையங்கள் மற்றும் ஆடையகங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது தேவைகளிற்காக வந்து சென்றுள்ளனர்.
எனவே தற்போது 54 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்திலுள்ள அனேகமான பொதுமக்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகி இருப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்று முன்தினம் பி.சி.ஆர் மாதிரிகள் எடுக்கப்பட்ட 204 பேரில் தொற்று உறுதி செய்யப்பட்ட பலர் வேறு பகுதிகளில் சென்று தங்கியுள்ளமையால் அதன் மூலமும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றும் பட்டாணிச்சூர் மற்றும் வவுனியா நகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் முடிவுகள் நாளையே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தினுள் 62 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரின் சில வீதிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 55 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று (08.01) இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அப் பகுதியினுள் எவரும் உள் செல்லவும், வெளிச்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இன்று (09.01) காலை 10.00 மணி தொடக்கம் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி என்பனவும் பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா – திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியின் சில பகுதி முடக்கப்பட்டுள்ளமையினால் சாரதிகள், பொதுமக்களை மாற்றுப் பாதையான கந்தசுவாமி கோவில் வீதி , முதலாம் குருக்குத்தெரு ஆகிய பாதைகளை பாவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.