மேல் மாகாணத்தில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வேறு பகுதிகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு பரவும் வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள தகவலுக்கமைய மேல் மாகாணத்திற்கு வெளியே பரவும் வீதம் 50 இற்கும் அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேடமாக கேகாலை பிரதேசத்தில் புதிதாக இரண்டு கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுளள்ளார்.
அந்த தொற்றாளர்களின் முதல் நாளிலேயே நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று மாலை வெளியாகிய பிசீஆர் முடிவுகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டாணிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலைய பகுதியில் கடந்த வாரம் 62 பேரும், நேற்றைய (10.01) தினம் பட்டாணிச்சூர் பகுதியில் 6 பேரும், ஈச்சங்குளம், கெப்பற்றிக்கொல்லாவ பகுதியைச் சேர்ந்த தலா ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
இதையடுத்து வவுனியாவின் பல பகுதிகளும் முடக்கப்பட்டன. அத்துடன் அவர்களுடன் தொடர்புடைய பலரிடமும் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை (11.01) வெளியாகிய பிசீஆர் முடிவுகளின் படி வவுனியா வடக்கில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இன்று மாலை (11.01) வெளியாகிய பிசீஆர் முடிவுகளில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கும், நெஞ்சுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குமாக மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் வவுனியாவில் 73 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி பிசீஆர் எடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்கும் சுகாதார பிரிவினர் மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் மரக்கறி வியாபாரிகளின் நலனை கருத்து கொண்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள இடம் ஒதுக்கிட்டு வழங்கப்பட்ட போதிலும்,
தற்போது வவுனியாவில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்விடத்தினை பயன்படுத்த முடியாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் ஆலோசனைக்கமைய வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில் 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு,
பயன்பாடற்ற நிலையில் காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்தினை தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே வியாபாரிகள், விவசாயிகள் அனைவரும் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை நாளை காலை முதல் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளுமாறு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் இன்று (11.01.2021) காலை 5.30 மணி தொடக்கம் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல மக்களின் வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
சுமார் 8 மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம், பூந்தோட்டம் உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அத்துடன் பூந்தோட்டம் ஸ்ரீநகர், உக்கிளாங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கு மேற்பட்டவர்களின் வீடுகளின் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் அவர்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா நகரில் இன்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைக்குப் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.
வவுனியாவில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது.
இதனையும் பொருட்படுத்தாமல் சுகாதார அதிகாரிகளினால் நேற்று விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்று காலை நகரில் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய பேருந்து நிலைய வர்த்தகர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை இன்றைய கடையடைப்பு முடக்கம் காரணமாக நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்களில் ஊழியர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றனர்.
இன்றைய வடகிழக்கு கடையடைப்பு காரணமாக அரச திணைக்களங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
2021ம் ஆண்டு முதலாம் தவணைக்காக நாடு முழுவதும் இன்று (11.01) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 69 கொரோனா தொற்றாளர்கள் வவுனியா மாவட்டத்தில் இனங்காணப்பட்ட நிலையில் வவுனியா பாடசாலைகளில் மிகக் குறைந்தளவு மாணவர்களே பாடசாலைக்கு வருகைதந்துள்ளனர்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக வவுனியா நகரின் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி கந்தசுவாமி கோவில் வீதி , முதலாம் குருக்குத்தெரு, சூசைப்பிள்ளையார் குள வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி என்பன நேற்று காலை முதல் முடக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் இன்றையதினமும் நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக நகர பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை தமிழ் கலவன் பாடசாலை,
காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுள்ளமையுடன் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட போதிலும் கொரோனா அச்சம் காரணமாக மிக குறைந்தளவிலான மாணவர்களே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒர் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒர் ஆசிரியரின் பி.சி.ஆர் முடிவு சந்தேகத்தின் அடிப்படையில் மீள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் என 276 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் சில முடிவுகள் இன்று (11.01) காலை வெளியாகின.
இந் நிலையில் நெடுங்கேணி பகுதியினை சேர்ந்த ஒர் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் மேலும் ஒர் ஆசிரியரின் பி.சி.ஆர் முடிவு சந்தேகத்திற்கிடமான முறையில் உள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 54 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 2 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 70 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக வவுனியா மாவட்டமும் முடங்கியது.
வவுனியா நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. மேலும் அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.
வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் போது மக்கள் இன்றியே காணப்பட்டன.
அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவில் மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணிக்கு சமூகமளிக்காமல் இருந்த அனைத்து அரசாங்க ஊழியர்களும் மீண்டும் வழமை போன்று பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமையான நாளையதினம் முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 தொற்று காரணமாக கடந்த காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கொரோனா தொற்றுடன் தற்போது, அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அமைச்சினால் தற்போது சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சுகாதார வழிமுறைகளின் கீழ், அனைத்து ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பிலான நடவடிக்கைகளுடன், மக்களுக்கு தேவையான ஏனைய அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து ஊழியர்களையும் நாளை (11) முதல் கடமைக்கு அழைப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளுடனேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஊழியர்களில் கர்ப்பிணி தாய்மார்கள் இருப்பின் அவர்களை வாரத்திற்கு 3 நாட்களுக்கு சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
PCR பரிசோதனை மேற்கொள்ளாத வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் நாளை (11.01.2021) காலை 8.30 மணி முதல் கீழ் குறிப்பிட்ட இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
1. பழைய பஸ் நிலையம்
2. 2ம் குறுக்குத்தெரு ( Nelly Star Hotel ) அருகில்
3. கொரவப்பொத்தான வீதி (Royal Garden Hotel) அருகில்
4. புகையிரத நிலைய வீதி (சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்)
குறிப்பு : PCR பரிசோதனை மேற்கொண்டு பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாத்திரமே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்கள் என சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வர்த்தகர் சங்கம்,
வவுனியா.
தலைவர் 774048920
செயலாளர் 777585929
பொருளாளர் 773017779
அலுவலகம் 766628386
தமிழகத்தில், விடுமுறைக்கு வந்த காவலர் மனைவி மற்றும் உறவினர்கள் மன அழுத்தம் கொடுப்பதாக 22 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மா.யமாகியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் திகதி இவருக்கும், குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்த ஷெலின் ஷீபாவுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஷிஷன்சிங் (9),ஷைஷா (6) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணம் ஆன, சிறிது நாட்களிலே மாமனாரின் வீட்டிற்கு சென்ற போது, அவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கடந்த 6-ஆம் திகதி நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்று உள்ளார்.
அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி அ.டி.த்.து.ள்.ள.ன.ர்.
மனம் உடைந்த ஜினிகுமார் வீட்டில் வந்து தந்தையிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளார் இரவு தூங்க சென்ற பின் காலையில் மகனை வீட்டில் தேடிய பிறகு காணவில்லை. மகனின் அறையில் சென்று பார்த்தபோது 22 பக்க கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் நிறைய குடும்ப விஷயங்களை குறிப்பிட்டுள்ள ஜினிகுமார், கடந்த 6-ஆம் திகதி நடந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், கடந்த 6-ஆம் திகதி குமரி மாவட்டம் நட்டாலத்தில் உள்ள மனைவி பிள்ளைகளை பார்க்க சென்றேன்.
அப்போது மனைவி மற்றும் மைத்துனர் மாமியார் லலிதா ஆகியோர் சேர்ந்து நட்டாலம் ,வெள்ளாங்கோடு பகுதியில் உள்ள சொத்துகளை மனைவி பெயரில் எழுத கட்டாயபடுத்தி செருப்பால் அ.டி.த்.து அவமானப்படுத்தினர்.
இதனால், தான் வாழ்கையை முடித்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு மா.யமாகியுள்ளார். மேலும், அந்த கடிதத்தில் தனது சொத்துக்கு தந்தைக்கே சட்டபூர்வ உரிமை உள்ளது என்று கூறியுள்ளார்.
வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 69 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரு தொகுதியினரின் முடிவுகள் இன்று மாலை வெளியாகிய நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் வவுனியானின் ஈச்சங்குளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கோரோனா தொற்று பீடித்திருந்தமை கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது. இந் நிலையில் பட்டானிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 146 பேரில் நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அவர்களில் 40 பேரின் முடிவுகள் மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது அவர்களில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.
இதேவேளை வவுனியா நகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்ப்படவுள்ளது.
இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்தமாக 8 பேருக்கு இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஒருவாரத்தில் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழத்தில் இ ளம் பெ ண்ணை அ.வ.ர் கா தலனே ந ண்பருடன் சே ர்ந்து கொ.லை செ.ய்.த ச ம்பவ த்தின் அ.தி.ர்.ச்.சி பி ன்னணி வெ ளியாகியு ள்ளது. திண்டுக்கல் மா.வட்டம் கள்ளிமந்தையம் அ.ரு.கே உ.ள்.ள வா.கரையில் சா லையோ ரத்தில், க டந்த 5ம் தி.க.தி 20 வ ய து இ ள ம் பெ.ண் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க கி.ட.ந்.தா.ர்.
இதுகுறித்து பொலிசார் வ ழக்குப் ப.தி.வு செய்து வி சாரணை ந டத்தினர். வி.சாரணையில் இ.ற.ந்.து கி.ட.ந்.த பெண், ஜெயஸ்ரீ (20) என்று தெரியவந்தது. இவர், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி இந்திராநகரை சேர்ந்த கொத்தனார் கதிர்வேல் என்பவரின் மகள் ஆவார்.
இந்தநிலையில் ஜெயஸ்ரீயின் ம.ர.ண.த்.தி.ற்.கா.ன காரணம் குறித்து போலீசார் தீ.வி.ர வி.சா.ர.ணை.யி.ல் ஈடுபட்டனர். இதற்கு அவரது செல்போனை துருப்புச் சீட்டாக பயன்படுத்தினர்.
அதாவது ஜெயஸ்ரீயிடம் செல்போனில் யார் யார் பேசி உள்ளனர் என்ற பட்டியலை பொலிசார் சேகரித்தனர். அப்போது, பழனி அருகே உள்ள கோம்பைபட்டியை சேர்ந்த தங்கதுரை (25) என்பவர் ஜெயஸ்ரீயிடம் அதிக நேரம் பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்கதுரையை பி.டி.த்.து வி.சாரித்ததில் ப.கீ.ர் தகவல் வெளியானது. பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஜெயஸ்ரீயும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகியுள்ளனர். இந்த காதல் கடந்த ஆறுமாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வ.ற்.பு.று.த்.தி வந்துள்ளார்.
சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை, தன்னை திருமணம் செய்து கொள்ள ஜெயஸ்ரீ வ.ற்.பு.று.த்.து.வ.தா.க அவரது வீட்டிற்கு போன்று செய்ததால், ஜெயஸ்ரீயை பெற்றோர் க.ண்.டி.த்.து.ள்.ள.ன.ர்.
இதனிடையே 31ம் திகதி அன்று இரவு தங்கதுரைக்கு தெலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ, மறுநாள் அங்கு வருவதாகவும், தன்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 1ம் திகதி மாலை ஒட்டன்சத்திரத்திற்கு பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை, இருசக்கர வாகனத்தில் வந்த தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.
மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறிப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் மு.ற்.ற ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த தங்கதுரையும் அவரது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து அ ங்கேயே ஒ.ரு பு.த.ரி.ல் உ.ட.லை ம.றை.த்.து வை.த்.து.வி.ட்.டு த.ப்.பி.ய.து வி.சா.ர.ணை.யி.ல் அ.ம்பலமானது.
இதை தொடர்ந்து தங்கதுரை மற்றும் ஜெகநாதனை பொலிசார் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டைத்தனர்.
தமிழகத்தில் காரணமே இல்லாமல் இளம் பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளார். சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மனைவி பிரீத்தி.
இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உடல் நலக்குறைவால் இ.றந்துவிட்டார். தாயும் மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.
பயோகெமிக்கல் படித்த கவுசல்யா பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக, சென்னை திரும்பிய அவர் தற்போத வீட்டில் இருந்தபடி பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், தன் வீட்டில் உள்ள அறையில் திடீரென்று துா.க்.கி.ட்.டு கவுசல்யா த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். ஏற்கெனவே, கணவர் இழந்த நிலையில் மகளை பறிகொடுத்த தாயார் ப்ரீத்தி க த றி அ ழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கவுசல்யாவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
காதல் விவகாரம் எதிலும் அவர் சிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனால் அவர் எதற்காக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார் என வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தன் மனைவி மீது ச ந்தேகம் கொண்ட நபர் அவரை கோ.டா.ரி.யா.ல் வெ.ட்.டி கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வ.ம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் Mahoba மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க சுனிதா என்ற பெண் கடந்த புதன் கிழமை வீட்டில் கொ.டூ.ர.மா.ன மு.றை.யி.ல் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர்.
இதில் சுனிதா பக்கத்து வீட்டில் இருக்கும் நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்த தகவல் பால்ராமுக்கு தெரியவர, இது குறித்து மனைவி சுனிதாவிடம் வா.க்.கு.வா.த.தி.ல் ஈடுபட்டுள்ளார்.
முதற்கட்ட வி சாரணையில் பால்ராம் ஒரு நிலையற்ற மனம் கொண்டவர், அதாவது எப்போதும் மனைவி மீது ச ந்தேகம் கொண்டு, அவரிடம் ச.ண்.டை போ.ட்.டு கொண்டே இருப்பார் என அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகத்தினால் அண்மையில் நடத்திய புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதையலில் தங்கத்திற்கு மேலதிமாக உலோகமும் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கப் புதையல் தொடர்பில் 1950 ஆண்டு முதன் முதலாக தகவல் வெளியாகியிருந்த போதிலும் எந்த ஒரு அரசாங்கமும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
தற்போது உலக சந்தையில் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் செப்பு இந்த புதையலில் உள்ளது. இதனை உரிய முறையில் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டால் அதிக கடனில் சிக்கி தவிக்கும் இலங்கையை மிகவும் சிறிய காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.