வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும்!!

மழையுடனான வானிலை..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்ரமணியம் ரமேஸ் இன்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி!!

விபத்து..

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த என்சிலூன் முஜிபுர் ரஹ்மான் (29வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல இடங்களில் தங்க சுரங்கங்கள் : கோடிஸ்வர நாடாக மாறப்போகும் இலங்கை?

தங்க சுரங்கங்கள்..

இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் நான்கு பகுதிகளில் தங்கம் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணத்தில் இந்த தங்க புதையல் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

பேராதனை பல்ககைலக்கழகத்தின் இரத்தினகல் மற்றும் நகை நிலையம், கனடா, அயர்லாந்து ஆகிய ஆய்வு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் இலங்கையின் நிலபரப்பில் தங்கம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேருவில பிரதேசத்தில் இரும்பு அமைந்துள்ள இடங்களில் மூன்று, நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் தங்கம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேருவில பிரதேசத்திற்கு அருகில் தங்கம் உள்ளமை பேராதனை பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

நிலத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 600 அடி தோண்டிய பின்னர் இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறித்த பிரதேசங்களில் ஒரு தொன் கல் அகழ்வு மேற்கொள்ளும் போது 5 கிராம் வரையில் கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு மேலதிகமாக ஏனைய பகுதிகளில் நான்கு சதுர கிலோமீட்டர், அளவு தங்கம் உள்ளது. அரசாங்கம் அல்லது வேறு நிறுவனங்களின் உதவி கிடைக்கும் என்றால் தொடர்ந்து அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த தங்கங்களை முறையாக அகழ்ந்து எடுத்தால், பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கையின் முழு கடனையும் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

நித்திரையிலிருந்த சிறுவன் பாம்பு தீண்டி மரணம்!!

ரொபட் தோபிய எஸ்கர்..

நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஒஸ்போன் தோட்டதை சேர்ந்த 12 வயதான ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதிகாலை ஒரு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசிவிட்டு மீண்டும் நித்திரை கொண்டுள்ளானர்.

இந்நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசலைக்கு கொண்டு செல்கையிலே உயிரிழந்துள்ளர்.

மேலும் , சிறுவனை தீண்டிய பாம்பை இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியபோது பாம்பு தீண்டி விசமானதாலே உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது. மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு இன்று மதியம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, பட்டானிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலையப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் பிசீஆர் பரிசோதனைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதில் கடந்த சனிக்கிழமை மில் வீதியில் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் இருவருக்கும், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் இருவருக்கும் என நான்கு பேருக்கு இன்று மதியம் (12.01) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் 128 பேர் வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, வவுனியா நகரம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள் இன்று (12.01) முதல் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா நகரக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரை இரண்டு கிழமைகள் முடக்குமாறு சுகாதார திணைக்களம் பரிந்துரை!!

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்றையதினம் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையான முடக்கத்தினை முன்னெடுக்குமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

அந்தவகையில் A9வீதியில் நொச்சிமோட்டை பாலம், மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ்நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்படும்.

குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளேவரும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்படும். இன்றிலிருந்து இரண்டு கிழமைகளிற்கு இந்த நடைமுறை நீடிக்கும்.

அவசர தேவைகள், அத்தியாவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன் வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப் பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகளை நாம் அனுப்பியுள்ளோம். ஏனைய நடவடிக்கைகளை அரச அதிபர் முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.

வவுனியா நகரை இரண்டு கிழமைகள் முடக்குமாறு சுகாதார திணைக்களம் பரிந்துரை!!

சுகாதார திணைக்களம் பரிந்துரை..

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்றையதினம் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையான முடக்கத்தினை முன்னெடுக்குமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

அந்தவகையில் A9வீதியில் நொச்சிமோட்டை பாலம், மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ்நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்படும்.

குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளேவரும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்படும். இன்றிலிருந்து இரண்டு கிழமைகளிற்கு இந்த நடைமுறை நீடிக்கும்.

அவசர தேவைகள், அத்தியாவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன் வெளி மாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப் பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பரிந்துரைகளை நாம் அனுப்பியுள்ளோம். ஏனைய நடவடிக்கைகளை அரச அதிபர் முன்னெடுப்பார் என்று தெரிவித்தார்.

வவுனியா நகரை அண்மித்த பிரதேசங்கள் இன்றுமுதல் 24ம் திகதி வரை முடக்கப்படும்!!

இன்றுமுதல்..

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்ட பாடசாலைகள் 42ம் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகரை சேர்ந்த 2000 பேரினது பிசிஆர் முடிவுகள் வரும் வரைக்கும், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு வவுனியா நகர கோட்டத்திற்குட்பட்ட42 பாடசாலைகளை நாளைய தினம் மூட தீர்மானித்துள்ளதுடன் செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களைகொண்டு நாடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் இருந்து இயங்கும் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசியரியர்கள் கடமைக்கு செல்ல தேவையில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பல பகுதிகள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் : விபரம் உள்ளே!!

தனிப்படுத்தல் சட்டம்..

வவுனியாவில் திடிரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி, தாண்டிக்குளம் சந்தி, மாமடுவ சந்தி, பூந்தோட்டம் சந்தி, கண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பிரிவினர் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்துவதுடன்,

அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் செல்வற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் அரச உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையினை பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும் எனவும்,

வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து வன்னி இராணுவ முகாம் வரையும், வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும், வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுவதுடன் மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது தொடர்பிலும்,

தனிமைப்படுப்படும் பகுதிகளுடாக நகருக்குள் பிரவேசிக்கும் தனியார், இ.போ.ச பேரூந்துகள் நகரின் எப்பகுதியிலும் தரித்து நிற்பதற்கு தடை விதிக்கப்படுவதுடன் வைத்தியசாலைக்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மாத்திரம் பேரூந்துகளை நிறுத்த முடியும் எனவும்,

மூடக்கப்படும் பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையினையும் அமுல்படுத்தவுள்ளோம் போன்ற பல தீர்மானங்கள் இது வரை மேற்கொள்ளப்பட்டன.

இவ் விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர், சமயத்தலைவர்கள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1100 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு!!

பி.சீ.ஆர் பரிசோதனை..

பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து பட்டாணிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 103 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் பிரகாரம் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி , ஹொறவப்பொத்தானை வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி,

முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு, பழைய பேரூந்து நிலையம் என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .

அதன் படி கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் பழைய பஸ் நிலையம் ஹொரவப்பொத்தான வீதி, புகையிரத நிலைய வீதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மையத்தில் 1100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டாணிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 103 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 124 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை அனுஸ்டிக்க சுகாதாரப் பிரிவினர் தடை : மீறினால் தனிமைப்படுத்தல்!!

சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததினம்..

சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததினம் இன்று (12.01.2021) உலகில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் எமது நாட்டின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை நகரசபையினர் துப்பரவு செய்து பிறந்தநாளை அனுஸ்டிப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்த போதிலும் அதற்கு சுகாதாரப்பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 124 ஆக அதிகரித்துள்ளமையினால சுகாதார நடைமுறைகளுக்கமைய நிகழ்வினை நடத்த சுகாதார பிரிவினர் தடையுத்தரவு பிறப்பித்தமையுடன் மீறி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று (12.01) காலை 8.30 மணியளவில் இடம்பெறவிருந்த சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததினம் அனுஸ்டிப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் சற்றுமுன் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

வவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 10.00 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டாணிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 54 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி, ஹொறவப்பொத்தானை வீதி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஓர் முடிவு இன்று (11.01.2021) 8.00 மணியளவில் வெளியானதில் 25 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையுடன் வவுனியா வைத்தியசாலையிலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் இரவு 10.00 மணியளவில் வெளியான முடிவுகளில் 24 கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும்,

நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 103 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 124 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தமிழ் தம்பதிக்கு நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

விபத்து..

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று பேர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் மயில்சாமி (37). இவரது மனைவி இந்து (36). மயில்சாமி துபாயில் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த நிலையில் இந்து ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இந்து துபாயில் இருந்து கோவைக்கு திரும்பி வந்துவிட்டார். கடந்த வாரம் மயில்சாமி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே துபாயில் உள்ள ஒரு கம்பெனியில் ஓன்லைன் மூலம் இந்து வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே டென்மார்க் சென்று வேறு நிறுவனத்தில் வேலையில் சேர தம்பதி முடிவு செய்து இருந்தனர். இ்தற்காக குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மயில்சாமி முடிவு செய்தார்.

இதற்காக கோவையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு காரில் குடும்பத்துடன் புறப்பட்டனர். காரை மயில்சாமி ஓட்டினார். காரின் முன் இருக்கையில் இந்து அமர்ந்திருந்தார்.

பின் இருக்கையில் இந்துவின் தாயார் கவுசல்யா (60), மயில்சாமியின் மகன் கவுதம் (13), மயில்சாமியின் தம்பி மகள் ரம்யா (11), மயில்சாமியின் உறவினர் கலைவாணி (46) ஆகியோர் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வழியாக கார் சென்று கொண்டிருந்தது. வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே காலை 5 மணி அளவில் கார் வந்த போது கோவையில் இருந்து அட்டைப்பெட்டி ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லொறி ஒன்று பழுதடைந்து சாலையில் நின்றுகொண்டிருந்தது.

லொறியில் ஏற்பட்ட பழுதை ஓட்டுனர் பாபு (40) சரி செய்துகொண்டிருந்தார். அப்போது மயில்சாமி ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக லொறியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி, அவரது மனைவி இந்து, இந்துவின் தாயார் கவுசல்யா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த கலைவாணி, கவுதம், ரம்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

பின்னர் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார், சாலையில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை தடுப்பு வைக்காமல் லொறியை பழுது பார்த்த அதன் ஓட்டுனர் பாபுவை கைது செய்தனர்.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழர்களால் மு.ற்.று.கை!!

இலங்கை தூதரகம்..

மு.ள்ளிவாய்க்கால் நி.னைவுச் சி.ன்னம் த.ரை ம.ட்டமாக்கப்ப.ட்டுள்ளதை க.ண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் தமிழ் நாட்டுத் தமிழர்களால் மு.ற்.று.கை.யி.ட.ப்.ப.ட்.ட.து.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மு.ற்.று.கை போ.ரா.ட்.ட.த்.தி.ல் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் பங்குபற்றியிருந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

வவுனியாவில் சற்றுமுன் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

கொரோனா..

வவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 8 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டானிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 54 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு  நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதன் முடிவுகள் இன்று (11.01.2021) 8 மணியளவில் வெளியானதில் 25 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையுடன் வவுனியா வைத்தியசாலையிலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 79 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 100 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளியான முடிவுகளின் அடிப்படையில் மொத்தமாக 30 கொரோனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் வவுனியா மாவட்டம் அபாய கட்டத்தில் உள்ளமையை உணர முடிகின்றது.

டிப்பர் மோதியதில் பெண் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!!

டிப்பர் மோதியதில்..

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த பெண் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் தம்பலாகாமம் 96ஆம் கட்டைப் பகுதியிலுள்ள விகாரைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சாலியபுர – யுனிட் 13 பகுதியில் வசித்து வரும் கமே கும்புர கெதரலலிதா மெனிகே (51 வயது) என்பவரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.

குருணாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு நிலக்கரி வகைகளை ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணுடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியான மிகிந்தலை, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த பத்மபிரிய குலதுங்க (40வயது) என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் து.ப்.பா.க்.கி.ச் சூ.டு : வ ன்முறையாக மாறிய குடும்ப ச.ண்.டை!!

ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில்..

வவுனியாவில் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட.ப்.ப.ட்.ட நி.லை.யி.ல் ஆ.ண் ஒ.ரு.வ.ர் வ.வு.னி.யா வை.த்.தி.ய.சா.லை.யி.ல் அ.னு.ம.தி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.

வவுனியாவில் ஓமந்தை அரசமுறிப்பு ப.குதியில் க ணவன் ம னைவிக்கு இடையில் இ டம்பெற்ற ச.ண்.டை.யி.ன் போ து அ ங்கு வ ந்த ம னைவியின் சி.த்தப்பாவினால் கு றித்த பெ ண்ணின் க ணவன் மீ து து.ப்.பா.க்.கி பி.ர.யோ.க.ம் மே ற்கொண் டதோடு க.ட்.டை.யி.னா.லு.ம் ச.ர.மா.ரி.யா.க தா.க்.கு.த.ல் ந.டா.த்.தி.யு.ள்.ளா.ர்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஓமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாரால் கு ற்றவாளியை கை து செ ய்துள்ளதுடன், கு.ற்.ற.த்.தி.ற்.கு.ப் பயன்படுத்திய நா.ட்டுத் து.ப்.பா.க்.கி.யை.யு.ம் மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.

சூ.ட்.டு.க் கா.ய.த்.தி.ற்.கு.ள்.ளா.ன.வ.ர் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியசாலை அ.தி.தீ.வி.ர சி.கி.ச்.சை.ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணையினை வவுனியா ஓமந்தை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.