பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த இளம்பெண் : சில மாதங்களில் காத்திருந்த அதிர்ச்சி!!

பேஸ்புக் மூலம்..

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் மனைவியின் நகைகள் மற்றும் பணத்தை திருடிக்கொண்டு கணவன் ஓடிய சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனிதா. இளம்பெண்ணான இவருக்கு அபிஷேக் ஆர்யா என்பவர் பேஸ்புக் மூலம் நட்பானார். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினார். இதையடுத்து அபிஷேக் – சுனிதா திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின் வேலைக்கு செல்லாமல் இருந்த அபிஷேக் சுனிதாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொ ந்தரவு செய்து ச ண்டை போட்டார்.

அப்போது தான் அபிஷேக்கின் சுயரூபம் தெரியாமல் அவரை மணந்து கொண்டோமே என வேதனைப்பட்டிருக்கிறார் சுனிதா. பின்னர் சில மாதங்களில் வீட்டிலிருந்து மா யமானார் அபிஷேக்.

அப்போது வீட்டிலிருந்த ரூ 3 லட்சம் மதிப்பிலான நகைகள், ரூ 1 லட்சம் பணத்தை எல்லாம் திருடிக்கொண்டு ஓடியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த சுனிதா அ திர்ச்சியடைந்தார்.

ஒரு வருடமாக அபிஷேக் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அவர் கொல்கத்தாவில் இருப்பதாக சமீபத்தில் சுனிதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொலிசாருடன் சேர்ந்து கொல்கத்தாவுக்கு சுனிதா சென்ற போது அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரியவந்தது. மேலும் அங்கு அபிஷேக் இல்லை என தெரியவந்த நிலையில் அவரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

அவர் கிடைத்த பின்னர் மேலும் பல மோ சடிகள் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா : இன்று மட்டும் 18 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு சிற்றூழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பரிசோதனை கூடத்திலிருந்து இன்று (13.01.2021) இரவு 7.40 மணியளவில் வெளியான முடிவுகளின் அடிப்படையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது.அவருடன் தொடர்புகளை பேணிய சில வைத்தியசாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் முன்னெடுக்கப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் பட்டாணிச்சூர் பகுதியில் 14 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 122 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 12 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 149 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 18 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை வெளியான செய்தி  >> வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர்கள் 147 ஆக அதிகரிப்பு!!

வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (13.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

பக்தர்களை வரவேற்று ஆசி வழங்கும் நாய் : இந்தியாவில் வினோதம்!!

வினோதம்..

மகாராஷ்டிராவில் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களை, நாய் ஒன்று கைகொடுத்து ஆசிர்வாதம் வழங்கிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில், அகமத்நகர் மாவட்டத்தில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஒரு நாய் ஒவ்வொரு நாளும் கோவிலின் வாசலில் அமர்ந்துகொண்டு, அங்கு வரும் பக்தர்களை கை கொடுத்து வரவேற்கிறது.

அதேபோல், அதன் முன் தலைவணங்கும் பக்தர்களுக்கு தனது பாதங்களால் ஆசியும் வழங்குகிறது. அங்கு வரும் பக்தர்களும் அந்த நாயை கொஞ்சி தடவிக்கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

இதனை இணையவாசி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மிகவும் வைரலான இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் நாயின் தன்மையான, அன்பான நடத்தையை கண்டு நெகிழ்ச்சியடைகின்றனர்.

இது போன்று கோயில்களில் விலங்குகளில் தரிசனம் என்பது இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. விலங்குகளுக்கு எதிரான மனிதர்களின் வ ன்முறை சம்பவங்கள் அதிகரித்துவரும் இக்காலக்கட்டத்தில், இதுபோன்ற சமூக வலைதள பதிவுகள் மனிதர்களிடையே விலங்குகளின் மீதான கரிசனத்தை அதிகரிக்கச் செய்கிறது.

பொதுவாகவே இந்தியாவில் ஆமை, முதலை, குரங்கு, பல்லி, புலி, சிங்கம், கழுகு, பாம்பு என பல விலங்குகளை கடவுளாக வணங்குவது வழக்கத்தில் இருக்கிறது.

குறிப்பாக இந்து மத மக்களிடையே இது போன்ற விலங்குகள் வழிபாடு தொன்றுதொட்டு காணப்படுகிறது. இந்து மக்கள் நாயை ‘பைரவர்’ எனம் கடவுளாக வணங்குவைத்து குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைள் ஆரம்பித்துவைப்பு!!

பொருளாதார மத்திய நிலையத்தில்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மொத்த மரக்கறி விற்பனை மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் சமன்பந்துல சேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக நகரின் சில பகுதிகள் முடக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்கும் சுகாதார பிரிவினர் மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில் மரக்கறி வியாபாரிகளினதும், விவசாயிகளினதும் நலனை கருத்து கொண்டு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள இடம் ஒதுக்கிட்டு வழங்கப்பட்ட போதிலும், வவுனியாவில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் இவ்விடத்தினை பயன்படுத்த முடியாத நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா அரசாங்க அதிபரின் உத்தரவின் அடிப்படையில் 291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா கண்டி வீதியில் அமைக்கப்பட்டு பயன்பாடற்ற நிலையில் காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்தினை தற்காலிகமாக மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபார நடவடிக்கையை அதிகாலை 4 மணியளவில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மொத்த மரக்கறி வியாபாரம் மற்றும் கொள்வனவு நடவடிக்கைகள் பொருளாதார மத்திய நிலையில் நடைபெற்று வருகின்றது.

எனவே வியாபாரிகள், விவசாயிகள் அனைவரும் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனையினை வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!!

புதிய கொரோனா வைரஸ்..

பிரித்தானியாவில் மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தொற்றுக்கு இலக்காக நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மரபணு மாறிய வைரஸ் தான் அவருக்கு தொற்றியுள்ளது என்பதை தொடர்பில் ஆராய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரில் உடலில் புதிய கொரோனா வைரஸ் நுழைந்திருக்கலாம் என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை விட 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு : தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!!

பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு…

வவுனியா பாவற்குளத்தின் வான் கதவுகள் மூன்றும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் கெ.இமாசலன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் காணப்படும் பாவற்குளத்தின் நீர்மட்டம் 19 அடி 6 அங்குலமாகவும்,

முகத்தான்குளம் 12 அடி 1 அங்குலமாகவும், ஈரப்பெரியகுளம் 15 அடி 8 அங்குலமாகவும், மருதமடு குளம் 12 அடி 6 அங்குலமாகவும், இராசேந்திரகுளம் 12 அடி 8 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது. அத்துடன், கல்லாறு அணைக்கட்டின் நீர்மட்டம் 9 அடி 9 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.

இதில், வவுனியா மாவட்டத்தின் பெரிய குளமாகிய பாவற்குளம் அதன் கொள்ளவான 19.4 அடியைக் கடந்துள்ளமையால் அதன் மூன்று வான் கதவுகளும் ஒன்றரை அடி திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளிலும், அதன் தாழ் நிலப் பகுதிகளிலும் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்கவும்.

மேலும், மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான முகத்தான்குளம், இராசேந்திரகுளம், ஈரப்பெரியகுளம், மருதமடு குளம் என்பனவும், கல்லாறு அணைக்கட்டும் அதன் கொள்ளளவைத் தாண்டி நீர் வரத்து அதிகரித்துள்ளமையால், தற்போது அவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதானால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா பாவற்குளம் வான் கதவு மீண்டும் திறப்பு : நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதி முடக்கம்!!

பாவற்குளம் வான் கதவு மீண்டும் திறப்பு..

வவுனியா பவற்குளம் நீர்வரத்து அதிகரித்த காரணத்தினால் இன்று(13.01) மேலும் அரை அடி உயரத்திற்கு மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் (12.01) வவுனியா பாவற்குத்தின் வான் கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டிருந்த நிலையில்,

தொடர் மழை காரணமாக பாவற்குளத்தின் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதினால் மீண்டும் இன்று அரை அடி வான்கதவுகள் உயர்த்தப்பட்டது.

பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் ஒன்றரையடி திறக்கப்பட்டுள்ள நிலையில் குளத்திலிருந்து தண்ணிர் வேகமாக வெளியேறி வருகின்றது இதன் காரணமாக வவுனியாவிலிருந்து உலுக்குளம் நேரியகுளம் ஊடாக செட்டிக்குளம் செல்லும் வீதியை ஊடறுத்து தண்ணீர் பாய்வதால் குறித்த வீதி முடப்பட்டுள்ளதாகவும்,

செட்டிக்குளம் செல்பவர்கள் பூவரசங்குளம் ஊடாகச் செல்லும் வீதியை பயன்படுத்துமாறும் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பாவற்குளத்தின் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக 53 குடுங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிப்பு!!

தொடரும் மழை..

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக தொடரும் மழை காரணமாக 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முனாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதுடன், குளத்து நீர்மட்டங்களும் உயர்வடந்துள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்த 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 03 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 156 பேரும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 03 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் 04 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிப்படைந்தவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்தங்கள் ஏற்படின் அதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்காக அவசர அறிவித்தல்!!

அவசர அறிவித்தல்..

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகரின் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, பஜார் வீதி, சந்தை வீதி, கந்தசுவாமி ஆலய வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி,

முதலாம் மற்றும் இரண்டாம் குருக்குத்தெரு, பழைய பேரூந்து நிலையம் என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி வர்த்தக நிலையங்களை மீள திறந்து பொதுமக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு உரிய தீர்வினை வழங்கும் முகமாகவும்,

வர்த்தகர்கள் , ஊழியர்களின் வாழ்வதாரத்தினை கருத்தில் கொண்டு சுகாதாரப் பிரிவினருடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர் இணைந்து பல்வேறு செயற்றிடங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வர்த்தக நிலையத்தின் பெயர், வர்த்தக நிலையத்தின் விலாசம், உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர், விலாசம், அடையாள இலக்கம், தொலைபேசி இலக்கம்,

என்பவற்றினை 076 662 8386 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அல்லது வட்சப், வைபர் செயலி மூலம் அனுப்பி விரைவில் வவுனியா நகரை கொரேனா தொற்று அற்ற பகுதியாக மாற்ற உதவி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர்கள் 147 ஆக அதிகரிப்பு!!

கொரோனா..

வவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (13.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் செயற்பாடுகள் வழமை போன்று : வர்த்தக நிலையங்கள் திறப்பு!!

வர்த்தக நிலையங்கள் திறப்பு..

வவுனியா மாவட்டத்தில் சில பகுதிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த போதிலும் இன்று (13.01.2021) தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படுகின்றன.

வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் 24ம் திகதி வரை முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தீர்மானம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.01.2021) இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் முடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வவுனியா குழுமாட்டு சந்தி, வேப்பங்குளம், புதிய பேரூந்து நிலையத்தினை அண்மித்த பகுதி, வைத்தியசாலை சந்தி என பல பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன்,

ஒரு சில மதுபானசாலைகள், வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும் வழமை போன்று செயற்படுவதுடன் நகரின் மக்களின் செயற்பாடு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

மேலும் முடக்கப்பகுதி எனும் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை என்பதுடன் பாதுகாப்பு அரண்கள் எவையும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (12.001) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள்,

வர்த்தக சங்கத்தினர், முச்சக்கரவண்டி சங்கத்தினர், சுகாதார பிரிவினர், சமயத்தலைவர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நேற்று (12.01) மாலை பொலிஸார் மூலம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமையுடன் மக்களையும் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் பணித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் (13.01) குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது வவுனியா மாவட்டம் வழமை போன்று செயற்படுகின்றன.

சரியான தீர்மானத்தை அமுல்படுத்தாத இவ்வாறான அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் வவுனியாவில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியாவின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் சட்டத்தினால் வெறிச்சோடிய நிலையில்!!

வெளிச்சோடிய வவுனியா..

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று (13.01.2021) மாலை முதல் முழுமையான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் எ9 வீதியில் நொச்சிமோட்டை பாலம், மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ்நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளே வரும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன் 24ம் திகதி வரை குறித்த தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறை நீடிக்கப்படவுள்ளது.

அவசர தேவைகள், அத்தியாவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையுடன் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப் பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியா பாவற்குளத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு!!

பாவற்குளத்தின் வான் கதவுகள்..

வவுனியாவில் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் வான் கதவுகள் அடைமழை காரணமாக இன்று (12.01.2021) மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும், பாவற்குளம், ஈரப்பெரியகுளம், முகத்தான்குளம், மருதமடுக்குளம், ராஜேந்திரன்குளம் மற்றும் கல்லாறு அணைக்கட்டு ஆகியன வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக,

அனைத்து குளங்களும் வான் பாய்ந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் பெரிய குளமாகிய பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்த காரணத்தால், மத்திய நீர்ப்பாச திணைக்களத்தின் பொறியியலாளர்களாகிய எந்திரி.குமாரசாமி, கெ.இமாசலன் மற்றும் பிரிவு உதவியாளர் க.கஜமுகதாஸ் ஆகியோரின் தலைமையில் இன்று அதிகாலை குளத்தின் மூன்று வான்கதவுகளும் ஒரு அடி திறக்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நீர்ப்பாச திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் கெ.இமாசலன் வவுனியாவில் தொடர்ச்சியாக அடைமழை பெய்துவரும் நிலையில் பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தால் மீண்டும் வான்கதவுகள் மேலதிகமாக திறக்கப்படும்.

அதன் காரணமாக தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்ததுடன், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊழியர்கள் காலநிலை மாற்றத்திற்கமைய சேவையாற்ற தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

கணவரை பிரிந்து வாழ்ந்த 38 வயது தா யை கொ.ன்.ற 20 வயது மகன் : அ திர்ச்சிப் பின்னணி!!

இந்தியாவில்..

இந்தியாவில் தாய் உள்ளிட்ட இரண்டு பேரை சு.ட்.டு.க் கொ.ன்.ற இளைஞனின் செயல் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்தவர் சுமன் செளத்ரி (38). இவருக்கு பங்கஜ் (20) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சுமன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவர் மற்றும் குடும்பத்தாரை பிரிந்து விட்டார். இதையடுத்து தனது மகன் பங்கஜுடன் தனியாக வசித்து வந்தார்.

சுமன் வசிக்கும் வீட்டின் அருகில் மட்டாதீன் என்ற மருத்துவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சுமனுக்கும், மட்டாதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் ரகசியமாக சந்தித்து வந்த நிலையில் அதை பங்கஜ் கண்டுபிடித்து தாயை க.ண்.டி.த்.தா.ர். இந்த நிலையில் நேற்று மட்டாதீன் வீட்டுக்கு ரகசியமாக சென்ற சுமன் அவரை சந்தித்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற பார்த்த பங்கஜ் ஆத்திரமடைந்த நிலையில் தன்னிடம் இருந்த து.ப்.பா.க்.கி.யா.ல் இ ருவரையும் ச.ர.மா.ரி.யா.க சு.ட்.டு.க் கொ.ன்.று.ள்.ளா.ர்.

பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து நமது அம்மாவை கொ.ன்.று.வி.ட்.டே.ன் என கூறி இணைப்பை துண்டித்தார். இதையடுத்து அங்கிருந்து த.ப்.பி.யோ.டி.னா.ர் பங்கஜ்.

இதை கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பங்கஜ் சகோதரி பொலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ந்.த இ.ர.ண்.டு ச.ட.ல.ங்.க.ளை.யு.ம் கை.ப்.ப.ற்.றி.னா.ர்.க.ள்.

மேலும் பங்கஜை தே.டி வரும் பொலிசார், அவருக்கு து.ப்.பா.க்.கி எப்படி கிடைத்து என்பது குறித்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

மனைவியால் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மனைவியின் முறையற்ற தொடர்பால், அவமானம் தாங்க முடியாமல் கணவன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட சம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சாமுண்டிபுரம். நாகாத்தம்மன் கோவில் அருகே‌ வசித்து வருபவர் பாண்டியராஜன்(27). இவருக்கு சித்ரா(21) என்ற மனைவியும், ஐந்து வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

பாண்டியராஜன் லோடு மேனாக வேலை செய்து வருகிறார். சித்ரா அங்கிருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சித்ராவிற்கும் அங்கிருக்கும் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அருண் (22) என்பவர் பழக்கம் ஆகியுள்ளார்.

ஆரம்பத்தில் நட்பாக இருவரும் பழகி வந்த நிலையில், அதன் பின் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டனர். இது குறித்த விவரம், பாண்டியராஜனுக்கு தெரியவர, மனைவி சித்ராவை க.ண்டித்துள்ளார்.

ஆனால் சித்ராவோ எனக்கு அவருடன் தான் வாழ ஆசை, என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்காததால், க.டு.ம் வி ரக்தியில் இருந்த பாண்டியராஜன் திடீரென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

இதை அவர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க முடியாது என எச்சரிக்கை!!

கொரோனா..

புதிய இயல்புநிலை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கொரோனா, உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. எனவே இந்த சூழ்நிலையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்த மோசமான அச்சுறுத்தலில் இருந்து தப்பிப்பதைப் பற்றி யாரும் யோசிக்க கூட முடியாது என எச்சரித்துள்ளார். இந்த நிலையில் உலகம் முழுவதும் வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

எனினும் இந்த வைரஸை ஒழிப்பதற்கான ஒரு காலத்தை உலக சுகாதார அமைப்பினால் கூட கணிக்க முடியவில்லை. கொரோனா தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அவை 2019இற்கு முன்னர் இருந்ததை போன்ற ஒரு வாழ்க்கையை வாழ உதவக்கூடும் அல்லது உதவாமலும் போகலாம் என்றும் வைத்திய கலாநிதி அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-