வவுனியாவில் இரவில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசம் : நகை, பணம் கொள்ளை!!

வேப்பங்குளம் பகுதியில்..

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த முகமூடி கொ ள்ளையர்கள் அங்கிருந்து 12 பவுண் நகையினையும், 15 ஆயிரம்ரூபாய் பணத்தினையும் தி.ருடிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நேற்றையதினம் இரவு 11 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த கொ ள்ளையர்கள் வீட்டின் கதவை உ.டைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அங்கு உறங்கிக்கொண்டிருந்த முதியவரையும்,பெண்மணியையும் வா.ள் முனையில் அ.ச்.சு.று.த்.தி தாலிக்கொடி உட்பட தங்க நகைகளையும்,15 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் திருடியுள்ளனர்.

இதேவேளை மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவர் சத்தம் கேட்டு வெளியில் எழுந்துவந்த நிலையில் அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் ப றித்துக்கொண்டு த.ப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மூன்று நபர்கள் ஈடுபட்டருந்ததாகவும், முகமூடி அணிந்திருந்ததுடன், வா ள்களையும் கையில் வைத்திருந்து அ ச்சுறுத்தி யதாக தெரிவித்த பொலிசார் மொத்தமாக 12 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரணீத் திசாநாயக்க தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

-ஐபிசி தமிழ்-

மருமகனை இரவு நேரத்தில் சுவற்றில் மோதி கொ.லை செ.ய்.த மாமியார் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் மருமகனை சுவற்றில் மோ.தி கொ.லை செ.ய்.த மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனோ (52).

இவரின் மகளுக்கும் அஜய் (35) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கு.டி.ப் பழக்கத்துக்கு அ.டிமையான அஜய் தினமும் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மாமியாரிடம் த.க.ரா.று செ ய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கு.டி.த்.து விட்டு வீட்டுக்கு வந்த அஜய், மனைவி மற்றும் மாமியார் தனோவுடன் ச.ண்.டை போட்டார். அப்போது மாமியாரை அ.டி.க்.க.வு.ம் பா.ய்.ந்.தா.ர் அஜய்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த தனோ தனது மருமகன் அஜய்யை வேகமாக சுவற்றை நோக்கி த ள்ளினார். இதில் அவர் த லை சு.வற்றில் முட்டி இ.ர.த்.த.ம் கொ.ட்.டி.ய.து. இதையடுத்து சம்பவ இடத்திலேயே அஜய் உ யிரிழந்துவி ட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அஜய்யின் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு தனோவை கை து செ ய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட வி சாரணையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். தொடர்ந்து தனோவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தன்னை சீரழிக்க வந்தவனை கு.த்.தி கொ.லை செ.ய்.த பெண் விடுதலை : குவியும் பாராட்டுக்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு யன்றவனிடம் இ.ருந்து த ன்னை கா.ப்.பா.ற்.றி.க் கொ ள்ள, அ தே க.த்.தி.யா.ல், அ ந்த ந.பரை கொ.லை செ.ய்.த இ ளம் பெ ண் வி டுவிக்கப்பட்டு ள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி. தாய்-தந்தையை இ ழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த பெண் சம்பவ தினத்தன்று இயற்கை உபாதை க.ழிப்பதற்காக சென்ற போது, அவரை அப்பகுதியைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜீத் என்பவர் க.த்.தி மு.னை.யி.ல் மி.ர.ட்.டி அ.வ.ரை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு.யன்றார்.

இதனால் கவுதமி த ன்னை அவரிடம் இருந்து கா.ப்.பா.ற்.றி.க் கொ ள்ள போ.ரா.டி.னா.ர். அப்போது அஜீத்தின் கை யில் இ ருந்த க.த்.தி.யை ப.றி.த்.த கவுதமி தன்னைக் கா.ப்.பா.ற்.றி.க் கொ.ள்வதற்காக, க.த்.தி.யா.ல் அ.வ.ரை கு.த்.தி.னா.ர்.

அதன் பின், அவர் அங்கிருக்கும் சோழாவரம் காவல் நிலையத்திற்கு சென்று ச.ர.ண.டை.ந்.தா.ர். பொலிசார் தன்னிடம் அ.த்.து.மீ.றி ந டக்க முயன்றதால், அஜீத்தை கு.த்.தி கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க கூறி, அந்த க.த்.தி.யை.யு.ம், பொ லிசாரிடம் ஒ ப்படைத்துள்ளார்.

வழக்கமாக கொ.லை ச.ம்பவம் நி கழ்ந்து விட்டால் பொலிசார் 302 வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கொ.லை.யா.ளி.யை கை.து செய்வது வழக்கம்.

ஆ.னால் இ.ந்த ச.ம்பவ த்தில் த.ன்.னு.டை.ய உ.யி.ரை.யை கா.ப்.பா.ற்.றி.க் கொ.ள்.வ.த.ற்.கா.க இ.ள.ம் பெ.ண்.ணா.ல் நி.க.ழ்.த்.த.ப்.ப.ட்.ட கொ.லை ச.ம்.ப.வ.ம் எ.ன்பதால் இ.த.னை கொ.லை.யா.க க.ரு.த இ.ய.லா.து எ.ன்.று அ.றி.வி.த்.து.ள்.ள மா.வ.ட்.ட கா.வ.ல் க.ண்.கா.ணி.ப்.பா.ள.ர் அரவிந்தன், கவுதமியை கை.து செ.ய்.யா.ம.ல் வி.டு.வி.த்.தி.ரு.ப்.ப.தா.க அ.றி.வி.த்.தா.ர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 302 பிரிவின் கீழ் வ ழக்கு ப.திவு செய்திருந்த நிலையில் அதனை மாற்றி த.ற்.கா.ப்.பு.க்.கா.க நடந்த கொ.லை ச ம்பவம் என்று இந்திய த ண்டனை சட்டம் 100-வது பிரிவின் கீழ் வ.ழக்கு ப.திவு செ.ய்து,

த ன்னுடைய உ.யி.ரை கா.ப்.பா.ற்.றி.க் கொ ண்ட கவுதமிக்காக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருமணமான 33 வயது பெண் செய்த மோசடி : அதிர்ச்சிப் பின்னணி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பண மோ சடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தின் பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா (33).

இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

பார்ப்பதற்கு அழகாகவும் பணக்கார தோற்றத்திலும் சத்யா இருந்த நிலையில் இதனை நம்பி பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பல பெண்களிடம் நகை, பணத்தை பெற்ற சத்யா சில நாட்கள் வட்டியை சரியாக கொடுத்து விட்டு பின்னர் சரிவர வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவரிடம் பணம் கொடுத்த பெண்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சாக்குப்போக்கு சொல்லி, பணம் கொடுத்தவர்களை மி ரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் சத்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.

குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

நீரில் மூழ்கி..

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவளிபுரம் சஹாயமாதா வீதியில் வசித்து வரும் ரவீந்திரகுமார் ஜேனுஷன் (16 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்புவளிபுரம் பிரதேசத்திலுள்ள பாம் குளத்திற்கு மூன்று நண்பர்கள் சென்ற நிலையில் சக நண்பரொருவருடைய செருப்பைக் குளத்துக்குள் விளையாட்டுக்காக வீசியபோது அதனை எடுக்கச் சென்றவர் நீரில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி!!

இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கை..

வவுனியாவில் – புளியங்குளம் கல்மடு கிராமத்தில் வசிக்கும் த.தவராசா என்ற 67 வயதுடைய பார்வையிழந்த விவசாயி தமது இயலாமையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட விவசாயம் இன்று வெற்றியளித்துள்ளது.

வட மாகாண விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் விதைகளைக் கொண்டு தனது காணியில் சுமார் ஒரு பரப்பில் செய்த செய்கையானது இன்று வெற்றியளித்துள்ள நிலையில் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்.

நாட்டில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தினை நாடிய இவர் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் மஞ்சளுடன் இஞ்சியையும் செய்கை பண்ணியிருந்தார்.

பார்வை இழந்த நிலையிலும் தனக்கு உதவியான ஒருவரை பணிக்கு அமர்த்தி அவர் மூலமாக சில பயிர்காப்பு செயற்பாடுகளை மேற்கொண்ட தவராசா இன்று தனது நிலத்தில் பயிரிடப்பட்ட மஞ்சளும் இஞ்சியும் சிறப்பாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருப்பதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இன்றைய தினம் வட மாகாண விவசாய திணைக்களத்தினால் அவரது விளை நிலத்தில் வயல் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு அறுவடைக்கான ஏற்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பில் தெளிவூட்டல்கள் அவருக்கும் ஏனைய விவசாயிக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வட மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமாரன், வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்நாயகம், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலளார் ரி.தர்மேந்திரா, வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.தணிகாசலம் ஆகியோரும் வயல் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்பட்டவர்கள் மட்டுமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் : சுகாதார வைத்திய அதிகாரி!!

பி.சி.ஆர் பரிசோதனை..

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும், நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் . பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், அதிபர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.

குறித்த கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பி.சி.ஆர்பரிசோதனைகளுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பாடசாலைகளுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஏனையவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று காலை 8 மணி முதல் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய தினம் இப்பரிசோதனை வெளிமாவட்டத்திலிருந்து வருபவர்களுக்காகவே மேற்கொள்பட்டிருந்தது. வெளிமாவட்டங்களிலிருந்து 150 ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக வருகின்ற போதிலும் இன்று பரிசோதனைக்காக 34 ஆசிரியர்களே வருகை தந்திருந்தார்கள்.

எனவே, நாளைய தினமும் குறித்த பரிசோதனை இடம்பெறவுள்ளதனால் இன்றைய தினம் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தராதவர்களும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்களும் நாளைய தினம் தவறாது அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே குறித்த பாடசாலைகளுக்குள் சென்று கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை : 4 பிரிவில் பயணிகள் வர அனுமதி!!

கட்டுநாயக்க விமான நிலையம்..

எதிர்வரும் 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா பயணிகள், இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பணியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என 4 பிரிவுகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வர முடியும். விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வவுனியா பட்டாணிச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு : நகரசபை உறுப்பினர்கள்!!

பட்டாணிச்சூரில்..

வவுனியா பட்டாணிச்சூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அக்கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் திடீரென இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்குள்ள 900 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளனர்.

பிரதேச செயலகதின் எந்த அதிகாரியும் எமது மக்களைப் பார்வையிடவில்லை. அவர்களுக்கான தேவைகள் குறித்தும் ஆராயவில்லை.

குழந்தைகளுக்குப் பால் மா மற்றும் வயோதிபர்களுக்கான உணவு, மருத்துவம் என்பன பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களை மனிதாபிமானத்தோடு நோக்குங்கள் என தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

அறிவுறுத்தல்..

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பும் போதும், அவர்கள் பாடசாலைகளில் இருந்து கற்றல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், பாடசாலைகளில் இருந்து வெளியேறும் போதும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் தரம் 2 முதல் தரம் 13 வரையான வகுப்புகளுக்காக எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளன.

சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனவரி மாதம் 25ஆம் திகதி முதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் 11ஆம் தரத்தின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பும் போதும், அவர்கள் பாடசாலைகளில் இருந்து கற்றல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், பாடசாலைகளில் இருந்து வெளியேறும் போதும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது கட்டாயமாகும். இதற்கான பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிபர்களுக்கும் இருக்கிறது என அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் சாத்தியம்!!

மழை..

இலங்கையின் நாளைய வானிலையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை குறித்து வந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை உ.யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் விஜய பிரபாகரன் (26). அவருடைய மனைவி கிறிஸ்டின் வனஜா மேரி (20). இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் விஜயபிரபாகரன், அவருடைய உறவினர்கள் லியோ அமலஜோசப் (25), லாரன்ஸ் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மினி லொறி, மோட்டார் சைக்கிள் மீதுநேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த லியோ அமலா ஜோசப், லாரன்ஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே லியோ அமலஜோசப் உயிரிழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் லாரன்ஸ், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுமாப்பிள்ளை இறந்த தகவலை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கதறி அழுதனர். லியோவின் குடும்பத்தாரும் அழுதார்கள்.

இந்த காட்சிகள் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த விபத்து தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமும் இரவு தாமதமாக வந்த கணவன் : மனைவி செய்த கொடூர செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கணவன் தினமும் இரவு தமாதமாக வந்ததால், கோ.ப.த்.தி.ன் உச்சிக்கே சென்ற மனைவி செய்த செயல் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் வசித்து வரும் தம்பதி அரவிந்த் அஹிர்வார்-ஷிவ்குமாரி. கூலிவேலை செய்து வருவதால், அரவிந்த் அஹிர்வார் தினமும் வேலை முடிந்து அதற்கான சம்பளத்தை பெற்றுக் கொண்டு இரவில் தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனால் மனைவியான ஷிவ்குமாரி கணவரிடம் இது குறித்து ச.ண்.டை போ.ட்.டு வந்துள்ளார். தினமும் இரவு தாமதமாக வந்தால் என்ன செய்வது என்று வே.த.னை.யு.ட.ன் பேசியுள்ளார்.

இருவருக்கும் இதன் காரணமாக தொடர்ந்து ச.ண்.டை வந்தபடி இருந்துள்ளது. அவ்வப்போது அருகில் இருக்கும் உறவினர்கள் இவர்களின் ச.ண்.டை.யை நிறுத்தி சமாதானப்படுத்தி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அரவிந்த் அஹிர்வார் தொடர்ந்து இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் சம்பவ தினத்தன்று ஷிவ்குமாரிக்கு க.டு.ம் கோ.ப.ம் வந்துள்ளது.

கணவர் இப்படி நாம் சொல்வதை கேட்கவே மறுக்கிறாரே என்ன செய்வது என்று, அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, சமயலறைக்கு சென்று எண்ணெய்யை கொ.தி.க்.க வைத்து, க ணவன் மு கத்தின் மேலே ஊ.ற்றியுள்ளார்.

வ.லி.யா.ல் அரவிந்த் அ.ல.றி து.டி.க்.க, இவரின் ச த்தத்தைக் கேட்டு, அருகில் இருப்பவர்கள் உடனடியாக அவரை மீ.ட்.டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இது குறித்து மனைவியிடம் வி சாரணை மேற்கொண்ட போது, தினமும் கணவர் இரவு தாமதமாக வந்ததால்,

நான் ம ன உ ளைச்சலுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாக அவர் மீது எண்ணெய்யை கா ய்ச்சி ஊற்றிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிசார் கணவர் அரவிந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!!

சீரியல் நடிகை..

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஒன்றாக இருந்த நபர் வீடியோவை வைத்து மி.ர.ட்.டி 10 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (24). சினிமா நடிகையான இவர் தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை நடிகையாகவும் நடித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் திகதி சென்னையில் இருக்கும் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக இருந்து வீடியோ எடுத்து காதலன் ராஜேஷ் என்பவர் மி.ர.ட்.டி வருவதாக கூறி பு.கா.ர் அளித்திருந்தார்.

ஆனால், அந்த பு.கா.ரி.ன் பேரின் பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ராதிகா, நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் நடிகை அளித்த புகாரின்படி, வி சாரணை நடத்தினர்.

அதில் நடிகை அளித்த பு.கா.ர் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. அதைதொடர்ந்து ராஜேஷ் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதை அறிந்த ராஜேஷ் உடனடியாக த.லை.ம.றை.வா.கி.வி.ட பொலிசார் அவரை தே.டி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில்,

ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். ராதிகாவின் தோழியின் மூலம் சென்னை கீழ்க்கட்டளையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அறிமுகமானார்.

சின்னத்திரை நடிகை என்பதால் ராஜேஷ் அவர் சூட்டிங் எடுக்கும் பகுதிக்கு சென்று தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த நட்பு பிறகு காதலாக மாறியது.

ராதிகா சின்னத்திரையில் பிரபலமானவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதலில் ராதிகா மறுத்துள்ளார். பின்னர் ராஜேஷ் நடிகையின் பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் கடந்த 2019 டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி வெகு விமர்சையாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பிறகு இவர்களின் திருமணம் கடந்த 2020 பிப்ரவரி 26-ஆம் திகதி வடபழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்காக திருமண அழைப்பிதழும் அடித்துள்ளனர்.

ராஜேஷ் தான் வருங்கால கணவர் என்பதால் அவருடன் ராதிகா அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். அப்போது ராஜேஷ் ஈவன்ட் மேனேஜிமென்ட் என்ற பெயரில் நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி நடத்துவதாகவும், அந்த நிகழ்ச்சியை ராதிகா தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார்.

வருங்கால கணவர் என்பதால் ஆடம்பரமான உடையை அணிந்து கொண்டு நடிகை ராதிகா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் ராஜேஷ் நிகழ்ச்சி திடீரென ரத்து ஆகிவிட்டது என்று கூறி ஒரு அறைக்கு ராதிகாவை அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்,வந்ததும் வந்தாய் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே இருவரும் ஒன்றாக இருக்கலாம் இங்கு யாரும் வரமாட்டார்கள் என்று ராஜேஷ் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

கணவராக வரப்போகும் நபர் தானே என்று, நடிகை ராதிகாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது ராஜேஷ் நடிகை ராதிகாவுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் ஹோட்டல் அறையில் கேமரா வைத்து வீடியோவாக ராஜேஷ் எடுத்து வைத்துக்கொண்டார்.

பின்னர் நடிகையை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஷ் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு நடிகை தனது வருங்கால கணவர் என்ற முறையில் ராஜேசுக்கு போன் செய்து பேச முயற்சி செய்துள்ளார்.

ஆனால் நடிகையின் செல்போன் அழைப்பை ராஜேஷ் எடுக்க வில்லை. அத்துடன் நடிகையிடம் பேசுவதையும் அவர் தவிர்த்து வந்துள்ளார்.

ஒரு நாள் நேரில் சென்று ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று நடிகை கேட்டுள்ளார். அதற்கு அவர், உன்னுடன் ஒன்றாக இருக்கத்தான். என்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி உன்னிடம் எனக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார்.

அதை கேட்டு அ திர்ச்சியடைந்த நடிகை, ராஜேஷிடம் த கராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ் நாம் இருவரும் ஒன்றாக இருந்த வீடியோவை காட்டி என்னை தொ ந்தரவு செய்தால், ஆ.பா.ச இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.

அதுமட்டுமின்றி அந்த வீடியோவை கொடுக்க வேண்டும் என்றால், 10 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர். பணம் கொடுக்க மறுத்தால், உன் சினிமா வாழ்க்கையை நான் அழித்துவிடுவேன் என்றும் மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளார்.

அதன்படி நடிகை ராதிகா தனது வீட்டிற்கு தெரியாமல் 2.50 லட்சத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தந்துவிடுகிறேன். எனக்கு அந்த வீடியோவை தந்துவிடு என்று கேட்டுள்ளார்.

முழு பணம் தந்தால்தான் நான் வீடியோ தருவேன் என்று ராஜேஷ் மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர். உடனே நடிகை இதுகுறித்து பொலிசில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.

அதற்கு ராஜேஷ் இதுபோன்ற தவறு ஏதேனும் செய்தால் உன் மீது ஆ.சி.ட் அ.டி.த்.து வாழ்க்கையை சீ ரழித்துவி டுவேன் என்றும், லாரியை வைத்து ஏற்றி கொ.லை செ.ய்.து விடுவேன் என்றும் மி.ர.ட்.டி.யு.ள்.ள.து.ம் வி.சாரணையில் தெரியவந்துள்ளது.

1.5 கோடி சொத்து… காதலியுடன் சேர விரும்பிய கணவருக்கு மனைவி வைத்த நிபந்தனை!!

மத்திய பிரதேசத்தில்..

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் ரூ.1.5 கோடிக்கு ஈடாக தனது கணவரை, அவரின் காதலியை திருமணம் செய்து கொள்ள அனுமதித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவத்தில், ஒரு பெண் தன்னை ஏமாற்றிய கணவரை ரூ .1.5 கோடிக்கு விவாகரத்து செய்ய ஒப்புக் கொண்டார்.

போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒரு சிறுமி தனது தந்தை, அவரின் சக ஊழியருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவு வைத்திருப்பதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தால் அவரது பெற்றோர்களிடையே வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதாகவும், இதனால் தனக்கும் தன் சகோதரியின் கல்விக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் அச் சிறுமி குற்றம் சாட்டினார்.

இதன்பின்னர் நீதிமன்றத்திற்கு தம்பதியினர் கவுன்சிலிங்கிற்கு வரவழைக்கப்பட்டனர். இதில் கணவர் தன்னை விட வயதான ஒரு சக ஊழியருடன் உறவு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தனது மனைவியை விட்டுவிட்டு தனது சக ஊழியருடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பினார். இருப்பினும், விவாகரத்துக்கு மனைவி உடன்படவில்லை. பல ஆலோசனை அமர்வுகளுக்குப் பிறகு, இந்த தம்பதி ஒரு உடன்பாட்டை எட்டியது.

அதன்படி அவர்கள் தற்போது தங்கியிருக்கும் குடியிருப்பு மற்றும் 27 லட்சம் ரொக்கம் என மொத்தம் 1.5 கோடி ரூபாய் சொத்தை கையளித்தால் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்வதாக அவர் தெரிவித்தார். தமது மகள்களின் எதிர்காலம் கருதியே, இந்த முடிவுக்கு வந்ததாக அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொலைபேசி பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

தொலைபேசி பாவனையாளர்களுக்கு..

கையடக்க தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.

புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்து கொள்வனவு செய்யுமாறு ஆணையகம் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

புதிய தொலைபேசிகளில் இருந்து 1909 என்ற இலக்கத்துக்கு IMEI எண்ணை அனுப்புவதன் மூலம் இதனைச் சரிபார்க்குமாறு பொதுமக்களிடம் ஆணையகம் கோரியுள்ளது.

15 இலக்க சர்வதேச மொபைல் கருவி அடையாளம் (IMEI) என்பது ஒவ்வொரு தொலைபேசியிலும் கொடுக்கப்பட்ட ஒரு தனித்துவமான எண்ணாகும். இது பொதுவாக பேட்டரியை அகற்றும் போது அல்லது சாதனத்தின் பின்புறத்தில் ஒரு ஸ்டிக்கர் வடிவத்தில் காணப்படுகிறது.

மொபைல் ஃபோனின் விசைப்பலகையில் *#06# ஐ உள்ளிட்டு தொலைபேசியின் திரையில் காண்பிக்கப்படலாம். ஒப்புதல் அசல் அல்லது போலியானதா என்பதை அறிய வாடிக்கையாளர் விற்பனையாளரிடம் TRCSL உடன் ஒப்புதல் ஸ்டிக்கரை சரிபார்க்கலாம்.

கையடக்க தொலைப்பேசிகளை விற்கும் அனைத்து விற்பனையாளர்களும் TRCSL வழங்கிய செல்லுபடியாகும் விற்பனையாளர்களின் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

அது அவர்களின் விற்பனை நிலையங்களில் காட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மேலதிக விபரங்களை www.trc.gov.lk என்ற இணையத்தள முகவரியில் சரிபார்க்கலாம்.