ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளளார்.
மொட்டை மாடியில் இருக்கு தவறி விழுந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரோம் வியா காசியா பிரதேசத்தில் தொழில் செய்த நிலையில் வாழ்ந்து வந்த சம்பத் என்ற 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என குறிப்பிடப்படுகிறது.
விழுந்தமையினால் படுகாயமடைந்திருந்த இலங்கையர் ரோம் சங்கமில்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இலங்கையர் மாடி வீட்டில் இருந்து விழுந்த முறை தொடர்பில் மேலதிக விசாரணைகளை காசியோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி கடை ஒன்றில் பணியாற்றும் தர்சன் என்ற 29 வயதான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் கடந்த 2 ம் திகதி திடீரென மயங்கிவிழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 4ம் திகதி மயக்க நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் திறமைமிக்க இசைக்கலைஞர் எனவும் கூறப்படுகின்ற நிலையில் குறித்த இளைஞரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மார்ச் மாதம் கடைசியிலோ அல்லது ஏப்பிரல் முற்பகுதியிலோ வெளியிடப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, பல்கலைக்கழக அனுமதிக்கான தேவைகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றி, காலதாழ்த்தாமல் மாணவர் அடையக்கூடிய இழப்புக்களை சீர்செய்யப்போவதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு எதுவித காலதாமதமும் ஏற்படாத வகையில் பெறுபேறுகளை விரைவாக வெளியிடப் போவதாகவும், உயர்தர வகுப்புக்களை ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மேல் மாகாணத்திலும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலும் உள்ள பாடசாலைகளைத் தவிர நாட்டின் ஏனையை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை திங்கட்கிழழை மீளவும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ளவற்றை தவிர, மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 11 ற்கான வகுப்புக்களை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்வது இதன் நோக்கமாகும். இவ்வாண்டுக்குரிய பாடப்புத்தகங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அதற்கமைய இதுவரையில் 550 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 14 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், PCR பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியுடன் தொடர்புடைய இரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர், ஊழியர்கள் என 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ள நிலையில் வவுனியா நகரப்பகுதி இன்று காலை முடக்கப்பட்டு வர்த்தகர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிலர் அப் பகுதி முடக்கப்பட்ட நிலையில் அங்கு செல்லாது வர்த்த நிலையங்களில் பணியாற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து சுகாதார பிரிவினர் வவுனியா நகரில் விசேட சோதனை நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.
இதன்போது முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த இரு உரிமையாளர்களின் வர்தக நிலையங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டதுடன், அங்கு கடமையில் இருந்த உரிமையாளர், ஊழியர்கள் என 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு பிசீஆர் பரிசோதனை!!
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முடக்கப்பட்டு வர்த்தகர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை நேற்று (05.01) இரவு கண்டுபிடிககப்பட்டது.
இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் இன்று (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், குறித்த வீதிகளிற்குள் தமது தேவை நிதித்தம் பயணித்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள வர்த்தகர், ஊழியர்கள் ஆகியோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப்பட்டு வருகின்றர்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முடக்கப்பட்டு வர்த்தகர்களிடம் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட் கிழமை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை நேற்று (05.01) இரவு கண்டுபிடிககப்பட்டது.
இதனையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்கள் உட்செல்ல மற்றும் வெளிச் செல்ல தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் இன்று (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், குறித்த வீதிகளிற்குள் தமது தேவை நிதித்தம் பயணித்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள வர்த்தகர், ஊழியர்கள் ஆகியோரின் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது வர்த்தக நிலையங்களும் தனிமைப்பட்டு வருகின்றர்.
வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை நேற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பட்டாணிசூர் பகுதியில் நேற்றையதினம் இரவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபார நிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு இன்று காலை வவுனியா பசார் வீதியின் ஒரு பகுதி தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த வீதிகளிற்குள் தமது தேவை நிமித்தம் பயணித்த பொதுமக்கள் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டாணிசூர் பகுதியை சேராதவர்கள் பொலிசாரால் வெளியில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செய்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக விசேட காணி மத்தியஸ்சபை செயற்பட்டு வந்தது.
நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19 காரணமாக விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை முதல் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் சுகாதார வழிமுறைக்களைப் பின்பற்றி நடைபெறும்.
குறித்த மத்தியஸ்தர் சபைக்கு சமூகமளிக்கும் முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிணக்காளர்கள் ஆகியோரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
அந்த வகையில் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் அமர்வுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 1 மணிவரை செட்டிகுளம் பிரதேச செயலகத்திலும்,
10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை வவுனியா, குடியிருப்பு இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையிலும் (சீசீரிஎம்எஜ்),
17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் வித்தியாலயத்திலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வழமை போல் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சின்ன வெங்காயத்தில் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ கிராம் சின்ன வெங்காயம் தற்போது 600 முதல் 650 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு தம்மிடம் பணமில்லை எனவும் நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சின்ன வெங்காயத்தின் மொத்த கொள்வனவு விலை அதிகரித்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். விலை அதிகரித்துள்ளதால், சின்ன வெங்காயத்தின் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து வெளிநாடு செல்வதற்காக கொழும்பு சென்று தங்கியிருந்த 11 பேரில் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரம் கொழும்பில் குறித்த 11 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகக் குறைந்தது 3 நாட்கள் ஆகும் என்பது நடைமுறையாகும்.
இந்தநிலையில், பி.சி.ஆர். முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக 11 இளைஞர்களும் தமது ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
நேற்று அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில்,அவர்களில் 3 பேருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டநிலையில், கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தால் இளைஞர்கள் வதியும் மாவட்டங்களின் சுகாதாரத் திணைக்களங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது.
அதையடுத்து குறித்த மூவரும் சுகாதார உத்தியோகத்தர்களால் அடையாளம் காணப்பட்டு இன்று முற்பகல் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏனைய 8 இளைஞர்களும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளதால் அவர்களைத் தேடும் நடவடிக்கையை சுகாதாரத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
இருந்த போதிலும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என்பதால் அவர்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் தாமாக, சுகாதார உத்தியோகத்தர்களுக்கு அறிவிப்பது சமூகத்துக்கு செய்யும் கைமாறு என்று சமூக நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்ட இளம் பெண், என் ம.ர.ண.த்.தி.ற்.கு காரணமானவர்களை விடக்கூடாது என்று கடிதம் எழுதி வைத்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேம்பனூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த இவருக்கு புதுக்கோட்டை அரசு கல்லூரியில் BSc Computer Science பாடப்பிரிவு கிடைத்தது.
முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த 30-ஆம் திகதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறிய இவர் அதன் பின் வீடு திரும்பவேயில்லை.
இதனால் பெற்றோர் பல இடங்களில் தே.டி.யு.ம் கிடைக்காததால், காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர். இதையடுத்து பொலிசார் பு.கா.ர் அடிப்படையில் வி சாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது மாணவி எழுதி வைத்த ஒரு கடிதம் பொலிசாரின் வி.சாரணையின் போது கிடைத்துள்ளது அதில் தன்னுடைய சா.வு.க்.கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டிருந்தார்.
இதன் பேரில் பொலிசார் ஒருபுறம் வி சாரணை நடத்தினாலும், மா.ய.மா.ன மா.ண.வி.யை தே.டு.ம் பணி மும்முரமானது. அப்போது தான் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கு.தி.த்.து பாக்கியலட்சுமி த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டது தெரிய வந்தது.
மேலும் அந்த கடிதத்தில் தனது சா.வு.க்.கு காரணம் பிரியா என்ற பெயரில் எனது மொபைலில் பதிவு செய்துள்ள நம்பரில் உள்ளவன் தான் அவன். அவனை விட்டுவிடாதீர்கள். அவன் மட்டும் உ.யி.ரோ.டு இருந்தால் என்னை போல் ஏராளமான பெண்கள் செ.த்.து.வி.டு.வா.ர்.க.ள் என்று உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
செல்போன் எண்ணை வைத்து வி சாரணை நடத்தியதில் அவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்த ராமராஜ் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் துலுக்கர்பட்டிக்கு சென்று ராமராஜை சு.ற்.றி.வ.ளை.த்.து பி.டி.த்.த.ன.ர். அவரிடம் நடத்திய வி.சாரணையில் பாக்யலட்சுமியிடம் முகநூல் மூலம் பழகி அந்த பெண்ணின் புகைப்படத்தை பெற்று ஆ.பா.ச.மா.க சித்தரித்து முகநூலில் பதிவிடுவதாக கூறி மி.ர.ட்.டி.ய.தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இது போன்று ஏதும் செய்ய வேண்டாம் என்று பாக்கியலட்சுமி க.ண்.ணீ.ர்.வி.ட்.டு க.த.றி.யு.ம் ராமராஜ் தொடர்ந்து மி.ர.ட்.டி.ய.தா.ல் ம.ன.மு.டை.ந்.த மா.ண.வி கி.ண.ற்.றி.ல் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதுபோல மேலும் பல பெண்களை ராமராஜ் தன் வலையில் வீழ்த்தியது கண்டறியப்பட்டுள்ளது. அவரின் செல்போனை பொலிசார் ப.றி.முத.ல் செய்து பார்த்த போது அதில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அழி க்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து ராமராஜை போக்சோ, தடயங்களை அளித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பொலிசார் சிறையில் அடைத்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடைபெறவிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
திருமண வரவேற்பு முடிந்து அனைவரும் ஓய்வு எடுக்க அவரவர் அறைக்குச் சென்று விட்டார்கள். அதே போன்று மணமகன் நவீன் தனது அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவரை பார்க்க வந்த இளம் பெண்ணைக் கண்டு, நவீன் அ.திர்ச்சியடைந்தார். அதன் பின் விசாரித்த போது, அந்த பெண் அவரின் முன்னாள் காதலி என்பது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் மாப்பிள்ளை நவீனைப் பார்த்து, என்னைக் காதலித்து விட்டு எப்படி வேறொரு பெண்ணை உன்னால் திருமணம் செய்ய முடியும் எனக் கேட்டுள்ளார்.
அதோடு என்னை ஏமாற்றிவிட்டு திருமணம் செய்துகொண்டால், நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ர்.
இதனால் நவீன், உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு ப யந்து, வந்த அவரின் காதலியுடன் இரவோடு இரவாக திருமண மண்டபத்தில் இருந்து ஓ ட்டம் பிடித்துவிட்டார்.
ஆனால், இது தெரியாமல் மறுநாள் காலை உறவினர்கள் மற்றும் பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்து வர, தாலி கட்டும் நேரத்தில் நவீன் மணமேடைக்கு வாரமல் போன பின்னரே, அவர் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தான் அனைவருக்கும் உண்மை தெரியவர, திருமணம் நின்று போனது. இருப்பினும் அந்த நேரத்தில், திருமணத்துக்கு வந்திருந்த சிருங்கேரி தாலுகா நந்திக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் சிந்துவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி முன்வந்தார்.
இதனால் பெண் வீட்டார் இதற்கு சம்மதம் தெரிவிக்க,அதே முகூர்த்தத்தில் மணப்பெண் சிந்துவை, சந்துரு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு வந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திச் சென்றதுடன், சந்துருவின் இந்த பெருந்தன்மை பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கணவர் வெளிநாட்டில் இருக்க, இளைஞரை காதலித்த 36 பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச ம்பவத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36 வ,ய.து பெ.ண் இ.ற.ந்.த. நி.லை.யி.ல், கி.ட.ந்.த.தா.ல் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பொலிசார் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.த பெ.ண்.ணி.ன் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்.கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது, அந்த கட்டிடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆ.ராய்ந்தனர். இதில் கடந்த 29-ஆம் திகதி இரவு அந்த கட்டிடத்திற்கு சந்தியாவை ஆண் நபர் அழைத்து செல்லும் காட்சி இருந்தது.
அதன் பின் அதிகாலையில், அந்த நபர் மட்டுமே தனியாக வந்தார், உடன் வந்த சந்தியா வரவில்லை. இதனால் ச.ந்.தே.க.ம் அடைந்த பொலிசார், அந்த நபர் குறித்து வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த நபர், தரசூர் கிராமத்தை சேர்ந்த 29 வ.ய.து முரசொலிமாறன் என்பது தெரியவந்தது. பொலிசார் தன்னை தே.டு.வ.தை தெரிந்து கொண்ட அந்த இளைஞன், பொலிசாரிடம் சி.க்.கா.ம.ல் இ.ருப்பதற்காக, வி.ஷ.த்.தை த.ன.து கா.தி.ல் ஊ.ற்.றி த.ற்.கொ.லை நா.ட.க.ம் ஆ.ட, பொலிசார் அவரைப் பி.டி.த்.து வி.சா.ர.ணை மே.ற்கொண்டனர்.
பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட வி.சா.ர.ணை.யி.ல், 5 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி மில் ஒன்றில் சத்யாவும், முரசொலிமாறனும் ஒன்றாக வேலைபார்த்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.
கணவர் ஊரில் இல்லாத நிலையில் இருவரும் சந்தித்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், இந்த நிலையில் சம்பவத்தன்று முரசொலிமாறனை சத்யா தேடிச் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர்.
அதன் பின், தன்னை திருமணம் செய்துகொள்ள சத்யா வ.ற்.பு.று.த்.தி.ய.தா.ல் போ.தை.யி.ல் இ.ரு.ந்.த முரசொலி மாறன், சத்யாவிடம் க.டு.மை.யா.க ந டந்து கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சத்யாவை போ.தை.யி.ல் கொ.லை செ.ய்.த முரசொலிமாறன், அவரின் ச.ட.ல.த்.தை ம.றை.ப்.ப.த.ற்.கா.க மாடிப்படிகளுக்கு அடியில் உள்ள பழைய பொருட்களுக்குள் போ.ட்.டு.வி.ட்.டு த.ப்.பி.யு.ள்.ளா.ன்.
மேலும் சத்யாவின் உ.ட.ல்.கூ.று அறிக்கையில் சத்யா உ.யி.ரி.ழ.ந்.த பி.ன்னரும் அ.வ.ர் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க கொ.டூ.ர.மா.க து.ன்.பு.று.த்.த.ப்.ப.ட்.ட.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.
போலீசில் சி.க்.கி.க் கொ.ண்.டா.ல் அ.வ.மா.ன.ப்.ப.ட நேரிடுமே என்ற அ.ச்.ச.த்.தி.ன் காரணமாகவே ச.ட.ல.த்.தை ம.றை.த்.த.தோ.டு, கா.தி.ல் வி.ஷ.த்.தை ஊ.ற்.றி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வ.து போல ந.டித்ததாகவும் அவர் கூறியுள்ளார். உ.யி.ரி.ழ.ந்.த சத்யாவுக்கு இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா பட்டானிச்சூரில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டானிச்சூரில் நேற்று (04.01.2021) இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.
பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வழமையான சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில்,
அவருடைய குருதியைப் பெற்று அன்டிஜன் மருந்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று அதிகாலை (04.01) வெளியாகிய நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவினரான கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு நேற்று முன்தினம் (03.01) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண்ணுடனும் மாணவனுடனும் தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையிலேயே ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 5 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வீதிகளில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அவ்வாறான நபர்களுக்கு PCR பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
முகக் கவசம் அணியாதவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் என சுகாதார பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத 74 பேர் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் நாடு முழுவதும் இறைச்சி விற்பனை, மரக்கறி விற்பனை, வாராந்த சந்தை, பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள நபர்களை பரவலாக தெரிவு செய்து ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தெரியவருகிறது.
இங்கிலாந்து அணியின் சகலத்துறை ஆட்டகாரான மோயீன் அலி என்ற கிரிக்கெட் வீரருக்கே கொரோனா தொற்றியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் மத்தள விமான நிலையம் ஊடாக நேற்று இலங்கை வந்ததுடன் அவர்களுக்கு அங்கு ரெபீட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் குறித்த வீரருக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.