உருமாற்றம் பெற்ற கொரோனாவின் புதிய 7 அறிகுறிகள் : மக்களே அவதானமாக இருங்கள்!!

கொரோனா..

தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையுடன் பரவி வருகிறது. பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உருமாற்றம் பெற்ற இந்த புதிய கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் வீட்டிலே இருந்து பண்டிகை காலங்களை கொண்டாடுமாறு பல நாடுகளில் வழியுறுத்தப்பட்டு வருகின்றது.

புதிய அறிகுறிகள்
சோர்வு
பசியின்மை
தலைவலி
வயிற்றுப்போக்கு
மனக்குழப்பம்
தசைவலி
தோல் அரிப்பு

உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா : இந்த அற்புத மருந்தை குடித்துப் பாருங்கள்!!

உடல் கொழுப்பை கரைக்க..

உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும்.

இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன.

அந்தவகையில் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்கும் ஒரு அற்புதமான மருந்து ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையானவை
மிளகு
துருவிய இஞ்சி சாறு
தக்காளி சாறு
எலுமிச்சை சாறு
செலெரி இலை

செய்முறை : மிளகு, துருவிய இஞ்சி, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துகொள்ளவும். இந்த கலவை அடியில் நன்கு தேங்கியவுடன் தெளிவான நீரை வேறொரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

செலெரி இலைகளை இந்த பானத்தின் மீது போடவும். இதை குடிக்கையில் செலெரி இலைகளை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும். இதை தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பருகிவர நல்ல பலன்கள் தெரியும். அடியில் தேங்கியுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

நீங்கள் வழக்கமாக பருகும் அளவை விட அதிக அளவு தண்ணீரைப் பருகி நச்சுக்களை நீக்குங்கள். சற்று ஓய்வாக இருக்கையில் நன்கு மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குங்கள்.

இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சுப் பொருட்களை தவிருங்கள். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நச்சுக்களை நீக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

வவுனியா உலுக்குளம் பகுதி சுகாதாரப் பிரிவினரினால் முடக்கம் : 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

உலுக்குளம் பகுதி..

பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியா, உலுக்குளம் கிராமம் முடக்கப்பட்டு அக்கிராமத்தினை சேர்ந்த 15 குடும்பத்தினர் அவர்களின் வீடுகளின் இன்று (26.12.2020) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று (25.12.2020) மாலை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த பெண் நடமாடிய இடங்கள் மற்றும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்ளை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் குறித்த பெண் தங்கயிருந்த நோயாளர் விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கடமையில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் கிராமமான பெரிய உலுக்குளம் பகுதி சுகாதார பிரிவினரால் இன்று (26.12) காலை முடக்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டில் சடலமாக கிடந்த புதுப் பெண் : நேர்ந்த விபரீதம்!!

தென்காசி..

வட இந்தியாவை சேர்ந்த இளைஞனை காதல் திருமணம் செய்து கொண்ட தமிழக பெண் வீட்டில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து இருவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கணவன் மனைவிக்கிடையே இடையே அடிக்கடி ச.ண்.டை நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் , நேற்று பூங்கோதையின் வீடு பூட்டப்பட்டு நிலையில் சாவி வெளியே இருந்தது.

ச ந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூங்கோதையின் வீட்டைத் திறந்து பார்த்தபோது , உள்ளே அவர் இ றந்து கி டந்து ள்ளார். அதே வேளையில், வீட்டிலில் வேறு யாரும் இல்லை.

பூங்கோதையின் கணவர் ஜோகிந்தர் மா.ய.மா.கி விட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் பூங்கோதை உ.ட.லை கை.ப்.ப.ற்.றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் ஜோகிந்தர் பி.டி.ப.ட்.டா.ல் தான் பூங்கோதை இ றப்புக்கான காரணம் தெரிய வரும் பொலிசார் கூறியுள்ளனர்.

பேஸ்புக் பயனரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

பேஸ்புக்..

பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு 2021 முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.mசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்த ஆண்டு முதல்,

சமூக வலைப்பின்னலின் மொபைல் பயன்பாட்டில் உள்நுழைவதற்கு முன்பு, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையாக, உடல் பாதுகாப்பு விசைகளை பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான பேஸ்புக் நிறுவனம், இப்போது ஒவ்வொரு உள்நுழைவிற்கும் முன்னர் ஒருவரின் டெஸ்க்டாப் கணினியுடன் இணைக்க வன்பொருள் பாதுகாப்பு விசையைப் பயன்படுத்துவதற்கான தேர்வை வழங்குகிறது.

பயனர்கள் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் வன்பொருள் விசையை வாங்கலாம், மேலும் பேஸ்புக்கில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய சமூக வலைப்பின்னல் நிறுவனமான பேஸ்புக், ‘Facebook Protect’ எனப்படும் அதன் உயர்மட்ட கணக்குகளுக்கான அதன் சொந்த பாதுகாப்புத் திட்டத்தை, தேர்தல் விண்ணப்பதாரர்கள் போன்று உலகளவில் பல வகையான கணக்குகளுக்கு விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகக் கூறியது.

தற்போது அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ‘பேஸ்புக் ப்ரொடெக்ட்’ எனும் வசதி, அரசியல்வாதிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு இரண்டு காரணி அங்கீகாரம் மற்றும் சாத்தியமான ஹேக்கிங் அச்சுறுத்தல்களுக்கு நிகழ்நேர கண்காணிப்பு போன்ற கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைப்பதற்கான வழிவகைகளை வழங்குகிறது.

“மோசமான நடிகர்கள் முக்கிய நபர்களின் சமூக ஊடக சொத்துக்களை குறிவைக்க முயற்சிக்கின்றனர். நீங்கள் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி அல்லது அரசியல் வேட்பாளர் அல்ல என்பதனால் நீங்கள் உங்கள் துறையில் ஒரு முக்கிய நபர் அல்ல என்று அர்த்தமல்ல” என்று பேஸ்புக்கின் பாதுகாப்புக் கொள்கை தலைவர் நதானியேல் க்ளீச்சர் கூறியுள்ளார்.

“எங்கள் ஆய்வறிக்கை என்னவென்றால், நீங்கள் கணக்குகளைப் பாதுகாக்க வேண்டும், ஏனென்றால் சமரசம் செய்யப்பட்ட ஒவ்வொரு தரவுகளும் மோசமான நடிகர்களால் அதிக தீங்கு விளைவிக்கும் ஒரு கருவியாக மாறக்கூடும். பின்னர், மக்களுக்கு உடனடியாக தீங்கு விளைவிப்பதைத் தவிர,” என்று அவர் தனது அறிக்கையில் மேலும் கூறினார்.

வீட்டு வாசலில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த ப யங்கரம்!!

ஆப்கானிஸ்தானில்..

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர், அண்ணனுடன் வாசலில் பேசிக் கொண்டிருந்த போது, கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் ப.ய.ங்.க.ர.வா.தி.க.ளு.க்.கு.ம் அரசுப் ப.டை.க.ளு.க்.கு.ம் இடையே தொடர்ந்து பி.ர.ச்.ச.னை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த ப.கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும், எந்த ஒரு பலனும் இல்லை.

தலிபான்கள் – ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து தா.க்.கு.த.ல் ச.ம்.ப.வ.ங்.க.ள் கு றையவே இ ல்லை.

ஆப்கானிஸ்தானில் ப.ய.ங்.க.ர.வா.த தா.க்.கு.த.ல்.க.ள் அ திகரித்தப டியே உள்ளது. தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் ப.ய.ங்.க.ர.வா.த அ மைப்பும் இந்த தா.க்.கு.த.ல் வே.ட்.டை.யை ந டத்தி வ ருகிறது.

அதிலும், தங்களுக்கு எ.தி.ரா.ன.வ.ர்.க.ள் யார் யார் என்று கு றி வை த்து அ.ழி.த்.து வருகிறது. அதில், மீடியாக்காரர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர்களும் உள்ளனர்.

அந்த வகையில், பெண் சமூக ஆர்வலர் ஒருவரை ப.ய.ங்.க.ர.வா.தி.க.ள் இ.ர.க்.க.மே இல்லாமல் கொ.ன்.று.ள்.ள.ன.ர். ஆப்கானிஸ்தானின் கபிசா என்ற மாகாணத்தின் கோஹிஸ்டன் மாவட்டத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி(29) பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று தன் வீட்டு வாசலில் நின்று இவர் அண்ணனுடன் பேசி கொண்டிருந்த போது, தி டீரென இரு சக்கர வாகனத்தில் வந்த ப.ய.ங்.க.ர.வா.தி.க.ள் து.ப்.பா.க்.கி.யை எடுத்து பிரஸ்டாவையும், அவரது அண்ணனையும் நோக்கி ச.ர.மா.ரி.யா.க சு.ட்.ட.ன.ர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த து.ப்.பா.க்.கி சூ.ட்.டி.ல் பிரஸ்டாவும், அவரது அண்ணனும் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச ரிந்து, அங்கேயே சு.ரு.ண்.டு வி.ழு.ந்.து இ.ற.ந்.த.ன.ர். இச் ச ம்பவத்திற்கு எந்த ஒரு ப.ய.ங்.க.ர.வா.த அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்த ச ம்பவத்தின் அ.தி.ர்.ச்.சி இன்னமும் அங்கு விலகவில்லை. இளம் பெண் சமூக ஆர்வலர் சு.ட்.டு.க் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட ச ம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எ திர்க்கட்சிகள் க.டு.ம் க.ண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

வவுனியாவில் முஸ்லிம்களின் ச டலங்களை எ ரிப்பதற்கு எ திராக ஆ ர்ப்பாட்டம்!!

ஆ.ர்ப்பாட்டம்..

கொரோனா தொற்று காரணமாக ம ரணமடையும் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எ ரிப்பதற்கு எ திராக வவுனியாவில் கவனயீர்ப்பு போ.ராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம் முன்பாக வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போ.ராட்டம் இடம்பெற்றது.

உலக நாடுகளில் கொரோனாவால் ம ரணமடைபவர்களை அவர்களது சமய சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கையில்,

பிறந்த 20 நாளான குழந்தை மற்றும் முஸ்லிம் மக்களின் உ டல்களை எ.ரிப்பதானது அம் மக்களின் மார்க்கத்தை மீறும் செயலாகும்.

எனவே சர்வதேச சமூகமும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கமும் கவனம் செலுத்தி இந்த நாட்டின் சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க வேண்டும் என இதன்போது ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கைகளில் வெள்ளை துணிகளை கட்டியவாறும், எ.ரிக்காதே எ.ரிக்காதே முஸ்லிம்களின் ஜனாசாக்களை எ.ரிக்காதே, அரசே உன் தாகத்திற்கு எம் தேகமா விருந்து, என் அநீதி ஆட்சிக்கு எம் சாம்பலே சிறந்த சாட்சி,

அடக்கம் என்பது உலக நியதி எரிப்போம் என்பது உன் வியாதி என ஜனாசா எரிப்பதற்கு எ.திரான பதாதைகளை தாங்கிய வாறும் ஒரு மணிநேரம் போ.ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போ ராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, அப்துல் லரீப், மற்றும் பள்ளிவாசல்களில் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!!

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு..

சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (26.12.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்ம சாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரட்ண, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு, தமிழருவி சிவகுமாரன்,

தமிழ் விருட்சம் அமைப்டபின் தலைவர் செ.சந்திரகுமார், அந்தணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!!

சுனாமி நினைவேந்தல்..

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 16ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு சுனாமி நினைவுத்தூபி முன்பாக இன்று (26.12.2020) காலை 9.15மணிக்கு இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு பேரூரைகளும் இடம்பெற்றது.

வவுனியா நகரசபையால் புனரமைக்கப்பட்டு கட்டப்பட்ட குறித்த நினைவுத் தூபி நகரசபைத் தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உபதவிசாளர் சு.குமாரசாமி,

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பிரதி பொலிஸ் மா அதிபர் லால் செனவிரட்ன, நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலய நிர்வாகனத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு இளைஞர்கள் பலி!!

விபத்துக்கள்..

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இன்று இடம்பெற்ற விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த ஐவரில் 27 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய – தனமல்வில வீதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், எம்பிலிப்பிட்டி – நோனகம வீதியின் 42 வது மைல் தொலைவில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தலை – ரம்பேவ பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், தம்புளை – குருநாகல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது இளம்பெண் மேயராகிறார்!!

ஆர்யா ராஜேந்திரன்..

திருவனந்தபுரம் மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம் பெண் தேர்வாகியுள்ளார். கேரளத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில், ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

திருவனந்தபுரத்தில், முடவன்முகல் வார்டில் போட்டியிட்ட, 21 வயது கல்லூரி மாணவியான ஆர்யா ராஜேந்திரன் பெயரை, மேயர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு தேர்வு செய்துள்ளது.

இதனை மாநிலக் கமிட்டி ஏற்று இறுதி முடிவை சனிக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்தியா வரலாற்றிலே மிகவும் குறைந்த வயதில் மேயரானவர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச செயலகத்தில் நிதி இன்மையால் நிவாரணங்களை வழங்க முடியவில்லை : பிரதேச செயலாளர்!!

உரிய நிதி ஒதுக்கப்படாமையினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரமமான நிலை காணப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொவிட் – 19 தனிமைப்படுத்தல் காரணமாக தவித்து வரும் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் எவையும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குறித்த விடயம் தொடர்பாக அவரிடம் கேட்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய ஒதுக்கீடுகள் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. எனினும் கூட்டுறவுச்சங்கத்திடம் கடன்பட்டே அந்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்கி வருகின்றோம்.

குறைந்த எண்ணிக்கையுடையவர்கள் என்றால் கடன் வாங்கி வழங்கலாம். அதிகமான தொகையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையால் நிதி ஒதுக்கீடு இல்லாமல் அதனை சீரான முறையில் வழங்க முடியவில்லை.

தற்போது எமது பிரிவில் திருநாவற்குளத்தில் 30 குடும்பங்களும், சாளம்பைக்குளத்தில் 90 குடும்பங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு மேல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களிற்கான நிவாரணத்தினை வழங்குவதற்கு அதிகமான நிதி தேவையாக இருக்கிறது.

எனினும் இன்றையதினமும் கூட்டுறவு சங்கத்திடம் 100 குடும்பங்களிற்கான உலருணவு பொதிகளை கடன் அடிப்படையில் வழங்குமாறு கேட்டுள்ளோம்.

எனவே சிரமத்திற்கு மத்தியிலேயே நிவாரணப் பணியினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

புதையல் பொருட்களை கொள்வனவு செய்த நபர் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம்!!

புதையல் பொருட்களை..

புதையலில் கிடைத்ததாக கூறப்படும் சில பொருட்களை 5 லட்சம் ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்த நபர், அவை போலியானவை என அறிந்த பின்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து உயிரிழந்தவரின் தாய் முறைப்பாடு செய்துள்ளார் என எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முறைப்பாட்டுக்கு அமைய புதையலில் கிடைத்ததாக கூறி போலியாக தயாரிக்கப்பட்டிருந்த,

மாணிக்கக்கல், செம்பு மற்றும் புத்தர் சிலையை பணத்தை கொடுத்து கொள்வனவு செய்து, அவற்றை தன்வசம் வைத்திருந்த பிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

புதையலில் கிடைத்ததாக கூறி சிலர், இந்த பொருட்களை கைது செய்யப்பட்ட நபர் உட்பட மேலும் இரண்டு பேருக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த பொருட்களை பணம் கொடுத்து கொள்வனவு செய்த மூன்று பேரில் எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். போலியான புதையல் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை இன்றைய தினம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி கல்மடு குளத்தில் மூழ்கி இளைஞரொருவர் பலி!!

குளத்தில் மூழ்கி..

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இளைஞரொருவர் நேற்று (25.12.2020) உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் கல்மடுகுளத்திற்கு சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கல்மடுநகர், சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வேறு ஒருவரின் கடவுச்சீட்டில் கனடா செல்ல முயற்சித்த யாழ். யுவதி கைது!!

யாழ். யுவதி..

வேறு ஒருவரின் கனேடிய கடவுச்சீட்டை மாற்றி அமைத்து, அதனை பயன்படுத்தி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் துபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கை யுவதி ஒருவர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரை சேர்ந்த 22 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த யுவதி எமிரோட்ஸ் விமானத்தில் துபாய் செல்லும் நோக்கில் இன்று அதிகாலை 2.45 கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமானத்தில் ஏறுவதற்கான அட்டையை பெற்றுக் கொள்ள யுவதி கடவுச்சீட்டை வழங்கியுள்ளார்.

கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் கொண்ட எமிரேட்ஸ் விமான சேவையின் அதிகாரிகள், பெண் வழங்கிய ஆவணங்களை மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

யுவதி வழங்கிய கனேடிய கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதிக்கும் போது, யுவதியிடம் அது குறித்து மேலதிகமான கேள்விகளை கேட்டுள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உடனடியான பரிசோதனையில், யுவதி சமர்பித்த கடவுச்சீட்டு வேறு ஒருவருடையது எனவும் அதில் இந்த யுவதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை தெரிவந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த கடவுச்சீட்டில் குத்தப்பட்டிருந்த இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முத்திரை போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதன் பின்னர் குடிவவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் யுவதியை கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் இயங்கும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி : மூடப்படவுள்ள வைத்தியசாலையின் சில பகுதிகள்!!

கொரோனா..

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுடன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் முடிவு இன்று (25.12.2020) மாலை வெளியாகிய நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் சிகிச்சை பெற்ற பகுதி மற்றும் சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதியர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.