நாட்டில் நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில்..

நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலத்தில் இவ்வாறு போலி நாணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும்,

எனவே நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர். நேற்றைய தினம் பியகம பிரதேசத்தில் 20,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி ஆயிரம் ரூபா பெறுமதியான 20 போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் ஹோமகம பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கொரோனா அச்சத்தின் மத்தியிலும் நத்தார் பண்டிகை வியாபாரம்!!

நத்தார் பண்டிகை வியாபாரம்..

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

இவ்விழா கிருத்தவ திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. . நாட்டில் கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் வவுனியாவில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு நகரில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நத்தார் பண்டிகை நாளைய தினம் (25.12.2020) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் நத்தார் பண்டிகை புத்தாடை வியாபாரங்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மிகமிகக் குறைந்தளவிலான மக்களே நத்தார் பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையில் வெளிமாவட்ட மக்களும் வவுனியா நகரில் புத்தாடை கொள்வனவிற்கு வருகை தருகின்ற போதிலும் தற்போதைய கோவிட் – 19 சூழ் நிலையில் வவுனியா மாவட்ட மக்கள் மாத்திரமே புத்தாடை கொள்வனவு செய்வதினை காணக்கூடியதாவுள்ளது.

வவுனியாவில் மரத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து : 50 மீற்றர் தூக்கி விசப்பட்ட இளைஞன்!!

மோட்டார் சைக்கிள் விபத்து..

வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் மோட்டார் சைக்கிளுடன் சாரதி 50 மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூங்கா வீதியில் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு அருகாமையில் இன்று (24.12.2020) மதியம் 2.15 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நூலக வீதியூடாக புகையிரத நிலைய வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் யாழ்.பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு அருகாமையில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் அருகேயிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதுடன்,

மரத்தடியிலிருந்து சுமார் 50 மீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிலும் அதன் சாரதியும் தூக்கி விசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிளின் சாரதியான 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

வவுனியா மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

பி.சி.ஆர் பரிசோதனை..

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மொத்த விற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வரும் நிலையில் தற்போது வவுனியாவிலும் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் அதிகமான மொத்த மரக்கறி வியாபாரிகளுக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமைை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய தினத்தில் இருந்து பொதுச் சந்தைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சமூக இடைவெளியின் கீழ் மொத்த விற்பனைகள் மட்டும் நடைபெற்று வருகின்றது.

பல் ஒன்றை வைத்தியசாலைக்கு அனுப்பியவருக்கு பணப்பரிசு!!

பணப்பரிசு..

கண்டி, கொழும்பு பிரதான வீதியின் கடுகன்னாவ ஹேனாவல சந்திக்கு அருகில் வெள்ளை கோட்டின் மீது பயணித்த சிறுமி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன்போது அவரது பல் ஒன்று உடைத்து விழுந்துள்ளது. அந்த பல்லை அவதானித்த கடுகன்னாவ பொலிஸ் அதிகாரிகள் இருவர் அதனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதனை உடனடியாக கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு பணப்பரிசு கிடைத்துள்ளது. போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கே இந்த பண பரிசு கிடைத்துள்ளது.

கம்பளை – கடுகன்னா பிரதேசத்தை சேர்ந்த எரங்கி மல்ஷா என்ற 15 வயதுடைய சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருவர் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அத்துடன் சிறுமியின் பல் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீண்டும் பற்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

இன்றைய வானிலை..

இலங்கையின் வானிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த சில நாட்களில் தற்காலிகமாகக் குறையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

கடல் பகுதிகளில் மன்னார் முதல் பொத்துவில் வரை திருகோணமலை, காங்கேசன்துறை வழியாகக் கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கொழும்பிலிருந்து திருகோணமலை வரை காங்கேசன்துறை வழியாகக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் (50-60) கி.மீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் ஊரடங்கு அமுலாகின்றதா? வெளியானது அறிவிப்பு!!

ஊரடங்கு அமுலாகின்றதா?

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலோ அல்லது மேல் மாகாணத்திலோ தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் ஜனவரி 2ம் திகதி அதிகாலை 5 மணிவரை தனிப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்செய்யப்படும் என்ற சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் இது தனியாட்களால் ஏற்படுத்தப்படும் போலியான செய்தியாகும் என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தனிப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும் தொடர்ந்தும் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் கண்காணிப்புகள் இடம்பெறும் என்று இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கொரோனாவின் பரவல் பொதுமக்கள் பழக்க வழக்கங்களிலேயே தங்கியிருப்பதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

யாழ். மருதனார்மடம் கொத்தணியில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் ஐவர் உள்ளிட்ட 9 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 120 பேருக்குபி பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த தொற்றாளர் ஏற்கனவே மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவராவார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 481 பேருக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மல்லாகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர் ஐவருக்கும், காங்கேசன்துறையைச் சேர்ந்த இருவருக்கும், சிறுவிழானைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த 8 பேரும் மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர். இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 103 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சி, பாரதிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த தொற்றாளர் பாரதிபுரத்தில் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். பாரதிபுரத்தில் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் கொழும்பு சென்று திரும்பும் சாரதியாவார்.

அவர் கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுக்கான அறிகுறி காணப்பட்ட போதிலும் நூறு வீதம் உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் பாரதிபுரத்தில் உள்ள அவருடைய உறவினர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நேற்று இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், நேற்று கிளிநொச்சி திரும்பிய குறித்த சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது” – என்றார்.

கணவன் பூஜையில் பங்கேற்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கீதா..

ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜையில் கணவர் பங்கேற்காததால் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் லோகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ரகு(வயது 50). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவருடைய மனைவி கீதா(46). இவர்களுக்கு ஹேமலதா(20) என்ற மகளும், தீபக்(17) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கீதா தனது படுக்கை அறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் போலீசார்,

கீதாவின் உடலை மீ.ட்.டு பி ரேத ப ரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட வி சாரணையில்,

திருமுல்லைவாயல் தாமரை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கீதா தலைமையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அவரது கணவர் பங்கேற்கவில்லை.

இதனால் மனமுடைந்த கீதா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டதாக தெரியவந்தது. இருப்பினும் அவரது த.ற்.கொ.லை.க்.கு வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செல்பி மோகத்தில் நின்ற மாணவர்களை திடீரென விழுங்கிய மரணப்பள்ளத்தாக்கு!!

பாலக்காடு பிரதேசத்தில்..

இந்தியா- பாலக்காடு பிரதேசத்தில் 3,500 அடி உயரமான மலைப்பகுதிக்கு சென்ற 7 கல்லூரி மாணவர்களில் இருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியருகே உள்ள ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு 3,500 அடி உயரமான பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போயுள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனியார் கல்லுரியில் படித்து வந்த குறித்த 7 மாணவர்களும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நெல்லியாம்பதி என்ற இடத்திற்கு சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர்.

அங்குள்ள இயற்கை அழகை இரசித்தவாறே சீதார்குண்டு முனை என்ற பகுதிக்குச் சென்று, அங்கு கைத் தொலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

பள்ளத்தாக்கிற்கு அருகே நின்று கொண்டு செல்பி எடுத்த சமயத்தில் அதிலிருந்த ஒருவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முனைந்த அவரின் நண்பர்களில் ஒருவர், அவரை பிடிக்க முயன்ற வேளையில் அவரும் தவறி விழுந்துள்ளனர்.

இவ்வாறு இருவரும் 3,500 அடி ஆழமான பள்ளத்தாக்கிற்குள் விழுந்ததை பார்த்த ஏனையவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் அவர்களை தீவிரமாக தே டி வருகின்றனர்.

இதேவேளை, சுற்றுலா செல்பவர்கள் மட்டுமின்றி கைத்தொலைபேசி பாவனையாளர்களில் அதிகமானோர் செல்பி எடுக்கும் மோகத்தில் தமது உயிரை இழந்துள்ளதோடு, விபத்துக்குள் சிக்குண்ட பல்வேறு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!!

ரகுல் ப்ரீத் சிங்..

இந்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துவந்த இவர் தமிழில் அடிக்கடி படங்கள் நடிக்காவிட்டாலும் நடிக்கும் ஒரு சில படங்களில் ரசிகர்களின் மனதை வென்று விடுவார்.

2019 ஆம் ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே படத்தில் நடித்து பாராட்டை பெற்றதுடன் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில் ’எனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான் தற்பொது தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

நான் நன்றாக ஓய்வெடுத்து விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்பேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளும் படி கேட்டுகொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

தனியாக வசித்து வந்த பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த விபரீதம்!!

ஜானகி..

தமிழ்நாட்டில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண் ப.டு.கொ.லை செ ய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜானகி.

சண்முகம் ஏற்கனவே இ றந்து விட்ட நிலையில் ஜானகி தனியாக வசித்து வந்தார். இவரது மகன் பாரிராஜன். அரசு மருத்துவரான இவர் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜானகியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த ம ர்ம ந பர்கள், ஜானகியின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ ய்து உ ள்ளனர்.

பின்னர் ஜானகி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் சங்கிலியை அ.று.த்.து எ டுத்து சென்றுள்ளனர். நேற்று காலை ஜானகி வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுப்பதற்காக பாரிராஜன் வந்தார்.

அவரது கார் ஓட்டுனர் ஜான்சன், ஜானகியை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக அழைத்தும் வீட்டுக்குள் இருந்து ஜானகி வெளியில் வராத காரணத்தால் பின்பக்க வழியாக சென்று பார்த்துள்ளார்.

அப்போது ஜானகி க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நி லையில் பி.ண.மா.க கி டந்தது தெரிய வந்ததை பார்த்து அ.தி.ர்.ச்.சி அ டைந்து இந்த தகவலை பாரிராஜனிடம் தெரிவித்தார்.

அவரும் ஓ.டி வ ந்து தனது தாய் கொ.லை செ ய்யப்பட்டுள்ளதை பார்த்து க.த.றி அ.ழு.தா.ர். பு.கா.ரி.ன் பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். நகைக்காக இந்த கொ.லை நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா என தீ.வி.ர வி சாரணை நடைபெற்று வருகிறது.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

புதிய பாடசாலை தவணை ஜனவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 – 5 உட்பட அனைத்து தரத்திற்கும் மாணவர்களுக்கும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அந்த தினத்தில் ஆரம்பிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு மூன்றாவது பாடசாலை தவணை இன்றைய தினம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் அனைத்து மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தரம் உயர்த்த வேண்டும்.

அதற்கமைய 2021ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணையின் போது மாணவர்கள் தரம் உயர்த்தப்படும் பகுதிகளில் கல்வி கற்க வேண்டும். அதற்கான புத்தகங்கள் இந்த வருட இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என,

கல்வி அமைச்சு அனைத்து மாகாணங்களினதும் பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி இயக்குனர்கள், வலைய கல்வி இயக்குனர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

கணவன் இறந்த சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்ற மனைவி செய்த செயல் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவன் ம ர்மமாக உ யிரிழந்த நிலையில் மனைவி, வீட்டில் இருந்த நகைகளை அள்ளி சென்ற சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த பழனிவேல் ராஜா (32) என்பவருக்கும், சாந்தாதேவி (30) என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணமாகியுள்ளது.

திருமணமான பிறகு இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ருதன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.பழனிவேல் சித்தாலப்பாக்கம் சந்திப்பில் மளிகை கடையை சொந்தமாக நடத்தி வருகிறார்.

திருமணம் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் புதிதாக வீடு கட்டியதற்காக இவருக்கு சுமார் 50 லட்சம் கடன் உள்ளதாக தெரிவித்தனர். மளிகை கடையில் வரும் வருமானத்தை வைத்து பழனிவேல் ராஜா வாங்கிய கடனை சிறுக சிறுக அடைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கணவன் சம்பாதிக்கும் பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பழனிவேல் ராஜாவுடன் மனைவி சாந்தாதேவி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் பழனிவேல் ராஜா ம ர்மமான முறையில் தூ.க்.கி.ல் ச.ட.ல.மா.க தொ.ங்.கி.ய.ப.டி க ண்டெடுக்க ப்பட்டார். இது குறித்து விசாரித்த பொலிசார் சாந்தாதேவிக்கு சாதகமாக நடப்பதாக பழனிவேலின் உறவினர்கள் கு ற்றம்சாட்டினர்.

மேலும் உ.ட.லை வா ங்க மறுப்பு தெரிவித்து பழனிவேல் ராஜா குடும்பத்தினர் காவல் நிலையத்தை மு ற்றுகையிட்டு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையில் பழனிவேல் ராஜா இ றந்த சிறிது நேரத்தில் குழந்தைக்கு பால் பாட்டில் எடுக்க வேண்டும் என கூறிய சாந்தாதேவி, பொலிசார் பா துகாப்புடன் வீட்டில் நுழைந்து வீட்டில் வைத்திருந்த,

அனைத்து தங்க நகைககளையும் எடுத்து சென்றது தங்களுக்கு அ திர்ச்சியை கொடுத்ததாக பழனிவேல் ராஜாவின் உறவினர்கள் கு ற்றம்சாட்டுகிறார்கள். தொடர்ந்து சம்பவம் குறித்து வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணமான 30 நாட்களுக்குள் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கடைசியாக தந்தைக்கு அனுப்பிய கண்ணீர் காணொளி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் ஆன 30 நாட்களுக்குள், இளம் பெண் த.ற்.கொ.லை செ ய்து கொண்ட சம்பவத்தில், அப்பெண் த.ற்.கொ.லை.க்.கு மு ன் தன்னுடைய தந்தைக்கு வீடியோ அனுப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை, திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். 25 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த சம்பத் என்பவரின் 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ரக்சனா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்துகொண்டார். திருமணம் ஆன ஒரு மாததிற்குள் இளம் பெண் த.ற்.கொ.லை செ ய்து கொண்டதால், இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இது குறித்து ஆர்.டி.ஒ விசாரணை மேற்கொண்டதில், ரக்சனா த.ற்.கொ.லை.க்.கு மு ன் தன்னுடைய தந்தைக்கு வீடியோ ஒன்று அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

அதில், தந்தையின் விருப்பத்திற்காகவே திருமணம் செய்து கொண்டதாக வீடியோவில் தெரிவித்துள்ள ரக்சனா தனது தந்தை கடைசி வரை தன் விருப்பத்தை கேட்கவில்லை என்று வே தனையுடன் பதிவிட்டுள்ளார்.

தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அனைவருக்கும் தெரிந்திருந்தும் தந்தைக்கு மட்டும் அது புரியவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.

திருமணத்திற்கு முன்பு ஒருவரை தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்துள்ள ரக்சனா அவருடன் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது தந்தையையும் குடும்பத்தையும் மிகவும் பிடிக்கும், இருப்பினும் திருமணம் ஆன நாளில் இருந்து மிகவும் வே.தனையில் இருந்ததாவும் பதிவிட்டுள்ளார்.

தனது தந்தை கடைசிவரை தன் மனதை புரிந்து கொள்ளவே இல்லை என்று கூற, வீடியோ இடையில் து ண்டிக்கப்பட்டு விடுகிறது. இந்த வீடியோவை வைத்து பெண்ணின் தந்தை மற்றும் குடும்பத்தினரிடம் பொலிசார் வி.சாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் பாரியளவு அதிகரித்த அமெரிக்க டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலரின் பெறுமதி..

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று மீண்டும் பாரிய வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.05 ரூபாயாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 188.01 ரூபாயாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 186 ரூபா 80 சதமும் விற்பனை பெறுமதி 191 ரூபா 20 சதமுமாக காணப்பட்டது.

அதற்கமைய இந்த வருடத்தின் மே மாதம் நான்காம் திகதியின் பின்னர் அமெரிக்க டொலர் ஒன்று பதிவாகிய அதி கூடிய விலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.