வவுனியா வைத்தியசாலைக்கு வைத்தியர் தேவையை நிவர்த்தி செய்ய ஒரு வாரகாலம் அவகாசம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் உணர்வழியியல் வைத்திய நிபுணர் வெற்றிடத்தினை ஒர் வார காலத்தினுள் நிவர்த்தி செய்யவிடின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடருமென வவுனியா அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் எம்.எம்.எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருந்து. அவரது அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர்கள் இன்று புதன்கிழமை (23.12.2020) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளையினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது. ஆயினும் தற்போது வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக முறையற்ற காலநிலையால் மழை பெய்வதுடன் வெள்ள அனர்த்தத்திற்கு மக்கள் முகம் கொடுப்பதனாலும் மருத்துவர்களின் பணிப் புறக்கணிப்பு அடுத்த வாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்தும்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்தும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு உணர்வழியியல் வைத்திய நிபுணர் விடுவிக்கப்பட வேண்டும்.

இவருக்கான பதிலீட்டு வைத்திய நிபுணர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்ப சுகாதார அமைச்சு முயற்சிகள் எடுப்பதாக எமக்கு உறுதி கூறியுள்ளது.

மேலும் சம்மாந்துறை வைத்தியசாலையில் இருந்து நாளை விடுவிக்கப்படும் வைத்திய நிபுணர் அதன் பின்பு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் பின் அங்குள்ள வைத்திய நிபுணர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விடுவிக்கப்படுவார். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உணர்வழியல் வைத்திய நிபுணர் எங்களுக்கு விடுவிக்கப்படுவார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது ஒரேயொரு உணர்வழியல் வைத்திய நிபுணரே கடமையாற்றி வருகின்றார்.

எனவே, வட மாகாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்து மிகப் பெரிய வைத்தியசாலையாகவும் 36 வைத்திய நிபுணர்கள் கொண்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை அரும் பெரும் சேவையாற்றி வருகிறது.

எங்கள் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவுகள்,சத்திர சிகிச்சைகள் தொடர்ச்சியாக நடைபெற எங்களுக்கு மூன்று உணர்வழியியல் வைத்திய நிபுணர் வேண்டும்.

இது தொடர்பில் நாங்கள் எமது வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் ஊடாகவும், எமது வைத்தியர்கள் ஊடாகவும் கோரிக்கைகள் முன்வைத்திருந்த போதும் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளை, அடுத்த வாரங்களுக்குள் எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாதவிடத்து தொடர்ச்சியான, பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதை மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1000 பேர் பணியாற்றும் தொழிற்சாலையில் 100 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

பாணந்துறையில் பிரபல ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குளானவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளதாக களுத்துறை நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே தெரிவித்தள்ளார்.

அதற்கமைய குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் கிரிஉல்ல பிரதேசத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தொழிற்சாலை ஊழியர்கள் தங்கியிருந்த இடத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர், ஊழியர்கள் 150 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை!!

பி.சீ.ஆர்..

 

வவுனியா மாவட்டத்தில் புதிது புதிதாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமையுடன் 50க்கு மேற்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வர்த்தக சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கமைய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரினால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு இன்றையதினம் (23.12.2020) காலை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக வவுனியா நகரம், ஹோரவப்பொத்தானை வீதி, சந்தை ஆகிய பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் என சுழற்சி முறையில் தெரிவு செய்யப்பட்ட 150 நபர்களுக்கே இவ்வாறு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை உறுதிப்படுத்தும் அட்டையும் வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா : ஜேர்மன் நிறுவனத்தின் மகிழ்ச்சியான செய்தி!!

கொரோனா..

லண்டன், தென்கிழக்கு மற்றும் கிழக்கு பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நேற்றைய தினம் 691 பேர் கொரோனா தொற்றுக்கு ப லியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 36,804 பேர் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று பிராந்தியங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு ஏற்ப மரணங்களும் உயரத் தொடங்கியுள்ளன.

இதனால் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 691 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது நவம்பர் 25ம் திகதிக்கு பிறகு அதிகபட்ச தினசரி உயிரிழப்பாகும், அத்துடன், கடந்த செவ்வாயன்று பதிவு செய்யப்பட்ட 506 என்ற எண்ணிக்கையையும் விட அதிகமாகும்.

தற்போது பிரித்தானியாவில் மொத்தம் 2,110,314 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 68,307 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பிரித்தானியாவில் இருந்து பல நாடுகளுக்கு பயணிக்கும் சர்வதேச விமானங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.

எவ்வாறாயினும், உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ் வகைக்கு இன்னும் ஆறு வாரங்களுக்குள் புதிய தடுப்பு மருந்தை தங்களால் கண்டுபிடித்துவிட முடியும் என்று ஜேர்மனி தடுப்புமருந்து நிறுவனமான பயான் டெக் உறுதிபட தெரிவித்துள்ளது.

உருமாற்றம் பெற்ற கொரோனாவைக் கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் தற்போது தாங்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தடுப்பு மருந்துகள்கூட சில சமயங்களில் இந்த வகை கொரோனா வைரஸை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இது பிரித்தானியா மற்றும் இதர ஐரோப்பிய நாட்டு குடிமக்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இனிப்பு உணவுகளால் கொரோனா ஆபத்து : சுகாதார அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை!!

கொரோனா ஆபத்து..

எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் முடிந்தளவு இனிப்பு உணவுகளை உட்கொள்ளாமல் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் ஷாந்தி குணவர்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் இந்த சந்தர்ப்பத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அதன் மூலம் உடலுக்கு கொரோனா கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக இனிப்பு சுவை அதிகமாக உணவுகள் மூலம் உடலுக்கு நீரிழிவு நோய் ஏற்படுத்தும் என்பதனால் அது கொரோனா வைரஸ் தொற்றிற்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.

நீரிழிவு உட்பட பல நோய்களினால் பாதிக்கப்படும் நபர்கள் தங்களின் நோய் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக வைத்திய ஆலோசனைக்கமைய மருந்து பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் குறிபபிட்டுள்ளார்.

அதற்கமைய விசேடமாக புதிய மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளளுமாறும் அவர் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒமேகா லைன் ஆடைத் தொழிற்சாலையினால் உதவி!!!

ஒமேகா லைன் ஆடைத்தொழிற்சாலை..

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள ஒமேகா லைன் ஆடைத்தொழிற்சாலையினால் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு ரூபா மூன்று மில்லியன் நிதியுதவியினை வழங்கி வைத்தமையுடன் பல்வேறு உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த நிகழ்வு வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று(23.12.2020) காலை இடம்பெற்றது.

சுமார் 2600 ஊழியர்களை தன்னகத்தே கொண்ட வவுனியா மாவட்டத்தில் முன்னணி ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றான ஒமேகா லைன்- வவுனியா நிறுவனமானது சமூக நலனைக் கருத்திற் கொண்டு கடந்த வருடங்களாகவே அதிகளவான சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அவ்வகையில் இவ்வருடம் முழு உலகமும் கோவிட்-19 நோய் தாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வரும் இந் நிலையில் இலங்கையும் இந்நோயினைக் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இச் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்யும் முகமாக இவ் ஆடைத்தொழிற்சாலையினால்  வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 12000 முகக்கவசங்கள், பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு 2000 பாதுகாப்பு உடைகளையும் இலவசமாக வழங்கி வைத்தனர்.

மேலும் தற்பொழுது நாட்டில் நிலவுகின்ற அதி தீவிர பரவலுக்கு எதிராக கைகொடுக்கும் வகையில் ரூபா மூன்று மில்லியன் நிதியுதவியும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு வழங்கியுள்ளது.

இந் நிதியுதவியானது வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் மகேந்திரன் மற்றும் தொற்று நோயியல் நிபுணர் லவன் ஆகியோரிடம் ஆடைத் தொழிற்சாலையின் மனிதவளம் மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் சமன் ஜெயசிங்கவினால் இன்று கையளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் ஆடைத்தொழிற்சாலையின் மனிதவள நிர்வாகி அன்ரன் மதன்ராஜ், நிதி மற்றும் கணக்கீட்டு உதவி முகாமையாளர் பிரவீன்குமார் மற்றும் ஆடைத்தொழிற்சாலையின் முதன்மை ஊழியர்களான பிரதீபா மற்றும் ஜஸ்மினா ஆகியோருடன் அந் நிறுவனத்தின் ஏனையய சில ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

குப்பையில் வீசப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் : கண்டுபிடித்து கொடுத்த துப்புரவு ஊழியர்கள்!!

ஒன்றரை லட்சம் ரூபாய்..

ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தில் இன்று நடந்தது.

கல்முனை நகர மண்டப வீதியில் நேற்று செவ்வாய்கிழமை காலை வழமைபோன்று, வீடுவீடாக குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் வாகனமொன்றில், தனது வீட்டுக் குப்பை பையினை பெண்ணொருவர் ஏற்றியுள்ளார்.

இதேவேளை, வெளியில் சென்றிருந்த அந்தப் பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்தபோது, சிறிய பை ஒன்றினுள் இட்டு, மேசை மீது அவர் வைத்திருந்த பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கணவர் கேட்டபோது; “குப்பைகளுடன் தவறுதலாக பணமும் சென்றிருக்கலாம்” என மனைவி கூறியுள்ளார்.

உடனடியாக கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பிரிவின் மேற்பார்வையாளர் எம்.எம்.எம். றிஸ்வான் என்பவரைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்ட பணத்தின் உரிமையாளர், விடயத்தைக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, மாநகர சபை ஊழியர்கள் துரிதமாகச் செயற்பட்டு, குறித்த வாகனத்திலிருந்த குப்பைகளிலிருந்து சம்பந்தப்பட்ட நபர் ஏற்றி அனுப்பிய குப்பை பையினை எடுத்துப் பார்த்தபோது, அதனுள் ஒன்றரை லட்சம் இலங்கை ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திண்மக்கழிவகற்றல் பிரிவின் மேற்பார்வையாளர் றிஸ்வான் கூறுகையில்;

“காலை 10.30 மணியளவில் குறித்த பெண்ணின் கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினார். அப்போது அவர் மிகவும் பதட்டமாக இருந்தார்.

தேவையொன்றுக்காக நகைகளை அடகுவைத்து, குறித்த பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், அந்தப் பணம் தொலைந்து விட்டதாகவும் சொன்னார்.

இதனையடுத்து, குறித்த வாகனத்தை சாய்ந்தமருது பிரதேசத்தில் நிறுத்தினோம். அப்போது பணத்தைத் தொலைத்த நபரும் அவரின் மனைவியும் அங்கு வந்திருந்தார்கள்.

அந்த வாகனத்தில் இருந்த குப்பைகளுக்கிடையே, சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிலிருந்து ஏற்றப்பட்ட குப்பை பையினை முக்கால் மணி நேரத்தின் பின்னர் கழிவகற்றும் ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

அதனுள் அவர்கள் கூறியது போல் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அந்தப் பணம் அவர்களுக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள், அதனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்த ஊழியர்களுக்கு ஒரு தொகைப் பணத்தை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்கள்.

ஆனால் அதனை ஊழியர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கஷ்டத்தில் நகைகளை அடகு வைத்துப் பெற்றுக் கொண்ட பணம், அவர்களுக்கு கிடைத்ததில் எங்களும் மகிழ்ச்சிதான்,” என்றார் மேற்பார்வையாளர் றிஸ்வான்.

– BBC – Tamil

பிரித்தானியாவில் இருந்து வரும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய தடை!!

பிரித்தானியாவில் இருந்து..

பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் நேற்று நள்ளிரவு முதல் நாட்டுக்கள் நுழைய இலங்கை அனுமதி மறுத்துள்ளது. பிரித்தானியாவில் இந்த பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை காரணமாக அரசாங்கம் நேற்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி உட்பட 40 நாடுகளுக்கும் அதிகமான நாடுகள் இதுவரையில் பிரித்தானியாவின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மீள் அறிவிப்பு வரையில் பிரித்தானியாவில் இருந்து வரும் இலங்கையர்களுகளும் நாட்டிற்கு நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து இலங்கையர்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்படாதென விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் தொழிலில் நஷ்டம், கடன் தொல்லை : தொழிலதிபர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பூர்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடைவீதியை சேர்ந்தவர் பலராமன்(வயது 75). இவருடைய மனைவி புஸ்பா(73). இவர்களின் மகன் ஹரிஹரன்(38). இவருடைய மனைவி திவ்யா(34). மகள் அசோக்பிரதா(8).

தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் ‘வெங்கட்ராம் செட்டியார்ஸ் தங்கமாளிகை’ என்ற பெயரில் ஹரிஹரன் நகைக்கடை நடத்தி வருகிறார். அத்துடன் சினிமா தியேட்டர், தானிய மண்டி என்று பல்வேறு தொழிலையும் அவர் செய்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததாலும், ஹரிஹரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழில் வளர்ச்சிக்காக தனக்கு தெரிந்த பலரிடம் பல கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தொழிலில் எவ்வித லாபமும் இல்லாமல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த ம னவே தனையுடன் தனது குடும்பத்தினரிடம் அவ்வப்போது இது குறித்து வருத்தம் தெரிவித்து வே த னை அடைந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹரிஹரனிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொ.ல்.லை கொடுத்துள்ளனர். இதனை அவர் சீராக சமாளித்து வந்த நிலையில், நாளடைவில் தொழிலில் முற்றிலும் சரிவு ஏற்பட்டு முடங்கினார். மேலும் கடன் தொல்லை அதிகமானதால் ஹரிஹரன் பெரும் ம ன உ ளைச்சலுக்கு ஆளாகினார்.

இதனையடுத்து ஹரிஹரன் மனநிம்மதிக்காக சில நாட்கள் சுற்றுலா சென்றுவரலாம் என்று தனது பெற்றோர் மற்றும் மனைவியிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் தனது தந்தை, தாய், மனைவி, மகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு சில நாட்களுக்கு முன் தாராபுரத்தில் இருந்து காரில் சுற்றுலா புறப்பட்டார்.

பல்வேறு ஊர்களுக்கு சென்ற அவர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சோலை ரிசார்ட் ஓட்டலில் வாடகைக்கு அறை எடுத்து அவர்கள் தங்கினர்.

அன்று இரவு ஹரிஹரன், தான் கடன் வாங்கியது குறித்தும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொ.ல்.லை கொடுத்து வருவது குறித்தும் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும், இதில் இருந்து விடுபட முடியும் என நம்பிக்கை இல்லை என க.ண்.ணீ.ர் ம.ல்.க தனது பெற்றோரிடம் கூறி வே தனையடை ந்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் அனைவரும் ம னவே தனையில் ஒன்றாக வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த.ற்.கொ.லை செ ய்துகொ ள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து நகைகளை மெருகூட்ட பயன்படுத்தும் திராவகத்தை (வி.ஷ.ம்) எடுத்து நேற்று அதிகாலை குடும்பத்தினர் ஒவ்வொருவராக கு.டி.த்.த.ன.ர்.

இறுதியாக சிறுமி அசோக்பிரதாவுக்கும் கொடுத்தனர். அதனை குடித்த அவள் சிறிது நேரத்தில் மூ ச்சு தி.ண.ற.ல் ஏற்பட்டு து.டி.து.டி.த்.தா.ள். இதனைக்கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த அவரது தாய் திவ்யா அறையை விட்டு வெளியே ஓ.டி.வ.ந்.து எனது மகளை கா.ப்.பா.ற்.று.ங்.க.ள் என ச.த்.த.ம் போட்டுவிட்டு, ம.ய.ங்.கி வி.ழு.ந்.தா.ர்.

அப்போது பணியில் இருந்த ஓட்டல் ஊழியர்கள் ஓ.டி வந்து பார்த்தபோது, த.ற்.கொ.லை செய்வதற்காக அங்கு 5 பேரும் திராவகம் கு.டி.த்.து ம.ய.ங்.கி கி.ட.ந்.த.ன.ர்.

உடனே, ம.ய.ங்.கி கி.ட.ந்.த அனைவரையும் ஓட்டல் ஊழியர்கள் மீ.ட்.டு, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று வி சாரணை நடத்தினர்.

கொரோனாவால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் தொ.ல்.லை.யா.லு.ம் திருப்பூர் தொழில் அதிபர் திருச்சி அருகே தங்கும் விடுதியில் குடும்பத்துடன் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு யன்ற ச ம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தி உள்ளது.

பேச மறுத்த காதலிக்கு நடுரோட்டில் நடந்த வி பரீதம் : காதலனின் வெ.றிச்செ.யல்!!

நடுரோட்டில்..

கர்நாடகாவில் நடுரோட்டில் வைத்து கா தலியை க.த்.தி.யா.ல் கொ.டூ.ர.மா.க வெ.ட்.டி.ய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா என்ற இளம் பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக இஸ்மாயிலிடம் பேசுவதை ஆஷா நிறுத்தியுள்ளார். இதனால் ம.ன.மு.டை.ந்.த இஸ்மாயில் தன்னை தொடர்ந்து காதலிக்குமாறும், தன்னிடம் பேசுமாறும், ஆஷாவை தொடர்ந்து வ.ற்.பு.று.த்.தி வந்துள்ளார்.

மேலும் தொலைபேசி, மற்றும் வாட்ஸ் அப் மூலமும் ஆஷாவுக்கு தொடர் தொ.ந்.த.ர.வு கொ டுத்துள்ளார். ஆனால் ஆஷாவோ இஸ்மாயிலின் நட்பை முழுமையாக து ண்டித்து ள்ளார்.

இ தனால் ஆ.த்.தி.ர.த்.தி.ன் உ ச்சிக்கு செ ன்ற இஸ்மாயில், ஆஷாவை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.டு.ள்.ளா.ர். இ தனால் க டந்த தி ங்கள் கி ழமை (21-12-2020) கா லையில் அ லுவலகத்திற்கு செ ல்வதற்காக ஆஷா அ வரது வீ ட்டிலிருந்து கி ளம்பி வெ ளியே வ ந்துள்ளார்

சிறிது தூரம் சென்றதும் எதிரே இஸ்மாயில் வந்துள்ளார். ஆனால் இஸ்மாயிலை ஆஷா கண்டுகொள்ளவில்லை, இதனால் ஏற்கெனவே தி ட்டமிட்டபடி, ம.றை.த்.து வைத்திருந்த க.த்.தி.யை எடுத்து இஸ்மாயில் ஆஷாவை கொ.டூ.ர.மா.க வெ.ட்.டி.யு.ள்.ளா.ர்.

இதனால் சு யநினவை இ ழந்த ஆஷா ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் அ ங்கேயே வி.ழு.ந்.தா.ர். க ண் இ மைக்கும் நேரத்தில் நடந்த இ ந்த கொ.டூ.ர ச ம்பவத்தை பார்த்தவர்கள் இஸ்மாயிலை வி.ர.ட்.டி பி.டி.க்.க மு யன்றனர்.

ஆனால் அவர் அங் கிருந்து த.ப்.பி.யோ.டி.வி.ட்.டா.ர். பி ன்னர் அ வர்கள் உ.யி.ரு.க்.கு ஆ.ப.த்.தா.ன நி லையில் ஆஷாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

9 வயதில் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் சம்பாதித்து காட்டி அசத்திய சிறுவன் : எப்படி தெரியுமா?

ரியான் காஜி..

இந்த ஆண்டு யூ டியூப்பில் அதிகம் சம்பாதித்த பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுவன் முதல் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியைத் தலைமையிடமாக வைத்து இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூ டியூபர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதில் இந்த ஆண்டும் அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார்.

ரியான்ஸ் வோர்ல்ட் என்ற யூ டியூப் சேனலை துவங்கியிருக்கும் ரியான் காஜி குழந்தைகளின் விளையாட்டுச் பொருட்களை வாங்கி அதை திறந்து பார்த்து அதில் தனக்கு பிடித்தது மற்றும் பிடிக்காதது குறித்து வீடியோ வாயிலாக கூறுவான்.

ரியானின் இந்த வீடியோக்களை 1200 கோடி முறை பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சேனலை 4.17 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.

இதன் மூலம் ஆண்டு 220 கோடி ரூபாய் அளவிற்கு ரியான் சம்பாதித்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகம் சம்பாதிக்கும் யூ டியூபராக தொடர்ந்து 3-வது ஆண்டாக ரியான் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வானில் நேற்றிரவு ஏற்பட்ட அதிசய நிகழ்வு!!

அதிசய நிகழ்வு..

வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் நேற்றைய தினம் சூரிய மண்டலத்தின் அளவு கோலுக்கு அமைய ஒரு தசத்திற்கும் குறைவான இடையில் தென்பட்டுள்ளன.

இந்த காட்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையிலும் இந்த நிகழ்வை காணக் கூடியதாக இருந்ததாக ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரு கோள்களும் இவ்வாறு அருகில் தென்பட்ட நிகழ்வானது 397 வருடங்களின் பின்னர் நிகழ்ந்தது எனவும், முன்னதாக 1623இல் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிகழ்வானது வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையிலான கிரக சமநிலை வீதம் என அழைக்கப்படுகிறது.

அத்துடன் சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு பூமியில் புயல் போன்ற காலநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என பரவி வரும் கருத்து பொய்யானது என ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையத்தின் சிரேஷ்ட விண்வெளி ஆய்வாளர் இந்திக மெதன்கொட தெரிவித்துள்ளார்.

 

லாட்ரியில் 147 கோடி பரிசாக வென்ற மாணவன் : பணத்தை அவர் என்ன செய்யவிருக்கிறார் தெரியுமா?

147 கோடி பரிசாக…

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு லொட்டரியில் 20 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது.

இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வியாழனன்று இரவு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இவ்வளவு பெரிய தொகை என்பதை அறிந்ததும் நம்ப முடியவில்லை எனவும்,

உடனையே பெற்றோருக்கு தகவல் தர அழைத்த போது அவர்கள் தூக்கத்தில் இருந்ததால் விடிந்ததும் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். தமக்கு ராசியான 13-ல் தொடங்கும் இலக்கங்கள் கொண்ட லொட்டரியை வாங்கியதாக கூறும் மாணவன்,

விற்பனை முடிவுக்கு வர சில நிமிடங்கள் எஞ்சிய நிலையிலேயே தாம் முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

அவர்களுக்கு உதவுவதே முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ள பெயர் வெளிப்படுத்தாத அந்த மாணவன், எஞ்சிய காலம் தமக்கு பிடித்தது போன்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாயும் மகளும் : காரணம் வெளியானது!!

லண்டன்..

லண்டன் வீட்டில் ச டலமாக க ண்டெடுக்க ப்பட்ட தாய், மகள் இருவர் கைகளிலும், குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊ சி இருந்ததாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில், Shiwangi Bagoan (25) என்ற இளம்பெண்ணும் அவரது மகளான Ziana Bagoan (2) என்ற குழந்தையும், உ யிரிழந்த நிலையில், குழந்தையின் பாட்டியான Jassumati Laluவால் இம்மாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

தன் மகளை கண்ணும் கருத்துமாக காத்துக்கொள்ளும் தாய், மகளுக்காக வாழ்வையே அர்ப்பணித்த தாய், நல்ல மருத்துவமனை பணியாளர் என்றெல்லாம் பாராட்டப்படும் Shiwangi, எதற்காக தன் மகளை கொ.லை செ ய்யும் அளவுக்கு துணிந்தார் என்பது இன்னமும் ம ர்மமாகவே நீடிக்கிறது.

Shiwangi எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விடயமோ, குழந்தையின் தந்தை யார், அவர் எங்கிருக்கிறார் என்கிற விடயமோ இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், Shiwangi மற்றும் அவரது மகளை உ யிரிழந்த நிலையில் கண்டுபிடித்த கு ழந்தையின் பாட்டியான Jassumati, அவர்கள் இருவரது கைகளிலும் குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி கு த்தப்பட்டிருந்த வண்ணமாகவே அவர்கள் இ.ற.ந்.து கி.ட.ந்.த.தா.க தெரிவித்துள்ளார்.

தான் பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து ஏதோ ஒரு மருந்தை எடுத்துவந்த Shiwangi, அதை தன் மகளுக்கும் தனக்கும் ஊசி மூலம் ஏற்றிகொண்டதால் இருவரும் உ யிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

என்றாலும் இன்னமும் முழுமையான உடற்கூறு ஆய்வுகள் வராததால், Shiwangi மற்றும் Zianaவின் மரணம் குறித்த முழு விவரமும் தெரியவரவில்லை. பொலிசார் இந்த ம ரணங்கள் தொடர்பாக யாரையும் சந்தேகிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

வவுனியா ஓமந்தையில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மீட்பு!!

ஓமந்தையில்..

வவுனியா – ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து மோட்டார் செல்லொன்று இன்றைய தினம்(22.12.2020) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயல் காணியில் வெடிபொருள் இருப்பது தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட குறித்த மோட்டார் செல் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த மோட்டார் செல் செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வான் பாயும் வவுனிக்குளம் : பார்வையிடுவதற்காக செல்லும் மக்கள் கூட்டம்!!

வவுனிக்குளம்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் 26 அடியைக் கடந்துள்ள நிலையில் குளத்தின் நீர் வான் பாய்ந்து வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வான் பாயும் காட்சியைக் காண்பதற்காக பல மக்கள் குறித்த பகுதிக்கு சென்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம் குறித்த பகுதியைப் பார்வையிடுவதற்காக வருகைதந்த வாகனமொன்று குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் குளித்தல், மீன்பிடித்தல் நடவடிக்கைகள் நீர்ப்பாசன திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலப்பகுதிக்குள் இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளைப் பார்வையிடுவதற்காக வருகை தந்து ஏற்படுகின்ற,

அநியாய உயிரிழப்புகள் மற்றும் நோய் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு குறித்த பகுதிகளுக்கு மக்கள் அநாவசியமாக வருகை தருகின்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.