தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் திடீர் மரணம் : இரகசியமாக புதைத்த குடும்பத்தினரால் சிக்கல்!!

பெண் திடீர் மரணம்..

பேருவளையில் குடும்ப உறுப்பினர்கள் நால்வர் கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரகசியமாக புதைக்கப்பட்டமை தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த 11ஆம் திகதி பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு அனுமதி கோரியுள்ளனர்.

இதன் போது இந்த நபர்களின் குடும்பத்தினர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வேறு ஒரு நபரால் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சுகாதார பரிசோதகர்கள் குடும்பத்தில் 15 பேரிடம் மேற்கொண்ட PCR பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன் பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த வாரத்தில் அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இரவில் குடும்பத்தினர் அவரை புதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்!!

ஊரடங்கு சட்டம் தொடர்பில்..

பண்டிகை காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பயண தடை விதிக்கப்படாத பிரதேசங்களில் அத்தியாவசியமின்றி தனிமைப்படுத்த எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் பயண தடை விதிப்பதற்கு எவ்வித அவசியமும் இல்லை என்ற போதிலும் அவசியம் ஏற்பட்டால் அதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

இந்தியாவை உலுக்கிய கன்னியாஸ்திரி கொ.லை வழக்கு : 28 ஆண்டுகளுக்கு பின்னர் கு.ற்றவாளி யார் என அறிவிப்பு!!

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 28 ஆண்டுகளாக நடைபெற்ற கன்னியாஸ்திரி அபயா ப.டு.கொ.லை வ ழக்கில் கு.ற்.ற.வா.ளி.க.ள் யார் யார் என்பதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இதில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கு.ற்.ற.வா.ளி.க.ள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நாளை புதன்கிழமை அறிவிப்பதாகவும் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா 1992-ம் ஆண்டு மார்ச் 27-ல் புனித பயஸ் கான்வென்ட் கிணறு ஒன்றில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர். முதலில் அபயா த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டதாக கூறப்பட்டது.

ஆனால் அபயா ம.ர.ண.ம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ வி சாரணையிலும் அபயா த.ற்.கொ.லை செ ய்து கொண்டார் என்றே கூறப்பட்டது.

பின்னர் சென்னையை சேர்ந்த சிபிஐ குழுவினரும் அபயா ம.ர.ண வ ழக்கை விசாரித்தனர். இந்த குழு வி சாரணையிலும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 3-வதாக சிபிஐ-ன் மற்றொரு குழு நடத்திய வி சாரணையில்தான் அபயா கொ.லை செ ய்யப்ப ட்டது அம்பலமானது.

இக் கொ.லை தொ டர்பாக பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில், கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கை து செய்யப்பட்டு சி றையில் அ டைக்கப்ப ட்டனர்.

கன்னியாஸ்திரி செபியுடன் மற்ற பாதிரியார்கள் த.கா.த உ.ற.வு வைத்ததை அபயா பார்த்ததால் ப.டு.கொ.லை செ ய்யப்ப ட்டார் என்பதும் தெரியவந்தது. இவ்வழக்கில் பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் கேரளா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு வி சாரணை தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்த நிலையில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

28 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ நீதிமன்றம், பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

வவுனியா மக்களுக்கு நத்தார் தினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

நத்தார்..

இவ்வருட நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய பங்குச் சபைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிறு திருப்பலியின் பின்னர் வவுனியா ஆலய மக்களுக்கு அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட் – 19 நோய்த் தொற்று காரணமாகவும், நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தங்கியுள்ள மக்களுக்கு உதவி செய்யவும் அவர்களுக்காக பிரார்த்திக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் களியாட்ட நிகழ்வுகள் கரோல், ஒளிவிழா என்பனவும், நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகளும் ஆயரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிறுத்தப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தன்று காலை 7.30 மணிக்கு திருப்பலியானது சமூக இடைவெளிகளையும் சுகாதார முறைகளை பின்பற்றியும் ஆலயங்களில் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 37,261 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ் : இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகள் அதிர்ச்சியில்!!

கொரோனா வைரஸ்..

பிரித்தானியாவில் புதிய வைரஸ் வேகமாக பரவுவதால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டின் மிகக் கடுமையான ஊரடங்கை அறிவித்தார். “வைரஸ் அதன் தாக்குதல் முறையை மாற்றும்போது, ​​நாம் நமது பாதுகாப்பு முறையை மாற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்புகளில் இருந்து தங்கள் மக்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு வைரசும் மிரட்டுவது அரசுகளுக்கு மிகுந்த பீதியை கொடுத்து இருக்கிறது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு இது பாதியாக இருந்தது.

300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருப்பததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும்,

வீரியமாக இருப்பதாவும் தெரியவந்து உள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி, இந்தியா, சவூதி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை அடுத்து டுவிட்டரில் #COVID20 ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இங்கிலாந்தில் புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க பல ஐரோப்பிய நாடுகளும்,

கனடா, டென்மார்க், ஈரான், குரேஷியா, பல்கேரியா, அயர்லாந்து, துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஹாங்காங், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, மொராக்கோ, குவைத், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன.

அதேநேரம் சவுதி அரேபியாவோ, அனைத்து நாடுகளுக்கும் விமான சேவையை ரத்து செய்து, தனது எல்லைகள் அனைத்தையும் மூடிவிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்தியாவும் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதித்து உள்ளது.

இதுபோன்று இலங்கையும் பிரித்தானியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானிக்கப்பட்டு வருவதாக இலங்கை சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளது. மேலும் இப் புதிய வகை வைரஸ் தொடர்பில் பிரித்தானிய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வால்லன்ஸ் கூறியதாவது,

தற்போது பரிணாம மாற்றமடைந்துள்ள புதிய வைரஸானது மற்ற வைரஸ்களைவிட எளிதில் பரவக்கூடிய வகையில் இருப்பதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கின்றனர். மேலும், இந்த வைரஸானது பரவுவதில் அதிக வீரியம் காட்டுகிறது என்றும், டிசம்பர் மாதத்துக்குள் லண்டனில் 60 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்றும், இந்தப் புதிய வகை பரிணாமத்தில் பல பிறழ்வுகள் இருக்கின்றன.

அதில் பலவற்றில் வைரஸ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளக் கூடியதும், செல்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான ஸ்பைக்கி புரதங்கள் இருக்கின்றன. அந்த ஸ்பைக்குகள்தான் தற்போதைய தடுப்பூசிகளை குறிவைத்துள்ளது என கூறினார்.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர் ரவி குப்தா கூறும் போது இதுகுறித்து கவலைப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும், அவரும் பல ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இதுகுறித்து தங்களுடைய வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டதாகவும், ஆனால் அது முறையாக மதிப்பாய்வு செய்யப்படாமல், மற்ற பத்திரிகைகளில் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சியாட்டிலைச் சேர்ந்த உயிரியல் நிபுணரும், மரபணு வல்லுநருமான ட்ரெவர் பெட்போர்டு கூறும் போது, பொதுவாகவே வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடையும்போது தங்கள் மரபணுவில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாடுகளில் புதிதாக பரவும்போது பொதுவாகக் காணப்படக்கூடிய மாற்றம்தான்.

இதுதான் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள கொரோனா வைரஸிலும் நடக்கலாம் என்று சமீபத்திய சான்றுகள் எடுத்துரைப்பதாக கூறியிருக்கிறார். மேலும், தற்போது பலவகை தோற்றங்கள் மற்றும் வகைகளைக் கொண்ட வைரஸ் பரவலைப் பார்க்கமுடிகிறது. இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்பைக் காட்டுவதாக இருக்கிறது.

வைரஸுகளின் மரபணுவில் பிறழ்வுகள் அதிக அளவில் இருக்கும்போது தடுப்பூசிகள் குறை மதிப்பிற்கு உட்படுத்தப்படும். எனவே, காலத்திற்கு ஏற்றவாறு தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியம்.

இந்தப் புதிய வகை கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், கவலைகொள்வதைக் காட்டிலும், அரசுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனத்துடன் அணுக வேண்டியதே இப்போதைய நிலையாக இருக்கிறது என கூறினார்.

அமெரிக்க உணவு மற்று மருந்து ஆணையர் ஸ்காட் காட்டிலேப் கூறும் போது, ஏப்ரல் மாதத்தில் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மரபணு மாற்றங்களைக்கொண்ட ஒரு வைரஸைக் கண்டறிந்தனர்.

இது சுமார் இரண்டு மடங்கு தொற்றுநோயைப் பரப்பக்கூடிய வீரியம் கொண்டதாக இருப்பதாக அவர்கள் கூறினர். இந்த வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட 6000 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டது.

அதில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கில் அதிக பாதிப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே பழைய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் புதிய வைரஸ் பாதிக்குமா? அது தடுப்பூசியின் வீரியத்தை குறைத்துவிடுமா? அநேகமாக தடுப்பூசி வீரியம் குறையாது என கூறினார்.

-தமிழ்வின்-

யாழ். கைதடியில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் படுகாயம்!!

யாழ். கைதடியில்..

கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் கைதடி நோக்கி மூவர் பயணித்துள்ளனர். அதே திசையில் சைக்கிளில் வயோதிபர் ஒருவர் பயணித்த நிலையில், அவர் வலது புறமாகத் திருப்ப முற்பட்டவேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும், சைக்கிளில் பயணித்த வயோதிபருமாக நால்வர் படுகாயமடைந்தனர். சனசமூக நிலையத்தில் இருந்தவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 1990 அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இலங்கையில் பெய்த மீன் மழை : ஆச்சரியத்தில் மக்கள்!!

மீன் மழை..

மஹியங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வந்த வறட்சியுடனான காலநிலையைத் தொடர்ந்து பெய்த மழையின் போது இவ்வாறு மழை நீருடன் மீன்களும் தரையில் வீழ்ந்துள்ளன.

மழையுடனான காலநிலையுடன் சிறிய அளவிலான புயல் காற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிய அளவிலான புயல் காற்று நீர்நிலைகளுக்கு அருகாமையில் செல்லும் போது ஒர் சிறிய வால் போன்றதொன்று உருவாகும் எனவும், அதன் ஊடாக நீர் உறிஞ்சப்பட்டு மேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உறிஞ்சப்பட்டு எடுத்துச் செல்லப்படும் நீருடன் மீன்களும் அள்ளுண்டு செல்லும் எனவும், இவையே பின்னர் மழை பெய்யும் போது நீருடன் மீன்களும் விழக்காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனைவி மீது கணவர் வைத்திருந்த அதீத பாசம் : அதை பயன்படுத்தி நடந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மூன்று முறை ஆண் நண்பருடன் சேர்ந்து க.ட.த்.த.ல் நாடகம் போட்ட மனைவியின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த க.ஞ்.சா வியாபாரி கோட்டை குமார்.

இவன் ஜேசிபி ஆபரேட்டர் என்ற பெயரில் கோவை பாப்பம்பட்டியில் பிரபு என்பவரது வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்தான். அப்போது, பிரபுவின் மனைவி பத்மஸ்ரீக்கும் கோட்டை குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 15 ம் திகதி பிரபு வெளியே சென்றிருந்த நிலையில், அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, மு.க.மூ.டி அணிந்தவர்களுடன் வீட்டுக்கு வந்த கோட்டை குமார், பிரபுவின் தாயாரை மி.ர.ட்.டி பத்ம ஸ்ரீயைக் க.ட.த்.தி.ச் சென்றுள்ளான்.

பிறகு, பிரபுவுக்கு போன் போட்டு, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் உன் மனைவியை விட்டுவிடுகிறேன். இல்லை என்றால் பணத்துக்கு விற்றுவிடுவேன் என்று கோட்டை குமார் மி.ர.ட்.டி இ ருக்கிறான்.

இதனால் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பிரபு காவல் நிலையத்தில் பு.கா.ர் அ ளித்தார். பொலிசார் வி சாரணையில் ப.கீ.ர் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு சற்று வசதியான பின்னணி கொண்டவர். அதே வேளையில் மனைவி மீது அதீத அன்பு கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

அதனைத் தனக்கு சாதகமாக்க நினைத்த கோட்டை குமார், பத்மஸ்ரீயுடன் அவ்வப்போது த.லை.ம.றை.வா.கி, ஊர் சுற்றுவதும் பின்பு பிரபுவை மி.ர.ட்.டி பணம் பெற்றுக் கொண்டு ஒப்படைப்பதுமான இருந்துள்ளார்.

இதுவரை மூன்று முறை பத்மஸ்ரீயை க.ட.த்.தி பிரபுவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கோட்டை குமார் விடுவித்துள்ளான். க.ட.த்.த.ல் நா டகத்துக்கு பத்மஸ்ரீயும் உ டந்தையாக இருந்துள்ளார்.

மனைவி மீதுள்ள அன்பாலும், வெளியே தெரிந்தால் தன்னுடைய கௌரவம் கெட்டுப்போய் விடுமோ என்ற ப யத்தாலும், பொலிசில் பு காரளிக்காமல் சத்தமின்றி 3 முறையும் பணத்தைக் கொடுத்து பிரபு தனது மனைவியை மீ.ட்.டு வந்துள்ளார்.

இந்த நிலையில் , பத்மஸ்ரீயுடன் கோட்டைகுமார் த லைம றைவாகியு ள்ளான். ஒரு கட்டத்தில் பொறுமை இ ழந்த பிரபு இந்த முறை பொலிசில் பு.கா.ர் அளித்தார். தற்போது , த லைம றைவாகி யுள்ள கோட்டைகுமார், பத்மஸ்ரீயை பொலிசார் தே.டி வ ருகின்றனர்.

17 வயது சி.று.மி.யை கா தலின் பெ யரில் இ ளைஞன் செ ய்த கொ.டு.மை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 17 வ யது மா.ண.வி 8 மாதம் க.ர்.ப்.ப.மா.க இருக்கும் நிலையில் அதற்கு காரணமான கட்டிட தொழிலாளி கை து செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்தவர் தங்கபாண்டி.

கட்டிட தொழிலாளியான இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இந்த நிலையில் தங்கப்பாண்டி திருமணமானதை ம றைத்து பக்கத்து ஊரைச் சேர்ந்த +2 மா.ண.வி.யை கா தலிப்பதாக நா டகமாடி வந்துள்ளார்.

அந்த மா.ண.வி.க்.கு வ.ய.து 17. தங்க பாண்டி குறிப்பிட்ட மா.ண.வி.யை தி ருமணம் செய்து கொள்வதாக ஆ சை வா ர்த்தை கூறி அ வரிடம் த.வ.றா.க ந டந்து கொ ண்டிருக்கிறார்.

இதன் காரணமாகச் சி.று.மி தற்போது 8 மாத க ர்ப்பிணியாக உள்ளார் என்றும் கு ற்றச்சா ட்டு எ ழுந்துள்ளது. சி.று.மி.யி.ன் உ டலில் மா ற்றத்தைக் கண்ட பெற்றோர் க ர்ப்பம் குறித்து வி சாரித்த போது நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் அவர் கூறியுள்ளார்.

இதை கேட்டு அ திர்ச்சிய டைந்த பெற்றோர் பொலிசில் பு.கா.ர் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வி சாரணையை தொடங்கினர். வி சாரணையில் தங்கப்பாண்டி தி ருமண ஆ சை கா ட்டி மா.ண.வி.யை சீ.ர.ழி.த்.த.து தெரியவந்தது.

இ தையடுத்து இ ளைஞர் தங்கப்பாண்டியை போ.க்.கோ வ ழக்கில் கை து செ ய்த போ லீசார் வி சாரணை க்கு பி ன் நீ திமன்ற த்தில் ஆ ஜர்படுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்.த.ன.ர்.

கணவனின் சந்தேக புத்தியால் நடந்த விபரீதம் : தாய் கண்முன்னே நடந்த பயங்கரம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கு.டி.கா.ர கணவனால், மனைவி பரிதாபமாக உ யிரிழந்ததால், 2 கு ழந்தைகள் அனாதையாக நிற்கின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சின்ன நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் ஹரி(40). இவருக்கு கோமதி(35) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வரும் ஹரி, ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லை. தினமும் கு.டி.ப்.ப.து, கோமதி மீது ச ந்தேகப்படுவது என்று அ டிக்கடி ச.ண்.டை போ ட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கோமதிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னை கார்ப்பரேஷனில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை தற்காலிகமாக கிடைத்துள்ளது.

ஏற்கனவே ஹரியை சந்தேகப்பேய் ஆட்டிப்படைக்க, கோமதி வேலைக்கு போகவும் அது இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமுதல் விடாமல் ச.ண்.டை சச்சரவாகவே வீடு இருந்திருக்கிறது.

கோமதியை போ.தை.யி.ல் க ண்மூடி த்தனமாக அ.டி.க்.க ஆரம்பித்துள்ளார். இதனால் விருகம்பாக்கத்தில் உள்ள தன் அம்மாவுக்கு போன் செய்து கோமதி அ ழுதுள்ளார்.

அம்மாவும் நீலாங்கரைக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவைத்து விட்டு சென்றபடி இருந்துள்ளார். சம்பவத்தன்றும் அப்படித்தான் சமாதானப்படுத்த அம்மா சென்றபோது, பிள்ளைகள் வெளியே விளையாடி கொண்டிருக்க,

தம்பதி இருவரும் வீட்டிற்குள் ச.ண்.டை போட்டு கொண்டிருந்திருக்கிறார்கள். இதை தட்டிக் கேட்டபோது, மாமியாரை வீட்டை விட்டு வெளியே போகும்படி ஹரி கூற, இதனால் கோமதியின் அம்மா வெளியில் வந்து நின்றுள்ளார்.

ஆனால், அவர் விருகம்பாக்கத்துக்கு சென்றுவிட்டதாக நினைத்து, ஹரி கோமதியை ச ரமாரியாக அ.டி.த்.து.ள்.ளா.ர் . திடீரென அ.ல.ற.ல் கேட்கவும் வெளியே நின்று கொண்டிருந்த அம்மா, ப தறிய டித்துக் கொண்டு உள்ளே போனால்,

தரையில் கோமதியை ப டுக்க வைத்து அவரது க.ழு.த்.தை கரகரவென ஹரி அ.று.த்.து.க் கொ ண்டிருந்துள்ளார். இதைக் கண்டு அ.ல.றி து.டி.த்.த தாய், மகளை அவரிடம் இருந்து மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை ப ரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு தெரியவர, பொலிசா ஹரியை கை து செய்து சி றையில் அடைத்துள்ளனர். இப்போது இந்த தம்பதியின் இரண்டு குழ ந்தைகளும் தாய் மற்றும் தந்தை இல்லாமல் அனாதையாக தவித்து வருகின்றனர்.

திருமணம் முடிந்த 5 நாட்களுக்குள் வேறொரு பெண்ணுக்கு தாலி காட்டிய புதுமாப்பிள்ளை : உறவினர் செய்த செயல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு பெண்களை திருமணம் செய்துவிட்டு த ப்பி ஓ டிய நபரை பொலிசார் தே டி வருகின்றனர்.
மத்தியப் பிரேதசத்தில் இந்தூரில் வசிக்கும் 26 வயது மென்பொறியாளர் ஒருவரே,

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் கடந்த 2-ஆம் திகதி Khandwa-வில் ஒரு பெண்ணையும், 7-ஆம் திகதி Mhow-விலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

முதல் திருமணம் ஆன ஐந்து நாட்களுக்குள் இரண்டாம் திருமணம் செய்த இந்த நபரை பொலிசார் தே டி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை Khandwa-வில் வசிக்கும் பெண் குடும்பத்தால் அளித்த புகாரின் அடிப்படையில், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் வீட்டார் கொடுத்திருக்கும் புகாரில், தங்கள் உறவினர் ஒருவர் இந்தூரில் இருக்கும் Mhow-வில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே தங்கள் மகளை திருமணம் செய்த நபர், மாப்பிள்ளை கோலத்தில் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அப்பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் கடந்த 7-ஆம் திகதி தங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் இது தொடர்பாக பொலிசார் தகுந்த வி சாரணை மேற்கொள்ளும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரளித்துள்ள பெண்ணின் குடும்பத்தார், குற்றச் செயலில் ஈடுபட்டு த ப்பி ஓ டியுள்ள மணமகனுக்கு 10 லட்சம் ரூபாய் அளவில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021 ம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்றை நெறிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 30 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும்,

தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கற்கை நெறியின் போது மாணவர்களுக்கு இலவசக்கற்கை நெறி, மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, போக்குவரத்துப் பயணச்சீட்டு, தொழில்வழிகாட்டல் சேவை கற்கைநெறியின் பின்னர் மாணவர்களுக்கு 06 மாத கால தொழிற்பயிற்சி,

உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி என்பனவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள்
வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை.

விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள இங்கு அழுத்துங்கள்

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணின் கருப்பையில் இ றந்த
கு ழந்தையை அகற்றுவதில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால், அப்பெண் பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சரத்பாபு. இவருடைய மனைவியான கனிமொழி கர்ப்பிணி என்பதால், சென்னை ஆர்கே சாலையில் உள்ள ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

கர்ப்பிணியாகி 10 மாதம் ஆகியதால், இந்த தம்பதி அந்த மருத்துவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது, ஸ்கேன் எதுவும் எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை ஸ்கேன் எடுத்து பார்த்த போது, குழந்தை கடந்த ஞாயிற்று கிழமையே இ றந்துவிட்டது தெரியவர, அ திர்ச்சியடைந்த ருக்மணி பாய் உடனே, மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள இசபெல்லா என்ற தனியார் மருத்துவமனைக்கு, அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, இ றந்த குழந்தையை வெளியில் எடுக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இசபெல்லா மருத்துவர்கள், குழந்தையை சுகப்பிரசவத்தில் எடுக்க முடியும் என்று கூறி நாட்களை க டத்தி வந்துள்ளனர்.

ஆனால் இ றந்த குழந்தை காரணமாக தொற்று ஏற்பட்டு கனிமொழி இன்று காலை உ யிரிழந்துவிட, இதைக் கேட்டு ஆ த்திரமடைந்த உறவினர்கள் கனிமொழியின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையின் முன்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிகிச்சை கட்டணமாக 3 லட்சம் ரூபாயை கட்டச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வ ற்புறுத்தியதால், இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள மயிலாப்பூர் பொலிசார் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் கனிமொழியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தபடும் என்றும் பொலிசார் சார்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் போ ராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

சமூக ஊடகப் பயனர்களை பதிவு செய்ய அரசாங்கம் உத்தேசிக்கவில்லை : கெஹலிய ரம்புக்வெல்ல!!

கெஹலிய ரம்புக்வெல்ல..

சமூக ஊடகப் பயனர்களை பதிவு செய்ய அசராங்கம் உத்தேசிக்கவில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டதன் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்தேசிய நிறுவனங்கள் டிஜிட்டல் தகவல் கட்டுப்பாட்டின் மூலம் உள்நாட்டு வியாபாரங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டிஜிட்டல் தளத்தின் ஊடாக பாரியளவிலான பணம் நாட்டை விட்டு வெளியே செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு டிஜிட்டல் கட்டமைப்பை உரிய முறையில் ஒழுங்குபடுத்தாமையினால் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் டிஜிட்டல் கட்டமைப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாகவும், உள்நாட்டு சமூக ஊடகப் பயனர்களை பதிவுக்கு உட்படுத்தும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் முகக்கவசம் அணியாத 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

முகக்கவசம்..

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் முகக்கவசமின்றி வீதியில் பயணித்த 15க்கும் மேற்பட்டவர்கள் எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் மேற்கொண்டுள்ளனர்.

எம்மை பாதுகாக்க தலைக்கவசம் அணிவது எவ்வாறு கட்டாயம் ஆக்கப்பட்டதோ அதே போன்று எம்மையும் மற்றவர்களையும் கோவிட் – 19 வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசாருடன் சுகாதார பிரிவினர் இணைந்து இன்று (21.12.2020) காலை வவுனியா மன்னார் வீதியில் முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இவ் விசேட நடவடிக்கையில் 15 க்கும் மேற்பட்டவர்கள் மீது வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.