வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை இன்று (21.12.2020) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரசபையின் தடையுத்தரவினை மீறி வீதியோர நடவடிக்கையி்ல் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள், பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன் அவர்களுக்கு தண்டப்பணமும் விதித்தனர்.
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் விபத்தில் உ யிரிழந்த 3 பேரினதும் உடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று கடந்த 19ஆம் திகதி மாலை குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
வவுனிக்குளம் வான் பாய ஆரம்பித்துள்ள நிலையில் அதனை பார்வையிட செல்வதற்கான மகனின் கோரிக்கையை ஏற்று தந்தையும் (கிருஸ்ணபிள்ளை -ரவீந்திரன் -வயது 38) மகனும் (ரவீந்திரன் -பிரவீன் -வயது 13) மகளும் (ரவீந்திரன் சார்ஜனா -வயது 3 ) அயல்வீட்டில் வசிக்கும் மகனின் நண்பனும் (இரவீந்திரகுமார்-சஞ்சீவன் வயது -13 ) நான்கு பேரும் வவுனிக்குளம் நோக்கி பயணித்துள்ளனர்.
வீட்டில் இருந்து பயணிக்கும் போது மழை பெய்து கொண்டிருந்ததாகவும் வாகனத்தின் சாரதி பக்க முன் சில்லு காற்று போனதனால் வாகனம் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் சம்பவத்தில் உயிர்தப்பி கரை வந்த சிறுவன் ரவீந்திரன் -பிரவீன் தெரிவித்துள்ளார்.
வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான நிலையில், வாகனத்தில் பயணம் செய்த குறித்த குடும்பஸ்தரின் மகன் ரவீந்திரன் -பிரவீன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், இராணுவத்தினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து இரவீந்திரகுமார்-சஞ்சீவன் சுய நினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருந்தார்.
அதனை தொடர்ந்து வாகனத்தை செலுத்தி சென்ற கிருஸ்ணபிள்ளை -ரவீந்திரன் -வயது 38 அவரது மூன்று வயது மகளான ரவீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும் நடவடிக்கை தொடர்ந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் கடற்படையினரின் சுழியோடிகளின் உதவியுடன் அவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் மூன்று சடலங்களும் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் ச டலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மாலை வவுனிக்குளம் – செல்வபுரம்- நெல்லுப்புலவு கிராமத்தில் அமைந்துள்ள அவர்களின் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை, உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதையடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .
இதையடுத்து இன்றையதினம் வவுனியா நகர்ப் பகுதிகளில் முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள், சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும்,
ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள பணக்கார பெண் ஒருவரை வெளிநாட்டவர்கள் ஏமாற்றி பெருமளவு பணம் மோ சடி செய்துள்ளனர். குறித்த பெண்ணிடமிருந்து 3 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் நைஜீரியா நாட்டவர்களினால் மோ சடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கு ற்ற விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போது நைஜீரிய நாட்டவர்களால் பாரிய பணம் மோ சடி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி ஊடாக இந்த வசதியான பெண்னுடன் தொடர்பினை ஏற்படுத்திய நைஜீரிய நாட்டவர்கள் அவரை ஏமாற்றி மோ சடியான முறையில் பணம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மோ சடியாளர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நத்தார் பண்டிகையின் போது வீட்டிலேயே இருக்குமாறு பிரதி சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் சுற்றுலா பயணம், உறவினர் வீட்டிற்கு செல்லுதல், உட்பட வினோத செயற்பாடுகளை நிறுத்துமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக பண்டிகை காலப்பகுதியில் செயற்பட்டால் நாடு முழுவதும் கொரோனா கொத்தணிகள் ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஓரிரு நாட்களில் நத்தார் பண்டிகை ஆரம்பமாகிறது. அத்துடன் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இந்த நாட்களில் பலர் தேவையற்ற சுற்றுலா பயணங்கள் செல்கின்றனர். உறவினர்கள் வீட்டிற்கு செல்கின்றனர். அதேபோன்று விருந்துகள் நடத்துகின்றனர்.
எனினும் தற்போது உள்ள நிலைமைக்கு மத்தியில் அவ்வாறு செய்வது பொருத்தமானதல்ல. அதனால் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு, அனைத்தையும் தவிர்த்து வீட்டில் இருந்து நத்தாரை கொண்டாட வேண்டும்.
நத்தார் தினத்தன்றும் தேவாலயங்களில் அனைவரும் ஒன்றுக்கூட வேண்டாம். அனைவரும் வீட்டில் இருந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று(21.12.2020) முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் இன்று திங்கட்கிழமை முதல் திறந்து கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன.
வவுனியா, குட்செட், அம்மா பகவான் வீதி மக்கள் தாம் குடியிருக்கும் குளத்தின் அலகரையை அண்டியுள்ள காணிகளை தமக்கே பெற்றுத் தருமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
வவுனியா, குட்செட் அம்மா பகவான் வீதிப் பகுதிக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானா கு.திலீபன் ஆகியோர் மக்களின் அழைப்பின் பேரில் இன்று (20.12) விஜயம் செய்தனர்.
அம்மா பகவான் வீதியில் வைரவபுளியங்குளம் குளத்தின் அலகரையை உள்ளடக்கியதாக மக்கள் குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் அம் மக்களை அக் காணியில் இருருந்து வெளியேறுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அக் காணிகள் தொடர்பில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணிகளை தாம் பெற்று 10 வருடங்களுக்கு மேல் குடியிருப்பதாக தெரிவித்துள்ள கிராம மக்கள் தமது காணிகளை விடுவித்து தமக்கான காணிப்பத்திரத்தை பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் பேசி விரைவில் சாதமான தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதாக இதன்போது வாக்குறுதியளித்தார்.
அத்துடன், மக்களது குடிமனைகள் மற்றும் வைரவபுளியங்குளம் என்பவற்றையும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இதன்போது பார்வையிட்டிருந்தனர்.
போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டின் வதிவிட விசா அனுமதியை பயன்படுத்தி கட்டார் நாட்டின் ஊடாக பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கை யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த யுவதியை கைது செய்துள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யுவதி இன்று அதிகாலை 3.15 அளவில் கட்டார் நாட்டின் தோஹா நோக்கி செல்லவிருந்த கட்டார் விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இந்த யுவதி காட்டிய பிரான்ஸ் நாட்டின் வதிவிட விசா குறித்து சந்தேகமடைந்த கட்டார் விமான சேவையின் அதிகாரிகள், யுவதியின் ஆவணங்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
யுவதியை கைது செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொழும்பு இரத்மலானையில் அமைந்துள்ள பிரபல வெதுப்பக உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிப்புரியும் 23 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணிப்புரியும் சுமார் 50 பேருக்கு இன்று நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பேக்கரி உணவு பொருட்கள் பொதி செய்யப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிறுவனத்தின் களஞ்சியத்தில் பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா குருமன்காட்டில் 22 வயது பல்கலைக்கழக மாணவனுக்கு இன்று (20.12.2020) இரவு 8.20 மணியளவில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
யாழ்ப்பாணத்தினை சேர்ந்த பல்கலைக்கழக 22 வயதுடைய மாணவன் ஒருவர் திங்கட்கிழமை வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வருகை தந்து குருமன்காட்டிலிலுள்ள அவரது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.
அதன் பின்னர் சனிக்கிழமை மாலை வெளிநாடு செல்வதற்காக கொழும்பிற்கு சென்றுள்ளார். வெளிநாடு செல்வதற்காக குறித்த மாணவனுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட சமயத்தில் குறித்த பி.சீ.ஆர் பிரசோனை முடிவுகள் இன்று (20.12.2020) இரவு 8.20 மணியளவில் வெளியானதில் அவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர் வவுனியாவில் தங்கியிருந்த அவரின் நண்பர்களின் வீடு சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பல்லைக்கழக மாணவன் வவுனியாவில் நடமாடிய இடங்கள் தொடர்பிலான விசாரணைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்குள் வருகை தருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வர முடியாமல் இருக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நாட்டுக்குள் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டுக்கு வருவதற்கு தயாராக உள்ள இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சில் அனுமதி பெற்று பதிவு செய்துக் கொள்ள வேண்டும். எனினும் நாட்டுக்கு வரும் இலங்கையர்கள் கட்டாயம் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3500 பேருக்கு PCR பரிசோனை மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. இதனால் ஒரு நாளுக்கு 3500 இலங்கையர்கள் மாத்திரமே நாட்டிற்குள் வர முடியும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வோருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் போது அந்தந்த பிரதேச சுகாதார பரிசோதகர்களிடம் கடிதம் மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று குளிரான காலநிலையில் அதிகம் பரவும் ஆபத்து உள்ளமையினால் அதனை தடுக்கும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நுவரெலிய நகர மேயர் சந்தன லால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நுவரெலியாவுக்கு வந்தவர்கள் எவ்வித சந்தர்ப்பத்திலும் தனிமைப்படுத்தப்படாதவர் என பிரதேசங்களுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர்களினால் உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடித அனுமதியின்றி எந்த ஒருவொரு நபரும் நுவரெலியாவில் உள்ள எந்த ஒரு விடுதிகளிலும் தங்க அனுமதிக்க வழங்க கூடாதென நுவரெலிய மாநகர சபை மேயர் சந்தன லால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
காலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் குணமடைந்து வீடு திரும்பிய நபர் உயிரிழந்துள்ளார். வீடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காலி பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
அவர் தலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் ஒரே இடத்தில் இருந்தவராகும்.
கடந்த4 6ஆம் திகதி இந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய பின்னர் கரன்தெனிய கொரோனா வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நபர் 17ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் திடீரென உயிரிழந்துள்ளளார் என குறிப்பிடப்படுகின்றது. உயிரிழந்த நபருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலிஸ் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மனைவி வேறோரு நபருடன் தொடர்பில் இருந்ததால், ஆ த்திரமடைந்த கணவன் பட்டப்பகலில் அவரை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்ன நீலாங்கரை மேட்டு காலனியைச் சேர்ந்தவர்கள் ஹரி(40). இவருக்கு 35 வயதில் கோமதி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
ஹரி எலக்ட்ரிசியனாகவும், கோமதி சென்னை ரிப்பன் பில்டிங்கில் தற்காலிக டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராகவும் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், நீலாங்கரை காவல் நிலையத்திற்கு ர.த்.த.க் க.றை.க.ளோ.டு வந்த ஹரி தனது மனைவியை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ.ய்.து வி ட்டதாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பொலிசார் அவரின் வீட்டிற்கு சென்று பாரத்த்போது கோமதியின் ச.ட.ல.ம் கி டந்தது. ச.ட.ல.த்.தை மீ.ட்.ட பொலிசார் , உ.ட.லை பி.ரே.த ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்து ஹரியிடம் வி சாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் சின்ன நீலாங்கரையில் வசித்து வந்தோம். கொரோனா காலகட்டத்தில் கோமதிக்கு சென்னை மாநகராட்சியில் உமேஷ் என்பவர் தற்காலிக வேலை வாங்கிக் கொடுத்தார்.
உமேஷுடன் கோமதி அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார், அதைக் கணவர் ஹரி கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகியதை தான் பார்த்ததாகவும்,
இதனால் ம ன உ ளைச்சலுக்கு ஆளானதால், மனைவியை க.ழு.த்.த.று.த்.து கொ.லை செ ய்ததாக கூறியுள்ளார். பொலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2021ம் ஆண்டில் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை தொடங்குவதற்கான திகதி குறித்து எதிர்வரும் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் அறிவுறுத்தல்களின்படி பாடசாலைகள் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு பாடசாலைகள் தொடங்குவது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் உடனான சிறப்பு சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் 24 ஆம் திகதி தொடங்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார். 10,165 பாடசாலைகளில் 5,100 பேர் மட்டுமே மூன்றாம் தவணையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.