வவுனியாவில் நோயாளர் காவு வண்டிகளுக்கு தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

தொற்று நீக்கும் நடவடிக்கை..

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து நோயாளர்களை ஏற்றிச் செல்லும் நோயாளர் காவு வண்டிகளுக்கு வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி, 1990 அவசர நோயாளர் காவு வண்டி என்பன மருந்து வீசி தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இலங்கையில் 120 ரூபாவை கடந்த தேங்காயின் விலை!!

தேங்காயின் விலை..

இலங்கையில் தேங்காயின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சமகாலத்தில் தேங்காய்களின் எண்ணிக்கையில் மிகவும் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அணில்கள் மற்றும் குரங்குகளினால் தெங்கு பயிர்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களாக தேங்காய்களுக்கு நிர்ணய விலை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட போதிலும் தற்போது அவை செயற்படுத்துவதில்லை என கூறப்படுகின்றது.

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் சென்ற இரு இளைஞர்களை காணவில்லை!!

இரு இளைஞர்களை காணவில்லை..

வவுனியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் கதைத்துள்ளார்.

அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வாரமளவில் மோரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் சாவடைந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணாமல் போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் உள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-IBC தமிழ்-

இலங்கையில் வயோதிபர்கள் 92 பேர் கொரோனாவால் மரணம்!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை மூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட 3 பேரும்,

31- 40 வயதுக்கிடைப்பட்ட4 பேரும், 41 – 50 வயதுக்கிடைப்பட்ட 13 பேரும், 51 – 60 வயதுக்கிடைப்பட்ட 23 பேரும், 61 – 70 வயதுக்கிடைப்பட்ட 29 பேரும், 74 வயதுக்கு மேற்பட்ட 64 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : இதுவரை 6 பேருக்கு கொரோனா உறுதி!!

கொரோனா தொற்று..

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாளம்பைக்குளம் கிராமம் நேற்றுமுன் தினம் (12.12.2020) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந் நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் இ்ற்றையதினம் (14.12.2020) வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக அடையாளம் காணப்பட்ட புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த 28 வயது தாயும் அவரது 5 வயது மகளும் தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட,

38 வயது தந்தை, 8 வயது மகன், 2 வயது சிறுமி ஆகியோரை தொற்று சிகிச்சை மையத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் கொத்தனியில் கோவிட் -19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு இன்றையதினம் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா!!

கொரோனா..

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையை சேர்ந்த குறித்த நபருக்கு கடந்த 12ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.

நேற்றயதினம் பரிசோதனைக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றது. அதன்படி அவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில்,

26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொக்குவில் 1, தெல்லிப்பழை 3, அளவெட்டி 2, உரும்பிராய் 1, நவாலி 1, கீரிமலை 2, மானிப்பாய் 2, உடுவில் 2, இணுவில் 2, சங்கானை 1, பண்டத்தரிப்பு 1, சுன்னாகம் 2, கைதடி 1, ஏழாலை 3, காங்கேசன்துறை 1, சண்டிலிப்பாய் 1 என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்த போதும்,

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி அதனை மறுத்ததுடன், யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் மாநாடு!!

பொதுஜன பெரமுன கட்சியின்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13.12.2020) நடைபெற்றது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உபதவிசாளர் வசந்த தலைமையில் இம் மாநாடு நடைபெற்றது.

இம் மாநாட்டில் கட்சியின் முன்னேற்றத்திற்காக மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதில் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான், அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் வன்னிக்கான இணைப்பாளர் பாலித்த,

முன்னாள் பிரதி அமைச்சர் சுமதிபால, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள், மதத் தலைவர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

தங்கை முறையான பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த வி பரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் கு.த்.தி கொ.லை செ ய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணும் த.ற்.கொ.லை செ ய்து கொ ண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியுள்ளது.

நெல்லை பழைய பேட்டையைச் சேர்ந்தவர் வேல் தேவர். இவருக்கு, சுடலை ராஜ் மற்றும் இசக்கி முத்து என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், பழைய பேட்டை பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

சுடலை ராஜின் மனைவி உ யிரிழந்த நிலையில் அவரது மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரர் இசக்கி முத்து மனைவி மற்றும் மகள் செய்து கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சுடலை ராஜின் மூத்த மகன் காளிராஜ் என்பவருக்கும் இசக்கி முத்துவின் மகள் மேகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

தங்கை உறவு முறை கொண்ட மேகலாவை இசக்கி ராஜின் மூத்த மகன் காளிராஜ் காதலிப்பதை தெரிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் க டுமையாக எ திர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காளிராஜும், மேகலாவும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் இருவரும் நெல்லை பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அருகே வசித்து வந்துள்ளனர்.

கேபிள் டிவி நிறுவனத்தில் பணி செய்து வந்த காளிராஜ் பணியை முடித்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 10-ஆம் திகதி இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தை வழி மறித்த ம.ர்.ம ந பர்கள் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி கொ.லை செ ய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் பு.கா.ர் அளிக்கப்பட்டது. பொலிசார், காளிராஜுன் மனைவி மேகலாவிடம் வி சாரணை நடத்தி வந்தனர். அந்த கும்பல் மேகலாவை கொ.லை செ ய்யவும் தி ட்டம் தீ ட்டியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் பாளையங்கோட்டை அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அரசு பெண்கள் காப்பகத்தில் தனியாக இருந்த மேகலா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். காப்பகத்தில் உள்ளவர்கள் வித்தியாசமான சத்தம் கேட்டதை தொடர்ந்து காப்பாக அறையைப் பார்த்தபோது.

தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி மே லாக இ ருந்ததை க ண்டு அ.தி.ர்.ச்.சி அ டைந்தனர். அதன் பின் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

இரயிலில் மனைவியை தனியாக அனுப்பி வைத்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஒடிசா மாநிலம்..

இரயிலில் செல்லும் போது கா ணமல் போன மனைவியை, மூன்று நாட்கள் போ ராடி கணவன் க ண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (28). இவருக்கு கபீர் ஜனா என 27 வயதில் மனைவி உள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதி புதுச்சேரியில் தங்கி அங்குள்ள மேட்டுப்பாளையம் எனும் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தனர். இவர்களது மகன் ஆகாஷ் ஒடிசாவில் பாட்டியுடன் தங்கி படித்து வருகிறான். ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் சென்று மகனைப் பார்த்து வருவது வழக்கம்.

இம்முறை கபீரை மட்டும் கடந்த 9-ஆம் திகதி புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ரயிலில் மாலை 6.45 மணிக்கு ரவீந்திர ஜனா அனுப்பிவைத்துள்ளார். மறுநாள் மாலை ரயில் ஒடிசாவைச் சென்றடைந்ததும் கபீர் இல்லாததை அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் உடனடியாக தனது மனைவியைக் கா ணவில்லை என புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையத்தில் ரவீந்திர ஜனா புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரும் நேரடியாக ஒரு கார் மூலம் ஒடிசா மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வழி முழுவதும் 3 நாட்களாய் ஒவ்வொரு ரயில் நிலையமாக மனைவியைத் தே டிச் சென்றுள்ளார்.

இறுதியாக ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட பாலேஸ்வர் என்ற பகுதியில் கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் விசாரித்தபோது,

மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மனைவி கபீர் அங்கு இருந்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ரயிலில் பயணித்த முதியவர் ஒருவர் வாழைப்பழம் கொடுத்ததாகவும் அதை வேண்டாம் என்று கூறியபோது தந்தையைப் போன்று இருக்கும் தன்னிடம் வாங்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் வாழைப்பழத்தை கபீர் சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ம யக்க மருந்து கலந்து கொடுத்த அந்தப் பழத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களில் கபீர் ம யக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பாலேஸ்வர் பகுதி காவல் நிலையத்தில் இந்தக் கொ ள்ளை தொடர்பாக பு கா ர் கொடுக்கப்பட்டுள்ளது. கா ணாமல்போன மனைவியை மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து கணவரே கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

அதுமட்டுமின்றி பயணத்தின் போது, அடையாளம் தெரியாத நபர் எந்த ஒரு சாப்பிடும் பொருள் கொடுத்தாலும், சாப்பிடக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று எ ச்சரிக்கப்பட்டுள்ளது.

தூ ங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவனால் நடந்த கொ டூரம்!!

மதுரையில்..

மதுரையில் ம னைவியின் த.லை.யி.ல் கிரைண்டர் க.ல்.லை போ ட்டு கொ.லை செ ய்த க ணவனை காவல் துறையினர் கை.து செய்துள்ளனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம் – அஞ்சனா தேவி, திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது, இவர்களுக்குள் அ.டிக்கடி த கராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ம ன உளைச்சலுக்கு ஆளான வேலாயுதம், நேற்று நள்ளிரவு பணி மு டித்து வீட்டுக்கு வந்தபோது, தூங்கி கொண்டிருந்த மனைவி அஞ்சனா தேவியின் த.லை.யில் கிரைண்டர் க.ல்.லை போ.ட்.டு. கொ.லை செ ய்துள்ளார்.

இதில் ர.த்.த.வெ.ள்ளத்தில் து.டி.து.டி.த்த அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் உ.ட.லை மீ.ட்.டு உடற்கூறு ஆய்வுக்காக,

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வேலாயுதத்தை கை.து செய்த போலீஸார் அவரிடம் வி சாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த மணமகனுக்கு கொரோனா : பரிதாப நிலையில் மணமகள்!!

கொரோனா..

இரத்தினபுரியில் வெளிநாடு செல்லவிருந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரக்வான – உக்வத்தை பிரதேசத்தில் கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற திருமணமான இளைஞருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

திருமணத்தின் பின் வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக உக்வத்தை பிரதேசத்தில் 13 குடும்பத்தை சேர்ந்த 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் 10 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் நால்வர் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் மணமகள் மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக உக்வத்தை பிரதேசத்திற்கு பயணக்கட்டுப்பாடு விதிப்பதற்கு கொடகவெல பிரதேச சபை தலைவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

50 அடி பள்ளத்தில் விழுந்த லொறி!!

வீதியை விட்டு விலகி..

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிரிகம பகுதியில் லொறியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா சென்ற லொறியே இன்று காலை வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா வர்த்தக நிலையங்களுக்குப் பொருட்கள் ஏற்றி செல்கையில் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் லொறி கட்டுப்பாட்டை மீறி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி தெய்வாதீனமாகக் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார். என்ற போதும் லொறியும் அதிலிருந்த பொருட்கள் கடும் சேதமாயுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் 16ம் திகதி வரை சுகாதாரப் பிரிவினரினால் மூடப்படும் பாடசாலை!!

மூடப்படும் பாடசாலை..

வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்ஸிம் பாடசாலை சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய மூடப்பட்டுள்ளது.

வவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து புதிய சாலம்பைக்குளம் கிராமம் நேற்று (12.12) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்ஸிம் பாடசாலை எதிர்வரும் 16ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

சித்ரா த.ற்.கொ.லை வ ழக்கில் திரட்டப்பட்டுள்ள முக்கிய ஆதாரங்கள் : தொ டரும் தீ விர வி சாரணை!!

நடிகை சித்ரா வழக்கில்..

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார். த.ற்.கொ.லை தொ டர்பாக கணவர் ஹேமந்த்திடம் நான்காவது நாளாக பொலிசார் வி சாரித்து வருகின்றனர்.

இதனிடையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் வி சாரணை நடத்தி வா க்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மறைந்த

சின்னத்திரை நடிகை சித்ரா பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான விடயங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் பலரைக் கவர்ந்திழுத்தவர் தான் நடிகை சித்ரா. இவருக்கு 28 வயது தான் ஆகிறது. இவர் ஒரு விஜே என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

இவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று இரவு 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார். அதன் பின் குளிக்க போகிறேன் என்று தன் வருங்கால கணவரிடம் சொல்லிவிட்டு சென்றவர், தான் அணிந்திருந்த பு ட வையால் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ள ச.ம்.ப.வ.ம் ப.ல.ருக்கும் அ.தி.ர்.ச்.சியை அ.ளி.த்.து.ள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சீரியல்களில் மட்டுமின்றி, நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்சர் மட்டுமின்றி, ஒரு சைக்காலஜிஸ்ட்டும் கூட. இவரைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்ப்போம்.

சென்னையில் 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி பிறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரை சித்து என்று செல்லமாக அழைப்பார்கள். இவரை வாயாடி என்றும் பலர் சொல்வதுண்டு. ஏனெனில் அந்த அளவில் படபடவென்று பேசுவார்.

இவர் சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி முடித்துவிட்டு, தனது எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவர் குடும்பத்திலேயே இவர் தான் முதல் பட்டதாரியாம்.

சின்னத்திரை நடிகை சித்ரா மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலையை எட்டியுள்ளதாக அவ்வப்போது கூறுவார். இவர் தனது முதுகலைப் படிப்பைப் படிக்கும் போதே, மாடலிங், தொகுப்பாளினியாக பகுதிநேரமாக பணியாற்றத் தொடங்கினார். இவர் முதன்முதலில் பணியாற்றியது மக்கள் தொலைக்காட்சியில் தான்.

விஜே சித்ரா 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற பிரபலமான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் பின் நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க, என் சமையலறையில் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருந்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பாப்பாவாக நடித்தார். இதில் தான் இவர் ஒரு நடிகையாக பிரபலமானார்.

விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்டி, வேந்தர் டிவி, ஜெயா டிவி, சன், டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலர் தமிழ் என பல தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவரது மீடியா பயணத்தைப் பார்த்தால், இவருக்கு இந்த துறையில் இவருக்கு உள்ள ஆவல் மற்றும் அனுபவத்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவில் மீடியாவில் அழகாக உலா வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த பின், இவரது புகழ் மேலோங்கிவிட்டது. சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களின் பட்டாளம் இந்த சீரியலுக்கு பின் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.

நடிகை சித்ராவுக்கு சிலம்பம் சுற்றத் தெரியும். அதேப் போல் மரம் ஏறவும் தெரியுமாம். இதையெல்லாம் வேலுநாச்சி என்னும் ஜீ தமிழ் சீரியலுக்காக முறையாக கற்றிருக்கிறார். இவர் புன்னகை அரசியாக காணப்பட்டாலும், இவருக்கு கோபம் மூக்குக்கு மேல வருமாம்.

இவருக்கு 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏன் விஜய் டிவி கூட ஒரு நிகழ்ச்சியில் சித்ராவுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில்,

அவரது வருங்கால கணவரான ஹேம்நாத்தை அழைத்து வந்து மோதிரம் மாற்ற வைத்தது. ஜனவரி மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்.று விஜே சித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது பலருக்கும் பே.ர.தி.ர்.ச்சியாக உள்ளது.

விஜே சித்ரா எம்.எஸ்.சி சைகாலஜி முடித்த ஒரு சைகாலஜிஸ்ட். இவர் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பாக கவுன்சிலிங் கொடுக்கக்கூடியவர் என்று அவரது நண்பர்கள் கூறுவர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட கொரோனா தொற்று நீக்கும் நடவடிக்கை!!

தொற்று நீக்கும் நடவடிக்கை..

நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா நகரசபையினரினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து பொதுமக்கள் அதிகளவில் வருகை தரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய இன்று (13.12.2020) காலை 9.00 மணியளவில் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

நகரசபை பொது முகாமைத்துவ உதவியாளர் துரைராஜ் சபேசன் தலைமையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, நடைபாதைகள், விடுதிகள் என்பன நகரசபையின் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தியதுடன் மருந்தும் வீசியும் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.