வவுனியா மன்னார் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

6 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளில் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வவுனியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக கடந்த (05.12.2020) அன்று உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக வவுனியா – மன்னார் வீதியினை தடை செய்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து 3 மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த போராட்டத்தினை மேற்கொண்ட 6 நபர்கள் மீது வவுனியா மாவட்ட நீதிமன்றில் அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியமை,

கொவிட் -19 விதிமுறைகளை மீறி செயற்பட்டமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வவுனியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13.12.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தோழிகளால் மனைவியை பறிகொடுத்த கணவன் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வீட்டிற்கு வந்த தோழிகளால் கணவன் தன் மனைவியை பற்கொடுத்து நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன்(32).

மரவேலை செய்து வரும் இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி(26) என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நந்தினியின் தோழிகள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது பேசிக் கொண்ட போது, ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால், அதிகளவு சம்பாதிக்கலாம், என்று நந்தினியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட நந்தினி உடனடியாக, தன்னுடைய கணவரிடம் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால், அவரோ இது எல்லாம் ஒரு மோ சடியாக இருக்கும் இதில் முதலீடு செய்ய நான் பணம் தர மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

இதனால் ம னமுடைந்து போன நந்தினி நேற்று முன் தினம் இரவு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்டார்.

நந்தினி இ றந்ததை காலையில் தான் அவரது உறவினர்கள் பார்த்தனர். இதுகுறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உ டலை மீ.ட்.டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டிற்கு வந்த தோழிகள் கொடுத்த பண ஆசையால், ரூபன் தன் மனைவியையும், இரண்டு குழந்தைகள் தாயை இழந்தும் நிற்கின்றனர்.

இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் 26ம் திகதி முதல் திறக்க தீர்மானம்!!

விமான நிலையங்களை..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள சர்வதேச விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் உப்புல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களுக்கு வணிக விமானங்கள் மற்றும் நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கு தங்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அங்கு பின்பற்ற வேண்டிய செயற்பாடு மற்றும் சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அவ்வாறு மீண்டும் சர்வதேச விமான பயணங்களுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் நிலையான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்த நபர் : கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

பாணந்துறை – மஹவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

68 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவரது சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.

அதற்கமைய சடலத்தை தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

12 வருடங்களுக்கு பின் சி றையிலிருந்து விடுதலையானவுடன் த ம்பியை கொ.லை செ.ய்.த அண்ணன்!!

12 வ ருடங்க ளுக்கு பி ன்..

கொ.லை கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ல் 12 வ.ரு.ட.ங்.க.ள் சி.றை.த் த.ண்.ட.னை அ.னு.ப.வி.த்.த ஒ.ரு.வ.ர் வி.டு.த.லை.யா.ன சி.ல நா.ட்.க.ளி.லே.யே சொ.ந்.த ச.கோ.த.ர.னை.க் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு மீ.ண்.டு.ம் சி.றை செ.ன்.று.ள்.ளா.ர்.

அநுராதபுரம் – தம்புத்தேகம பி ரதேச செ யலாளர் பி ரிவில் இ ந்தச் ச ம்பவம் இ டம்பெற் றுள்ளது. மு ன்னதாக ஒ ருவரை கொ.லை செ.ய்.த கு ற்றச்சா ட்டில் 12 வ ருடங்கள் சி றையில் இ ருந்த 53 வ யதான ந ப ர் க டந்த நவ ம்பர் 30 ஆ ம் தி க தி வி டுவிக்கப்ப ட்டார்.

டிச ம்பர் 8 ஆ ம் தி க தி அ வ ர் 37 வ யதான த ன து சொ ந்தச் ச கோதரனை கொ.லை செ.ய்.தாா். வா.க்.கு.வா.த.ம் ஒ ன்றை அ டுத்து இ ரும்புக் கு ழாய் ஒ ன்றால் ச கோதரனை கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர் எ ன்று அ வ ர் மீ து கு ற்றஞ்சா ட்டப்பட்டுள்ளது.

இ தையடுத்து கொ.லை இ டம்பெ ற்ற அ தே நா ளிலேயே கு ற்றவாளி தம்புத்தேகம பொ லிஸ் நி லையத்தில் ச.ர.ண.டை.ந்.து மீ ண்டும் சி றை செ ன்றுள்ளார்.

ஆசிரியர் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

ஹட்டன் வலயத்திற்குட்பட்ட நோர்வூட் பிரதேசத்தில் பாடசாலையில் 9வது வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 28ஆம் 30ஆம் திகதிகளில் பாடசாலை கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பின்னர் அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவாக கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திட்டம் போட்டு கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி : நேர்ந்த விபரீதம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில், காதலனுக்காக தூங்கிக் கொண்டிருந்த கணவனை மனைவி து.டி.து.டி.க்.க கொ.லை செ.ய்.த ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஒசூர் அ டுத்த அஞ்செட்டி அ ருகேயுள்ள சீங்கோட்டை ப கு தி யை ச் சே ர்ந்தவர் தனபால். க ட்டிட தொ ழிலாளியான இ வருக்கு சத்யா எ ன்ற ம னைவி உ ள்ளார்.

இ ந்த த ம்பதிக்கு தி ருமணம் ஆ கி ஓ ராண்டு ஆ ன நி லையில், இ வர்கள் இ ருவரும் ஒசூர் அ டுத்த பேகேப்பள்ளி ப குதியில் ஒ ரு வீ ட்டை வா டகைக்கு எ டுத்து வ சித்து வ ந்துள் ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு திடீரென சத்யா வீட்டில் இருந்து அ.ல.ற.ல் ச த்தம் கேட்டது. இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர், ப.த.றி.ய.டி.த்.து.க் கொண்டு, உள்ளே சென்று பார்த்தால் தனபால் ச டலமாக கி டப்பதைக் கண்டு, அ திர்ச்சிய டைந்துள்ளனர்.

அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, விரைந்து வந்த பொலிசார் தனபாலின் ச டலத்தை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்து, வி சாரணை மேற்கொண்டனர்.

வி சாரணையில், சத்யா முன்னுக்கு பின்னாக கூற, பொலிசாருக்கு சத்யா மீது ச ந்தேகம் வலுத்துள்ளது. இதனால் அவரை பொலிசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மணிகண்டன் என்பவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் நண்பரை அ டிக்கடி பார்க்க வருவார். இதன் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எங்களின் நாட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியது.

தன்னுடைய க ணவர் வேலைக்கு சென்ற பின்னர், அவர் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தன்னுடைய கணவரிடம் கூறியதால், அவர் தன்னிடம் வந்து ச த்தம் போ ட்டார்.

இ தனால் இ ருவரு க்கும் வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட் டது. இ றுதியில் அ வரை கொ.லை செ.ய்.வ.து தா ன் ச ரியான் மு டிவு எ ன்று நி னைத்து, ச ம்பவ தி னத்த ன்று, க ணவன் தூ ங்கியதும்,

மணிகண்டனை போ ன் செ ய்து அ ழைத்து க ணவனை தீ ர்த்து க ட்டிவிட் டதாக கூ றியுள்ளார். இ தையடுத்து பொ லிசார் இ ருவரையும் கை து செ ய்து சி றையில் அ டைத்துள் ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று பலருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்ப்பாணத்தில்..

மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் உட்பட ஆறு பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூட பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதியானது என பணிப்பாளர் தெரிவித்தார்.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டது என முன்னர் தகவல் வெளியாகியிருந்தது

அதில் மருதனார்மட சந்தை வியாபாரிகள் 24 பேர், நேற்று பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் 7 பேர் தொற்றுக்குள்ளதான அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தூ க்கில் தொ ங்கியபடி அ ழுகிய நிலையில் தாய்- மகள் : வி சாரணையில் தெரியவந்த கொ டூரம்!!

சென்னையில்..

சென்னையில் ம னைவி, ம களை கொ.ன்.று.வி.ட்.டு த.லை.ம.றை.வா.ன நபரை போலீசார் கை து செய்துள்ளனர். சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து சோ தனையிட்டனர்.

கீத கிருஷ்ணனின் வீட்டை உ டைத்து உள்ளே சென்ற போது, தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி அ ழுகிய நிலையில் கல்பனா உடல் இருந்தது.

அதே போல, குனாளிஸ்ரீயும் வாயில் நுரை தள்ளிய நிலையில் ச டலாமாகக் கி டந்துள்ளார். அவர்களின் ச டலங்களை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் இருந்து 2 கடிதங்களை கை ப்பற்றியு ள்ளனர்.

அந்த கடிதத்தில், கோதண்டபானி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோ ச டி செய்து விட்டதால் த.ற்.கொ.லை செ ய் து கொ ள்வதாகவும் ம ரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என கீத கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

ஆனால் எங்கு தேடியும் கீத கிருஷ்ணனை காணவில்லை, எனவே மனைவி, மகளை கொ.லை செ ய் து வி ட் டு கீத கிருஷ்ணன் த ப்பியோடி விட்டாரா? கீத கிருஷ்ணனுக்கு என்ன ஆனது? போலீசை குழப்புவதற்காக கடிதம் எழுதி வைத்தாரா? என பல கோணங்களில் போலீசார் வி சாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே கல்பனாவின் செல்போனை எடுத்துக் கொண்டு இரண்டாவது மகளையும் தூ.க்.கி.க் கொண்டு கீத கிருஷ்ணன் த லைம றைவானது தெரியவந்தது.

இந்நிலையில் ஐ.எம்.இ.ஐ நம்பரை தே டி வந்த போலீசார், இன்று காலை கோயம்பேடு அருகே கீத கிருஷ்ணனை கை து செய்துள்ளனர்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட மாட்டாது : அரசாங்கம் அறிவிப்பு!!

ஊரடங்கு சட்டம்..

நாட்டில் மீண்டும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கவில்லை என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் வாரமளவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவ்வாறான எந்தவொரு நிலைப்பாடும் இல்லை என இன்று காலை தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரும் 10 நாட்டில் எந்த முறையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மாற்றமடைகிறது என அவதானிக்கப்படும். நாங்கள் கொழும்பு நகர சபை எல்லையை ஒரு அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள்ள கொண்டு வந்துள்ளோம்.

எனினும் தற்போது உள்ள நிலைமைக்கமைய ஒரு போதும் தனிமைப்படுத்தல் அல்லது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பில்லை.

நாட்டு மக்கள் இரண்டு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். ஒரு தரப்பினர் நாட்டை மூடிவிடுங்கள் மக்களின் செயற்பாடு சரியில்லை என கூறுகின்றார்கள். மற்றுமொரு தரப்பினர் தற்போது தான் பணம் சம்பாதிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இப்படியே நாடு இருக்கட்டும் என கூறுகின்றார்கள். எப்படியிருப்பினும் மக்களின் நன்மையான பக்கம் குறித்தே சிந்திக்க வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கொரோனா மருந்துகள் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்!!

கொரோனா மருந்துகள் தொடர்பில்..

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத எந்தவொரு மருந்தையும் கொரோனா தொற்றுக்கான மருந்து எனக் கருதி அருந்த வேண்டாம் என இலங்கையில் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஆராய்ச்சி கழகம் இதற்கான அறிவித்தலை விடுத்திருக்கிறது. தற்போது நிலையில் தமது ஆராய்ச்சி கழகத்தில் மூன்று மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய ஆராய்ச்சி கழகம் தெரிவித்திருக்கிறது.

இதனடிப்படையில் மருத்துவரான தம்மிக்க பண்டாரவின் ஆயுர்வேத மருந்தும் அடங்குவதாக ஆராய்ச்சி கழகம் தெரிவித்திருக்கிறது.
சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார தயாரித்துள்ளதாக கூறப்படும் இந்த கொரோனா தொற்று மருந்தை,

அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட்ட அமைச்சர்களும், நாடாளுமன்றத்தின் சபாநாயகர் உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அருந்திய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தம்மிக்க பண்டாரவினால் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக கேகாலை – ஹெட்டிமுல்லையில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளையும் புறந்தள்ளி ஒன்றுகூடியிருந்தனர்.

இதனையடுத்து தற்போது ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் சேனானி ஹேமந்த தமது அறிவித்தலை விடுத்திருக்கிறார். தமது நிறுவனம் உறுதிப்படுத்தும்வரை எந்த ஒரு மருந்தையும் கொரோனா வைரஸ் குணமாக்கி என கருதி மக்கள் அருந்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை சுதேச மருத்துவராக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தம்மிக்க பண்டார தேசிய சுகாதார துறையில் ஒரு வைத்தியராக பதிவு செய்திருக்கவில்லை என ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

பிரபல நடிகை மர்ம ம ரணம் : கொ.லை.யா? த.ற்.கொ.லை.யா?

ஆர்யா பேனர்ஜி..

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் த.ற்.கொ.லை செ ய்து கொண்ட சம்பவம் பலரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து பல நடிகர்களின் த.ற்.கொ.லை செய்திகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் த.ற்.கொ.லை செ ய்து கொண்டிருந்தார். தற்போது பாலிவுட் நடிகை ஆர்யா பேனர்ஜி தன் வீட்டில் ச டலமாக மீ ட்கப்ப ட்டுள் ளார்.

இவர் சில்கா ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படமான டர்டி பிக்சரஸ் படத்தில் ஷகிலா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவர் சிதார் கலைஞர் நிகில் பேனர்ஜியின் மகன் ஆவார்.

கொல்கத்தாவில் தன்னுடைய வீட்டில் ஆர்யா ச டலமாக இருப்பதை கண்ட அவருடைய பெற்றோர் அ திர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நீண்ட நேரம் ஆர்யா தன்னுடைய அறை கதவைத் திறக்காததால் அவருடைய பெற்றோர் அவரை அழைத்தபோது பதிலளிக்கவில்லை. இதன்பின் கதவைத் திறந்து பார்த்தபோது ஆர்யா ச டலமாக இருந்துள்ளார்.

அவருடைய சில மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளதால் அவருடைய ம ரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த.காண்டீபன் நியமனம்!!

வைத்தியர் த.காண்டீபன்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் புதிய பணிப்பாளராக வைத்தியர் த.காண்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் , முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் அவரது பணிகளை திறன்பட மேற்கொண்ட வைத்தியர் த.காண்டீபன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையிலான காலமும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளாராக சேவைகளை திறன்பட கடமையாற்றிய வைத்தியர் க.நந்தகுமார் வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளிகள் இருப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திறந்து வைப்பு!!

பொது வைத்தியசாலையில்…

வவுனியா வர்த்தக சங்கத்தினரினால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட நோயாளிகள் இருப்பிடம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பன இன்று (12.12.2020) மதியம் 3 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

கோவிட் தொற்று நோய்த்தாக்கம் காரணமாக நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா வர்த்தக சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தரும் நோயாளிகள் இருப்பதிற்கான இருப்பிடம்,

மற்றும் வைத்தியசாலையின் அனைத்து விடுதிகள், வெளிநோயாளர் பிரிவு, சிகிச்சை பிரிவுகள் என்பனவற்றினை உள்ளடக்கி அனைத்து இடத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இவ்வாறு அமைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார், வவுனியா வர்த்தக சங்க செயலாளர் ஆ.அம்பிகைபாலன், வர்த்த சங்க உறுப்பினர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வர்த்தக சங்கத்தின் சேவை தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார்,

வவுனியா வர்த்தக சங்கத்தினர் மிகவும் இக்கட்டான காலநிலையில் எம்முடன் கைகோர்த்தவர்களில் அவர்களும் ஒருவர் கோவிட்-19 தாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் எமது வைத்தியசாலை இக்கட்டான சூழ்நிலையில் காணப்பட்ட சமயத்தில் தாமாக முன்வைந்து பல்வேறு உதவிகளை புரிந்தனர்.

குறிப்பாக ஊழியர்களுக்குரிய பாதுகாப்பு அங்கிகள், உடல் வெப்பமானிகள், நோயாளிகள் சமூக இடைவெளியினை பேணி சிகிச்சை பெற கொட்டகை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற பல்வேறு நலத்திட்டத்தினை புரிந்துள்ளதாக தெரிவித்தார்.

பிரான்ஸில் சினிமா பாணியில் நடந்த திகில் சம்பவம்!!

பிரான்ஸில்..

பிரான்ஸில் தீ விபத்து ஒன்றில் இருந்து தப்பிக்க சிறுவன் ஒருவன் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து குதித்துள்ளான். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவ்லின், முரோ நகரில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலையில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் பலத்த தீ பரவியுள்ளது. அவ்வீட்டில் 12 வயதுடைய சிறுவன் ஒருவனும், அவனது 10 வயது தங்கையும் இருந்துள்ளனர்.

தாதியாக பணிபுரியும் அவர்களது தாயார் இரவு நேர பணிக்கு சென்றிருந்தார். இதனால் தீக்குள் அவ் இரு சிறுவர்களும் சிக்கிக்கொண்டனர்.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னர், அக்கட்டிடத்தில் வசித்த சிலர் அவர்கள் தப்பிக்க ஏற்பாடு செய்தனர். பஞ்சு மெத்தை ஒன்றை வைத்து அதன் மேல் குதிக்க அறிவுறுத்தினர்.

முதலில் சிறுவன் அங்கிருந்து மெத்தை மீது குதித்துள்ளான். இலேசான காயங்களுடன் அவன் தப்பித்துக்கொண்டான். அவனது தங்கை குதிக்க முற்பட்டதுக்குள் தீ வேகமாக பரவியுள்ளது.

சில நிமிடங்கள் கழித்து சிறுமியை தீயணைப்பு படையினர் காப்பாற்றினர். சிறுமி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள அர்மண் ட்ரஸ்ஸோ மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.