இலங்கை பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல் : காலில் விழுந்த இளைஞன்!!

காலில் விழுந்த இளைஞன்…

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் சிறிய லொறி ஒன்றில் இருந்து இறங்கி சென்ற இளைஞனின் பேர்ஸ் கீழே விழுந்துள்ளது.

அதனை வேறு ஒருவர் எடுக்க முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் இதனை பொலிஸ் அதிகாரி தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய பேர்ஸின் உரிமையாளரான இளைஞன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இளைஞனின் பேர்ஸில் 30 ஆயிரம் ரூபாய் பணம், சாரதி அனுமதி பத்திரம், அடையாள அட்டை என்பன இருந்துள்ளன.

தான் கம்பஹா பிரதேசம் என்பதனால் பல மாதங்களாக தொழில் செய்ய முடியாமல் போயிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது உறவினர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு தனது வாழ்க்கையில் முதல் முறையாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது எதிர்பார்ப்பு எல்லாம் கலைந்து போன நிலையிலேயே ஒலிப்பெருக்கியில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக கண்ணீருடன் கூறிய இளைஞன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு இவ்வாறு இருக்கும் என தான் ஒரு போதும் நினைத்ததில்லை எனவும் பொலிஸார் தொடர்பில் தவறான எண்ணமே இதுவரை தனது மனதில் இருந்ததாக இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!!

கோர விபத்தில்…

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின், ஜயபுர பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும், முச்சக்கரவண்டியும் மோதி விபத்திற்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் திவுலபிடிய, படேபொல பகுதியைச் சேர்ந்த கே.நதீகசம்பத்குமார (38 வயது) மற்றும் புத்தளம் – முந்தலம பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க ஆராய்ச்சிலாகே இஷான் சமிந்த (35 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை லொறியின் சாரதியான ஊறுவத்த, கதன்ஹேனவத்த பகுதியைச் சேர்ந்த பத்தினிகே பியனந்த (58 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ விபத்து : கருவிலிருந்த சிசுவுடன் சகோதரிகளின் இறுதிப்பயணம்!!

மொரட்டுவ விபத்து..

மொரட்டுவை பகுதியில் இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்த இரண்டு சிறுமிகள் மற்றும் கருவிலிருந்த சிசு ஆகியோரின் பூதவுடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. மொரட்டுவை – எகொடஉயன புனித மரியா தேவாலயத்தில் நேற்று மாலை இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.

7 மற்றும் ஒன்றரை வயதான பெண் குழந்தைகளின் பூதவுடல்களுடன், தாயின் கருவிலிருந்த சிசுவின் பூதவுடலும் மக்கள் அஞ்சலிக்காக எகொட உயன பகுதியிலுள்ள அவர்களது உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பூதவுடல்கள் மீதான இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீர் கதறல்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.

மொரட்டுவை – எகொடஉயன பகுதியில் கடந்த 4ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதுண்டு இரண்டு பெண் குழந்தைகள் உயிரிழந்திருந்தனர்.அத்துடன், கர்ப்பிணியான தாய், சம்பவத்தில் படுகாயமடைந்ததுடன், அவர் பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட தாய், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.எவ்வாறாயினும், விபத்தால் குறித்த தாயின் கருவிலிருந்த சிசுவும் இறந்திருந்தது என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

தாயின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட நிலையில்,விபத்தினை ஏற்படுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, இரவு நேர பந்தயத்தில் ஈடுபடும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களின் ஓட்டுநர்கள் மற்றும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மிரிஹான பகுதியில் இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்காகத் தயாராக இருந்த 24 மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்ததுடன், 40 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, இரவு நேர மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வவுனியா சேமமடு பகுதியில் தீயில் எரிந்து பெண் படுகாயம்!!

சேமமடு பகுதியில்..

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று(07.12.2020) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டில் இருந்த சமயம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 41வயதுடைய பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கனடாவில் இந்திய வம்சாவளியினரின் கவனத்தை ஈர்த்த 100 ஆண்டுகள் பழமையான சிலை : சுவாரஸ்ய சம்பவம்!!

திவ்யா மெஹ்ரா..

இந்திய வம்சாவளியினரான திவ்யா மெஹ்ரா கனடாவில் புகழ்பெற்ற ஒரு கலைஞர். அவரது பெற்றோர் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தியா பிரிந்தபோது திவ்யாவின் தந்தை பிறந்த பகுதி பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. கனடாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கலைக்கண்காட்சி ஒன்றிற்கு சென்றிருந்த திவ்யாவின் கவனத்தை அங்கிருந்த ஒரு சிலை ஈர்த்துள்ளது.

அது இந்திய கோயில்களில் வைக்கப்படும் ஒரு சிலை. ஆகவே, அது தொடர்பான ஆய்வுகளில் இறங்கியுள்ளார் திவ்யா. அவரது ஆய்வில், அந்த சிலை இந்தியாவிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சிலை என்பது தெரியவந்தது.

பல கைகள் சுற்றி, கடைசியாக அது அந்த அருங்காட்சியகத்துக்கு வந்ததை அறிந்துகொண்டுள்ளார் திவ்யா. திவ்யாவின் முயற்சியின் பேரில், தற்போது அந்த சிலை இந்தியாவிடமே திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

திருமணமான 2வது நாள் இரவில் வெளியில் சென்ற கணவன் : நள்ளிரவில் மனைவிக்கு பேரிடியாக வந்த செய்தி!!

திருமணமான 2வது நாள்…

இந்தியாவில் திருமணமான 2வது நாளில் புதுமாப்பிள்ளை உ யிரிழந்த செய்தியை கேட்டு மனைவி அ திர்ச்சியில் உறைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பேத்தா பவனி கிராமத்தை சேர்ந்தவர் அஷோக் குமார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் அஷோக் இரவு நேரத்தில் அவசர வேலையாக பைக்கில் வெளியில் கிளம்பினார். பின்னர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அஷோக் விபத்தில் சிக்கியிருக்கிறார்.

இர த்த வெ ள்ளத்தில் சாலையில் அஷோக் கி டப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்த நிலையில் அவர்கள் அவரை மீ ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அஷோக் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த தகவல் அஷோக்கின் குடும்பத்தாருக்கு நள்ளிரவில் தெரியவந்த நிலையில் அனைவரும் அ திர்ச்சியடைந்தனர்.

அதிலும் அவரின் மனைவிக்கு கணவரின் ம ரண செய்தி பே ரிடியாக வந்து வி ழுந்த நிலையில் உ டைந்து போனார். இதன் காரணமாக அவர் உடல் நிலை மோ சமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் அஷோக்கின் மரணத்தின் சதிவேலை உள்ளது என குடும்பத்தாரும் கிராம மக்களும் கு ற்றஞ்சா ட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் உரிமை கோரப்படாத நிலையில் 12 கொரோனா சடலங்கள்!!

சடலங்கள்..

கொரோனாவினால் காவு கொள்ளப்பட்ட 12 பேரின் உடலங்கள் இன்னும் உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 12 உடலங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் மக்களுடையது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின்படி இந்த உடலங்கள் தகனம் செய்யப்படவிருப்பதால் அந்த உடலங்களை பொறுப்பேற்க முஸ்லிம் தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தொடர்ந்தும் கொழும்பு சவச் சாலையில் இந்த உடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கொரோனாவால்,

பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாது என்றும் தகனம் செய்வதே சிறந்தது என்ற பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.

அத்துடன் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படும் மீள் ஆய்வின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த குழு அறிவித்திருக்கிறது.

அதேநேரம் கொரோனா வைரசால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக உயர்நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு அண்மையில் நிராகரிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் பணம் இருந்தும் திருமணத்திற்கு அம்மா கட்டிய சேலையுடன் வந்த இளம் நடிகை!!

நடிகை நிஹாரிகா..

32 வருடங்களுக்கு முன் தனது அம்மா நிச்சயதார்த்த தினத்தன்று அணிந்த சேலையை நடிகை நிஹாரிகா தனது திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணிந்து சமூகவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ள நிஹாரிகாவுக்கும் பொறியாளர் சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்த புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

32 வருடங்களுக்கு முன் தனது தாயார் பத்மஜா நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட இந்த சேலை இப்பொழுதும் அழகாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயதார்த்தத்தின்போது தாயார் சேலை அணிந்த புகைப்படமும் தற்போது நிகாரிகா அதே சேலை அணிந்த புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.

பெற்ற மகனுக்கு தந்தையால் நடந்த வி பரீதம் : நெஞ்சை உ லுக்கும் சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பெற்ற மகனை தந்தையே அ.டி.த்.து.க் கொ.ன்.ற தி டுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூரின் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னச்சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்து(42) – நீலா(34), இவர்களது மகன் கார்த்திக்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ப டுகா யங்களுடன் கி டந்த கார்த்திக்கை மீ ட் ட பெற்றோர், மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இ றந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தன்னுடைய மகனின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக நீலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கார்த்திக்கின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில், சிறுவன் க.ழு.த்.து நெ.ரி.க்.க.ப்.ப.ட்.டு கொ.ன்.ற.து தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனை கொ.லை செ ய் த நபர்கள் குறித்து தீ விரமாக வி சாரணை நடத்தினர்.

 

எ.ந்.த த.ட.ய.மு.ம் கி.டை.க்.கா.த நி.லை.யி.ல், சி.று.வ.னி.ன் த.ந்.தை அ.ளி.த்.த வா.க்.கு.மூ.ல.ம் மு.ன்.னு.க்.கு பி.ன் மு.ர.ணா.க இ.ரு.ந்.த.து. இ தனைய டுத்து ச ந்தேக த்தின் பே.ரி.ல் அ.வ.ரை பி.டி.த்.து வி.சா.ரி.த்.த.ன.ர்

அப்போது, முத்து தான் த ன து ம க னை கொ.லை செ ய் தா ர் எ ன்ற அ தி ர் ச் சி தகவல் வெளியானது. மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில், முத்து அதிகம் குறும்புத்தனம் செய்வது பிடிக்கவில்லை என்பதால்,

ம.க.னை அ.டி.த்.த.து.ட.ன், செ ல்போன் சா ர்ஜர் வ.ய.ரா.ல் க.ழு.த்.தை இ.று.க்.கி கொ.ன்.ற.தா.க தெ ரிவித்து ள்ளார். இ தனையடுத்து முத்து மீ து வ ழக்குப திவு செ ய்த போ லீசார், கை து செ ய் து சி றையில் அ டைத் தனர்.

தாலி கட்டும் நேரத்தில் மணமகளைப் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி : அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

ராஜஸ்தான்…

இந்தியாவில் மணமகள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாப்பிள்ளை அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டது, பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் இளம் ஜோடியினருக்கு, கடந்த திங்கட் கிழமை மாலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டதால், அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக நஹர்கார்ஹ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணின் அத்தை, மாமாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர்களுடன் தொடர்பில் இருந்த மணப்பெண் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் மணப்பெண் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அறியாத மணப்பெண் குடும்பத்தினர், திருமணம் நடைபெறும் ஷாபாத் பகுதிக்கு சென்றனர்.

கொரோனா தொற்று உறுதியானதை அறிந்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மணப்பெண் மற்றும் அவரது தாயாரை அழைத்து வர, அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

ஆனால், அதற்கு முன்னதாகவே மணப்பெண் குடும்பத்தினர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டதை அறிந்ததும், திருமணம் நடைபெறும் பகுதிக்கு சென்றனர்.

கொரோனா தொற்று உறுதியான தகவலை, மணமக்களிடம் கூறி, கொரோனா சிகிச்சை மையத்திற்கு, மணமகள் மற்றும் அவரது தாயாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா சிகிச்சை முடிந்தப்பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். தாலி கட்டும் நேரத்தில், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமக்களிடன் குடும்பத்தினர், ஏற்கனவே திருமண திகதியை உறுதிப்படுத்திவிட்டதால்,

இனிமேல் தங்களது வழக்கப்படி திருமண திகதியை மாற்றமுடியாது என்று சுகாதாரத்துறை ஊழியர்களிடம் கெஞ்சி வற்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி மாப்பிள்ளை இதைப் பற்றி எதையும் யோசிக்காமல், திருமணம் செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

கொரோனா என்றவுடன் பயப்படாமல், தன்னை நம்பி வரவிருக்கும் பெண்ணிற்காக உறுதியாக நின்றார். இதையடுத்து மனமிறங்கிய சுகாதாரத்துறை ஊழியர்கள், திருமணம் நடைபெறும் இடம் இல்லாமல், கொரோனா சிகிச்சை மையத்திலேயே, உறவினர்கள் யாரும் இன்றி திருமணம் நடத்த அனுமதி தந்தனர்.

இதனால் வேறுவழியின்றி, கொரோனா சிகிச்சை மையத்தின் காலி இடத்தில், தற்காலிக திருமண பந்தல் இட்டு, மணமகன், மணமகள், மணமகளின் தந்தை, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் மட்டும் தனிமனித கவச உடையணிந்து பாதுகாப்புடன் திருமணத்தை நடத்தினர்.

திருமணத்திற்குப் பின்னர், மணமகள் மற்றும் அவரது தாயார் கொரோனா சிகிச்சை மையத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். மணமகளின் தந்தைக்கு கொரோனா நெகடிவ் என்று வந்ததால் அவர் வீட்டுக்கு செல்லலாம் என்று மருத்துவ ஊழியர்கள் கூறினர்.

திருமணம் நடைபெறுமா? இல்லையா என்று சோகத்தில் உறவினர்கள் இருந்த நிலையில், திருமணம் நடைபெற்றவுடன் உறவினர்கள் நிம்மதி அடைந்தனர். மாப்பிள்ளை உறுதியாக இருந்ததன் மூலமே இந்த திருமணம் நடந்தது, இது ஒரு நெகிழ்ச்சி யான முடிவு என்று கூறியுள்ளனர்.

13 வயது சிறுமியுடன் மாயமான இரண்டு திருமணம் செய்த 49 வயது மதபோதகர் : கதறும் தந்தை!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் 13 வயது மலைவாழ் சிறுமியை 49 வயது மதபோதகர் க ட த் தி ச் சென்று 1 மாதமாகியும் இன்னும் பொலிசாரிடம் சி க்காமல் உள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த 49 வயதான மதபோதகர் ஜெயராஜ் 13 வயது சி றுமியை க ட த் தி ச் சென்றார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் பொலிசார் இருவரையும் தே ட முடியாமல் தி ணறி வருகின்றனர். ஜெயராஜுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் பிரிந்து தனிமையில் வசித்து வந்தார்.

இதோடு சிறுமிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார், இந்த சூழலில் தான் தன்னிடம் படிக்கும் 9வது வகுப்பு மாணவியுடன் ஜெயராஜ் த லைம றைவானார்.

இதையடுத்து ஜெயராஜ் தனது மகளை க ட த் தி ய தா க சி றுமியின் தந்தை பொலிஸ் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஜெயராஜை பல இடங்களில் தே டியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் கூறுகையில், என் மகளை ஜெயராஜ் க ட த் தி ச் சென்றுவிட்டான், இது குறித்து பொலிசில் புகார் அளித்தேன்.

காவல்துறை தயவு செய்து என் மகளை க ண்டுபிடித்து தருமாறு கேட்டு கொள்கிறேன் என தழுதழுத்த குரலில் பேசியுள்ளார்.

மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

விபத்து…

மொரட்டுவை-ஏகொட உயன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணி தாய்க்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கின்றது என காவல்துறையின் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வீதியை கடக்க முற்பட்ட வேளை கர்ப்பிணித்தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மீது எதிரில் வேகமாக வந்த உந்துருளி மோதியது. இதன்போது சம்பவ இடத்திலேயே 7 அகவைக்கொண்ட சிறுமி மற்றும் ஒரு அகவைக்கொண்ட சிசு ஆகியோர் கொ ல்லப்பட்டனர்.

இதனையடுத்து காயங்களுடன் குறித்த கர்ப்பிணித்தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 20 அவைக்கொண்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிப்பதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சடலத்தை கட்டியணைத்து அழுத இருவருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா…

கொலன்னனாவ, சிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார். 55 வயதுடைய குறித்த நபர் உ யிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில்,

அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. அவரது சடலத்தை கட்டியணைத்து அழுத்த இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மரண வீட்டிற்கு சென்ற மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மரண வீட்டிற்கு சென்ற அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு!!

சாதாரண தர பரீட்சை..

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை சாதாரண தர பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை, கொரொனா தொற்று காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 27ம் திகதி வரை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா தொற்று அதிகளவில் பரவிவருகின்றதை கருத்திற் கொண்ட கல்வி அமைச்சு, கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளை பிற்போட தீர்மானித்திருந்தது. இந்த நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

25 வயது இ ளம் பெ ண்ணை காதலித்து மணந்த 42 வயது ந பர் : தி ருமணமான 6 ஆண்டுகளில் ந டந்த வி பரீதம்!!

குஜராத்தில்..

இந்தியாவில் 25 வயது பெ ண்ணும் அ வரின் 42 வ யது க ணவனும் வீ ட்டின் த னித்தனி அ றையில் தூ.க்.கி.ல் ச ட ல மா க தொ.ங்.கி.ய ச ம்பவம் ப ல ச ந்தேகங்களை கி ளப்பியுள்ளது.

குஜராத்தின் சரா கிராமத்தை சேர்ந்தவர் பால்தேவ் (42). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் ஹேமா (25) என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது.

இருவருக்கும் 17 வயது வித்தியாசம் என்பதால் காதலுக்கு குடும்பத்தார் எ திர்ப்பு தெரிவித்தனர். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் தீவிரம் காட்டியதால் அதற்கு குடும்பத்தார் சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பால்தேவ் மற்றும் ஹேமாவுக்கு திருமணம் நடந்தது. இருவரின் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் அவர்களின் திருமணம் ஊர் முழுவதும் விவாத பொருளாக மாறியது.

பால்தேவ் – ஹேமா தம்பதிக்கு குழந்தையில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பால்தேவ் மற்றும் ஹேமா நேற்று முன் தினம் தங்கள் வீ ட்டில் தூ.க்.கி.ல் ச ட ல மா க தொ.ங்.கி.ய நி லையில் இ ருந்தனர்.

இருவரும் த னி த் த னி அ றையில் இ றந்து கி டந்த னர். அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் பால்தேவ் வீட்டுக்கு வந்த போதே இந்த கா ட்சியை க ண்டு அ தி ர் ந் து போய் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவர் ச டலங்க ளையும் மீ ட்டனர். ஊர் மக்கள் கூறுகையில், தம்பதி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர், அவர்களுக்குள் இந்தவொரு ச ண் டை யு ம் வந்து நாங்கள் பார்த்ததில்லை.

பால்தேவ் ஒரு அ றையிலும், ஹேமா ஒ ரு அ றையிலும் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.து ச ந்தேகம் கி ளப்புகிறது என கூறியுள்ளனர். இதை தொடர்ந்து பொலிசார் இது த.ற்.கொ.லை.யா அ ல்லது கொ.லை.யா எ ன தீ வி ர வி சாரணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

வகுப்பறைக்குள் தாலி கட்டி மாணவரின் திருமணம் : மாணவியின் பெற்றோர் எடுத்த கடுமையான முடிவு!!

ஆந்திர மாநிலத்தில்..

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வகுப்பறைக்குள் சக மாணவருடன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட மாணவியை அவரது பெற்றோர் குடியிருப்புக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிறுமிக்கு மகளிர் ஆணையம் பா துகாப்பு அளித்ததுடன், உளவியல் ஆலோசனை அளிப்பதற்காக அதற்கான மையம் ஒன்றில் மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் தொடர்புடைய மாணவனின் குடும்ப உறுப்பினர்களுடனும் மகளிர் ஆணையம் விவாதித்துள்ளது.

இருவரும் பாடசாலை மாணவர்கள் என்பதாலும், இருவருக்கும் திருமண வயது எட்டவில்லை என்பதாலும் அந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றே அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.

ஆனால், உண்மையில் சமூக ஊடகங்களில் அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதாலையே, அப்படியான ஒரு திருமண வீடியோவை தாங்கள் பதிவு செய்ததாக மாணவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதரவு பெற்ற பாடசாலையிலேயே இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் வகுப்பறைக்குள் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த இருவரின் நண்பனே, காட்சிகளை காணொளியாக பதிவு செய்துள்ளான். ஆனால் காணொளி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த நிலையில், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று மாணவர்களுக்கு எதிராகவும் பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.