இந்தியாவில் பரவும் அடையாளம் காணப்படாத மர்ம நோய் : 300இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

ஆந்திரப் பிரதேசத்தில்…

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோய் பரவி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 300இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் குழந்தைகள், பெண்கள் உட்பட 326 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இந்த புதிய மர்ம நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை பல அறிகுறிகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்திருப்பதாக, கூறப்படுகிறது.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாக குழந்தைகள், கண்கள் எரிவதாகக் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்குவதாகவும், இன்னும் சிலர் மயங்கி விழுந்துவிடுவதாகவும் அல்லது வலிப்பு வந்துவிடுவதாகவும் குறித்த நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் இரத்த மாதிரிகளில், எந்த விதமான வைரஸ் தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றப்போகும் இலங்கையரின் கண்டுபிடிப்பு!!

இலங்கையரின் கண்டுபிடிப்பு..

டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்க கூடிய CVDM எனப்படும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

டுபாய் நாட்டின் விமான மற்றும் மின்சார ரயில் பொறியியலாளராக செயற்படும் இலங்கையரான ஜீவனாந்த டி சில்வா என்பவரால் இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய இயந்திரம் வைத்திய நிறுவனத்திடம் முன்வைத்து அதற்கு அனுமதி பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜீவனாந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் உடலில் இருக்கும் வைரஸ் 10 நொடி என்ற சிறிய காலப்பகுதியினுள் அழிந்து விட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வெற்றிகரமான முடிவுகளை மேலும் வலுப்படுத்த தேவையான ஆய்வக வசதியை அரச மற்றும் தனியார் நிறுவனத்தின் தலையீட்டில் விரைவில் பெற்றுக் கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார்.

விரைவாக அதற்கான நடவடிக்கை செய்தால் ஆயிரக்கணக்கான உயிரை காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உடலினுள் இருக்க கூடிய வைரஸ் தொற்றினை அழிக்க கூடிய இயந்திரம் ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் பல பிரதேசங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

இடியுடன் கூடிய மழை..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புரெவி புயல் காரணமாக வடக்கில் 27613 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மலசலகூட குழிக்குள் விழுந்த அரச பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!!

காஞ்சிபுரம்..

கழிவறைக்காக கட்டப்பட்டிருந்த குழியில் அரச ஊழியர் ஒருவர் விழுந்து உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தின் கிடங்கு மேலாளராகப் பணிபுரிந்துவந்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான இவர் இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற நிலையில், கழிவறைக்கு அருகிலுள்ள வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் முறையாக கட்டி முடிக்கப்படாத அந்த கழிவறையின் மூலையில் அமைக்கப்பட்ட பத்தடி ஆழம் கொண்ட செப்டிக் டேங்கில் இன்று 3 மணியளவில் தவறி விழுந்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் திரும்பாத காரணத்தால் அவரைத் தேடியபோது அவரது காலனி கழிவறையின் முன்பு இருந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள செப்டிக் டேங்க்கில் தேடியபோது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

அவரை மீ ட்ட பொதுமக்கள் முதலுதவி அளித்து காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உ யிரிழந்தார்.

செல்பி எடுக்க ஏரிக்கு சென்று உயிரை விட்ட இளைஞன் : அரங்கேறிய சோகம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் உமரேட் பகுதியில் ஏரி உள்ளது. சம்பவத்தன்று மதிய நேரத்தில், அங்குள்ள ஏரிக்கு சந்திராப்பூர் பகுதியை சார்ந்த பிரவீன் மேஸ்ராம் (வயது 24) என்ற இளைஞன் நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக பிரவீன் நிலைதடுமாறி பாலத்தின் மேலே இருந்து ஏரிக்குள் விழுந்துள்ளார். அவருடன் வந்த நண்பர்கள் பிரவீனை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி மா யமாகியுள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் மற்றும் மீ ட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே,

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரின் உடலை மீ ட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்கு பின்னர், ஏரியில் இருந்து பிரவீனின் உடலை பிணமாக மீட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக காவல் துறையினர் வி சாரணை செய்து வருகின்றனர். மேலும், பிரவீன் செல்பி எடுக்க முயற்சி செய்ததாக வி சாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பப் பி ரச்னையில் மனைவி எடுத்த விபரீத முடிவு : அனாதையான குழந்தை!!

சல்மா சுல்தானா..

தமிழகத்தில் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட த.க.ரா.றில் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சம்சு- சல்மா சுல்தானா(வயது 25). இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற குழந்தை உள்ளது.

சம்சு தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்து வருகிறார். சுகனுக்கு கண்பார்வை கோ.ளா.று இருப்பதால், கணவன்- மனைவி இடையே கு.ழ.ந்தையை கவனிப்பது தொடர்பாக பிர.ச்.ச.னை இருந்துள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவும் இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சல்மா சுல்தானா, வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார் வ.ழ.க்.கு.ப்.பதி.வு செய்து விசாரித்து வருகின்றனர். இச் சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வீடியோ அழைப்பில் பேசிய கணவன் : திடீரென 23 வயது மனைவி செய்த விபரீத செயல்!!

மோனிகா…

கணவன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் உள்ளூரில் வசிக்கும் இளம்பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி அரசு வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி.

இவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமூர்த்திக்கும் மோனிகா (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

திருமூர்த்தி ஆண்டுக்கு இரு முறை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, ஒரு மாதம் தங்கி மீண்டும் வெளிநாடு சென்று விடுவார்.

மோனிகா அடிக்கடி தொலைப்பேசியில் வீடியோ அழைப்பு மூலம் திருமூர்த்தியோடு பேசி கொள்வார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் மோனிகா திடீரென தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மோனிகாவின் ச டலத்தை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோனிகா த.ற்.கொ.லை.க்.கா.ன காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் 20 வயது இளைஞனொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து,

அதனோடு தொடர்பிலிருந்த அருகில் உள்ள குடிநீர் விநியோக நிலையம் மற்றும் மலர்ச்சாலை ஆகியவற்றிலிருந்தவர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது குடிநீர் விநியோக நிலையத்திலிருந்த மூவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களோடு தொடர்பிலிருந்த பலருக்கு முதலாவது பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படாத நிலையில்,

முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு 11வது நாள் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போதே மலர்ச்சாலை இளைஞனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களது மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இ ளம் கு டும்ப பெ ண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை!!

முல்லைத்தீவில்…

முல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு ப குதியில் இ ளம் கு டும்பப் பெ ண் ஒ ருவர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

செல்வபுரம், கோயிற்குடிருப்பை சே ர்ந்த சசிப்பிரியா வ ய து 26 எ ன்பவரே இ வ்வாறு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய் து கொ ண்டுள்ளார்.

கு றித்த ம ரணத்தில் ச ந்தேகம் இ ருப்பதாகவும், ம ரணத்திற்கு கா ரணம் த ற்போது வெ ளி மா வட்டத்தில் உ ள்ள ம ருமகன் சுஜிவிதன் தா ன் எ ன உ யிரிழந்த பெ ண்ணின் த ந்தை பத்மநாதன் தெ ரிவித்து ள்ளார்.

வீ ட்டின் அ றையினுள் ய ன்னலில் து ணி க யி று ஒ ன்று க ட் டி அ தி ல் தூ.க் கி.ட்.டு.ள்.ள.து.ட.ன், ச.ட.ல.ம் த ரையில் இ ருப்பதால் ஆ ரம்பக ட்ட வி சாரனையில் பொ லிஸாருக்கும் ச ந்தேகம் ஏ ற்பட்டு ள்ளதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

-தமிழ்வின்-

விமான நிலையம் எப்போது திறக்கப்படும் : அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

விமான நிலையம்…

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து ஜனவரி முதலாம் திகதிக்குள் முடிவு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இது குறித்து அறிவித்துள்ளார். பயணிகளுக்காக விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள்.

ஜனவரி முதலாம் திகதிக்குள் ஆலோசனை தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார். சுகாதார அதிகாரிகள் அனுமதி கொடுத்தவுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் ரணதுங்க கூறினார்.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த விரும்பாததால் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க அரசு தாமதப்படுத்துகிறது என்றார் அமைச்சர்.

“மக்கள் என்ன சொன்னாலும் நாங்கள் இப்போது கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும். எனவே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என நம்புகின்றோம்.

இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 50,000 இலங்கையர்களை அரசாங்கம் நாட்டிற்கு அழைத்து வந்துள்ளது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 40,000 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

-தமிழ்வின்-

பொது போக்குவரத்தில் நாளை முதல் கடுமையாக அமுலாகும் சட்டம்!!

நாளை முதல்..

நாளைய தினம் முதல் ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

விசேடமாக புதிய பயண முறைக்கமைய, பாடசாலை நேரத்திலும் அலுவலக நேரத்திலும் இரண்டு பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் ஆசனங்களுக்கு மாத்திரம் போக்குவரத்து பயணம் மேற்கொள்வதற்காக கடந்த காலங்களில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் அதிகமாக பயணிகள் பேருந்துகளில் அழைத்து செல்லப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

எங்களுக்கு அது தொடர்பில் கடிதம் மூலம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நாளை முதல் அவ்வாறு செய்யும் பேருந்துகளின் சாரதிகளை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று அனைத்து பயணங்களின் ஆரம்பத்திலும் இரண்டு பேருந்துகளை இயக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் பருத்தித்துறையில் ஒருவர் உயிரிழப்பு : கொரோனா தொற்று உறுதி!!

யாழ் பருத்தித்துறையில்..

பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பார் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே மேற்படி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார் என்றும், அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து கொழும்பில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து திருநாவலூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இருப்பினும் அவரும் தாய் தந்தையரும் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மகளின் தந்தை உயிரிழந்துள்ளார் எனவும் கொரோனா தொற்றுப் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளார் எனவும் பருத்தித்துறை பிராந்திய சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளனர். இவரின் மனைவி பரு/ மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணி புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த முதியவர் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும், பருத்துறையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நேற்றைய தினம் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

பருத்தித்துறைக்கு கொழும்பிலிருந்து வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஓடக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கடங்காத கொரோனா தொற்றாளர்கள் : ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை!!

கொரோனா..

இலங்கையின் பல மாவட்டங்களில் கட்டுக்கடங்காத வகையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமை நீடித்தால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் என சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அட்டளுகம போன்ற பிரதேசங்களின் மக்கள் வழங்கும் ஆதரவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தலை மீறி சென்று பொலிஸார் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்தால் சுகாதார ஊழியர்களுக்கு கண்காணிப்பை மேற்கொள்ள இலகுவாக இருக்கும். அவ்வாறு செய்யவில்லை என்றால் வைரஸ் பரவல் எங்கு சென்று முடியும் என கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்க்காத அளவு வேறு மாவட்டங்களிலும் அதிகமான கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் : PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!!

கண்டியில்…

கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஏதோ ஒரு வகையான விஷம் உடலில் பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பூங்காவில் பாரியளவிலான குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் குரங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை எனவும் உடலில் விஷம் பரவியதானால் உயிரிழந்துள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பீட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா புதுக்குளம் நீர்த்தேக்கத்தில் மாயமான மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு!!

புதுக்குளம் நீர்த்தேக்கத்தில்..

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06.12) சடலமாக மீட்கப்பட்டார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது. இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக தி.தனுசன் (வயது 18) என்ற மாணவன் தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை மதியம் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது நீர் வழிந்தோடும் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி மாணவனை நீண்ட நேரம் தேடியும் கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், காணாமல் போன மாணவனை நேற்றும் (05.12) எட்டு மணி தாெடக்கம் கடற்படையினர், இராணுவம் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடிய போதும் கண்டு பிடிக்கவில்லை.

இன்றைய தினம் (06.12) காலை மீண்டும் இளைஞர்கள் நீர் ஒடும் பகுதியில் தேடுதல் நடத்திய போது கல் ஒன்றில் அகப்பட்டு இருந்த நிலையில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த, பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு
மரணமடைந்தவராவார்.

இலங்கையில் இன்று கொரோனா தொற்றுக்கு ஏழு பேர் பலி!!

கொரோனா…

கொவிட்-19 தொடர்பான ஏழு மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இதன்படி, நாட்டில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் கொவிட் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 669 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 27,228 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 20,090 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.