கரிபியன் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட தீவான அங்குயேலாவின் புதிய ஆளுநராக இலங்கை வம்சாவளியான தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சட்டத்தரணியாக கடமையாற்றி வரும் திலினி டேனியல் செல்வரட்ணம் என்பவரே 2021 ஜனவரியில் இருந்து அந்த தீவின் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய ஆளுநர் டிம் போயின் இடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அங்குயேலாவின் நிலப்பரப்பு 35 சதுர கிலோமீற்றரைக் கொண்டது. அங்கு 18 ஆயிரத்து 90 பேர் வசிக்கின்றனர்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 590 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
இத் தொகுதியானது அடுத்த 6 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதனால், கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், சில மாகாணங்களுக்கு பலத்த காற்று மற்றும் மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இலங்கைக்கு கிழக்காக உள்ள கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் (05N – 12N, 82E – 92E) கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கி.மீதூரத்தில் நிலைகொண்டுள்ளது.
இத்தொகுதியானது அது அடுத்த சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடைந்து சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உள்ளதுடன், மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையே இலங்கையின் கிழக்கு கரையை நாளை மாலையளவில் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு மிகப்பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சு ருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி விளையாட்டாக தனது சகோதரனின் கழுத்துப் பட்டியை யன்னல் கம்பியில் கட்டி இவ்வாறு கழுத்தில் சு ருக்கிட்டுள்ளதாக திடீர் இ றப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை- புலோலி,சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது தனிமையில் இருந்த மாணவி சகோதரனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சு ருக்கிட்டுள்ளார்.
இதன்போது சுருக்கு இறுகி மாணவி உ யிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதன் காரணமாகவே சிறுமி உ யிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீரபுரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிறுவர் பாடசாலை கடந்த பத்து வருடங்களாக பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றது.
2009ம் ஆண்டளவில் சமூக நலன்சார் தனியார் நிறுவனத்தினால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட இச் சிறுவர் பாடசாலை செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் கீழ் வழங்கப்பட்டது.
ஒண்டரை வருடம் மாத்திரம் குறித்த சிறுவர் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் அதன் பின்னர் சிறுவர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.
தற்போது அவ் சிறுவர் பாடசாலை பற்றைக்காடாக காட்சியளிப்பதுடன் அவ் பகுதியில் ச ட்டவி ரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வீரபுரம் கிராம சேவையாளரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினவிய போது,
இக் கட்டிடம் பத்து வருடங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்டது. சிறுவர் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டமையினால் கடந்த பல வருடங்களாக இச் சிறுவர் பாடசாலை பற்றைக்காடாக காணப்படுகின்றது.
குறித்த சிறுவர் பாடசாலையினை மீள் புனரமைப்பு மேற்கொண்டு சிறுவர் பாடசாலையினை இயக்குவதற்குரிய நடவடிக்கையினை தாம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
பல மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டிடத்தொகுதி இவ்வாறு காணப்படுவது வேதனையளிக்கும் விடையமே.
வவுனியா தெ ற்கு சி ங்கள பி ரதேச செ யலக பி ரிவுக்கு ட்பட்ட அலகல்ல ப குதியில் யா னைகளினால் வா ழை, தெ ன்னை, நெ ல் போ ன்றன நா சமாகியு ள்ளன.
கடந்த சில நாட்களாக தினசரி அப்பகுதிக்கு வருகை தரும் காட்டுயானைகள் கிராமத்திலுள்ள நெல் செய்கைகள், தென்னை, வாழை என்பவற்றினை சே த ப் ப டு த் தி வருவது தொடர்பில் அப்பகுதி மக்களினால் அரச அதிகாரிகளின் க வனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து இன்று (30.11) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
காட்டு யானையின் அ ச் சு று த் த லி னா ல் நாளந்தம் அ ச் ச த் து ட ன் குழந்தைகளுடனும், வயோதிபர்களுடனும் நி ம் ம தி யி ழ ந் து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் தி ருமணமான 90 நா ட்களில் புதுப் பெ ண் கி ணற்றில் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார். கர்நாடக மாநிலத்தை சே ர்ந்தவர் மாதேஷ் (23). இ வருக்கும் த மிழகத்தின் ஈரோட்டை சே ர்ந்த சரஸ்வதி (20) எ ன்பவருக்கும் 3 மா தங்களுக்கு மு ன் பு தி ருமணம் ந டந்தது.
இ தைத் தொ டர்ந்து சரஸ்வதி க ணவருடன் அந்தியூர் அ ருகே குப்பாண்டபாளையம் ப குதியில் வா டகைக்கு வீ டு எ டுத்து வ சித்து வ ந்தார். மே லும் க ணவருடன் ஒ ரே மி ல்லில் வே லை செ ய்து வ ந்தார்.
இந்த நிலையில் சரஸ்வதி மாதேசிடம், கடன் அதிகமாக உள்ளது. எனவே நாம் 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று காலை சரஸ்வதி மாதேஷிடம் அருகே உள்ள வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வராமல் மா யமானார்.
இ தனால் சரஸ்வதியை மாதேஷ் ம ற்றும் உ றவினர்கள் ப ல்வேறு இ டங்களில் தே டி வ ந்துள் ளனர். அ வ ர் கி டைக்கவி ல்லை. இ தனால் அ தி ர் ச் சி ய டை ந் த மாதேஷ் நே ற் று மு ன்தினம் பொ லிஸ் நி லையத்தில் த ன து ம னைவி சரஸ்வதியை கா ண வி ல் லை எ ன்று பு கா ர் அ ளித்தார்.
அ த ன் பே ரி ல் பொ லி சா ர் ச ர ஸ் வ தி யை தே.டி வ ந் த ன ர். இ த ற் கி டை யே கி ண ற் றி ல் ஒ ரு பெ ண் ணி ன் ச ட ல ம் கி ட ப் ப தா க பொ லி சா ரு க் கு த க வ ல் கி டை த் த நி லை யி ல் அ தை வெ ளி யி ல் எ டு த் த ன ர்.
அ ந் த பெ ண் ச ர ஸ் வ தி எ ன் ப து ம், அ வ ர் கி ண ற் றி ல் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ ண் டா ர் எ ன் ப து ம் தெ ரி ய வ ந் த து.
வவுனியாவில் ஓரினச் சேர்க்கையால் எயிட்ஸ் அதிகரிப்பதால் இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்புச் சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
இன்று (30.11.2020) வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை அனுஷ்டிக்கிறோம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைவரை சுமார் 4,000 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா
மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.
பொதுபாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்றபோது தொற்றுகிறது.
அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும்போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.
வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக உள்ளது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்
வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. எனினும் அவர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.
ஆகவே முற்று முழுதாக இலங்கையிலிருந்து எயிட்ஸ் தொற்றை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை எனவும் அவர் தெரிவித்தார்
கொழும்பில் கொரோனா இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான மக்கள் தொற்றுநோயுடன் நாள் தோறும் கண்டுபிடிக்கப்படும் நிலையில் கொழும்பின் நிலைமை தீவிரமானது என்று கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க எச்சரித்துள்ளார்.
சமீபத்திய கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற முன்னாள் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் மீண்டும் சேவைக்கு வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் தாம், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடமும் கொழும்பு மாநகரசபைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 991 பி.சி.ஆர் சோதனைகளை நடத்தியபோது 249 கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டன. இதனைப் பார்க்கும்போது இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும்.
ஒரு நகரத்தில் ஐந்து கொரோனா தொற்றாளி கண்டறியப்பட்டாலும் அதை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே பார்க்க வேண்டும். எனினும் பொதுமக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ரோஸி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக அறிய நடத்தப்படும் PCR பரிசோதனைகளை செய்து கொள்ளாது தவிர்க்கும் நபர்களை தேசத்துரோகிகள் எனக் கருதி,
அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
களுத்துறை, பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் இவ்வாறு செயற்பட்டு வருவதாக திட்டமிட்டு செயற்படும் குழு ஒன்றின் நபர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பண்டாரகம உட்பட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கினால், அவர்கள் கட்டாயம் அதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்படி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்றால், அவர்களை தேசத்துரோகிகளாக கருதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (30.11.2020) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு வைத்தியசாலை பிணவறையில 5 கொரோனா சடலங்கள் சில நாட்களாக உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்து 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் கொரேனா தொற்றிய உடல் தகனம் செய்யப்பட வேண்டும். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணாக குறித்த சடலங்கள் பல நாட்களாக பிணவறையில் வைக்க நேரிட்டுள்ளது.
சடலங்களை தகனம் செய்வதற்கு சவப்பெட்டி வழங்க முடியாதென கூறி தகன நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு குடும்பத்தினர் வெளியேறியுள்ளதாக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலங்களில் கொம்பனிதெருவை சேர்ந்த இருவரது சடலங்களும், மருதானையை சேர்ந்த ஒருவரின் சடலமும், மாளிகாவத்தையை சேர்ந்த ஒருவரின் சடலமும். கோட்டையை சேர்ந்த ஒருவரின் சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நபர்கள் வீட்டில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்தவர்களாகும். பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஏற்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் எழுவர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சுவாசப்பை பிரச்சினை மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொதடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே கடந்த 27ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு, சுவாசப்பை பிரச்சினை மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. மொரட்டுவ பிரதேச்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் வைத்து கடந்த 27ம் திகதி உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோய் மற்றும் கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
6. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்துள்ளார். கொவிட், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
7. மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் கடந்த 27ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். கொவிட் மற்றும் சுவாசப்பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். சுகாதார சேபைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுக்கு அமைய இந்த தகவல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கந்தசாமிநகர் பகுதியில் வசிக்கும் 5 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
புங்குடுதீவு 3ம் வட்டாரத்தினை நேர்ந்த அமரர்களான நாகலிங்கம் சோமசுந்தரம், சோமசுந்தரம் சற்குணம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு அவரின் மகன் சந்ரரூபன் அவர்களின் நிதியுதவியில் வவுனியா ஊடகவியலாளர்களான கதீஷன் மற்றும் சஜீவன் ஆகியோர் நேரில் சென்று அக் குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.
கந்தசாமி நகரில் வசிக்கும் வயோதிப குடும்பம், ஊனமுற்றவர்களை கொண்ட குடும்பத்தினர், வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தினர், பெண் தலைமைத்துவ குடும்பம் என தெரிவு செய்யப்பட்ட ஐந்து குடும்பங்களுக்கு (ஒர் குடும்பத்தினருக்கு 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொதியும் சிறுதொகை பணமும்) வழங்கி வைக்கப்பட்டன.
45 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா, பண்டாரிக்குளம் வீதி திருத்தப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனால் குறித்த வேலைத்திட்டம் இன்று (29.11.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பண்டாரிக்குளம் பிரதான வீதியானது நீண்ட நாட்களாக திருத்தப்படாத நிலையில் உள்ளது. 2.45 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் ஊடாக 45 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான சுமந்திரன், நிரோசன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியிலாளர், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.