அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து இன்று மாலை இலங்கையை ஊடறுக்கும் சூறாவளி!!

சூறாவளி..

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட (BUREVI) புரேவி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த தாழமுக்கமானது அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது.

குறிப்பாக அதன் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும். அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப்பெய்யக்கூடும்.

இதன்போது மணித்தியாலத்திற்கு 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் பலத்து காற்று வீசக்கூடும். நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலங்களுக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும்.

எனவே, மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல் ஊழியர் கடலுக்கு செல்ல வேண்டாம். தற்போது கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது. அத்துடன் கடல் அலையானது ஒரு மீற்றர் அளவுக்கு உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புரவி புயலிற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் நிலையில்!!

புரவி புயல் ..

புரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக ரீதியாக கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அதற்கான தயார் படுத்தலில் ஈடுபடுமாறு பிரதேச செயலாளர்கள் பணித்துள்ளனர். இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் கருத்து தெரிவிக்கையில்,

கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக கிராம மட்டத்தில் அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கான அறிவித்தல்கள் அந்தந்த பகுதி வணக்கஸ்தலங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதுடன் பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களில் தேவையேற்படும் பட்சத்தில் மக்களை தங்க வைப்பதற்கும் அவர்களுக்கான உணவு வசதிகளை ஏற்படுத்தவும் தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை மின்சார சபையினர் மற்றும் மரங்கள் விழும் பட்சத்தில் அவற்றினை உடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வவுனியாவில் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

சூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சூறாவளி..

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் காணப்பட்ட வலுவடைந்து தாழமுக்கம் (Deep Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போதும் சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் திருகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்காக 400 கிலோமீற்றர் தூரத்திலும், கன்னியாகுமாரியில் இருந்து கிழக்கு – தென்கிழக்காக 90 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது மையம் கொண்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட BUREVI எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (Gusting to 95km/h).

இது பின்னர் மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடாவின் ஊடாக 03ம் திகதி காலை இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டு கரையை கன்னியாகுமரிக்கும் பாம்பன் பிரதேசத்திற்கும் இடையில் 04 திகதி அதிகாலை மீண்டும் ஊடறுத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியா கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அவசர அறிவித்தல்!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலகத்தால் அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள புரவி புயல் காலநிலை மாற்றம் நாளை(02.12.2020) வவுனியாவில் சூறாவளியாக உருவாகலாம். எனவே, அவ்வாறு உருவாக்கம் பெற்றால் அதன் தாக்கத்தை குறைக்க கிராம அலுவலர்கள்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காலையில் விரைவாக கடமைக்குச் சென்று கிராமத்தில் உள்ள ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும்.

தகரம்-தாள் கூரையின் கீழ், மரத்தின் கீழ் அல்லது மின்சாரக் கோட்டின் கீழ் வாழும் மக்களை வெளியேற்றி, பள்ளிகளில் ஒரு பேரழிவு தடுப்பு சேவை மையத்தை நிறுவி, அங்கு கோவிட் -19 தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யவும்.

அத்துடன், சமைத்த உணவை வழங்க தயாராக இருக்கவும். அம்புலன்ஸ் சேவைகள் அல்லது முச்சக்கர வண்டி சேவைகளைப் பெற தயாராக இருக்கவும்.

மேலும், சூறாவளி தாக்கம் ஏற்படின் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து பாதிப்பை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என பிரதேச செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான்!!

காளான்..

கிளிநொச்சி – பாரதிபுரத்தில் உள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான் முளைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த காளானை நேற்று விவசாயி அறுவடை செய்துள்ளார்.

பாரதிபுரம்பகுதியில் உள்ள மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின் வீட்டிலேயே குறித்த மழைக்காளான் முளைத்துள்ளது.

குறித்த காளானை உணவுக்காக பயன்படுத்துவதாகவும், நேற்றைய தினம் அதனைபிடுங்கும் போது 3.5 கிலோ எடையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதில் ஓர்வகை பூச்சி தாக்கம் உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தாது பார்வைக்காக கடையில் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் வான் மோதி விபத்திற்குள்ளானதில் நபரொருவர் இன்று படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா முதலாம் குறுக்குத்தெருவால் பயணித்த மோட்டார் சைக்கிள் சூசைபிள்ளையார்குள வீதியால் நகரை நோக்கி பயணித்த வானுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குழந்தைக்கு தீ வைத்துவிட்டு 20 வயது பெண் எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் கணவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக 20 வயது இளம் பெண் ஒருவர் உ யி ரை மா ய்த்துக் கொண்டதுடன், தன்னுடன் சேர்ந்து நான்கு மாதம் கு ழந்தையும் கொ.லை செ ய் த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் மேல்முடிமன்னார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கும்,

அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க குருதேவி என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இந்த தம்பதிக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, பொன்முருகன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட, குருதேவியின் பெற்றோரும் வெளியில் சென்றுவிட, வீட்டில் தனியாக இருந்த குருதேவி திடீரென கு ழந்தையின் மீதும் தன் மீதும் ம ண்ணெ ண்ணெயை ஊற்றி தீ யை வை த் து ப ற் ற வை த்துக் கொ ண்டார்.

உடம்பெல்லாம் தீ பரவி, கு ழந்தையும், குருதேவியும் அ ல றி ய ச த்தம் கேட்டு ஓடி வருவதற்குள் இரண்டு பேரும் தீ யி ல் க ரு கி இ ற ந் த நி லையில் கி டந்து ள்ளனர்.

இதைக் கண்டு அ திர்ச்சி யடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் உ டல்களை மீ ட் டு பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட வி சாரணையில், சம்பவ தினத்தன்று காலையில் பொன்முருகன் வேலைக்கு கிளம்பும்போது, மதிய சாப்பாட்டை சீக்கிரமா ரெடி பண்ணு என்று சொல்லியியுள்ளார். இதை அவர் சற்று வேறுவிதமாக கோ பத்துடன் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ம ன வே தனை அடைந்த அவர் கு ழந்தையுடன் உ யி ரை மா ய்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆன நிலையில், வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரம ஏழையான மீனவன் : கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்!!

தாய்லாந்தில்…

தாய்லாந்தில் ப ரம ஏ ழையான மீ னவர் ஒ ருவர் க டற்கரையில் ஒ துங்கிய தி மிங்கில வா ந் தியால் த ற்போது ஒ ரே நா ளில் கோ டீஸ்வரர் ஆ கியுள்ளார். அ ந்த மீ னவருக்கு கி டைத்திருப்பது, உ லகில் இ துவரை யா ருக்கும் கி டைத்திராத மி க அ திக எ டை கொ ண்டது எ ன கூ றப்படுகிறது.

தாய்லாந்தின் தென் பகுதியில் வசிப்பவர் 60 வயதான மீனவர் Naris Suwannasang. இவருக்கே தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு தி மிங்கல வா ந்தி கி டைத்துள்ளது.

அ ம்பெர்கிரிஸ் என அறியப்படும் இந்த பொ ருளானது மிதக்கும் தங்கம் என்றே பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏழை மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தனது கு டியிரு ப்புக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நடக்க சென்றுள்ளார்.

அப்போது ஒரு பகுதியில் பா றை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது. ஒரு ச ந் தே க த் தி ன் அ டிப்படையில், தனது உறவினரின் உதவியால், அந்த மொ த்த க ட்டிகளையும் அவர் சே கரித்து குடியிருப்பு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அது என்னவென்று தெரியாத அந்த மீனவர், சிலரிடம் வி சாரித் ததில், தமக்கு கிடைத்திருப்பது மி தக்கும் த ங்கம் என்பதை அறிந்து கொண்டார்.

சுமார் 100 கி லோ அளவுக்கு அந்த கட்டிகள் உள்ளன. தற்போது தொழிலதிபர் ஒருவர், அதன் த ரத்திற்கு தகுந்தாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலையாக தரலாம் என மீனவரிடம் கூறியுள்ளார்.

மாதம் 500 பவுண்டுகள் கூட ஈட்ட முடியாத ப ரம ஏ ழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப் போகிறது. இதனிடையே, தமக்கு கிடைத்துள்ள அ ம்பெர்கிரிஸ் க ட்டிகளின் த ர ம் தொடர்பில் நி புணர்கள் மூ லம் சோ தி க் க மீ னவர் நரிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அதன் மதிப்பு அதிகம் என்பதால் கொ.ள்.ளை ச ம் ப வ ம் நடக்க வாய்ப்பு இருப்பதால் பொ லிஸ் உ தவியையும் மீனவர் நரிஸ் நா டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை முழுவதும் கொரோனா பரவக்கூடிய பிரதேசமாக அறிவிப்பு : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை!!

கொரோனா..

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று பரவக்கூடிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மாத்திரமல்ல, எந்த பிரதேசத்தை சேர்ந்த மக்களாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 13 பொலிஸ் பிரிவுகள் மற்றும் வெல்லம்பிட்டிய, மட்டக்குளி, அட்டலுகம, அலவத்துகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பாகிட்டையே நாங்க போறோம் : தாய்-மகள்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வளர்ப்பு நாய்க்கு வி.ஷ.ம் வைத்து கொடுத்துவிட்டு, இரண்டு மகள்களுடன் தா ய் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டட ஒப்பந்தக்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு வளர்மதி(38) என்ற மனைவியும், அகிலா ((20) மற்றும் ப்ரீத்தி (17) என்று இரண்டு மகள்களும் உள்ளனர். இந் நிலையில், அருண்பாண்டியனுக்குத் தலையில் கட்டி இருந்ததால், அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதன் காரணமாக அகிலா தன் குழந்தைகளுடன் மதுரையில் இருக்கும் மலைச்சாமிபுரம் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அருண்பாண்டியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் கடந்த மாதம் சிகிச்சை பலனிளிக்காமல் உ யிரிழந்தார்.

இவர் உ யிரிழந்ததையடுத்து, அவரது மனைவி வளர்மதி, மகள்கள் அகிலா மற்றும் ப்ரீத்தி ஆகிய மூவரும் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டனர். அவர்கள் மட்டுமின்றி, வளர்த்து வந்த செல்ல நாயையும் விட்டு விட மனமில்லாமல் அதற்கும் வி ஷ ம் வைத்து கொ ன் று ள் ள ன ர்.

உ யி ரை மா ய்த்துக் கொள்வதற்கு முன்பு அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எங்க அப்பாவ விட்டுட்டு எங்களாள இருக்க முடியல. நாங்கள் அப்பாகிட்ட போறோம்.

அருண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் எங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூடாது. அருண் சம்பாதித்த சொத்தை உரிமை கொண்டாட அருண் குடும்பத்து உரிமை இல்லை.

யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தங்களிடம் உள்ள நகை மற்றும் பணங்களை குறிப்பிட்டு வீட்டில் வைத்துவிட்டு இம் முடிவை எடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த ஒத்தக்கடை காவல்துறையினர் உ டல்களை மீ ட் டு வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான ஓராண்டிற்குள் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!

தமிழகத்தில்…

தமிழகத்தில் கணவனுடன் வசித்து வந்த மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தூ க் கி ட் டு உயிரை மா ய் த் து க் கொ ண்ட சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஹரிஸ்குமார்(30) என்பவர் சென்னை, அடையாறு ராஜாஜி பவனிலுள்ள மத்திய உளவுத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றிவருகிறார்.

இவருக்கும், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிகிதா(23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் பணி நிமித்தம் காரணமாக, சென்னை பெசன்ட் நகர், பஜனைக் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 25-ஆம் திகதி நிகிதா வீட்டின் படுக்கையறையில் ச டலமாக மீ ட் க ப் ப ட் டா ர். இது குறித்து தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உ ட லை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, நிகிதா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சி க்கியது. அதில், இதற்கு மேல் தன்னால் வாழ முடியாது என்றும், தனது ம ரணத்திற்கு யாரும் காரணமில்லை என குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் பொலிசார் இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட வி சாரணையில் பல தி டுக்கி டும் தகவல்கள் வெளியாகின அதில், நிகிதாவின் குடும்பத்தினர் வரதட்சணைக் கொ டு மை, மதமாற்றம் போன்றவை தான் காரணம் என்று கூறியுள்ளனர்.

மேலும், நிகிதாவின் கணவர் ஹரிஸ்குமார், மாமியார் ரமணி ஆகியோரிடம் விசாரித்த போது, நிகிதாவுக்கு திருமணத்தின்போது லட்சக்கணக்கில் வரதட்சணையாகப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நகைகளும் சீர்வரிசைப் பொருள்களும் நிகிதாவின் குடும்பத்தினர் கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகும் நிகிதாவிடம் ஹரிஸ்குமார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வி சாரணை நடத்தி வருவதாகவும், திருமணமாகி ஒராண்டே ஆவதால் ஆர்டிஓ வி சாரணை நடந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கணவன் மீது மனைவிக்கு வந்த சந்தேகம் : நடுத்தெருவுக்கு கொண்டு வந்த விபரீத விளையாட்டு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதல் கணவனை நம்பி வந்த மனைவி நடுத்தெருவுக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தகாட்டூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி.

இவரை மணிகண்டன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எ திர்ப்பு தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

திருமணம் ஆன சில மாதங்களிலே தமிழ்ச்செல்வியின் பெற்றோர் சமாதானம் அடைந்ததால், மணிகண்டன் மாமியார் வீட்டில் இருந்து சுமார் 30 சவரன் நகை வரதட்சனையாக பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு மணிகண்டன் எந்த ஒரு வேலைக்கு செல்லாமலும், வீட்டில் இருந்து வந்ததால், ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக இருந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டன், தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு செல்லும் போதெல்லாம் மாமனாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போயுள்ளது. இதனால் கணவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் த கராறு ஏற்பட்டுள்ளது.

கணவன் மீதான ச ந்தேகம் அதிகரிக்கவே, தனது நகைகளை எடுத்து பார்த்த போது அசல் நகைகளுக்கு பதில் அனைத்தும் கவரிங் நகைகளாக இருப்பதை கண்டு அ திர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக, கடந்த 2019-ஆம் ஆண்டு காதல் கணவனை பிரிந்த தமிழ்ச்செல்வி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையின் போது காதல் கணவன் மணிகண்டன், ஆன்லைன் ரம்மியில் தான் விட்ட பணத்தை பிடிப்பதற்காக தனது மனைவியின் நகைகளை விற்று விளையாடியதாகவும் அந்த பணத்தை பறிகொடுத்ததால், போ லி நகைகளை மாற்றி வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

அப்போது பொலிசாரிடம், மணிகண்டன் பணம் நகையை 6 மாதத்தில் திருப்பி தருவதாக எழுதி கொடுத்துள்ளார். ஆனால் நாட்கள் சென்றதே தவிர நகைகள், பணம் வந்த பாடில்லை, அதுமட்டுமின்றி மணிகண்டன் த லைம றைவானதால், மணிகண்டனின் வீட்டிற்கு முன்னால் தெருவில் அமர்ந்து தர்ணாப் போ ராட்டத்தில் தமிழ்ச் செல்வி ஈடுபட்டு வருகிறார்.

நிவர் புயலால் கடற்கரையில் தங்கம் குவிந்ததா? உண்மையில் நடந்தது என்ன?

நிவர் புயலால்..

நிவர் புயலால் தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பல பொதுமக்களும் விவசாயிகளும் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் தண்ணீர் சூழ்ந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் அவதிப்பட்ட அதே நேரத்தில்,

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பலர் வங்க கடலில் இருந்து தங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆம், நிவர் புயல் கரையை கடந்த பிறகு, ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தை ஆவலோடு தேடி வருகின்றனர்.

குறிப்பாக, காக்கிநாடாவுக்கும், உப்படா கிராமத்துக்கும் இடைப்பட்ட சில பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஏற்கனவே தங்கத்தைக் கண்டெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்த செய்தி மற்ற பகுதிகளுக்கு பரவவே நூற்றுக்கும் அதிகமான மக்கள் உப்படா கிராமத்துக்கு விரைந்து தங்களுக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா என்பதை பரிசோதிக்க தொடங்கினர்.

இது தொடர்பாக பிபிசி தெலுங்கு மொழி சேவையிடம் பேசிய சூர்யராவ் பேட் என்ற பகுதியை சேர்ந்த அஞ்சம்மா என்ற பெண், “கடந்த ஆண்டு கூட எங்களுக்கு இந்தப் பகுதியில் சில சிறிய தங்க மணிகள் கிடைத்தன” என்று கூறினார்.”அதற்காகத்தான் நாங்கள் இங்கு மீண்டும் வந்துள்ளோம்.

ஆனால், இந்த முறை இரண்டு நாட்கள் தேடியும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், நான் வசிக்கும் பகுதியை சேர்ந்த சிலருக்குத் தங்கம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர்.

ஆனால், எவ்வளவு என்று எனக்கு தெரியாது,” என்று அவர் மேலும் கூறினார்.பிபிசியிடம் பேசிய காக்கிநாடாவை சேர்ந்த லக்ஷ்மண் என்பவரும் இதே கருத்தை கூறுகிறார். “பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் உப்படா கிராமத்தை ஒட்டிய வசிப்பிடங்கள் புயல்களினால் பாதிக்கப்படுகின்றன.

கடல் முன்னோக்கி வருவதால் வீடுகள் உள்ளிட்டவையும் சேதத்துக்கு உள்ளாகின்றன. அதேபோன்று வெள்ளத்தின் போதுகூட பல வீடுகளும், பொருட்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன.

எனவே, அவை கரையொதுங்கும்போது மதிப்புமிக்க பொருட்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பதை மக்கள் நோக்குகின்றனர்,” என்று அவர் கூறுகிறார். “சில தடவை கடற்கரைக்கு குளிக்க வருபவர்கள் தங்களது மோதிரம், கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களை தவற விடுவதுண்டு.

எனவே, அதுபோன்ற ஆபரணங்கள் கரையொதுங்கும் வாய்ப்புள்ளதால் மக்கள் தொடர்ந்து அவற்றைத் தேடி வருகின்றனர்,” என்கிறார் அவர். இதுவரை ஆந்திர பிரதேசத்தின் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை நேரில் பார்வையிடவில்லை என்பதால் மக்களின் தேடுதல் வேட்டை தடையின்றித் தொடர்கிறது.

இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள உள்ளூர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் லோவு ராஜு, “வீடுகள் மற்றும் கோயில்களுக்கு அடிக்கல் நாட்டும்போது சிறிய தங்க மணிகள் அல்லது துகள்களைப் புதைப்பது இந்தப் பகுதிகளில் வழக்கம்.

கடல் அரிப்பின் காரணமாக இங்குள்ள பழைய கட்டடங்கள் அவ்வப்போது இடிந்து விழுவதால், தங்கத் துகள்களும் குப்பைகளுடன் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.

நிவர் சூறாவளி கடலோரப் பகுதியை மாற்றியமைத்துள்ளது. எனவே, இந்த காரணமாக சில தங்கத் துகள்கள் கடல் படுகையிலிருந்து கடற்கரையில் ஒதுங்கியிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

– BBC – Tamil

கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றது!!

கிழக்கில்..

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறாது : கல்வி அமைச்சர்!!

சாதாரண தர பரீட்சை..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்றைய தினம் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பரீட்சைக்கான புதிய திகதி 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தினத்தில் பரீட்சையை நடத்துவதா அல்லது இன்னும் பிற்போடுவதா என்பது குறித்த இறுதி தீர்மானத்தை 2 நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்ப்பதாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே கல்வி அமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்..

கொரோனா பரவலையடுத்து நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்கள் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

குறித்த திணைக்களங்களில் தற்பொழுது முன்கூட்டிய பதிவு சேவைகள் மாத்திரமே இடம்பெறுகின்றன. இதற்கமைய குறித்த திணைக்களம் முன்கூட்டிய பதிவு சேவைகளை பெற்றுக்கொள்பவர்களின் நன்மை கருதி புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

0112 677877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.