வவுனியாவில் கிராம அலுவலர் பிரிவுகளில் இரவு வேளையிலும் உத்தியோகத்தர்கள் கடமையில்!!

புரவி புயல் தா க்கமானது இன்று(02.12.2020) இரவு வவுனியாவைத் தா.க்.கு.ம் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் பா திப்பு ஏற்பட்டால் அவசர உதவிகள் மற்றும் அ னர்த்த பா துகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வவுனியாவின் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் அலுவலர்கள் இரவு வேளையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் கிராம அலுவலர் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரில் ஒருவரை கிராம அலுவலர் அலுவலகம் அல்லது அதற்கு அண்மித்த இடத்தில் தங்கி இருக்குமாறும் பிரதேச செயலாளரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு 2 மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை அங்குள்ள நிலமை தொடர்பில் அறியத் தருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, வவுனியா வடக்கு, செட்டிகுளம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை 6 மணி தொடக்கம் காலை 6 மணி வரை அவர்கள் ஒவ்வொரு கிராம அலுவலர் பகுதியிலும் தங்கியிருப்பார்கள்.

புயல் காரணமாக மக்களுக்கு ஏதாவது அ னர்த்தம் அல்லது பா திப்பு ஏற்படுமாக இருந்தால் உடனடியாக அவர்களை தொடர்பு கொள்ளுமாறும், தேவையான உதவிகளை வழங்க பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகம் என்பன தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் முறிந்து வீழ்ந்த மரங்கள்!!

முறிந்து வீழ்ந்த மரங்கள்…

புரவி சூறாவளியின் தாக்கம் காரணமாக வவுனியாவில் இருவேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. வடக்கு கிழக்கில் புரவி சூறாவளியின் தாக்கம் ஏற்படும் என்ற நிலையில் வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் ஆலயம் ஒன்று சேதமாகியுள்ளது.

இன்று(02.12.2020) பிற்பகல் வீசிய கடும் காற்று காரணமாக ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று ஆலயத்தின் மீது முறிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஆலயம் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இதேவேளை வவுனியா புதுக்குளம் பகுதியில் வேம்பமரம் ஒன்று மின்சார கம்பத்தின் மீது முறிந்து வீழ்ந்தமையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன்,

போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து விரைவாக செயற்பட்ட கிராமவாசிகள் மரத்தினை வெட்டி அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூடா ந ட்பு கே டாய் மு டிந்த ப ய ங் க ரம் : ந ண்பனை கொ ன் று ச டலத்துடன் த ங்கிய இ ளைஞன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ந ண்பனுடன் ஒ ரே அ றையில் த ங்கியிருந்த மூ ன்று ந ண்ப ர்களை த லையில் க ல் லை ப் போ ட் டு கொ.லை செ ய் த இ ளைஞனின் செ யல் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தி யுள்ளது. திருப்பூர் கா லேஜ் ரோ ட்டிலுள்ள கு டியிருப்பில் ப னியன் நி றுவன தொ ழிலாளிகள் இ ருவர் ஓ ரே அ றையில் வா டகைக்கு கு டியிருந்து வ ந்த னர்.

இ ந் நி லையி ல் ந வம்பர் மு த ல் வா ர ம், அ வர்கள் த ங்கியிருந்த அ.றை.யி.லி.ரு.ந்.து து.ர்.நா.ற்.ற.ம் வீ.சி.ய.தா.ல், அ ரு கி ல் இ ரு ந் த வ ர் க ள் இ.து கு றி த் து பொ லி சா ரு க் கு தெ ரி வி த் து ள் ள ன ர்.

இதையடுத்து அப்பகுதிக்கு வி ரைந்து வந்து பொலிசார் ஆ ய்வு செய்த போது, அங்கிருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதன் உள்ளே அ ழுகிய நிலையில் ஆ ண் ஒ ருவரின் ச டலம் இருப்பதைக் கண்டு க டும் அ திர்ச்சிய டைந்தனர்.

அ த ன் பி ன் இ ற ந் து கி ட ந் த ந ப ர் யா ர் எ ன்று ந டத்தப்ப ட்ட வி சார ணையில், அ வ ர் தூத்துக்குடியைச் சே ர்ந்த இசக்கிமுத்து எ ன்பதும், அ வருடன் த ங்கிருந்த மதுரையை சே ர்ந்த சங்கர் எ ன்பவர் மா ய மா கி இ ருப்பதும் தெ ரியவ ந்தது.

சங்கரின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து, அவரிடம் கடைசியாகப் பேசிய நபரிடம் பொலிசார் வி சாரித்த போது, ஒரு வழக்கு தொடர்பாக அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் சங்கர் இருந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இ த னை தொ ட ர் ந் து அ னு ப் ப ர் பா ளை ய ம் பொ லி சா ரி ட ம் கே ட் ட போ து, ம ற் றொ ரு கொ.லை வ.ழ.க்.கி.ல், சங்கரை கை.து செ.ய்.து கோ வை சி.றை.யி.ல் அ.டை.த்.து.ள்.ள.தா.க தெ ரி வி த் த ன ர்.

இ தை ய டு த் து சங்கரை கா வ லி ல் எ டு த் து வி சா ரி க் க அ னு ம தி க் க கோ ரி திருப்பூர் நீ தி ம ன் ற த் தி ல் பொ லி சா ர் ம னு தா க் க ல் செ ய் த ன ர். சங்கரை ஒ ரு நா ள் ம ட் டு ம் கா வ லி ல் எ டு த் து வி சா ரி க் க நீ தி ம ன் ற ம் அ னு ம தி அ ளி த் த து.

அ த ன் பி ன் அ வனிடம் ந டத்தப்பட வி சாரணையில், க டந்த 2018-ல் கங்காநகர் ப குதியில் உ ட ன் த ங்கியிருந்த ந ண்பருடன் ஏ ற்பட்ட த க ரா றி ல் அ வரது த லை யி ல் க ல் லை ப் போ ட் டு கொ.லை செ ய் த தா க கூ றியுள்ளான்.

அ.ந்.த வ.ழ.க்.கி.ல் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.ட பி.ன், 90 நா.ட்.க.ளு.க்.கு பி.ற.கு ஜா.மீ.னி.ல் வ.ந்.த நி.லை.யி.ல், இசக்கிமுத்துவுடன் ந.ட்.பை ஏ.ற்.ப.டு.த்.தி.க் கொ.ண்.டு ஒ.ரே அ.றை.யி.ல் த.ங்.கி.யி.ரு.ந்.த.தா.க.வு.ம், ச.ம்.ப.வ.த்.த.ன்.று இசக்கிமுத்துவுடன் ஏ.ற்.ப.ட்.ட வா.க்.கு.வா.த.த்.தி.ல் அ.வ.ரை கொ.லை செ.ய்.து அ.ந்.த ச.ட.ல.த்.து.ட.ன் ஒ.ரு வா.ர.ம் அ.தே அ.றை.யி.ல் த.ங்.கி.ய.தா.க கூ.றி.யு.ள்.ளா.ன்.

இ ந்த கொ.லை.க்.கு பி ன், வெங்கமேட்டிலுள்ள த ன து ந ண்பர் இளம்பரிதியுடன் ஒ ரே அ றையில் த ங்கியு ள்ளான். அ ங்கு இளம்பரிதிக்கும் அ வரது ந ண்பர் பாக்கியம் அன்பரசு எ ன்பவருக்கும் போ தை யி ல் ஏ ற் ப ட் ட வா க் குவா த த் தி ல் பாக்கியம் அன்பரசுவை கொ.லை செ ய் து ள் ளா ர்.

இ ந்த கொ.லை வ ழ க் கு தொ டர்பாக கூ ட்டாளி இளம்பரிதியுடன் கை தா கி ய சங்கர் ந வம்பர் 12-ஆ ம் தி க தி சி றை யி ல் அ டைக் கப்பட்டு ள்ளார். போ தை யி ல் மூ ன் று பே ரை யு ம் ஒ ரே பா ணியில் கொ.லை செ ய் த தை ஒ ப் பு க் கொ ண் ட தா ல்,

இசக்கிமுத்து கொ.லை வ.ழ.க்.கி ல் சங்கரை 3 வ து மு றை யா க கை.து செ ய் து நீ தி ம ன் ற த் தி ல் ஆ.ஜ.ர் ப டு த் தி சி.றை.யி.ல் அ.டை த் து ள் ள ன ர். ந ண் ப ர் க ளு ட ன் ஒ ன் றா க த.ங்.கி கு.டி.ப்.ப.து.ம் போ.தை.யி.ல் ந ண் ப ர் க ள் இ டை யே த.க.ரா.று ஏ ற் ப ட் டா ல்,

சை.க்.கோ போ ல கொ.லை செ.ய்.வ.தை.யு.ம் சங்கர் வ ழக்கமாக கொ ண்டுள்ளான். இ த ன் மூ ல ம் கூ டா ந ட்பு கே டாய் மு டிவதற்கு இ து சா ன்றாகியு ள்ளது எ ன்று பொ லிசார் கூ றியுள்ளனர்.

யானை முடியைக் கொண்ட நகைகளை விற்பனை செய்த தமிழனுக்கு கிடைத்த தண்டனை!!

லண்டனில் யானை முடியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Down Lane, Isle of Wight பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ராஜ்தரன் மகாலிங்கம் என்பவரே யானை முடியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்தமைக்காக தண்டனைக்குட்பட்டவராவார்.

வெம்பிளியில் உள்ள ஈலிங் வீதியில் அமைந்துள்ள ரதி ஜூவலறி கடையை நடத்தி வந்த ராஜ்தரன் மகாலிங்கம், கடையில் யானை முடியை வைத்து செய்யப்பட்ட நகை என்று கூறி சில நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு இணையம், சமூக ஊடகங்களில் தன்னிடம் யானை முடியால் செய்யப்பட்ட அதிர்ஷ்ட நகைகள் உள்ளன என்று விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரம் மெட் போலீசின் வனவிலங்குகள் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்ணில் பட்டது.

இதைத் தொடர்ந்து அவரது கடையில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது யானை முடியில் செய்யப்பட்டதாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நகைகளில் சிலவற்றை போலீசார் கைப்பற்றினர்.

அந்த யானை முடிகளை மரபியல் பரிசோதனைக்கு அனுப்பி, எந்த விலங்கின் முடி என்பதை ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்த முடிகள் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளின் முடி என்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு அவருடைய கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த யானை முடியால் செய்யப்பட்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவை யானை முடியால் செய்யப்பட்டதுதான் என்பதை ராஜ்தரன் மகாலிங்கம் ஒப்புக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நம்பர் 19ம் திகதி மகாலிங்கம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24ம் திகதி குற்றம் உறுதியானதாக அறிவிக்கப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதற்கமைய அவருக்கு 32 வாரம் சிறை தண்டனை, மற்றும் 16 மாதங்கள் சஸ்பென்ஷன் அத்தோடு யானை முடியால் செய்யப்பட்ட அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்படும்.

200 மணி நேரத்துக்கு சம்பளம் இல்லா வேலை வழங்கப்படும். 200 பவுண்ட் அபராதம் மற்றும் வழக்குச் செலவு 1500 பவுண்ட் சார்ஜ் 140 பவுண்ட் செலுத்த வேண்டும் என்று ஹரோ கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஆபத்தான விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய, வைத்திருக்கக் கட்டுப்பாடுகள் உள்ளன. இது பற்றி தெரியாத காரணத்தால் ராஜ்தரன் மகாலிங்கம் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளார்.

க ணவனை இ ழந்த பெண்ணுடன் காதல் : பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம் : இ ளைஞனுக்கு நே ர்ந்த கதி!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் க ணவனை இ ழந்த பெ ண் ஒ ருவர் இ ளைஞனுடன் நெ ருங்கி ப ழகி வ ந்த நி லையில், அ வருக்கு தி ருமணம் ஆ ன செ ய்தி அ றிந்து கூ லி ப் ப டை ஏ வி கொ.லை செ ய் ய மு ய ற் சி த் து ள் ள ச ம்பவம் பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்படுத்தியு ள்ளது.

கள்ளக்குறிச்சி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பணியாற்றி வந்த போது, அங்கு நஜுரா பானு என்ற பெண்ணுடன் ப ழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவனை இழந்த நஜூரா பானுவுக்கு இரண்டு கு ழந்தைகள் உள்ளனர். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெ ருங்கி ப ழகும் ஆகியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் ரியாஸ் அகமதுவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரியாஸ் அகமது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த தகவலை எப்படியோ அறிந்த நஜுரா பானு, க டு ம் ஆ த் தி ர த் தி ல் ரியாஸ் அகமதுவை தொடர்பு கொண்டு உ ன்னை தீ ர்த்து க ட்டி விடு கிறேன் பார் என்று மி ர ட் டி யு ள் ளா ர்.

இதனால், திருமணம் முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த ரியாஸ் அகமது, சில வாரங்களுக்கு பின் தெருவில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட்டுடன் இருந்த ஆறு பேர் கொண்ட கு ம்பல், ரியாஸ் அகமது வந்தவுடன், தாங்கள் ம றைத்து வை த்திருந்த அ ரி வா ளா ல் க ண் மூ டித் த ன மா க வெ ட் டி ன ர்.

இதை சற்றும் எ திர்பார்க்காத ரியாஸ் அ ல றி து டி க் க, இந்த ச த்தத்தைக் கேட்டு ஓ டி வ ந்த அக்கம்பக்கத்தினரைக் க ண்டு கொ லை யா ளி க ள் இரு சக்கர வாகனத்தில் அ ரி வா ளை கா ட் டி மி ர ட் டி ய ப டி யே ஓ டி வி ட் ட ன ர்.

இந்த ச ம்பவம் தொடர்பாக வ ழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், த ப்பிச் செ ன்ற ந பர்களையும், சென்னையில் இருக்கும் நஜூரா பானுவைத் தே டி வ ருகின்றனர்.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

பத்மநாதன் அகவிழி..

கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மா ண வி ஒ ருவர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளதாக தெ ரியவருகிறது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார். நேற்று பாடசாலைக்குச் சென்று விட்டு வந்த பின்னர் வீட்டில் வைத்து தா யி ன் சே லை யி ல் அ வ ர் தூ க் கி ட் டு கொ ண்டுள் ளதாக தெ ரிவிக்கப்ப டுகிறது.

பிரமந்தனாறு 71ஆம் வாய்க்காலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற மா ணவியே இ வ்வாறு வி பரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையை நெருங்கும் சூறாவளி : வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

சூறாவளி..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புரெவி சூறாவளி காற்று நாட்டை நெருங்கிக் கொண்டு வருவதனால்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் திறந்த வெளியிடங்களில் ஒன்று கூடவோ அல்லது வெளியே செல்லவோ வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

வவுனியாவில் அனர்த்தத்தின் போது மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முப்படையினரும் தயார் நிலையில்!!

முப்படையினரும் தயார் நிலையில்..

அனர்த்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் முப்படையினரும் தயாராக உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீட்டினையும், வீட்டு தளபாடங்களையும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பயனாளியிடம் கையளித்தார்.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள புயலுடன் கூடிய அனர்த்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி,

மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் உள்ளனர். அனர்த்தம் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று அவர்கள் மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுட தயாராகவுள்ளனர்.

அத்துடன் கொவிட் – 19 தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயுள்வேத வைத்தியர் ஒருவரால் கொவிட் 19 தெற்றுக்கு எதிரான மருந்து கணடுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும்,

அது தொடர்பில் ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறியுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே நாம் அதனை ஆய்வு செய்து வருகின்றோம். அதன் பின்னரே அது தொடர்பில் உறுதியாக தெரிவிக்க முடியும் எனக் கூறினார்.

குறித்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, வன்னிப் படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இருளுடன் கூடிய காலநிலையுடன் இடைவிடாத மழை!!

இடைவிடாத மழை..

வவுனியாவில் இருளுடன் கூடிய காலநிலை நிலவி வருவதுடன் நேற்று இரவு தொடக்கம் இடைவிடாத மழை பெய்த வண்ணமுள்ளது.

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் (02.12) நாளையும் (03.12) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது.

இதன் தாக்கமாக வவுனியாவில் பல இடங்களில் இருட்டுடன் கூடிய காலநிலை நிலவி வருவதுடன் இடைவிடாது மழையும் பெய்த வண்ணமுள்ளது.

நேற்று (01.12.2020) மாலை சிறிதளவிலான மழை வீழ்ச்சி காணப்பட்ட போதிலும் இன்று (02.12) அதிகாலை தொடக்கம் இடைவிடாது மழை காணப்படுகின்றது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் பல பகுதியில் இருளுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.

தொடர் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர் மழை காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் விபத்து : ஒருவர் காயம்!!

விபத்து..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரிக்குளம் ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் புகையிரத நிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் குருமன்காடு பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 68 வயது மதிக்கத்தக்க முதியவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

20 வருடங்களின் பின்னர் இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி!!

சூறாவளி..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளது. இதனால் நாடு முழுவதம் காற்று மற்றும் மழை ஏற்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

20 வருடங்களின் பின்னரே சூறாவளி ஒன்று இலங்கை ஊடாக பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக 2000ஆம் ஆண்டு சூறாவளி ஒன்று பயணித்துள்ளது.

ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 460 கிலோ மீற்ற தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இந்த தொகுதியான அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்த சூறாவளி மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவிற்கு இடையில் கிழக்கு கடற்கரை ஊடாக நாட்டிற்குள் நுழையவுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு, வட மத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 200 மில்லி மீற்றர் வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே 100 மில்லி மீற்றர் மழை பெய்ய கூடும். வடக்கு, வட வடமத்திய, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணத்திலும் இடைக்கிடையே 80 – 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா உட்பட வடக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டது!!

பாடசாலை..

சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர், பி.எம்.எஸ். சார்ள்ஸ் இன்று ஊடகங்களுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில்,

யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் வீதிப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 12 கொரோனா தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டு அவர்கள் தொற்று சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சுகாதார பிரிவினரின் முழுமையான முயற்சியினால் நெடுங்கேனி பகுதி சில நாட்கள் முடக்கப்பட்டு கொரோனா தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து சுகாதார பிரிவினர் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் இன்றையதினம் (02.12.2020) வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் என முதலாவது அறிக்கை உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து தற்போது மீண்டும் அந்த நபரிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீண்டும் நெடுங்கேணி பகுதி முடக்கப்படுமா என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது

வவுனியாவிற்கு நள்ளிரவு 90 – 100 கிலோமீற்றர் வேகத்தில் வருகை தரும் புயல் : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை..

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து மணிக்கு 90 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் புயல் இன்று (02.12.2020) நள்ளிரவு வவுனியாவை வந்தடையவுள்ளமையினால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து கடற்பரப்பில் 258 கிலோமீற்றர் தூரத்தில் ஓர் தாழ்வு நிலை உருவாகி தற்போது புயலாக மாற்றமடைந்து இன்று (02.12) பிற்பகல் 5.30 மணியளவில் திருகோணமலை – முல்லைத்தீவு ஊடாக ஆரம்பமாகி வவுனியா ஊடாக மன்னார் நோக்கி பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் வேகமானது மணிக்கு 90 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் தற்போது இது மணிக்கு 9 தொடக்கம் 10 கிலோமீற்றர் என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டு இன்று (02.12) பிற்பகல் 5.30 மணிக்கு பிற்பாடு இலங்கையினை அண்மித்து இன்றைய (02.12) நள்ளிரவு பகுதியில் வவுனியாவில் தாக்கங்களை ஏற்படுத்தி நாளை (03.12) அதிகாலை மன்னாரை சென்றடைய கூடும் என எதிர்வு கூறப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் கடல்சார் ஊழியர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென கேட்டுகொள்ளப்படுவதுடன் வவுனியா தொடக்கம் மன்னார் வரையிலான பகுதியில் இன்று (02.12) நள்ளிரவு தொடக்கம் நாளை (03.12) காலை வரையில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும்.

எனவே தகரக்கொ ட்டகைகளின் கூரைகள் தூக்கி விசப்படும் நிலமையும் காணப்படுகின்றது. எனவே மக்கள் அலட்சிய போக்காக செயற்படாமல் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம்!!

முகக் கவசம்…

உரிய முறையில் முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஏற்றுக் கொண்ட 18 பேருக்கு அபராதம் விதிக்குமாறு பண்டாரவளை நீதிமன்ற நீதவான் கீர்த்தி கும்புருஹேன உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரவளையில் மரக்கறி விற்பனைக்கு வந்த நபர்கள் உரிய சுகாதார முறையை பின்பற்றாத காரணத்திற்கமைய தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையில் மரக்கறி விற்பனையாளர்களுக்கு மத்தியில் கொரோனா பரவுவதனை தடுப்பதற்காக உரிய சுகாதார பாதுகாப்பு முறை முன்னெடுக்கப்படுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது இவ்வாறு முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா ஊடாக மன்னார் நோக்கி பயணிக்கும் சூறாவளி : மக்களுக்கு எச்சரிக்கை!!

மக்களுக்கு எச்சரிக்கை..

கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் நாளையும் (02,03) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது. இதன் தாக்கமாக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது.

மக்கள் மிகவும் அவதானமாக வீட்டில் இருத்தல் வேண்டும் அத்துடன் தற்காலிக வீடுகளில் உள்ளவர்களும், மரங்களுக்கு அருகில் வசிப்பவர்களும் மின்சார கம்பிக்கு அருகில் வசிப்பவர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் விவசாய நிலங்கள் நீர் வழிந்தோடும் வகையில் பாசன முறையில் இருத்தல் அவசியமாகும். அவசர தேவைகள் ஏற்படின் 1990 என்ற இலக்கத்தினை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.