இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா : ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!!

கொரோனா..

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட முழுமையான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாக கொரோனா தொற்றினை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் கொழும்பில் 402 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 10140 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தில் 188 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரையில் கம்பஹாவில் 6502 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக களுத்துறை மாவட்டத்தில் 106 பேரும் (98 பேர் அட்டலுகமவில்), கண்டியில் 27 பேரும், குருநாகலில் 24 பேரும், இரத்தினபுரியில் 52 பேரும், காலியில் 6 பேரும் கேகாலையில் 9 பேரும், நுவரெலியாவில் 18 பேரும், அம்பாறையில் 21 பேரும், கிளிநொச்சியில் 6 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதி செய்ய முடியாத 88 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் ஒரே நாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினமே பதிவாகியுள்ளனர். அதன் எண்ணிக்கை 878 ஆகும்.

வவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்கின்றன : 02 குளங்கள் உடைப்பு : மாவட்ட அரச அதிபர்!!

குளங்கள்..

வவுனியாவில் 60 குளங்கள் வான் பாய்வதுடன், 02 குளங்கள் உடைப்பு எடுத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார். மாவட்ட அனர்த்த நிலை தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் புயல் தாக்கம் காரணமாக பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இருப்பினும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச செயலகங்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கையாக சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக பாதிப்புக்களை குறைக்க கூடியதாக இருந்தது.

குறிப்பாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக 60 குளங்கள் வான் பாய்கின்றன. வவுனியா வடக்கில் இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. உடைப்பெடுத்த குளங்களை திருத்தி அமைக்கும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா வடக்கில் தாழ் நிலப்பகுதிகளில் இருந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை முற் கூட்டியே வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று தங்கவைக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

வவுனியா மாவட்ட இந்து, இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவர்களின் பிரார்த்தனைகளுடன் பாரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் மக்களுக்கு புயல் தாக்கத்திலிருந்து நலன் வேண்டி விசேட பிரார்த்தனை!!

விசேட பிரார்த்தனை..

புயல் தாக்கத்திற்கு மக்கள் முகம் கொடுத்துள்ள நிலையில் மக்களுக்கு நலன் வேண்டி விசேட பிரார்த்தனை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இன்று(03.12.2020) காலை இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் ஆலயத்தின் பிரதம குரு உமாசுதன் குருக்கள் தலைமையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

புயல் தாக்கத்தில் இருந்து மக்களைக் காத்து மக்களுக்கு நலன் வேண்டி விசேட தீபாராதனைகளும் இதன்போது இடம்பெற்றன.

இவ் விசேட பூஜை வழிபாட்டில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், கந்தசாமி ஆலய அறங்காவலர் சபையினர், தமிழ் விருட்சம் அமைப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அந்தமானுக்கு அருகில் உருவாகும் மற்றுமொரு காற்றழுத்த தாழமுக்கம்!!

காற்றழுத்த தாழமுக்கம்..

நிவர், புரெவி என காற்றழுத்த தாழமுக்கங்கள் புயலாக மாறிய நிலையில், நாளை தினம் அந்தமான்தீவுக்கு அருகில் மற்றுமொரு புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம் படிப்படியாக வலுவடைந்து கடந்த செவ்வாய் கிழமை இரவு புரெவி புயலாக மாறி வலுவடைந்தது.

இலங்கையில் மையம் கொண்டிருந்த புயல் நேற்றிரவு கரையை கடந்தது. இந்த நிலையில், புரெவி புயல் பலத்த காற்றுடன் தமிழகத்தின் பாம்பனை நெருங்கி வருவதுடன் இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில், நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் அகற்றப்படும் பழமை வாய்ந்த மரங்கள் : ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது!!

பழமை வாய்ந்த மரங்கள்…

வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதினால் ஏ9 வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

வங்களா விரிகுடாவில் உருவாகிய ‘புரெவி’ புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் காற்றுடன் கூடிய மழை நீடித்த வண்ணமுள்ளது.

இதன் காரணமாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பழமை வாய்ந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் (எஸ்.எல்.ரி) பாரவுயர்த்தி வாகனத்தின் உதவியுடன் மரங்களை அகற்றும் நடவடிக்கை இடம்பெற்றன.

இந்த நடவடிக்கை காரணமாக ஏ9 வீதியில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியிலிருந்து வவுனியா நீதிமன்ற வளாகம் வரையிலான பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் புயலுடன் கூடிய மழையால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்பு : 5 வீடுகள் பகுதியளவில் சேதம்!!

புயலுடன் கூடிய மழை..

வவுனியாவில் புயலுடன் கூடிய மழையால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடும் காற்றும் வீசியிருந்தது.

இதன் காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கூமாங்குளம் மற்றும் நொச்சிமோட்டை ஆகிய பகுதிகளில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அவுசதப்பிட்டிய கிராமத்தில் ஒரு வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இவ்வாறாக 05 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அத்துடன், வவுனியா வடக்கில் தற்காலிக வீடுகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகளில் வாழ்ந்த 69 குடும்பங்களைச் சேர்ந்த 216 பேர் பாதுகாப்பிற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் புரெவி புயலின் பின்னர் தற்போதைய நிலைமை!!

தற்போதைய நிலைமை ..

வங்களா விரிகுடாவில் உருவாகிய புரெவி புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த புயல் வவுனியாவின் ஒரு பகுதியில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நேற்று (02.12.2020) காலை முதல் வவுனியா மாவட்டத்தில் இடைவிடாது கனமழை பெய்து வந்ததுடன் நேற்றய தினம் (02.12) இரவு முதல் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகின்றது.

கடும் காற்று காரணமாக செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் அங்கு வசிக்கும் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன மழை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் 68 குடும்பங்களை சேர்ந்த 211 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.

இதேவேளை இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு முன்பாக நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு முறிந்து வீதியில் நின்றிருந்த மரங்களும் வேரோடு சாய்ந்து வீதியின் குறுக்காக விழுந்துள்ளன.

இதனால் குறித்த வீதிகளுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன் சிலமணி நேரங்களின் பின்னர் அது வழமைக்கு திரும்பியிருந்தது.

நேற்று காலையில் இருந்து பெய்து வரும் மழை காரணமாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன் வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் பல்வேறு தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன் விவசாய காணிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையான காலப்பகுதியில் வாகனசாரதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய பாதிப்புக்கள் தொடர்பாக பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்துவருகின்றனர்.

இதேவேளை புயல் இலங்கையின் கரையை கடந்திருந்தாலும் எதிர்வரும் இரண்டு தினங்களிற்கு மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்புடனும் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவை கடந்து சென்ற புரெவி புயல் : மேலும் இரு தினங்களுக்கு நீடிக்கும் காற்றுடன் கூடிய மழை!!

புரெவி புயல்..

புரெவி புயலின் தாக்கம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இரு தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி காணப்படும் என வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வங்களா விரிகுடாவில் மையம் கொண்ட புரெவி சூறாவளியானது குச்சவெளியூடாக இலங்கையினை கரை கடந்து தற்போது யாழ்ப்பாணத்தினை மையம் கொண்டு மன்னார் ஊடாக வெளியேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் வேகமானது மணிக்கு 60 – 80 கிலோமீற்றர் காணப்படலாம் குச்சவெளியூடாக யாழ்ப்பாணம் சென்றதினால் வவுனியா மாவட்டத்தில் தாக்கம் குறைவாகவே காணப்பட்டது. கடந்த 24 மணிநேரத்தில் 71.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி வவுனியாவில் பதிவாகியுள்ளதுடன்,

இந்த சூறாவளியின் தாக்கமானது வவுனியாவில் குறைந்தளவு காணப்பட்டாலும் நாளையதினம் (வெள்ளிக்கிழமை) மாலை வரையில் காற்றுடன் கூடிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு தினங்களுக்கு வவுனியாவில் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதனால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பாடுமாறும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தா.சதானந்தன் மேலும் தெரிவித்தார்.

புரெவி சூறாவளியினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படவில்லை : அவதானமாக இருக்கமாறு எச்சரிக்கை!!

புரெவி சூறாவளி..

புரெவி சூறாவளி இலங்கைக்குள் நுழைந்தமையினால் பாரிய ஆபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மரங்கள் உடைந்து விழுந்தமை போன்றவைகள் பல இடங்களில் பதிவாகியுள்ளதாக மாவட்ட முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் சூறாவளியுடன் வீசும் காற்று 70 – 80 கிலோ மீற்றர் வேகத்திலும், இடைக்கிடையே 90 கிலோ மீற்றர் வேகத்திலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.30 – 11.30 மணிக்கு இடையில் சூறாவளி இலங்கைக்குள் நுழைந்துள்ளது. அதற்கமைய முறையாக வடமேல் நோக்கி சூறாவளி பயணித்து மன்னார் நோக்கி இன்று காலை வரையில் பயணித்துள்ளதாக வளிமண்டலிவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

அந்த கட்டமைப்பு காரணமாக பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலான கரையோர பிரதேசங்களில் பயணிப்பதனால் கடல் அலைகள் வேகமாக எழும்பும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் கடலுக்கு அருகில் உள்ள கீழ் மட்ட கடல் பிரதேசங்கள் நீரில் மூழ்க கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் புயலில் வீழ்ந்த பாரிய மரத்துடன் பாராவூர்தி மோதுண்டு விபத்து : சாரதி படுகாயம்!!

புயலில் வீழ்ந்த மரம்..

வவுனியா கண்டி வீதி தபால் நிலையத்திற்கு முன்பாகவிருந்த பாரிய மரம் இன்று(03.12.2020) அதிகாலை மூன்று மணியளவில் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்துடன் வீதியில் வீழ்ந்து கிடந்த மரத்துடன் பாராவூர்தியும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

வவுனியாவில் நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக தபால் நிலையத்திற்கு முன்பாக காணப்பட்ட பழமைவாய்ந்த மரமொன்று வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்தது.

இந்நிலையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையை அவதானிக்காது வந்த பார ஊர்தியொன்று குறித்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் நகரசபை ஊழியர்கள் குறித்த மரம் வீழ்ந்துள்ள இடத்தினை பார்வையிட்டு அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட கொட்டகை மீது முறிந்து வீழ்ந்த மரம்!!

முறிந்து வீழ்ந்த மரம்..

புரெவி புயல் தாக்கத்தின் காரணமாக வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கொட்டகை சேதமடைந்துள்ளது.

போராட்ட கொட்டகை அமைந்துள்ள இடத்தில் இருந்த மரம் ஒன்றின் கிளை போராட்ட கொட்டகை மீது இன்று(03.12.2020) அதிகாலையில் முறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கொட்டகையின் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளதுள்ளது. அசாதாரண காலநிலை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் நேற்று இரவு குறித்த கொட்டகையில் தங்களது வீடுகளுக்கு சென்றிருந்தமையால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

வீழ்ந்த மரக் கிளைகளை அரச உத்தியோகத்தர்கள் அகற்றி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தைப் புரட்டிப் போட்ட புரெவி புயல் : மூவரைக் காணவில்லை : 1589 பேர் பாதிப்பு!!

புரெவி புயல்

வங்காள விரிகுடாவில் உருவான புரெவிப் புயல் இன்று பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத் தாண்டி முன்னேறி மன்னாரைக் கடந்து தமிழகத் திசையை நோக்கி நகர்ந்தது.

இந்தப் புயல் வடமாகாணங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 459 குடும்பங்களை சேர்ந்த 1589 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு வேலணை பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 141 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 167 குடும்பங்களைச் சேர்ந்த 523 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும், வேலணையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர் எனவும் , கல்லுண்டாய் பகுதியில் ஓர் இடைத்தங்கல் முகாமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விளையாடிய போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் : மீட்புப் பணிகள் தீவிரம்!!

4 வயது சிறுவன்..

உத்தரபிரதேசத்தில் 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தின் குல்பஹார் பகுதியை சேர்ந்தவர் Bhagirath Kushwaha, இவரது 4 வயது மகன் Dhanendra.

இவர்களுடைய வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த தந்தை Bhagirath Kushwahaயுடன் Dhanendra-வும் சென்றிருந்தார்.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

உடனடியாக Dhanendra தந்தை அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தற்போது வரை சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உ யிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

விஜயலட்சுமி..

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் மனைவி ஆறுமுகம்.

தம்பதிக்கு சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21) என்ற மகனும் இருந்தனர். இதில் விஜயலட்சுமிக்கு வருகிற 10-ந் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டியும், அவரது மனைவியும் எழுந்து கடைக்கு சென்று விட்டனர். பின்னர் சந்தன செல்வி எழுந்து சமையலறை அருகே வந்தார்.

அங்கு கூரையின் மேல் விட்டத்தில் தனது தங்கை விஜயலட்சுமி தூ க் கி ல் தொ ங் கி ய தை க ண் டு அ ல றி து டி த் தா ர். ச த்தம் கே ட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதனை அறிந்த பெற்றோரும் ப த றி க் கொ ண்டு ஓ டி வ ந்தனர். மகளின் உ ட லை பா ர்த்து க த றி அ ழுதனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து வி சாரணை நடத்தினார்.

வி சாரணையில், விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம் எனக்கு காது சரிவர கேட்காது, இந்த பி ரச்சனை இருப்பதால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். திருமண வேலைகள் நடந்து வந்த நிலையில் விஜயலட்சுமி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வவுனியா ஆசிகுளத்தில் 50 ஏக்கர் பயிற்செய்கை காணியை வனவளத்திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை!!

ஆசிகுளத்தில்…

வவுனியா ஆசிகுளம் பகுதியில் மக்களால் சேனைப் பயிற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 50 ஏக்கர் காணியை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது,

வவுனியா ஆசிகுளம் பிலவு வீதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் காணியினை சேனைப் பயிற்செய்கைக்காக 50 குடும்பங்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வரை அப்பகுதியில் நாம் சேனைப் பயிற் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், யுத்தம் தீவிரமடைந்தமையால் சிலர் அப் பகுதியில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் இருந்தனர்.

இதனையடுத்து குறித்த காணிகளை கைவிட்டிருந்த நாம் யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக துப்பரவு செய்து மீண்டும் சேனைப் பயிற்செய்கையில் ஈடுபட்டு வந்தோம்.

விவசாயத்தையே நம்பி வாழும் நாம் சேனைப் பயிற் செய்கை மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டே நமது நாளாந்த ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்தோம்.

சேனைப் பயிற் செய்கை முடிந்த பின்னர் மீண்டும் பற்றைகளாகும் குறித்த காணிகளை பயிற்செய்கைக் காலத்தில் மட்டும் நாம் பயன்படுத்தி வந்ததுடன், குறித்த பகுதிகளில் எமது பழைய கிணறுகளும் காணப்படுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த காணிகளுக்கான ஆவணம் கோரியும் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்து இருந்தோம்.

இந்நிலையில் இம்முறை சேனைப் பயிற்செய்கைக்காக காணிகளை துப்பரவு செய்து பயிற்செய்கைக்கு தயாரான போது வனவளத் திணைக்களத்தினர் குறித்த காணிகள் தமக்கு சொந்தமானவை என கூறி எம்மை அதில் இருந்து வெளியேற்றுவதுடன் குறித்த காணிகளில் காட்டு மரங்களையும் நாட்டி விட்டு சென்றுள்ளனர்.

அத்துடன் எமது காணிகள், தோட்டங்கள் என்பவற்றுக்கு பயன்படுத்தும் வீதிகள் என்பவற்றிலும் காட்டு மரங்களை நாட்டியுள்ளனர். எனவே குறித்த காணிகளை எமது வாழ்வாதாரத்திற்காக வழங்குமாறு நாம் அரசாங்கத்திடம் உருக்காமாக கோரிகின்றோம் எனத் தெரிவித்தனர்.

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம்!!

கொரோனா விழிப்புணர்வு..

வவுனியா பொலிஸாரினால் விசேட கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம் இன்று (02.12.2020) காலை 8.45 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியாவில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்ப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரில் மீட்டரான வாழ்க்கை சரியான நேரத்தில் மாஸ்க் ஒன்றை சரியாக அணிந்திட மீட்டராய் இருப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் செனவிரத்ன, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே,

பதில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க மற்றும் பொலிஸார், முச்சக்கரவண்டி சாரதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.