காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் : புதுப்பெண்ணை ப ழிவாங்க காதலி செய்த கொ டூர செ யல்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தனது காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆ த்திரத்தில் புதுப்பெண்ணின் தலைமுடியை வெ ட்டியெடுத்து அவர் கண்களில் கோந்தை ஊ ற்றிய இளம்பெண்ணின் செயல் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்தவர் கோபால் ராம். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால் ராமுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திடீரென திருமணம் நடந்தது.

இந்த விடயத்தை கேள்விப்பட்ட காதலி அ திர்ச்சிய டைந்து ப ழிவா ங்கும் நோக்கில் ராம் வீட்டுக்கு இரவு சென்றார். அப்போது அனைவரும் அசதியால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தூங்கி கொண்டிருந்த புதுப்பெண்ணின் தலைமுடியை ராமின் காதலி க த்தியால் வெ ட்டியெடு த்தார். பின்னரும் ஆ த்திரம் தீராமல் தன்னிடம் இருந்த கோந்து (Faviquik)-ஐ அவர் க ண்களுக்குள் ஊ ற்றினார்.

இதனால் வ லி தா ங்காமல் அ ல றி னா ர் பு துப்பெண். அவரின் ச த்தம் கேட்டு ப த றி ய ராம் மற்றும் குடும்பத்தார் அவரை ம ருத்துவமனைக்கு தூ க் கி செ ன்றனர்.

அங்கு புதுப்பெண்ணுக்கு தீ வி ர சி கிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையில் இந்த கொ டூ ர செ யலை செய்த ராமின் காதலியை பொலிசார் கை து செ ய்து வி சாரணை ந டத்தி வருகின்றனர்.

32 ஆண்டுகளாக நபர் ஒருவரை தேடி தேடி பழி வாங்கும் நல்ல பாம்பு : உ யிர் ப யத்தில் ஓடி ஒளிந்து தவிக்கும் பரிதாபம்!!

ஆந்திராவில்…

ஆந்திராவில் கடந்த 32 ஆண்டுகளில் 74 முறை நல்ல பா ம் பு ஒன்று ஒருவரை க டித்துள்ள ச ம்பவம் ஆ ச்சரியத்தையும், ஒருபக்கம் அ திர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவர் 5 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது முதல் முறையாக நல்ல பாம்பு க டித்துள்ளது.

அதன் பின் அ டுத்தடுத்த ஆண்டுகள் என தொடர்ந்து 32 ஆண்டுகளில் 72 முறை பா ம்பு இவரை காரணமே இன்றி க டித்து வருகிறதாம்.

பாம்பு தொ டர்ந்து அ டுத்தடுத்து க டிக்கிறது என்று இவர், சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கும் அந்த பாம்பு தேடி வந்து க டித்துள்ளது.

இந்த முறை அ மாவாசை தினத்தன்று பாம்பு அவர் வீட்டின் முன்னால் நின்றுள்ளது, இதைக் கண்டு அ திர்ந்து போன அவர் வீட்டின் உள்ளே ஓ டி சென்று ஒ ளிந்து கொ ண்டுள்ளார்.

பாம்பு எதற்காக இப்படி அவரை தே டி வந்து ப ழிவாங்குகிறது என்பது தெரியவில்லையாம், இது குறி த் து அவர் கூறுகையில், பாம்புகள் மீதான அ ச் ச த் தால் நான் வீட்டை விட்டு எ ங்குமே செல்வதில்லை .

விவசாயியான எனக்கு ஆண்டுதோறும் மருத்துவச் செலவாக 50 ஆயிரம் ரூபாயை செலவிட மிகவும் கடினமாக இ ருக்கிறது என்று வே தனையுடன் கூ றியுள்ளார்.

இது குறித்து பாம்பு பி டிக்கும் தொழில் செய்யும் ரகுராம் கூறுகையில் பாம்புகளுக்கு ஞாபகசக்தி என்பது கி டை யாது. அது எப்படி ஒ ரு வ ரை காரணமே இ ல்லாமல் தே டி வந்து க டிக்கும் என்று கேள்வி எ ழுப்பியுள்ளார்.

வவுனியா புதுக்குளத்தில் நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவன் : தேடும் பணிகள் தீவிரம்!!

பாடசாலை மாணவன்..

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.

அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறிவருகின்றது.

இதனை பார்வையிடுவதற்காக அதிகமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குறித்த நீர்தேக்கத்திற்கு தினமும் சென்ற வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்காக குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இன்றையதினம் (04.12.2020) மதியம் அங்கு சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டதுடன்இ பொலிசார் மற்றும் பிரதேசவாசிகளால் இளைஞரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் தணியன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நந்திக்கடலில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சடலமாக மீட்பு!!

நந்திக்கடலில்..

வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (03.12.2020) காலை 10.00 மணிக்குக் குறித்த வள்ளத்தை கரைக்குக்கொண்டு வருவதற்காகத் தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினர், இராணுவத்தினர், மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை காணாமல் போயிருந்த கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பெண்ணுக்கு அமெரிக்காவில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட அதியுயர் பதவி!!

ரோஹினி கொசோக்லு..

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ரோஹினி கொசோக்லு, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹரிஸ் தனது தலைமைப் பணியாளர், உள்நாட்டு கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய அனைத்து துறைக்கும் பெண்களை நியமித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல், ரோஹினி கொசோக்லு செனட் அலுவலகத்தில் கமலா ஹரிஸின் மூத்த ஆலோசகராகவும் பின்னர் தேர்தலின்போது மக்களுக்கான கமலா ஹரிஸ் என்ற பிரசாரப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்.

ஹாரிஸின் ஜனாதிபதி பிரசாரத்தின் தலைமை ஊழியராக, ரோஹினி கொசோக்லு 40 மில்லியன் டொலர் பட்ஜெட்டில் 300 மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கான விவாதம் தயாரித்தல், கொள்கை, தகவல் தொடர்பு மற்றும் செயற்பாடுகளை நிர்வகித்து மேற்பார்வையிட்டார்.

ரோஹினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

சட்டமன்ற சாதனைகளுக்காக ஏராளமான விருதுகளை பெற்றுள்ள ரோஹினி கொசோக்லு, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டத்தையும் ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டமன்ற விவகாரங்களில் முதுகலை பட்டபடிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தல்!!

ஒருவர் தனிமைப்படுத்தல்…

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதான அலுவலகம் இன்று(04.12.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற திணைக்களத்தின் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உயர் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கமநல அபிவிருத்தி திணைக்கள வவுனியா அலுவலகம் நகரசபையால் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

வவுனியாவில் மூன்று மணிநேரமாக ஒளிர்ந்து கொண்டிருந்த ரயில்வே சமிக்கைகள்!!

ரயில்வே சமிக்கைகள்..

வவுனியா – மன்னார் வீதியிலுள்ள ரயில்வே கடவையில் சமிக்கைகள் இன்று (04.12.2020) காலை 5.00 மணி தொடக்கம் காலை 8.00 மணி வரை சுமார் மூன்று மணிநேரமாக தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தமையினால் பொதுமக்கள் அச்சத்தினுடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

கோவிட் -19 தொற்று தாக்கம் காரணமாக வடபகுதிக்கான ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த கடவையிலுள்ள ரயில்வே கடவையின் சமிச்சை மாத்திரம் திடீர் திடீரென தன்னியக்கமாக இயங்குவதினால் பொதுமக்கள் அச்சத்தின் மத்தியிலேயே ரயில்வே கடவையினை கடந்து சென்றிருந்தனர்.

சிவப்பு சமிக்கை மாத்திரம் விட்டு விட்டு ஒளிர்வதினால் அப்பாதையூடாக பயணித்த வாகனங்கள் அனைத்தும் அவ்விடத்தில் நின்று நின்று சென்றதினையும் அவதானிக்ககூடியதாகவிருந்தது.

மழையுடான காலப்பகுதியில் குறித்த கடவையின் சமிக்கைகள் இவ்வாறு இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே திணைக்களத்தினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வார்களா?

வவுனியாவில் புயலால் பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை!!

புயலால்..

வவுனியா மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக பகுதியளவில் பாதிப்படைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் அனர்த்த நிலமைகள் தொடர்பில் இன்று கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டாம் திகதி இரவு புரெவி புயல் அனர்த்தத்தினால் வவுனியா மாவட்டத்தில் சிறு சிறு பாதிப்புக்கள் ஏற்பட்ட போதும் பெரியளவிலான பாதிப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.

புயல் காலப்பகுதியில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கியிருந்தோம். இதனால் பெரியளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

இருந்த போதிலும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 35 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு முதல் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் மழை காரணமாக 60 குளங்கள் வான் பாய்கின்றன. வவுனியா வடக்கு பகுதியில் இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

அதனை இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கும் நடவடிக்கைளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்வதால் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

வவுனியாவில் நிலவும் சிரற்ற காலநிலையினால் முறிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!

முறிந்து வீழ்ந்த மரம்…

வவுனியாவில் நிலவிவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பண்டாரிக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட உக்குளாங்குளம் பாண்டியன் வீதியில் நின்ற மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

முறிந்து வீழ்ந்த மரத்தினால் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன் சில மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனர்த்தம் காரணமாக முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றும் பணியில் அப்பகுதி கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் ஒருவருக்கு கொரோனோ தோற்று உறுதி!!

கொரோனோ..

வவுனியா கல்மடு பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா கல்மடு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பு கொட்டேனாவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் 14 நாட்கள் குறித்த இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 22ம் திகதி வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற இளைஞன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2ம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பரிசோதனை பிரகாரம் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து நேற்று இரவு கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் புயலின் காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிப்பு : 57 வீடுகள் பகுதியவில் சேதம்!!

புயலின் காரணமாக…

வவுனியா மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கம் மற்றும் மழை காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 57 வீடுகளும், 3 சிறு கைத்தொழிற்சாலை நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் புயல் காற்றின் தாக்கம் காரணமாகவே குறித்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வவுனியா பிரதேச செயலக பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 35 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 4 வீடுகளும், 3 சிறு கைத்தொழிற்சாலைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இங்கு பாதிக்கப்பட்டவர்களில் தாழ்நிலம் மற்றும் தற்காலிக வீடுகளில் வசித்த 81 குடும்பங்களைச் சேர்ந்த 244 பேர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பிற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தமையால் வவுனியாவில் 117 குளங்கள் வான் பாய்வதுடன், 4 குளங்கள் உடைப்பெடுப்பதை தடுக்கும் வகையில் நீரை வெளியேற்றுவதற்காக குளக்கட்டின் ஊடாக நீர் வெளியேற்றும் வகையில் வெட்டி விடப்பட்டுள்ளதாகவும்,

குளம் உடைபெடுத்தால் தடுக்கும் வகையில் மண் போட்டு நிரப்புவதற்காக 10 குளங்களுக்கு பைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ9 வீதி, சாஸ்திரிகூழாங்குளம், உக்கிளாங்குளம், கோதாண்டார் நொச்சிக்குளம், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னால் புயல் காரணமாக வீழ்ந்த மரத்துடன் பாரவூர்தி ஒன்று மோதியதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

காணாமல் ஆக்ப்பட்டோரின் உறவுகளின் போராட்ட கொட்டகையும் மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. கோதாண்டர் நொச்சிக் குளத்தில் ஆலயம் ஒன்றில் நின்ற புளியமரம் விழுந்ததில் ஆலயம் சேதமடைந்துள்ளது.

நெடுங்கேணி வைத்தியசாலையும் காற்று மற்றும் மழை காரணமாக பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன், மழையுடனான காலநிலை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கையும் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழப்பு!!

கொரோனா..

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் ஐந்து மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளது.

1. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான பெண் ஒருவர் கடந்த 28ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இருதய நோய் மற்றும் கொவிட் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

2. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இருதய நோய் மற்றும் கொவிட் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

3. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் பக்ரீரியாக தாக்கத்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.

4. கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

5. கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். சுவாசக்குழாய் செயலிழந்தமை மற்றும் கொவிட் காரணமாக ஏற்பட்ட நியூமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்து சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!!

விமான நிலையம்..

இலங்கையின் சுகாதாரத் தரப்பினரது ஆலோசனைக்கமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாத்துறைச் சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதாரத் தரப்பினருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பிரயாணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தற்போது 80 சுற்றுலாத்துறை பாதுகாப்பு மையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் ஒரு சில நாடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் விமான நிலையத்தைத் திறப்பதன் அவசியம் குறித்து ஆராயப்படுகிறது. வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுவாத்துறையை வெகுவிரைவில் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.

விமான நிலையத்தைத் திறத்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை மற்றும் அவை சார் நிறுவனங்கள் பல திட்டங்களை வகுத்துள்ளன.

இத்திட்டங்கள் சுகாதார தரப்பினரால் ஆராயப்படுகிறது. சுகாதார தரப்பினரது அனுமதியுடன் விரைவில் விமான நிலையம் திறக்கப்பட்டு சிவில் விமான சேவை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்படும் என்றார்.

-தமிழ்வின்-

தந்தை மற்றும் அக்கா கணவருடன் வெகுதூரம் பயணித்த இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

மனிஷாஸ்ரீ..

தமிழகத்தில் அக்கா கணவருடன் இரயிலில் பயணித்த இளம்பெண் கீழே விழுந்து உ யிரிழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்தவர் குருநாதன் (54). இவருடைய மகள் மனிஷாஸ்ரீ (23). இவர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதையடுத்து சென்னையில் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அக்காள் கணவர் அய்யனார் (34) மற்றும் தந்தை குருநாதன் ஆகியோருடன் சென்னை சென்றார்.

அங்கு கலந்தாய்வில் கலந்து கொண்டார். கலந்தாய்வில் அவருக்கு ஊரக மருத்துவ துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு இரயிலில் ஊருக்கு வந்தனர்.

இரயிலானது கோப்பையநாயக்கர்பட்டி அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷாஸ்ரீ படிக்கட்டு அருகே வந்து நின்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக இரயிலில் இருந்து விழுந்ததாக தெரிகிறது. இதையறியாமல் குருநாதனும், அய்யனாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். சங்கரன்கோவிலுக்கு இரயில் வந்தவுடன் இறங்கும் போது, மனிஷாஸ்ரீ அங்கு இல்லாததை கண்டு அ திர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவரை தேடினர். உடனே அவர்கள் இதுகுறித்து இரயில்வே பொலிசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பொலிசார் தண்டவாள பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது தண்டவாள பகுதியில் மனிஷாஸ்ரீ பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது பரிதாபமாக இருந்தது. மனிஷாஸ்ரீ சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்பு : 18 மணி நேர போராட்டம் வீண்!!

இந்தியாவில்..

இந்தியாவில் தந்தையின் கவனக்குறைவால் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பகிராத் குஷ்வஹா. இவர் மனைவி கிரந்தி தேவி. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒருவன் தான் தனேந்திரா (4). பகிராத் கடந்த ஜூலை மாதம் தனது வயலில் பாசனத்திற்காக போர்வெல் குழி தோண்டினார்.

ஆனால் அதில் தண்ணீர் வரவில்லை, இதையடுத்து ஆழ்துளையை சரியாக மூடாமல் ஒரு கல்லை வைத்து மூடியிருந்தார். இந்த நிலையில் அப்பகுதியில் குழந்தைகள் விளையாடிய போது அந்த கல்லை வெளியில் எடுத்துள்ளது.

இந்த சூழலில் தனேந்திரா அந்த பகுதியில் புதன்கிழமை விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

இதை உணர்ந்து கொண்ட சிறுவனின் தாய் தேவி கதறி அழுதார். சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து குழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது உள்ளிருந்த தனேந்திரா அழுதுள்ளான். பின்னர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு தனேந்திராவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குழியானது 30 அடி வரை இருக்கும் என தெரியவந்துள்ள நிலையில் அந்த ஓட்டை மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

மேலும் இரண்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தது. நேற்று இரவு முழுவதும் அவன் குடும்பத்தார் அழுதபடி அங்கேயே உட்கார்ந்திருந்தனர். அந்த இடத்தில் ஆறு ஜேசிபி வாகனங்கள் உள்ளன, அதன் மூலம் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டது.

இந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவன் வெளியில் எடுக்கப்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்னரே இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழிவினரின் 18 மணி நேர முயற்சி தோல்வியடைந்தது. அதாவது சிறுவனை வெளியில் எடுத்த பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு!!

சாதாரண தர பரீட்சை..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டால் 3 மாத காலப்பகுதியினுள் அப்படி என்றால் ஜுன் மாதம் வரையில் பரீட்சை முடிவுகள் வெளியிட பரீட்சை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மார்ச் மாதம் பரீட்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அதனை தொடர்ந்து பிற்போட அவசியமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜுலை மாதம் முதல் உயர் தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் எதிர்பார்ப்பில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2021 மார்ச் மாதத்தில் பரீட்சை நடத்துவதற்கு பொருத்தமான 9 நாட்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு, சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற உயர்தர பரீட்சை முடிவுகள் 4 மாதங்களுக்குள் வெளியிடப்படுவதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.