நாட்டில் கோவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமடையவும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் மக்கள் அனைவரும் கோவிட் – 19 தாக்கத்திலிருந்து விடுபட்டு சுமுகமுடன் வாழ பிராத்தனை செய்து 1500 தீபமேற்றப்பட்டது.
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் கார்த்திகைத் தீபத் திருநாளான இன்றையதினம் (29.11) மாலை தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன.
பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவரின் ஆடைத்தொழிற்சாலையாக காணப்படுகின்ற போதிலும் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் 80 வீதமானவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.
இதனையடுத்து ஆடைத்தொழிற்சாலையின் பொது முகாமையாளர் சமில கொலம்பகே அவர்களின் ஆலோசனைக்கமைய கார்த்திகை விளக்கிட்டை முன்னிட்டும் கோவிட் – 19 தாக்கத்திலிருந்து நாடு மீண்டுவர ஆசி வேண்டியும் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள நகரசபையின் கீழ் உள்ள முஸ்லிம் மக்களின் மயானத்திற்குள் மண் நிரவி காணியை அபகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நகரசபையினரிடம் எவ்விதமான அனுமதிகளும் பெற்றுக் கொள்ளாமல் குறித்த காணிக்கு மண் நிரப்பும் நடவடிக்கை நகரசபையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,
வவுனியா குருமன்காடு பகுதியிலுள்ள பட்டாணிச்சூர் முஸ்லிம் மக்களின் மயானத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி நகரசபையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது.
அண்மைய சில தினங்களாக அக்காணியில் மண் நிரவி காணி அபகரிக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது. இது குறித்து நகரசபை வருமானப் பகுதியினால் குறித்த மயானத்திற்கு மண் நிரவும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
நகரசபையின் கீழ் உள்ள மயானத்திற்குரிய காணிக்கு முன்னாள் அமைச்சரின் அனுமதியுடன் முப்பது வருடங்களுக்கு நீண்ட காலக்கு குத்தகைக்கு ஆவணம் பெற்றுக் கொள்ளப்பட்டமை தற்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நகரசபை வருமானப் பகுதியினரால் குறித்த காணிக்கு மண் நிரப்பும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு இது குறித்த விசாரணைகள் நகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
குருமன்காடு பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் மயானம் வவுனியா மன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ளது. தற்போது மன்னார் பிரதான வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் இவ் வேளையில் குறித்த மயானத்திற்குரிய ஒரு பகுதிக்கு மணி நிரவி காணி அபகரிக்கும். நடவடிக்கை நகரசபையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகரிலுள்ள குளத்திற்கு மண் நிரவும் பணிகள் இடம் பெற்றது. அந்நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாராவியில் லிப்டில் சி க் கி 4 வயது சி று வன் ப ரி தா ப மாக உ.யி ரிழ ந்தான். மு ம்பை தா ராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற 7 மாடி க ட் டி டம் உள்ளது.
இந்த க ட் டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இ வரது 4 வயது மகன் முகமது ஹூசைபா சேக். நேற்று மதியம் வி ளை யா டுவதற்காக கட்டிடத்தின் த ரை தளத்திற்கு தனது அக்காள் மற்றும் ப க் கத்து வீட்டு சி று வ னுடன் வந்தான்.
இவன் விளையாடி மு டி த் துவிட்டு மதியம் 12.45 மணியளவில் 4-வது மா டி க்கு லிப்டில் சென்றான். 4-வது மாடி வந்தவுடன் அக்காள் மற்றும் மற்றொரு சிறுவன் லிப்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர்.
ஆனால் சிறுவன் சேக் மட்டும் லிப்ட் உள்புறம், வெளிபுற க த வுகளுக்கு இடையே நின்று கொண்டு இருந்தான். இதில் சி று வன் லிப்ட் கதவை பூ ட் டிவி ட்டு வெளியே செ ல் வ தற்கு முன், வெளிப்புற க தவும் பூ ட் டி யது. இதனால் அவன் லிப்டின் 2 கதவுகளுக்கு இடையே மா ட் டி க்கொண்டான்.
இந்தநிலையில் கதவுகள் மூ ட ப் பட்டதால் லி ப் ட் மே ல் நோ க் கி செ ல் ல த் தொ ட ங்கியது. இதனால் க தவுகளுக்கு இடையே சி க் கியிருந்த சி று வ ன் லிப் டு க்கும், மாடி சு வ ரு க்கு இ டை யே ந சு ங் கினா ன்.
பின்னர் அவன் லிப்ட், சுவர் இடைவெளி வழியாக கீ ழே வி ழு ந்தான். இந்த நெ ஞ் சை ப த ற வை க் கும் கா ட் சி க ள் லி ப் டில் இருந்த க ண் கா ணிப்பு கே ம ரா வில் ப தி வா கி இ ரு ந் தது.
இ த ற் கிடையே வெளியே நின்ற சி று வ ர்களின் கூ ச் சல் ச த் தம் கேட்டு கு டி யி ரு ப்பு வா சி கள் ஓ டி வந் தனர். ஆனால் லிப்டில் சி க் கி ய சி று வ னை அ வ ர் களால் மீ ட் க மு டி யவி ல் லை.
இந்தநிலையில் த க வல் அ றி ந்து தீ ய ணைப் பு ப டையி னர், போ லீ சார் ச ம் பவ இ ட த்தி ற் கு வி ரை ந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நே ர ம் போ ரா டி சி று வ னை மீ ட் டன ர். ஆனால் அப்போது சி று வன் உ யி ரிழ ந் த து தொி ய வந் தது.
இதையடுத்து போ லீ சார் சி று வனி ன் உ ட லை மீ ட் டு பி ரே த ப ரி சோத னை க் கு அ னு ப்பி வைத்தனர். இந்த ச ம் பவ ம் கு றி த் து சாகுநகர் போ லீ சார் வ ழ க் குப் ப தி வு செ ய் து வி சா ரணை ந ட த்தி வ ரு கி ன்றனர்.
சி று வன் லிப்டில் சி க் கி ப.லி யான ச ம் பவ ம் தாராவி பகுதி மக்கள் இ டை யே பெ ரு ம் சோ க த்தை ஏ ற் படு த் தி உ ள்ளது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். இங்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடையில் ஒன்றாக நடித்த ஜோடி, இப்போது ரியல் ஜோடியாக கை பிடித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தை பெற்றனர். நண்பர்களான இருவரும் தங்களது குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளனர்.
இவர்களது நான்காவது வயதில் இருவரையும் ‘’ஒரு ராணுவ வீரரின் திருமணம்’’ என்னும் நாடகத்தில் கணவர், மனைவியாக நடிக்க வைத்துள்ளனர்.
பல ஆண்டுகள் சென்றது. ஸ்ரீராம் ராணுவ அதிகாரி பணிக்கு தேர்வெழுதி ராணுவ அ திகாரியும் ஆகிவிட்டார். ஆர்ய ஸ்ரீயும் மருத்துவம் படித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீராம் நாடகத்தில் நடித்த தங்கள் பழைய போட்டோவை தேடி எடுத்து, ஆர்ய ஸ்ரீயை தொடர்பு கொண்டு நாம் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுள்ளார்.
அவரும் சம்மதிக்க, இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஜோடி திருமணம் செய்துள்ளனர். இச் சம்பவம் அப் பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார். சித்தூரை சேர்ந்தவர் சைதன்யா.
இளம்பெண்ணான இவருக்கும் தங்கவேல் (29) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடந்தது. ஆனால் இந்த திருமணத்தில் சைதன்யாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது.
இதையடுத்து என்னை ஏன் க ட்டாயப்ப டுத்தி மணந்து கொண்டீர்கள் என கணவரிடம் சைதன்யா ச ண் டை போ ட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் வீட்டு கழிப்பறையில் சைதன்யா தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார். இந்த தகவலை கேட்ட அவர் குடும்பத்தார் கோபமடைந்து தங்கவேல் வீட்டை அ.டி.த்.து நொ று க் கி னா ர் க ள்.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் சே தப்படுத்தி னார்கள்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் இளம் தம்பதியினர் தொழிபதிபர்கள் என கூறி செய்து வந்த மோ சடி தற்போது அம்பலமாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், ராதிகா என்ற தம்பதியினர்,
பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நடத்துவதாக கூறி, தங்களுக்கு வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் வேண்டுமென்று, ஈரோட்டிலுள்ள மூன்று வங்கிகளிள் விண்ணப்பங்களை வழங்கி கடன் பெறறிருந்தனர்.
இதையடுத்து இந்த தம்பதியினர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை மற்று வட்டி கட்ட கால தாமதம் ஆகியதால், வங்கி நிர்வாகிகள் அவர்கள் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்துள்ளனர்.
ஆனால், அந்த முகவரியில் அவர்கள் இல்லை. பார்ப்பதற்கு தன்னை ஒரு அழகான ஒரு தொழிலதிபர் போன்று ராதிகா காட்டிக் கொண்டுள்ளார். அதே போன்று கார்த்திக்கும் நடந்து கொள்ள அதிகாரிகள் இதை நம்பியுள்ளனர்.
அந்த முகவரியில் அவர்க்ள் இல்லை என்றவுடன், வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் சோதனை செய்ததில் அதுவும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் கடும் அ திர்ச்சியடைந்த வங்கி நிர்வாகிகள் போலி ஆவணங்கள் மூலம் சாமர்த்தியமாக கடன்களைப் பெற்று வங்கிகளையே ஏமாற்றி த லைம றைவான தம்பதிகள் புகார் அளிக்க, கோயமுத்தூரில் த லை மறை வாக இருந்த இந்த தம்பதியை பொலிசார் கைது செய்தனர்.
இந்த தம்பதியினர் இதுவரை தொழிலதிபர்கள் என கூறி 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோ சடி செய்துள்ளனர். இதைத் தவிர் வேறு ஏதேனும் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்களா? என்ற கோணத்தில் பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு வந்த இளம்பெண் அங்கு தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
கேரளாவின் எர்ணாக்குளத்தை சேர்ந்தவர் சூர்யா (26). இளம்பெண்ணான இவர் சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் அசோக் வீட்டுக்கு வந்தார். அங்கு அசோக்கின் அறையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்.
அப்போது வீட்டில் அசோக், அவரின் பெற்றோர் மற்றும் இன்னொரு பெண் இருந்தனர். அவர்கள் அறையில் இருந்து வெளியில் சென்ற போது சூர்யா தூ க் கி ட் டு உயி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார்.
இந்த தகவலை அசோக்கின் பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் சூர்யா அங்கேயே இ றந்துவி ட்டதால் அவளை மருத்துவமனைக்கு தூ க் கி செல்லவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
சூர்யா இறந்த தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர், அப்போது படுக்கையில் சூர்யா ச டலமாக கி டக்க மின்விசிறியில் அவர் துப்பட்டா தொ ங் கி கொண்டிருந்ததை கண்டுள்ளனர்.
இது குறித்து அசோக் கூறுகையில், நானும் சூர்யாவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தோம், ஏறக்குறைய 4 ஆண்டுகளாக சூர்யாவுடன் நெருக்கமான நண்பராக இருந்தேன் என கூறியுள்ளார்.
அசோக்குக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக இந்துக்களால் இன்று (29.12.2020) கார்த்திகைத் தீப நிகழ்வு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவிலும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு வீடுகளிலும் ஆலயங்களிலும் வாழைக் குற்றி நாட்டிவைத்து அதன் மேல் தீபப்பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வழிபடுகின்ற நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகளும், விளக்கீட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது.
கார்த்திகை விளக்கீட்டின் தத்துவம் : படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
வவுனியா – மன்னார் வீதியிலுள்ள ரயில்வே கடவையில் சமிக்கைகள் திடீர் திடீரென இயங்குவதினால் பொதுமக்கள் அச்சத்தினுடனே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று தாக்கம் காரணமாக வடபகுதிக்கான ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த கடவையிலுள்ள ரயில்வே கடவையின் சமிக்கை மாத்திரம் திடீர் திடீரென தன்னியக்கமாக இயங்குவதினால் பொதுமக்கள் அச்சத்தின் மத்தியிலேயே ரயில்வே கடவையினை கடக்கின்றனர்.
ரயில்வே கடவையின் கதவு உயர்த்தியவாறு காணப்படுவதுடன் சிவப்பு சமிக்கை மாத்திரம் இயங்குகின்றன. எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய கடந்த வாரத்தில் 4.5 வீதம் வரை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1800 அமெரிக்க டொலர் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்டெம்பர் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு நிலையிலேயே காணப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் அவுன்ஸின் தங்கத்தின் விலை 2075 அமெரிக்க டொலர் வரை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தீபப் திருநாளான திருக்கார்த்திகை இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு வவுனியா நகர் பகுதியில் அகல் விளக்கு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று அக்னியாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத் திருநாளன்று,
விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் திருக்கார்த்திகை தீபப் திருநாள் இன்று ஞாயிற்றுக் கிழமை (29.11) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி பெண்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
குறிப்பாக வீட்டின் முன்புறம் மற்றும் மாடிப் பகுதிகளில் வரிசையாக அகல் விளக்குகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றுவார்கள்.
மேலும் வணிக நிறுவனங்கள், கோயில்களில் அதிகளவிலான விளக்குகள் ஏற்றப்படும். சிவன் ஆலயங்களில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெறும்.
தீப திருநாளையொட்டி வவுனியா உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் கடை வீதிகளில் அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வீதியோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் பலவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்கள் வீடுகளில் உயிரிழப்பதனை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வைத்தியர்கள் சிலரை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் உள்ள வைத்தியர்கள் சிலரை நடமாடும் வைத்திய குழுவாக பணியில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினார், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நாட்பட்ட நோய்கள் எதுவும் உள்ளதாக என ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தொடர்ந்து அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த பல நாட்களாக வீதியோரங்களில் (கதிரேசு வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ) காணப்படும் குப்பைகள் அகற்றப்படாமையினால் குப்பைகள் தேங்கிக் காணப்படுகின்றன.
நகரசபையினரினால் குப்பைகள் அகற்றும் பணிகள் தினசரி முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் வீதியோரங்களில் காணப்படும் குப்பைகள் நகரசபையினர் அகற்றுவதில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
பைகளில் மற்றும் குப்பைக்கூடைகளில் வைக்கப்படும் குப்பைகளை மாத்திரம் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் எடுத்துச் செல்லுகின்ற போதிலும் வீதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை நகரசபையினர் அகற்றுவதில்லை என்பதுடன்,
பல நாட்களாக வீதியோரங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதினால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை தவிசாளரை தொலைபேசியூடாக கேட்டபோது,
நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சிரமதான பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால் ஏனைய பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில் சிறு தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
மிக விரைவில் தேங்கி கிடக்கும் குப்பைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை -ஸ்ரக்ஸ்பி தோட்டப்பகுதியில் இளம் குடும்பஸ்தரொருவர் ஆற்றில் விழுந்து இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த நபர் சாமிமலை -ஸ்ரக்ஸ்பி தோட்டப்பகுதியினை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் குடும்பஸ்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சென்றுள்ள நிலையில், பல மணி நேரம் கழித்து அவர் வீடு திரும்பாமையினால் உறவினர்கள் தேடிய போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன்,சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 27 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்ட பரீட்சையை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒருவாரத்திற்குள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இவ்வாறு குறிப்பிடார்.
இதேவேளை, சாதாரண தர மாணவர்களுக்காக இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் தொடர்பில் கேட்டறிவதற்காக ஆசியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த வார இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், அனைத்து க.பொ.த சாதாரண தர ஆசிரியர்களும் info.moe.gov.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையம் மற்றும் வழமையான நடைமுறையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் தொடர்பில் வெவ்வேறாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்கூறிய இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்க முடியாத ஆசிரியர்கள், தமது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடசாலை – மாகாண மற்றும் வலயக் கல்வி பணிமனையின் தொடர்பிலக்கம் என்பவற்றை grade11@moe.gov.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதனூடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலின் போது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கர்ப்பத்தில் இருந்த குழந்தையை இழக்க நேரிட்டதாக கொழும்பு – களனி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி ஆசிரியையான 21 வயதான கவிஷா மதுஷானி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எனது கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்றபோது அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தான் குழந்தையை இழந்ததாக கூறியுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் பணிப்புரிந்த நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அதிகாரிகள் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் களனி பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக தியதலாவ தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
கவிஷா மதுஷானி உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர், இதன் போது அவர்களுக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த குடும்பத்தை மீண்டும் களனி பகுதியிலுள்ள அவர்களது வீட்டிற்கு அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். தனிமைப்படுத்தல் நிறைவு பெற்றதன் பின்னர், குறித்த யுவதிக்கு இரத்த கசிவு ஏற்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், குறித்த யுவதியின் கர்ப்பம் கலைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.