வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருபது பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு வவுனியா – பெரியகட்டு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் இருபது பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் அண்மையில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட பல இலங்கையர்கள்,

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வவுனியா – பெரியகட்டு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களுக்க நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட,

பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் இருபது பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதானா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

கோர விபத்தில் இருவர் படுகாயம்!!

விபத்து…

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி துவரங்காடு சந்தியில் டிப்பர் வாகனமொன்றுடன் முச்சக்கரவண்டி நேர்க்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (27.11.2020) பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியில் சென்றவர்களே படுகாயமடைந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – மட்டிக்களி, ராஜவரோதய சதுக்கம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் ஜதுர்ஷன் (19 வயது) மற்றும் உவர்மலை மத்திய வீதியைச் சேர்ந்த ஜீவராசாகலை நேசன் (24 வயது) ஆகியோரே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் மாவீரர் நாளை முன்னிட்டு ஆலயங்களிலும் வீடுகளிலும் அஞ்சலி!!

மாவீரர் நாளை முன்னிட்டு..

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன், மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன், இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன், 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கணவனை கொ லை செ ய் த மனைவி : வி சாரணையில் வெளியான அ திர்ச்சித் தகவல்கள்!!

இந்தியாவில்..

இந்தியாவில் காதலனுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக கணவரை மனைவி கொ.டூ.ர.மா.க கொ.லை செ ய் த ச ம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா தொட்டஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். 32 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ரோகினி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் திடீரென்று ம ர் ம மா ன முறையில் இ றந்து கி டந்தார்.

இதனால் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார், பிரதீப்பின் உ டலை மீ ட் டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அ த ன் பின் இ து கு றித்து வ ழக்கு ப தி வு செ ய்து பொ லிசார் வி சாரணை மே ற்கொ ண்டு வ ந்தனர். அ தி ல், அ வரின் ம னைவி மீ து பொ லிசாருக்கு ச ந்தேகம் வ லுத்ததால், பொ லிசார் தீ வி ர வி சாரணையை மே ற்கொண் டனர்.

அ ப் போ து அ வ ர், க ண வ னை கா த ல னு ட ன் சே ர் ந் து கொ.லை செ ய் த தை ஒ ப் பு க் கொ ண்டு ள் ளா ர். பொ லி சா ர் வி சா ர ணை யி ல், கு டி க் கு அ டி மை யா ன பி ர தீ ப் அ டி க் க டி ரோ கி ணி யு ட ன் த க ரா று செ ய் து ள் ளா ர்.

இ வர்க ளின் இ ந்த கா த ல் வி ஷ ய ம், கா லபோ க்கில் க ணவர் பிரதீப்புக்கு தெ ரியவர இ ருவரை யும் க ண் டி த் து ள் ளா ர். க ணவர் பிரதீப்பை உ யி ரு ட ன் வி ட் டா ல் நா ம் ச ந் தோ ஷ மா க இ ருக்க மு டியாது,

ஆ கை யா ல், போ.தை.யி.ல் இ ரு ந் த க ண வ ர் பிரதீப்பை இ ரு வ ரு ம் சே ர் ந் து கொ.லை செ ய் து ள் ள ன ர். கு ழ ந் தை க ள் அ ப் பா எ ங் கே கே ட் ட போ து தூ ங் கு வ தா க கூ றி கு ழ ந் தை க ளை யு ம் தூ ங் க வை த் து ள் ளா ர்.

அ த ன் பி ன்னர் த ன து க ணவர் போ தை யி ல் இ றந்துவி ட்டதாக கூ றி ரோகிணி நா டகமாடியு ள்ளார் எ ன்பது தெ ரியவ ர, இ ருவரை யும் பொ லிசார் கை து செ ய் து சி றையில் அ டைத்த னர்.

வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பம்!!

பிரதேச செயலகத்தில்..

இளம் தொழில் முனைவோருக்கு இலவச காணித் துண்டுங்கள் வழங்கும் திட்டத்திற்காக வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

காணி முகாமைத்துவ அலுவல்கள் அரச தொழில் முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் இளம் தொழில் முனைவோர்களுக்கு இலவச காணித்துண்டுகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்ட நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

விவசாயம் மற்றும் பண்ணை அமைக்கும் தொழில் முயற்சிக்காகவே அதிகளவிலான இளைஞர், யுவதிகள் காணி கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் நேர்முகத் தேர்வு நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் வவுனியா பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 14 நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

இலங்கையில் பிரபல நடிகர், நடிகைகள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முதலாவது ஒரு நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமையினால் ஏனையவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருக்கு ஏற்பட்டதனை கருத்திற் கொள்ளாமல் தொடர்ந்தும் படப்பிடிப்புகளை மேற்கொண்டமையினால் ஏனைய 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு அருகில் செயற்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-

பளையில் சொகுசு பேருந்து விபத்து : 17 காயம்!!

பேருந்து விபத்து..

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது இன்று(27.11.2020) காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து சாரதி துாங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்விய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் சுகாதார பிரிவினர் மற்றும் படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சை குறித்து அடுத்த 10 நாட்களில் அறிவிக்கப்படும் : கல்வி அமைச்சர் தகவல்!!

சாதாரண தரப் பரீட்சை..

க.பொ.த. சாதாரண தர பரீட்சையை திட்டமிட்டபடி நடத்துவதற்கான முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதார நிலைமைகளின் கீழ் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் அரசு தகவல் துறையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

2020 சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வகுப்பறைகளில் அல்லது இணையம் ஊடாக பாடத்திட்டங்கள் குறித்த தகவல்களை ஆசிரியர்களிடமிருந்து பெற கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு குறித்து சில தரப்பினரால் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், பாடசாலைகளை மூடுவதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை வீணடிக்க முடியாது என்றும், கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

“இந்த முடிவு பொறுப்பற்ற முறையில் எடுக்கப்படவில்லை. உண்மையில், பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையின் ஈடுபாட்டுடன், பாடசாலை மட்டத்தில் சுகாதார மேம்பாட்டுக் குழுக்களை அமைத்து முடிவுகளை செயல்படுத்த அதிபர்களுக்கு அதிகாரம் அளித்தது.

வருகை படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம், பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குவது இயல்பு, ”என்றார்.

பாடசாலைகளை தொடங்குவதற்கான முடிவு பொறுப்புடன் எடுக்கப்பட்டது, ஏனெனில் விமர்சனத்திற்கு பயந்து மாணவர்களுக்கு எதுவும் செய்யாதிருப்பது அநியாயமானது.

குறைபாடுகளைத் தவிர்த்து, குழந்தைகளின் தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்ய அனைத்து கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

-தமிழ்வின்-

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : இருவர் படுகாயம்!!

கோர விபத்து..

மட்டக்களப்பில் வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று(27.11.2020) அதிகாலை இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மரம் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியும் பொருட்கள் ஏற்றி வந்துகொண்டிருந்த கன்டைனர் லொறியும் நேருக்கு நேர் மோதி மின்சார தூணில் மோதியுள்ளது.

இதன்போது இரண்டு லொறியும் பாரிய சேதமடைந்துள்ள போதிலும் இரண்டு லொறியிலும் பயணித்தவர்களுக்கு உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இதன்போது இரண்டு பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல பகுதிகளுக்கான மின்சாரம் வழமை நிலைமைக்குத் திரும்பியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைமூட்டத்துடன் கூடிய பனி காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் முதுகில் நடந்து சென்று குழந்தை வரம் கொடுக்கும் சாமியார்களின் : அ திர்ச்சி வீடியோ!!

சத்தீஸ்கர் மாநிலத்தின்ல்..

சத்தீஸ்கர் மாநிலத்தின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள ‘அங்கர்மேட்டி தேவி’ கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு அடுத்து வரும் முதல் வெள்ளிக்கிழமையில் வினோத திருவிழா ஒன்று நடைபெற்று வருகிறது.

அந்த திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியிருக்கும் பெண்கள் வரிசையாக தரையில் படுத்திருப்பர். அப்போது அங்கிருக்கும் சாமியார்கள் கையில் கொடிகளை ஏந்தியவாறு மந்திரங்களை ஓதியபடி பெண்களின் முதுகில் வேகமாக நடந்து செல்வர்.

இவ்வாறு முதுகில் நடந்து சென்று சாமியார்கள் ஆசீர்வாதம் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இது குறித்து கருத்து கூறிய அம்மாநில ஆணையத்தின் தலைவர் (Chairperson of Chhattisgarh State Commission) கிரண்மய் நாயக், இது போன்ற சடங்குகளுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன். இந்த நடைமுறை தீங்கு விளைவிக்கும்.பெண்களின் முதுகில் ஏறிச் செல்வது சரியானதல்ல.

இது போன்ற சடங்குகளின் அபாயங்கள் குறித்து கிராம மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக கிராமத்திற்கு வருவேன் என அவர் கூறியுள்ளார். இந்த வினோத வழிபாடு குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணமான முதல்நாள் பதட்டத்துடன் ஓடி வந்த உறவினர் கூறிய தகவல் : அ திர்ச்சியில் உறைந்த பு துமணத்தம்பதி!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருமணமான முதல் நாள் இரவில் புதிய கார் மற்றும் விலையுயர்ந்த நகைகள் மா யமானது புதுமணத்தம்பதியை அதிர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் குர்பன் அகமது. இவரது மகனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த முதல் நாள் இரவின் போது மணமகனின் உறவினர் பதட்டத்துடன் ஓடி வந்து அனைவர் முன்னிலையிலும் அ திர்ச்சியான ஒரு விடயத்தை கூறினார்.

அதாவது மணப்பெண்ணுக்கு பரிசாக தரப்பட்ட நகைகள் மற்றும் புதிய கார் காணாமல் போனதாக கூற புதுமணத்தம்பதிகள் உள்ளிட்ட இரு வீட்டாரும் அ திர்ச் சியடைந்தனர். இது தொடர்பாக உடனடியாக பொ லி சில் பு கார் அளிக்கப்பட்டது.

பொலிசார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், நகைகள் மற்றும் கார் மா யமான விடயம் தொடர்பில் எங்களுக்கு ப ல த்த ச ந்தேகம் உள்ளது. வி சா ரணை முடிவில் இதில் உள்ள ம ர் மம் வெளிவரும் என கூ றியுள்ளனர்.

முதலில் இரண்டு.. அதன் பின் மூன்று : 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமணத்திற்கு வந்த கணவன்!!

நைஜீரியாவில்..

நைஜீரியாவில் தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் பிரிட்டி மைக் என்பவர் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நைஜீரியாவில் நகைச்சுவை நடிகரான Williams Uchemba-வுக்கும் நடிகையான Brunella Oscar-வுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியின் திருமணத்திற்கு நைஜீரிய திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

அந்த வகையில், சர்ச்சைக்கு பெயர் போன சமூகவலைத்தளம் மூலம் பிரபலமான Pretty Mike, தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் இந்த திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நைஜீரியாவின் Lagos நகரில் வசித்து வரும் இவரின் உண்மையான பெயர் Mike Eze-Nwalie Nwogu, நைட் கிளப்பின் உரிமையாளரான இவர், நாளைடைவில் Pretty Mike என்ற பெயர் பிரபலமாக அதையே சமூகவலைத்தளம் மூலம் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்தின் போது தன்னுடைய ஆறு கர்ப்பிணி மனைவிகளுடன் சென்ற புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது, ஒரு சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அவர் ஐந்து பெண்களுடன் திருமண ஆடைகளில் போஸ் கொடுத்தார். அதில் தன்னுடைய முன்னாள் இரு மனைவிகள், என்னுடைய தற்போதைய மூன்று காதலிகள், திருமணம் செய்வது தன்னுடைய கனவு, நம் அனைவருக்கும் கனவுகள் உள்ளன, கற்பனைகள் உள்ளன என்று பிரபலமானார்.

அதே போன்று இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளதால், இவர் சர்ச்சைக்கு பெயர் போன சமூகவலைத்தள பிரபலம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பொலீஸ் முன்னிலையில் பெண்ணுக்கு நடந்த வி பரீதம் : நெ ஞ்சை ப தறவைத்த சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மகனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் மனமுடைந்த தாய் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்ட சோ க ச ம்பவம் நடந்துள்ளது. நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சத்யாநகரைச் சேர்ந்தவர் சகுந்தலா (வயது 45), இவருக்கு இரண்டு மகன்கள் பிரசாந்த்(வயது 22), பிரதீப் (வயது 20) இருக்கின்றனர்.

கணவரை பிரிந்து விட்ட சகுந்தலா, மகன்களுடன் வசித்து வந்தார், இந்நிலையில் கடந்த 3-ந் தேதி சுத்தமல்லி பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை ம ர்ம நபர்கள் தி ருடிச் சென்றனர்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் நேற்று முன்தினம் பிரதீப், அதே பகுதியைச் சேர்ந்த அன்புராஜ், அருள் ஆகிய 3 பேரையும் கைது செய்து வி சாரணை நடத்தினார்கள்.

அதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் மடிக்கணினி உள்ளிட்டவைகளை தி ருடியதை 3 பேரும் ஒப்புக்கொண்டனர். அந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் பிரதீப் வீட்டில் இருந்தது.

அதை எடுப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சத்யா நகருக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்குள்ள பிரதீப் வீட்டிற்கு போலீசார் சென்று சோ த னை நடத்தினார்கள். தி ருடப்பட்ட மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீ ட்ட னர். அத்துடன் அங்கிருந்த பிரதீப் அண்ணன் பிரசாந்தையும் போலீசார் வி சாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதை சகுந்தலா தடுத்ததுடன் பிரசாந்தை ஏன் அழைத்து செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார், இதனால் அவருக்கும், பொலீசுக்கும் வா க்குவாதம் நடக்க ஒருகட்டத்தில் லத்தியால் பொலீஸ் அ டி த் த தா க தெ ரிகிறது.

இதனால் ம னமுடைந்த சகுந்தலா, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊ ற் றி தீ வை த் து க் கொ ண் டா ர், ப த றி ப் போ ன பொலிசார் உடனடியாக அவரை மீ ட் டு மருத்துவனையில் சேர்த்த போதும் செல்லும் வழியிலேயே இ ற ந் து போனார்.

இது குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று வி சாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

7 மாதமாக கர்ப்பம் என இளம் பெண்ணுக்கு சிகிச்சை : ஸ்கேனில் வெளியான அ திர்ச்சி உண்மை!!

தமிழகத்தில்…

தமிழகத்தில் நீர்க்கட்டியால் அவதிப்பட்ட பெண்ணை கர்ப்பமாக இருப்பதாக கூறி சிகிச்சையளித்து வந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சந்திரப்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன், இவரது மனைவி அஸ்வினி. கடந்த மார்ச் மாதம் அஸ்வினி அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதை கேட்ட தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், இந்நிலையில் கடந்த 7 மாதங்களாக அஸ்வினிக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 19ம் திகதி கடும் வ யிற்று வ லியால் அவதிப்பட்ட அஸ்வினி, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது, கர்ப்பமாக இல்லை என்பதும், நீர்க்கட்டி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, தெரியாமல் தவறு நடந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைதொடர்ந்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அஸ்வினியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும் நிவர் புயலின் பாதிப்புகள்!!

நிவர் புயல்…

வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த நிவர் புயல் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

அதன்படி குறித்த மாகாணங்களின் கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்பட்டிருந்ததுடன், பலத்த காற்றுடனான காலநிலையும் நிலவியிருந்தது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன், கடும் மழை காற்றின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஷ் தெரிவித்திருந்தார்.

அத்தோடு 80 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்ததுடன், யாழில் சில பகுதிகளில் கடும் காற்று காரணமாக மரங்களும் முறிந்திருந்தமை விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு..

தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், க டத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு இன்று (26.11.2020) உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொன்றும் 3000 ரூபாய் பெறுமதியான 64 உலர் உணவுப் பொதிகள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட குறித்த 64 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.

தம்மால் இயலுமான உதவிகளை வழங்கி மக்கள்
போ ராட்டங்களுக்கு பலம் சேர்க்கும் புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் தமது நன்றியை தெரிவித்தனர்.