வவுனியாவில் தீவிர கண்காணிப்பில் பொலிசார்!!

பொலிசார்…

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் என்பவற்றை முன்னிட்டு வவுனியாவின் பல பகுதிகளிலும் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 21 ஆம் திகதி முதல் வவுனியாவின் சில பகுதிகளில் பொலிசாரின் தீவிர கண்காணிப்பு காணப்பட்ட போதும், இன்று (26.11) குறித்த பகுதிகளில் மேலதிக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியாவில் சுழற்சி முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட இடம், நகரசபை பொங்கு தமிழ் நினைவுத் தூபி, தோணிக்கல் பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள அரவிந்தன் என்பவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்,

ஆலயங்கள், ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்டிய பகுதிகள் என பரவலாக பொலிசாரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதுடன், அப் பகுதிகளுக்கு வந்து செல்வோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா தோணிக்கல் பகுதியில் கடமையில் உள்ள பொலிசார் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் செயற்படுவதாகவும் பொதுமக்கபள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்!!

ஜெராட்..

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தோட்டத்திற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (26.11.2020) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் இருந்த தோட்டத்தில் காட்டு விலங்குகளின் பாதுகாப்புக்காக மின்சாரம் பொருந்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று மாலை தோட்டத்தில் குரங்குகள் நின்றமையால் அதை விரட்டிச் சென்ற போது தவறுதாக தோட்ட வேலியில் இருந்த மின்சாரத்தில் அகப்பட்டு மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் செட்டிகுளம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஜெராட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா சுந்தரபுரம் வீதியோரத்தில் 256 மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!!

மரக்கன்றுகள்…

வவுனியா சுந்தரபுரம் பிரதான வீதியினை இயற்கையுடன் கூடிய சூழலாக மாற்றும் நோக்கில் வீதியோரங்களில் 256 மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

சாஸ்திரிகூழாங்குளம் கிராம அலுவலர் நா.ஸ்ரீதரன் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாஸ்திரிகூழாங்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,

பட்டதாரி பயிலுனர்கள், வனவளதிணைக்கள உத்தியோகத்தர், பொதுசுகாதார பரிசோதகர், சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பினர், சுந்தரபுரம் பொது அமைப்பினர் மற்றும் சுந்தரபுரம் பொதுமக்கள் என ஏராளாமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டினர்.

இதன் போது வீதியோரங்களில் கொன்றை, நிழல்வாகை, புங்கை, மலைவேம்பு, இலுப்பை மற்றும் சமண்டலை ஆகிய மரங்கள் நாட்டப்பட்டன.

முல்லைத்தீவு முள்ளியவளையில் விபத்திற்கு இலக்கான பெண்!!

விபத்து..

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார்சைக்கிளில் தனது பிள்ளையை பாடசாலையில் விட்டு மீண்டும் வீடு திரும்ப முற்பட்ட வேளையில் இந்த விபத்திற்கு குறித்த பெண் இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.

முள்ளியவளை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வருகை தந்த இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தே மோட்டார்சைக்கிளை மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 வயது ஜப்பானிய சி றுமியை க ட த் திய சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையர் கைது!!

இலங்கையர் ..

15 அ கவையை கொ ண்ட ஜப்பானிய சி று மி யை க ட த் தி ய ச ம்பவ த்தில் தொ டர்புடைய இலங்கையர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். 24 அ கவையைக் கொ ண்ட இ ந்த இலங்கையர் ஜப்பானிய சி று மி யை நா ட்டுக்கு அ ழைத்து வ ந்து அ வருடன் 7 மா த ங் க ள் ஒ ன்றாக வா ழ்ந்ததாக கு ற் ற ம் சு மத்தப்பட் டுள்ளது.

 

நீர்கொழும்பு – கொச்சிக்கடை ப கு தி யி ல்  வை த் து கை து செ ய்யப்ப ட்ட இ ந்த இ ளைஞர் மீ து சி.று.வ.ர் து.ஸ்.பி.யோ.க கு ற் ற ச் சா ட் டு மு ன்வைக்கப்பட வுள்ளது. இ தேவே ளை நீ திமன்ற த்தில் கு றித்த ந ப ர் இ ன்று மு ன்னிலைப்படுத்த ப்படவுள்ளார்.

கை து செ ய்ய ப்பட்ட இ ந் த இ ளைஞர் ஏ ற்கனவே ஜ ப்பானில் ப டி த் து க் கொ ண்டிருந்த போ து ப ணக்காரர் ஒ ருவர் வீ ட்டில் ப கு தி நே ர ப் ப ணிகளில் ஈ டுபட்டிரு ந்ததாக தெ ரியவருகி றது. இ ந்த நி லையில் அ ந்த ப ணக்காரக் கு டும்ப த்தின் ஒ ரேயொரு  ம.க.ளை.யே அ வ ர் இ லங்கைக்கு க.ட.த்.தி வ ந்ததாக கு ற் ற ம் சு ம த் த ப் ப ட் டு ள் ள து.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண் அஞ்சலி!!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கையில் பிறந்த அஞ்சலி டி சில்வா, மோனேஷ் நகர சபைக்கு உறுப்பினரனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விக்டோரியா மாநிலத்தின் உள்ளூராட்சி சபை ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர், அஞ்சலியாகும்.

பசுமைக் கட்சியில் போட்டியிட்ட அஞ்சலி, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். அதற்கமைய எதிர்வரும் நாட்களில் மேனேஷ் நகரத்திற்காக அவர் பணியாற்றவுள்ளர்.

அங்கு அவரது பங்கின் ஒரு பகுதியாக, மேனேஷ் நகர சபை பாலின சமத்துவக் குழு மற்றும் பன்முக கலாச்சார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகின்றது.

அஞ்சலி நான்கு வயதில் தனது தங்கை சரணி மற்றும் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தார்.

அஞ்சலி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் முதல் தர கௌரவ பட்டதாரி ஆகும். அவர் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடல் பிரிவில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

நன்கு அறியப்பட்ட பார்க்லேஸ் மற்றும் லண்டனில் உள்ள Royal bank of Scotland உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு (குறிப்பாக பெண்கள்) பல தனித்துவமான சேவைகளைச் செய்துள்ளார் என கூறப்படுகின்றது.

இலங்கையில் வீடுகளில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா மரணங்கள்…

மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் குறிப்பிடத்தக்க அளவு வீடுகளிலேயே இடம்பெறுவதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதிக அவதானமிக்க எல்லையில் உள்ள வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்கள் புதிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

குறித்த பகுதிகளில் வாழும் வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்களுக்கு வேறு நோய்களின் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சைக்காக செல்ல வேண்டும். அது காய்ச்சல், தடுமல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளாக இருக்கலாம்.

அப்படி இல்லை என்றால் பலவீனம், உணவு சுவை தெரியாமை, வாசனை தெரியாமை போன்ற நோய் அறிகுறிகளாக இருக்கலாம். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

அப்படி இல்லை என்றால் 1999 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான நோய் அறிகள் தீவிரமடையும் வரை பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.

கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா பரவலில் அடையாளம் காணப்பட்டவர்களில் 81 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் வீடுகளில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி : சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

நீரில் மூழ்கி..

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பால்காமம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வலிப்பு நோய் காரணமாக ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் ஆற்றிலே உள்ளதாகவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹிக்கடுவ – தொடகமுவ பகுதியில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி நேற்று மாலை உயிரிழந்துள்ளனர். ஹிக்கடுவ-தொடகமுவ பாலத்திற்கு அருகாமையில் உள்ள குளத்தில் நீராடுவதற்காக சென்ற போது இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 7 மற்றும் 8 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை ஆசிரியரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்று : மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல்!!

கொரோனா…

தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹிக்கடுவ, சீனிகம, ஸ்ரீ விமலபுத்தி மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அம்பலங்கொட பிரதேசத்தில் இருந்து வருகைதந்த ஆசிரியரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்றியமை பீசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த 3 ஆசிரியர்களும் 9 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த பாடசாலைக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று பாடசாலைக்கு வருகைதந்த 7 மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்புவதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனினும் இன்றைய தினம் வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறித்த பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் சாதனை படைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள்!!

சகோதரிகள்..

கிளிநொச்சி – மலையாளபுரம் கிராமத்திலிருந்து முதன்முதலாக பொறியியல் பீடத்திற்கும், மருத்துவ பீடத்திற்கும் சகோதரிகள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பாரதிபுரம் பாடசாலையில் 2014 ஆம் ஆண்டே க.பொ.த. உயர்தரம் கொண்டுவரப்பட்டது.

இதன் போது சிலர் பாரதிபுரம் பாடசாலைக்கு ஏன் கணித விஞ்ஞானப் பிரிவுகள், இங்கு இதனை ஆரம்பிப்பது தேவையற்ற வேலை என தமது வழமையான எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

உயர்தரம் ஆரம்பித்ததன் பின்னர் பல மாணவர்கள் பின்தங்கிய அந்தப் பிரதேசங்களிலிருந்து பல்கலைகழகங்களுக்கு சென்றிருந்தாலும் முதற்தடவையாக பாரதிபுரம் வித்தியாலயத்திலிருந்து பொறியியல் துறைக்கும் (E2), சித்த மருத்துவ துறைக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டு வந்தவர்கள் குடியேற்றப்பட்ட கிராமங்களே பாரதிபுரம் பாடசாலையினை சூழவுமுள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் விவேகானந்தநகர் போன்ற கிராமங்களாகும்.

இந்த நிலையில்தான் பாரதிபுரம் பாடசாலையில் தரம் ஒன்றிலிருந்து உயர்தரம் வரை கல்வி கற்ற மலையாளபுரத்தைச் சேர்ந்த சகோதரிகளான ஜெயராஜ் உஷாயினி பொறியியல் பீடத்திற்கும் (E2), ஜெயராஜ் ஜனார்த்தினி சித்த வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்களது தந்தையான 59 வயதுடைய தங்கராசா ஜெயராஜ் கூலித்தொழிலுடன் சிறு கைத்தொழில் முயற்சியையும் செய்து வருகின்றார்.

வறுமைக்குட்பட்ட இவர்களது குடும்பத்தில் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கடைசி பிள்ளை தற்போது உயர் தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கின்றார்.

பையிலடைத்த உணவு உற்பத்தி சிறுதொழில் உற்பத்தி முயற்சி மூலம் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டு வீட்டுச் செலவையும், பிள்ளைகளின் கல்விச் செலவையும் மிகுந்த சிரமத்துடன் கொண்டு செல்கின்றார்.

மூத்த மகள் ஜனார்த்தினி க.பொ.த சாதாரனதரத்தில் 8ஏ,பி பெறுபேறு பெற்று சித்தியடையும் வரை பிள்ளைகள் படிக்க ஒரு கதிரை மேசை கூட இல்லாத தற்காலிக கொட்டில் வீட்டில் வசித்த அவர்களுக்கு அதன் பின்னர் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரின் உதவியால் ஒரு மேசையும் கதிரையும் கிடைத்துள்ளது.

க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்கும் வரை இவர்கள் எந்தவொரு தனியார் கல்வி நிலையத்திற்கோ, பிரத்தியேக வகுப்புக்களுக்கோ சென்றது கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கல்வியும், அதன் பின்னர் வீட்டில் சுய கற்றலுமே இவர்களை சிறந்த பெறுபேறுகளை பெற வைத்ததாக கூறப்படுகிறது.

ஜனார்த்தினி 2015 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 8ஏ,பி தரச் சித்தியையும் , உஷாயினி 2016 இல் 3ஏ,4பி,சி,எஸ் பெறுபேற்றையும் பெற்றுள்ளனர்.

படிக்கின்ற காலங்களில் பல தடவைகளில் கொப்பி முடிந்துவிட்டால் உடனடியாக கொப்பிகளை வீட்டில் சொல்லி பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

பயிற்சி புத்தகங்கள் வாங்க முடியாது, தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் சக மாணவிகளிடம் பாடசாலையில் ஆசிரியர் இல்லாத பாடங்களின் கொப்பிகளை கேட்டால் கூட மாணவிகள் தர மறுத்து தங்களுடன் கதைப்பதனையே நிறுத்தியதாகவும் குறித்த மாணவிகள் கூறியுள்ளனர்.

மேலும் நம்பிக்கையுடன் தாம் கற்றதாகவும், தங்களுக்காக தங்கள் பெற்றோர் படும் கஸ்ரம் தங்களுக்கு அந்த நம்பிக்கையை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியே எங்களின் வளமான எதிர்காலத்திற்கான ஒரேயொரு வழி என்பதனை நினைத்து கற்றோம். இதனால் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல நிலையை பெற்றுள்ளோம் என்றும் இச் சகோதரிகள் கூறியுள்ளனர்.

ஜனார்த்தினி விஞ்ஞானப் பிரிவில் 2பி சி பெறுபேற்றை பெற்று சித்த வைத்திய துறைக்கும், உஷாயினி ஏபிசி பெறுபேற்றை பெற்று பொறியியல் (E2) துறைக்கும் அனுமதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயம் மட்டுமல்ல, அந்த பிரதேசமும் பெருமைகொள்கிறது.

முதல் முதலாக ஒரு பொறியியலாளரும், வைத்தியரும் உருவானதை எண்ணி மலையாளபுரம் மண்ணும் மகிழ்ச்சியடைகிறது.

ஒன்று இரண்டாகி, இரண்டு பத்தாகி செல்ல வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம். அத்தோடு வறுமை என்பது சாதிப்பதற்கு ஒரு தடையல்ல என்பதனையும் இந்த சகோதரிகள் வெளிப்படுத்தி நிற்கின்றார்கள் என மலையாளபுர மக்கள் மகிழ்சி வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இருவரும் பாடசாலையில் உயர்தரம் கல்வி கற்கும் போதே அவர்களின் செலவுகளை ஈடு செய்ய முடியாது பெரும் நெருக்கடிக்குள் உள்ளாகியிருந்தேன்.

ஆனால் தற்போது இருவரும் ஒரேநேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றார்கள். இது ஒரு புறம் அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறம் இவர்களின் செலவுகளை எப்படி சமாளிக்கப் போகின்றேன் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது என அவர்களின் தந்தை கூறியுள்ளார்.

74 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்ற மனைவி : அவரது கணவருக்கு நேர்ந்த ப ரிதாபம்!!

74 வயதில்..

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியை அடுத்த நெலாபார்டிபாடு கிராமத்தில் மங்கம்மா என்பவருக்கு தனது 74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இவருக்கு கடந்த 1969ம் ஆண்டு ராஜாராவ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தற்போது அவருக்கு வயது 80. திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் 55 வயதில் ஒரு பெண் கருத்தரித்த விஷயத்தை கேள்விபிட்ட 74 வயதான மங்கம்மா அதற்கான முயற்சியில் மேற்கொண்டார்.

இந்நிலையில் மங்கம்மாவுக்கு கடந்த வருடம் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யப்பட்டது. இதனை அடுத்து குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரது வயிற்றில் வளரும் கருவுக்கு முறையாக சிகிச்சை அளித்து 2 வாரங்களுக்கு முன்னர் இரட்டை குழந்தை பெற்றெடுத்தார். 74 வயது மூதாட்டிக்கு குழந்தை அதுவும் இரட்டைக் குழந்தை பிறந்த சம்பவம் அனைவராலும் பேசப்பட்டது.

இரட்டைக் குழந்தைகள் பிறந்த சந்தோஷத்தை அவரது கணவர் ராஜராவ் நீ ண்ட நாட்கள் அ னுப விக்க முடியவில்லை. ஏன் என்றால் தற்போது அவருக்கு தி டீ ரென நெ ஞ்சு வ லி ஏ ற்ப ட்டு மருத்துவமனையில் தீ விர சி கிச் சை பி ரி வில் அனும திக்கப்ப ட்டுள்ளார்.

பல ஆண்டுகள் க ழி த்து குழந்தை பிறந்ததால், கணவர் ராஜாராவ் மகிழ்ச்சியில் இருந்தார். எல்லா சாதனைகளும் கடவுளும், மருத்துவர்களும்தான் காரணம் என கூறினார்.

80 வயதில் 2 குழந்தைகளுக்கு தந்தையான ராஜாராம் ஒருவேளை இ ற ந்து வி ட் டால் அந்த குழந்தைகளை, யார் வளர்ப்பார்கள் என பொதுமக்கள் வே த னை தெரிவித்தனர்.

கொரோனா உச்சம் : 45 பாடசாலைகளை பூட்டுவதற்கு தீர்மானம்!!

கொரோனா உச்சம்..

கண்டி நகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளன என்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை வியாழக்கிழமை தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை இவ்வாறு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

கண்டியில் கடந்த சில நாட்களாக சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செல்போனில் வந்த செய்தி : பார்த்ததும் அ திர்ச்சியில் மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்!!

65 வயது மூதாட்டி..

திருப்பதி அடுத்த பீலேரு கலிகிரி பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு லேசான காய்ச்சல் இருந்தது.

இதனால் கலிகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டு வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூதாட்டியின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில் மூதாட்டிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்தது. இதனை பார்த்து மூதாட்டி அ திர்ச்சி அடைந்து திடீரென கீழே விழுந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் உடனடியாக அவரை மீட்டு கலிகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இ றந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பீலேரு பகுதியில் ப ரபரப்பை ஏற்படுத்தியது.

கர்ப்பிணி மனைவியை பிரிந்து வெளிநாட்டில் வேலை செய்து வந்த கணவன் : 8 மாதங்கள் கழித்து நடந்த சம்பவம்!!

8 மாதங்கள் கழித்து..

பிரசவத்துக்கு பின் மனைவி உ யிரிழந்த நிலையில் 8 மாதங்கள் கழித்து வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கணவர் தனது குழந்தையை பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை சேர்ந்தவர் யுப்ராஜ் பூசல் (30). இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். இவரது கர்ப்பிணி மனைவி மினா சொந்த ஊரில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் யுப்ராஜின் மனைவிக்கு ஜலந்தா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு ப லியானார். அப்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்திருந்தது.

இதனால் அவர் தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. தொடர்ந்து 8 மாதங்கள் மனைவியை இழந்து தனது குழந்தையை கா ணாமல் த வித்து வந்தார். இதற்கிடையே சக ஊழியர்கள் உதவியுடன் பண உதவி பெற்று சொந்த ஊருக்கு சென்றார்.

அங்கு காட்மண்டு பகுதியில் மலைக்கிராமம் ஒன்றில் சிறிய குடிசையில் தனது குழந்தை ஜலந்தாவுடன் விடுமுறையை கழித்து வருகிறார். தொழிலாளியான இவர் அடுத்த மாதம் இறுதியில் துபாய் திரும்ப உள்ளார்.

 

காதல் திருமணம் செய்த மகள்… நீதிமன்றத்தில் சொன்ன வார்த்தை : அ திர்ச்சியில் ஆடிப்போன பெற்றோர்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோர், அவர் நீதிபதியிடம் சொன்ன வார்த்தையைக் கேட்டு பெரும் அ திர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற மகன் உள்ளார்.

நித்யானந்தன் அதே பகுதியில் சதீஸ் என்பவர் நடத்தி வரும் செல்போன் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்காள் மகளான காயத்திரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் இவர்களின் காதலுக்கு காயத்ரியின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவிக்க, இருவரும் கடந்த 2-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பின் இருவரும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருமணம் செய்து கொண்டு, திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டனர்.

இதற்கிடையில் காயத்ரியின் பெற்றோர் க டத்த ப்பட் டதாக பு கா ர் அளித்துள்ளனர். அதன் பின் நித்யானந்தனை பொலிசார் அழைத்து விசாரித்த போது, அவருடன் காய்த்ரியும் வந்துள்ளார்.

அப்போது காயத்ரி பொலிசாரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசார், அவரை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து செல்போன் கடையின் உரிமையாளரும், காயத்திரியின் மாமாவுமான சதீஸ், நித்யானந்தனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்.

ரங்கம்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து காயத்திரிக்கும், அவரது பெற்றோர் சொத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டுச் சென்று விடுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அவர்களும் அந்த பகுதிக்கு கடந்த 17-ஆம் திகதி காரில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சில தூரங்களுக்கு முன்பு, ஆ யு த ங் க ளு ட ன் நி ன்று கொண்டிருந்த சிலர், காயத்ரியை மட்டும் க ட த் தி ச் செ ன்றுள்ளனர்.

இதனால் ப த றி ப் போ ன நித்யானந்தன், காவல்நிலையத்தில் பு கா ர் அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதல் கணவரை மறந்துவிட்டு தங்களுடன் வந்துவிடுமாறு கூறியுள்ளனர்.

அதற்கு அவரும் பெற்றோருடன் இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இதனால் தங்கள் மகள் தங்களோடு வந்து விடுவார் எனக் காயத்திரியின் பெற்றோர் நம்பிக்கையோடு இருந்த நிலையில், இந்த க ட த் த ல் வ ழக்கு தொடர்பாக காயத்ரி ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று அழைத்துச் சென்றார்கள்.

அங்கு நீதிபதி காயத்ரியிடம் விசாரித்த போது, அவர் தனக்குப் பெற்றோருடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தனது காதல் கணவர் நித்யானந்தனை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார்.

இதைக் கேட்டு காய்த்ரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அ திர்ச்சி யடைந்து ள்ளனர். அதன் பின் நீதிபதி, நித்யானந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட, காதல் கணவரான நித்யானந்தனுடன் காயத்திரியைச் சேர்த்து வைத்து நீதிபதி அனுப்பி வைத்தார்.

வேலை செல்லும் போது மகிழ்ச்சியாக இருந்த மனைவி : வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

இந்தியாவில்..

இந்தியாவில் ப ள் ளி ஆ சிரியரின் ம னைவி வீ ட்டில் யா ரு ம் இ ல்லாத போ து தூ.க்.கி.ட்.டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார். ஜார்கண்ட் மாநி லத்தின் ராஜ்பள்ளியை சே ர்ந்தவர் நீபல் தத்தா. ப ள்ளிக்கூ டத்தில் ஆ சிரியராக ப ணிபுரி ந்து வ ருகி றார்.

இவர் மனைவி ரீட்டா. தம்பதிக்கு தேவ்ரஞ்சன் (10) மற்றும் சுபோஜித் (8) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை புதிதாக கட்டும் வீட்டை பார்வையிட நீபல் தனது 2 பிள்ளைகளுடன் சென்றார்.

அப்போது வீட்டில் ரீட்டா தனியாக இருந்தார். பின்னர் மூவரும் வீடு திரும்பிய போது ரீட்டா மி ன்விசி றியில் ச ட ல மா க தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இரு ந்தார்.

இந்த காட்சியை பார்த்த அவரின் கணவர் மற்றும் கு ழந்தைகள் அ திர்ச்சியடை ந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரீட்டாவின் ச ட ல த் தை கைப்ப ற்றினார்கள்.

வி சாரணையில், நீபல் மற்றும் அவர் பிள்ளைகள் பொலிசாரிடம் சில விடயங்களை கூறினார்கள். அதாவது, நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது நீட்டா மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தார் என்பதை அவர் முகமே காட்டியது.

ஆனால் அவருக்கு உடல் ரீதியான சில பி ரச்சினைகள் இருந்ததால் சில மாதங்களாக ம ன அழு த்தத்தில் இருந்தார் என கூறினர். கணவன் மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பும் போது மகிழ்ச்சியுடன் இருந்த போதிலும்,

உடல் பி ரச்சினை அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது, இதன் காரணமாக திடீரென இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.