கட்டிய தாலியை கழற்றி வீசிய காதல் மனைவி : அ திர்ச்சியில் புதுமாப்பிள்ளை எடுத்த வி பரீத முடிவு!!

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றியதால் கணவர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்த குறும்படங்களைப் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான விஷ்ணுவுக்கு (22 வயது) திருப்பூரைச் சேர்ந்த (20 வயது) பெண்ணான சாலினியின் அறிமுகம் கிடைத்தது.

ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவருக்குள்ளும் விஷ்ணுவின் குறும்படத்தின் மூலம் காதல் மலர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே அவர்களுக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டடுள்ளது.

இதன்விளைவாக நண்பர்களுடன் செல்போனில் பேசுவது தொடங்கி, குடும்பத்தினர் தன்னைப்பற்றி விமர்சிப்பது வரை கணவர் விஷ்ணுவிடம் சாலினி குறை கூற இருவருக்கும் இடையே பி ரச்சினையாக உருவெடுத்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இருவருக்கும் மீண்டும் த க ரா று ஏற்பட்ட போது ஆ த் தி ர ம் அடைந்த சாலினி அவர் கட்டிய தாலியை கழற்றி வீச இதனால் ஆ த்திரத்தி ரமடைந்த விஷ்ணு அ தி ர் ச் சி அ டைந்து வேகமாக தனது அ றைக்கு சென்று உள்பக்கமாக க த வை பூ ட்டிக் கொ ண்டார்.

பின்னர் கதவை திறக்க முடியமால் திணறிய சாலினி உதவிக்கு உறவினர்களை அழைக்க, நீண்ட நேரம் போ ரா டி அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது விஷ்ணு தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக கி டந்து ள்ளார்.

இதைப்பார்த்து அ தி ர் ச் சி அ டைந்த உறவினர்கள் கோட்டார் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸ், விஷ்ணுவின் ச டலத்தைக் மீட்டு பி ரே த ப ரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இ தற்கிடையே கா த ல் க ணவர் தூ.க்.கி ல் தொ.ங்.கி.ய.தை தா ங்கிக் கொ ள்ள இ யலாத சாலினி வீ ட்டில் இ ரு ந் த க.த்.தி.யை எ டு த் து த ன் னை த் தா னே க.ழு.த்.தை அ.று.த்.து உ.யி.ரை மா ய் த் து க் கொ ள் ள மு ய ன் று ள் ளா ர். பி ன்னர் உ யி ரு க் கு போ ரா டி ய சாலினியை மீ ட் டு சி கிச்சை க்காக ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர்.

மேலும் க ழு த் தி ல் கா ய ம் அ டைந்த சாலினிக்கு தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதால் த க ரா று ஏ ற்பட்டது குறித்து வி சாரிக்க இயலவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளளர்.

எல்.பி.எல் போட்டிகளில் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிக்கும் கிரிக்கட் ஜாம்பவான்கள்!!

யாழ்ப்பாண அணி..

லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாளைய தினம் எல்.பி.எல் போட்டித் தொடர் ஹம்பாந்தோட்டையில் ஆரம்பாக உள்ளது. இந்தப் போட்டித் தொடரில் ஐந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்த உள்ளன.

இதில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் எனப்படும் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக சங்கக்கார மற்றும் ஜயவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். அனைத்து கழகங்களும் கடினமாக, நேர்மையாக, திறமையுடன் மகிழ்ச்சியாக விளையாட வேண்டுமென சங்கக்கார கோரியுள்ளார்.

இந்தப் போட்டித் தொடர் சிறந்த போட்டித் தொடராக அமைய வேண்டுமென யாழ்ப்பாண அணிக்கு சங்கக்கார விசேட வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனது நெருங்கிய நண்பரான குமார் சங்கக்காரவின் கூற்றை ஏற்றுக்கொள்வதாகவும் தாமும் புதிய கிரிக்கட் நகரமான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாகவும் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சங்கக்கார கண்டி பாடசாலையொன்றின் ஊடாகவும், மஹேல கொழும்பு பாடசாலையொன்றின் ஊடாகவும் கிரிக்கட்டிற்கு பிரவேசித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும் என தகவல்!!

நிவர் புயல்..

தமிழகம் சென்னை வானிலை மைய அறிவித்தலின்படி நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையான காலப்பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். இதனையடுத்து வேகமாக நகரும் நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றிரவு கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் மணித்தியாலத்துக்கு 120 – 150 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர், புதுச்சேரியில் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயார் நிலையில் இந்திய இராணுவம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 பேரிடர் மீட்பு குழுக்கள், 2 பொறியாளர்கள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்து வருவதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை!!

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்கான தேசிய மையத்தினால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுவின் அனைத்து பிரிவுகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் , சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, இராணுவ தளபதி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா தொற்றின் அளவு பரவல் மூன்றாம் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தியதுடன், பண்டராகம, நுவரெலியா மற்றும் கண்டி போன்ற பகுதிகளில் புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பகுதிகளில் மையமாக வைத்து மேலும் ஆன்டிஜென் Antigen பரிசோதனைகள் மற்றும் PCR சோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய கலந்துரையாடலில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், அந்த பகுதிகளில் இருந்து வெளியே தொற்று பரவுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-

ரிசாட் பதியூதீனுக்கு பிணை!!

ரிசாட் பதியூதீன்..

முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியா இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் ரிசாட் பதியூதின் விடுதலை செய்பய்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்றைய தினம் ரிசாட்டுக்கு பிணை வழங்கியுள்ளது. அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் ரிசாட் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபேளை ரிசாட் பதியூதீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

ஆரம்ப பாடசாலை…

கொரோனா ஆபத்து இல்லாத பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சுகாதார பரிந்துரைகளுக்கமைய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய நாட்களுக்குள் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த அரச உத்தியோகஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் மரணம்!!

தனபாலசிங்கம் நிஸாந்தன்..

மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) என்பவரே சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.

மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி வந்த குறித்த நபர் படுகாயம் அடைந்தார்.

குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் தள்ளாடி சந்தியில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 11 தினங்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் 70 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு கடந்த 11ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியிலிருந்து வருகை தந்த அவர் கிளிநொச்சிக்கும் வான் ஒன்றில் சென்று வந்துள்ளார்.

அவர் கொழும்பிலிருந்து வருகை தந்தமை அறிவிக்கப்படாத நிலையில் கடந்த 15ஆம் திகதி சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரைத் சுயதனிமைப்படுத்தினார்கள். அவருடன் வீட்டில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 121 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அவர்களில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் இரண்டு கடற்படையினருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏனையோருக்கு தொற்று இல்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கைக்குள் கொரோனா தொற்றினால் மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன!!

கொரோனா..

கொரோனா தொடர்பான மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா காரணாமக உயிரிழந்தோர் எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய,

இந்த ஊடக அறிக்கை வெளியிடப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20795 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியருக்கு படித்துவிட்டு பிச்சையெடுத்துக் கொண்டிருந்த திருநங்கை : கண்கலங்க வைக்கும் காரணம்!!

திருநங்கை..

தமிழகத்தில் டாக்டருக்கு படித்திருந்த திருநங்கை ஒருவர் பிச்சையெடுத்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. மதுரை மாவட்டம் திலகர் திடல் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பொலிசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே சுற்றித்திரிந்த திருநங்கையை பொலிசார் ச ந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தான் எம்.பி.பி.எஸ் படித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

இதை நம்பாத பொலிசார் திருநங்கையை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஆய்வாளர் கவிதா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவர் நீ மருத்துவர் படித்திருக்கிறாய் என்பதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேட்க,

அவர் உடனே தனக்கு தெரிந்த திருநங்கை ஒருவரை போனில் அழைத்து, தன்னுடைய படிப்பு சான்றிதழ்கள் அனைத்தையும் கொண்டு வரும் படி கூறியுள்ளார்.

அதன் பின் அதை வாங்கிப் பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நிமிடம் ஆடிப் போயுள்ளார். ஏனெனில் அதில் இருந்த அனைத்தும் உண்மை.

இதையடுத்து, இவ்வளவு படிப்பு படித்துவிட்டு ஏன் சாலையில் பிச்சை எடுக்கிறாய்? என்று கேட்ட போது, நான் திருநங்கைதான் என்று சான்றிதழ் வாங்குவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

சமுதாயத்திலும் எனக்கு நிரந்தரமான அங்கீகாரம் இல்லை. இதனால் வேறு வழியில்லாமல் இப்படி சாலையில் அலைந்து பிச்சையெடுத்து வருகிறேன் என்று க ண்கலங் கியுள்ளார்.

இதைக் கேட்ட காவல் ஆய்வாளர் கவிதா, உடனடியாக உயரதிகாரிகளிடம் தெரிவிக்க, உயரதிகாரிகளின் உதவியுடன் கிளினிக் அமைத்துக்கொடுத்து, தனது சொந்த செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து உதவியுள்ளார் கவிதா. இவரின் செயல் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

திருமணம் ஆன ஒரு வருடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

பவித்ரா..

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் திருமணமான ஒரு வருடத்தில் உ யிரிழந்த நிலையில், இது தி ட்டமி ட்ட கொ.லை எ ன்று பெற்றோர் ப ர ப ர ப் பு பு கா ர் கொ டுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, வெண்ணிலா – முருகேசன்.

இவர்களின் மூத்த மகளான பவித்ரா(22)-வுக்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அக்ரஹாரம் என்ற பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்ற பொறியாளருக்கு, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரகாஷ்குமார் கரூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பவித்ராவின் பெற்றோர் வெண்ணிலா, தாமோதரஹள்ளி என்ற அந்த ஊராட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகின்றனர்.

பவித்ராவின் திருமணத்தின் போது, அவரின் பெற்றோர் 40 பவுண் நகை மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், வரும் பொங்கல் திருநாளுக்கு ஒரு காரும் தங்க நகைகளும் வரதட்சணையாகக் கேட்டு, பவித்ராவை பிரகாஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் து ன் பு று த் தி ய தா க கூ றப்படுகிறது.

இதனால், அவர் தன் பெற்றோரிடம் வந்து இது பற்றி க த றி அ ழு து ள் ளா ர். மி குந்த வே தனையில் இருந்த பவித்ரா கடந்த 22 -ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல், 2 மணியளவில் க ழு த் து நெ ரி க் க ப் ப ட் டு இ ற ந் து கி ட ந் தா ர்.

பவித்ராவின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சி கிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு ப ரிசோ தித்த ம ருத்துவர்கள், அவர் ஏற்கனவே இ றந்துவி ட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உ டற்கூ று ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, பவித்ராவின் கணவர் குடும்பத்தார், தி டீரென அ ங்கிருந்து த லை ம றை வா கி வி ட் ட ன ர்.

மேலும், அவர்கள் வசித்த வீட்டையும் பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பவித்ராவின் உ ட ல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, இது குறித்து வி சாரணை மேற்கொண்டு உறவினர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின்பேரில், கிருஷ்ணகிரியில் இருந்து ஊர் மக்களுடன் திரண்டு வந்த பவித்திராவின் பெற்றோர், தனது மகள் இ றப்பிற்கு நீதி வேண்டும் எனக் கோ ரி போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

பொலிசார் உரிய நடவடிக்கை க ண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறிய பின்னர் அவர்கள் போ ராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, பவித்ராவின் உ ட ல் உ டற்கூ று ஆய்வு செய்யப்பட்டு,

அவரது உ ட ல், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாகக் த லை ம றை வா க உள்ள கணவர் பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிசார் தே டி வ ருகின் றனர்.

காதலனுக்காக இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு : கண்ணீருடன் பெற்றோர்!!

மோகனப்பிரியா..

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்த மாணவனுக்காக, இளம் பெண் ஒருவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு வீட்டை வீட்டு ஓடிய சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பொறியியல் கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்து வந்தவர் மோகனப்பிரியா. சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிடக்கும் இவருக்கு, பெங்களூரைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுந்தர் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

சமூகவலைத்தளத்தில் துவங்கிய இவர்களின் நட்பு, நாளைடைவில் காதலாக மாறியது. குடியாத்தத்தை சேர்ந்த சுந்தர் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பெங்களூரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.

சுந்தர் மீது அளவு கொண்ட காதல் கொண்ட மோகனப்பிரியா, கடந்த 15-ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறி, காதலனைத் தே டி சென்னை காட்பாடிக்கு சென்றுள்ளார். அதன் பின் அங்குள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற மகள் கா ணவில்லையே என்று பெற்றோர் ப த றி ப் போ ய் காவல் நிலையத்தில் பு கா ர் கொடுத்தனர்.

இதையடுத்து பொலிசார் மோகனப்பிரியாவின் செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை க ண்டுபிடி த்தனர். அங்கு பொலிசார் மற்றும் பெற்றோர் சென்ற போது, மோகன்ப்பிரியா வீட்டிற்கு செல்ல ம றுத்துள்ளார்.

இதையடுத்து தனது ம க ளை க ட த் தி வந்து விட்டதாக காதலன் சுந்தர் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மோகனப்பிரியாவின் பெற்றோர் மற்றொரு பு கா ர் அளித்தனர்.

இதையடுத்து காதலனுடன் காவல் நிலையத்தில் ஆஜரான மோகனப்பிரியா, தான் மேஜர் என்பதால் காதலனுடன் தான் செல்வேன் என்று பெற்றோர் மற்றும் படிப்பை உதறிவிட்டு காதலனுடன் மோகனப்பிரியா சென்றுவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத மோகன்ப்பிரியாவின் பெற்றோர், க ண்ணீ ருடன் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

வவுனியாவில் சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிப்பு : சந்தேகநபர்கள் தப்பியோட்டம்!!

கிடாச்சூரி பகுதியில்..

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிடாச்சூரி பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மரக்கடத்தலை புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் முறியடித்துள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

வேலங்குளம் செங்கல்படையில் இருந்து கல்மடு ஊடாக நெளுக்குளம் பகுதிக்கு முதிரை மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக புளியங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று நள்ளிரவு குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது காட்டுப்பகுதியிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட முதிரை மரக்குற்றிகளும் , ஜீப் வாகனமும் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

வடக்கில் நேற்று நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி : வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!!

கொரோனாத் தொற்று..

யாழ். பரிசோதனைக் கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் வடக்கு மாகாணத்தில் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 322 பேரின் மாதிரிகள் கொரோனாப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும், முல்லைத்தீவில் விமானப் படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருக்கும் 2 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

போலிச் செய்திகளை…

ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த இணையத்தளங்களை தடை செய்வது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை எனவும், இது குறித்து ஆராயப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருவருக்கு எதிராக அவதூறு சுமத்தும் நோக்கத்துடன் பதிவு செய்யப்படாத பல இணையத்தளங்கள் சேற்றை வாரியிறைக்கும் தகவல்களை வெளியிடுகின்றன.

எந்த உத்தியோகபூர்வ வழிமுறைகளிலும் பதிவு செய்யப்படாத வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இந்த இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கருதுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்தது!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 337 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16 ஆயிரத்து 984 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 ஆயிரத்து 921 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 90 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.