இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்தது!!

கொரோனா..

இலங்கையில் மேலும் 337 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரை 16 ஆயிரத்து 984 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 ஆயிரத்து 921 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் 90 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுவரையில் தங்கம் அவுன்ஸின் விலை 1873.31 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1860.37 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதற்கமைய கடந்த 4 நான்கு நாட்களுக்குள் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 13 டொலரினால் அதிகரித்துள்ளது.

எனினும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1960.93 டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை : 12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக விருத்தியடையும்!!

வடக்கிற்கு சிவப்பு எச்சரிக்கை..

வங்களா விரிகுடா கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மிக வலுவான தாழமுக்கமானது திருகோணமலை கரையில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கம், இலங்கையின் வட கிழக்கு கரையோர பிரதேசத்திற்கு அண்மையாக தமிழத்தின் கரையோர பிரதேசத்தை நோக்கி நகர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களத்தின் தகவலின் அடிப்படையில்,

தாழமுக்கத்தின் நகர்வு காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை காற்று வீசலாம்.

வடக்கின் பல பகுதிகளில் இன்று 100 – 150 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாண தீபகற்பத்தில் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினம் பதிவாகும் மழை வீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சில கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் கடற்றொழில் நடவடிக்கையை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த வலுவான தாழமுக்கமானது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து, சூறாவளியாக விருத்தியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பின்னரான 12 மணித்தியாலங்களில் அந்த சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து மிகப்பலத்த சூறாவளியாக மாற்றமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியானது அடுத்த 48 மணித்தியாலங்களில் வட மேற்கு திசையின் ஊடாக தமிழகத்தின் கரையை ஊடரத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரியவருகிறது.

-தமிழ்வின்-

வளப் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்று சாதனை!!

ஒட்டுசுட்டான் சின்னத்தம்பி வித்தியாலயம்..

இவ்வருட புலமை பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது ஒட்டுசுட்டான் இந்து தமிழ் கலவன் வித்தியாலயம். துணுக்காய் கல்வி வலயத்தின் ஒட்டுசுட்டான் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையாக இப் பாடசாலை அமைந்துள்ளது.

18.10.1956 ல் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அருகாமையில் இவ்வித்தியாலயம் உருவாகியுள்ளது. பிரதேசத்தின் ஆதிப்பாடசாலையாகிய இதன் புராதன பெயர் சின்னத்தம்பி வித்தியாலயமாகும்.

தரம் ஐந்திற்கு உட்பட்ட மாணவர்களைக்கொண்டு , ஐந்து பெண் ஆசிரியைகளுடன் அதிபருமாக தற்போது இப்பாடசாலை இயங்கிவருகிறது.

பாடசாலையின் சாதனையாக.. கடந்தவருடம் நான்கு பிள்ளைகள், தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருந்தனர்.

ஆனால்.. இவ்வருடம் அதனை முறியடித்து, ஐந்து பிள்ளைகள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருக்கிறார்கள். இதுவே ஒட்டுசுட்டான் கோட்டப்பாடசாலைகளோடு ஒப்பிடும் போது முதன்நிலை வகிக்கிறது.

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களையே அதிகமதிகமாக இப்பாடசாலை உள்வாங்கியிருக்கிறது. இருப்பினும் ஒருசிலரைத் தவிர தன்னார்வலர்களின் உதவிகள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. பாடசாலையின் சித்தி வீதமும் 100% ஆகும்.

எதிர்வரும் காலங்களில், துணுக்காய் கல்வி வலயத்திலேயே அதிக மாணவர்களை வெட்டுப்புள்ளிக்குமேல் பெறச்செய்வதே தமது இலக்கு என்றும், அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் உட்பட

வலயக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர், ஒட்டுசுட்டான் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் தொடர்ச்சியாகவே தந்துதவுவதாக வித்தியாலய அதிபர் திருமதி வே.நித்தியகலா அவர்கள் தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் தீவிரம் : வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையரின் நிலை!!

கொரோனா..

கொரியாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த இலங்கையரின் இறுதி கிரியை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி உயிரிழந்த குறித்த இலங்கையரின் இறுதி கிரியை இலங்கையில் இணைய மத வழிப்பாட்டிற்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

3 வருட காலங்களாக கொரியாவில் பணியாற்றிய வெலிகேபல, கெலேகம்மன பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நிலவும் கொரோனா பரவலுக்கு மத்தியில் சடலத்தை இலங்கைக்கு கொண்டு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரியாவில் உள்ள இலங்கை நண்பர்களின் உதவியுடன் ஊஹான் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்காக ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக குடும்பத்தினர் இறுதி அஞ்சலியையும் மத வழிப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவு : வெளியாகியுள்ள தகவல்!!

கொரோனா…

பாடசாலை மாணவர்களில் 60-70 சதவீதமானோரின் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையிலுள்ளதாகவும் இதனால் மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்த முதன்மை பராமரிப்பு சேவைகளின் இயக்குநர் பிரியந்த அத்தப்பத்து இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் இது குறித்து ஊடகங்களிடம் இன்று பேசிய அவர்,

“மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பரிசிச் சோறு, பச்சை இலை வகைகள், காய்கறிகள் மற்றும் மீன் அடங்கிய உணவை காலையில் உண்பது அவசியம்.

புதிய பழங்கள், விற்றமின் டி,சி,ஏ அடங்கிய உணவு மற்றும் காலை 7.00 மணி முதல் 10.00 மணிக்கு இடையிலான சூரிய ஒளியைப் பெறுதலும் பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர் அத்தப்பத்து மேலும் கூறினார்.

மேலும் பயறு, கௌபி, வற்றாளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளை மாணவர்கள் உட்கொள்வதும், சுத்தமான நீரைப் பருகுதலும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன.

எனினும், மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.

இன்று மேலும் மூன்று பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

நடிகர் தவசி மரணம் : தமிழக அரசுக்கு விடுத்த உருக்கமான கடைசி வேண்டுகோள்!!

நடிகர் தவசி..

முரட்டு மீசை, கம்பீர தோற்றத்துடன் நகைச்சுவை கலந்து திரையில் தோன்றி ரசிகர்களை சிரிக்கச் செய்த நடிகர் தவசி, புற்று நோய்க்கு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை இரு 8.15 மணியளவில் உயிரிழந்தார். இந்த தகவலை அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சரவணன் உறுதிப்படுத்தினார்.

தமிழில் அவர் சுமார் 30 படங்களில் நடித்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக நடித்து அந்த படத்தின் நகைச்சுவைக்கு மெருகூட்டியிருந்தார் தவசி.

இதே போல ரஜினி முருகன் படத்தில் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக நடித்தார். அழகர் சாமியின் குதிரை படத்தில் உள்ளூர் கோடாங்கியாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் தவசி.

கொரோனா பொது முடக்கத்துக்கு முன்பு வரை நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது விபத்தில் சிக்கிய தவசி, பொது முடக்கத்தால் நாடே முடங்கியபோது, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் தவசி.

அவருக்கு புற்று நோய் தீவிரம் அடைந்ததால் கம்பீரத்துடன் இருந்த அவரது உடல் மெலியத் தொடங்கியது. நாளடைவில் சிகிச்சை தேவைக்காக மொட்டை அடித்து மீசை ,தாடி வழிக்கப்பட்ட நிலையில் எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சி அளித்தார் தவசி.

இந்த நிலையில், மதுரை நரிமேட்டில் உள்ள திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இலவச சிகிச்சை தருவதாக எம்எல்ஏ சரவணன் தெரிவித்திருந்த நிலையில், நிதியுதவியின்றி தவிக்கும் தனக்கு உதவ முன்வருமாறு அழுது கொண்டே வேண்டுகோள் விடுக்கும் காணொளியை சில வாரங்களுக்கு முன்பு தவசி வெளியிட்டார்.

அவரது தோற்றதைக் கண்டு தமிழ் திரையுலகமும் அவரது ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவருக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சிம்பு ஆகியோர் உதவி செய்தனர். இந்த நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தவசியின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கு சீமையிலே படத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய தவசி, கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தார். பல படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் அவர் பேசிய “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனம் தான் அனைவரின் நினைவிற்கு வந்து தவசியின் நகைச்சுவை உணர்வை ஞாபகப்படுத்தி வந்தது.

திரையில் தனக்கென ரசிகர் வட்டத்தை கொண்ட நிலையில், அனைவரையும் சிரிக்க வைத்த தவசி, கடைசி காலத்தில் அழுது கொண்டே உயிரிழந்ததாக வெளிவந்துள்ள தகவலால் அவரது ரசிகர் வட்டம் மிகவும் கவலையில் ஆழ்ந்திருக்கிறது.

தமிழ்த் திரைப்பட உலகில் தன்னைப் போல பல துணை நடிகர்கள் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சிகிச்சைக்கு கூட வசதியின்றி தவித்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு பிபிசிக்கு அளித்த பேட்டியில் தவசி கூறியிருந்தார்.

அதில், தமிழ் துணை நடிகர்களுக்கு மருத்துவ வசதி வழங்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களின் துயர் துடைக்க அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தனது வாழ்வின் கடைசி நாட்களில் அவர் அழுது கொண்டே உயிரிழந்ததாக தவசியின் குடும்பத்துக்கு நெருக்கமான உறவினர்கள் தெரிவித்தனர். தவசியின் உடல் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு திங்கட்கிழமை இரவு கொண்டு செல்லபட்டது.

காதல் மனைவியை அழைத்துச் சென்று கணவன் செய்த கொ டூரம் : 5 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் கொ.லை செ ய் ய ப் ப ட் ட ச ம்பவத்தில், அவரது க ணவர் கை து செ ய்யப்பட்டு ள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டில் Meghashree என்பவர் பெங்களூருவின் Bommanahalli-வில் Begur பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.

அப்போது அவருக்கு தனது நண்பர்களான உஷா மற்றும் ரம்யாவின் உறவினரின் மகனாக இருந்த சுவாமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து Meghashree ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சுவாமி தபாவில் வேலை செய்து வந்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு Rajarajeshwarinagar-ல் இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் இவர்கள் பெங்களூருவின் Byadarahalli பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் பொருளாதார நெ ருக்கடி காரணமாக இருவருமே வாழ்க்கை நடத்துவது சி ரமமாக இருந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும், மைசூருவில் உள்ள கலாஸ்தவாடிக்கு மாறியுள்ளனர். ஆனால், அங்கு இருவருக்குமே க ருத்து வே றுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். அதன் படி காவல்நிலையத்திற்கு சென்றனர். இதைத் தொடர்ந்து Meghashree தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் ச ட ல மா க மீ ட் க ப் ப ட் டு ள் ளா ர்.

இது குறித்து பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22-ஆம் திகதி சுவாமி மனைவியை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

அப்போது அவர், கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் ஒன்றாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வோம் என்று கூறி, அவரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஒரு லாட்ஜுக்கு வரும்படி கூறியுள்ளார்.

அங்கு ஒரு நாள் இரவு முழுவதும் ஒன்றாக தங்கியுள்ளனர். அதன் பின் மார்ச் 23-ஆம் திகதி மாலை இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து சுவாமி, நாம் திருப்பலபுராவுக்குச் செல்வோம் என்று அழைத்துள்ளார். அப்போது இருவரும் போகும் வழியில் சுவாமி பனகட்டா கேட் அருகே சென்ற போது ம னை வி யை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ ய் து வி ட் டு, அ ங்கிருக்கும் கா ல்வாயில் வீ சி வி ட் டு த ப் பி யு ள் ளா ர்.

இதற்கிடையில், Meghashree தாயார் தன்னுட மகளை தே டி யு ள் ளா ர். ஆ னால் கி டைக்கவில்லை, இந்த சமயத்தில் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுவாமியின் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க, அதில் இருக்கும் முகவரியை வைத்து, அவர் கடந்த மாதம் 14-ஆம் திகதி திருமலபுராவுக்குச் சென்றுள்ளார்.

அங்கு, அவரிடம் அவர் தனது மகளைப் பற்றி கிராமவாசிகளிடம் விசாரித்தபோது, தன்னுடைய மகள் இங்கு இல்லை என்பது தெரியவர, அவர் பு கா ர் அளித்துள்ளார்.

அந்த புகாரில், அவர் தன்னுடைய ம க ள் கொ.லை செ ய் ய ப் ப ட் ட தா க வு ம், குறித்த கிராமத்தில் வசிக்கும் சிலர் தன்னிடம் கூறியதாக பு கா ரி ல் கு றிப்பிட்டுள்ளார்.

இதை அறிந்த ஒரு சில சமூக அமைப்புகளும், இது ஒரு கெளவுர கொ.லை எ ன்பது போல், சுவாமியை உடனடியாக கை து செய்யப்படும் போ ராட்டங்கள் ந டத்தினர்.

தற்போது இறுதியாக சுவாமியை பொலிசார் கை து செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் காவலில் வைத்துள்ளனர். இருப்பினும் தற்போது வரை மனைவியின் உ ட ல் க ண்டுபி டிக்கப்படவி ல்லை, பொலிசார் இது குறித்து தொடர்ந்து வி சா ர ணை மே ற்கொண்டு வ ருகின்றனர்.

வவுனியாவில் 28 வருட பாடசாலை வரலாற்றில் 185 புள்ளிகளை பெற்று மாணவன் சாதனை!!

மோர்சிபவன் கவின்..

வவுனியாவில் மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையின் 28 வருடகால வரலாற்றில் 185புள்ளிகளைப் பெற்று மோர்சிபவன் கவின் என்ற மாணவன்,

பாடசாலைக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் கே.வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது,

இவ்வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மகாறம்பைக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மோர்சிபவன் கவின் 185, பிரதீபன் டினுசியா 149, ரவிசங்கர் திருசிகா 149, தவராசா திவான் 139 , புண்ணியமூர்த்தி குயின்சிகா 130, கிருஷ்ணகுமார் டசைன் 116, சிவானந்தம் கீர்த்திகள் 109 பள்ளிகளையும் பெற்றுக்கொண்டனர் .

இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 185 புள்ளிகளைப் பெற்று மோர்சிபவன்கவின் பாடசாலைக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஏனைய அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று எமது பாடசாலைக்கு 100சதவீத சித்தியைப் பெற்றுத்தந்துள்ளார்கள் . இக்கிராமப்புற பாடசாலையில் 28 வருடப் பாடசாலை வரலாற்றில் இந்தவருடம் 185 எனும் அதிகூடிய புள்ளிகள் பெறப்பட்டமை விசேடமானதாகும்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இரு மாணவர்களும் 2019 ஆம் ஆண்டு ஒரு மாணவியும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவில் குப்பி விளக்கில் கல்வி கற்று சாதித்த மாணவி : சட்டத்தரணியாவதே இலட்சியம்!!

நிசாந்தன் நிதர்சனா..

நாட்டில் யு த்தம் நிறைவடைய முன்னரான காலப்பகுதியில் குப்பி விளக்குகளில் கல்விகற்று தமிழ் மாணவர்கள் பல்வேறு சாதனைகள் நிலைநாட்டியமை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் யு த்தம் நிறைவடைந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்விகற்றல் செயற்பாடுகளில் பல்வேறு பரிணாமங்கள் கண்டுள்ளோம்.

எந்த நிலையிலும் யு த்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வீட்டிற்கு மின்சார இணைப்பு கூட இல்லாத நிலையிலும் குப்பி விளக்கில் கல்வி கற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் நிலை பெற்று உடையார் கட்டு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையின் மாணவி நிசாந்தன் நிதர்சனா சாதித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம்5 புலமை பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள். இவர்களில் நிசாந்தன் நிதர்சனா என்ற மாணவி 194 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்துள்ளார்.

நாளாந்தம் கூலி தொழில் செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தில் முதற் பிள்ளையாகப் பிறந்த நிதர்சனா சிறுவயதிலிருந்து பாடசாலையில் இடம்பெறும் பரீட்சைகளில் முதல் நிலையினை பெற்று பாடசாலையில் இடம்பெறும் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குரவில் பகுதியில் வாழ்ந்து வரும் இந்த மாணவியின் வீட்டிற்கு இதுவரை மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள முடியவில்லை.

வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவு வரை மின்சார இணைப்பு வந்துள்ள போதும் இவர் மின்சாரம் இல்லாத வீட்டிலேயே குப்பி விளக்கில் கல்விகற்றுச் சித்தியடைந்துள்ளார்.

எந்த வித பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லாமல் பாடசாலை கல்வியும் வீட்டுக்கல்வியுமாகக் கல்விகற்று வந்த மாணவி கொரோனா காலத்தில் பாடசாலை இல்லாத நிலையில் தொலைபேசி ஊடக ஆசிரியர்கள் அனுப்பும் வினாக்கொத்துக்களை சரியா படித்து விடை எழுதியதுடன் சந்தேகங்களைப் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டு கல்வி கற்று இந்த சாதனையினை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த சட்டத்தரணியாக வந்து கிராமத்தில் பணிசெய்யவேண்டும் என்றும் நிதர்சனா தெரிவித்துள்ளார். குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவ முன்வரவேண்டுமென நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

27 வயதுப் பெண்ணுக்கு நடந்த வி பரீதம் : வீட்டுக்கு சென்ற தந்தை மகள் கையில் கண்ட காட்சி!!

சவுமியா..

தமிழகத்தில் தி ருமணமான இ ளம் பெ ண் ம ர் ம மா ன மு றையில் உ யி ரி ழ ந் த ச ம்பவம் தொ டர்பில் இ ருவர் கை து செ ய்யப்பட்டு ள்ளனர். கேளம்பாக்கத்தை சே ர்ந்தவர் தினேஷ்ராம் (33). இ வருக்கும் சவுமியா (27) எ ன்ற பெ ண்ணுக்கும் சி ல ஆ ண்டுகளுக்கு மு ன்னர் கா த ல் தி ருமணம் ந டந்தது.

இ ந் த த ம் ப தி க் கு ஒ ரு பெ ண் கு ழ ந் தை உ ள் ள து. இ ந் நி லை யி ல் சவுமியாவை அ வ ர து க ண வ ர் தினேஷ்ராம் ப ண ம் கே ட் டு அ டி க் க டி தொ ந் த ர வு செ ய் த தா க கூ ற ப் ப டு கி ற து. இ தை ய டு த் து க ட ந் த மா த ம் சவுமியாவின் த ந் தை ரூ.1 ல ட் ச ம் கொ டு த் து ள் ளா ர்.

இ ருப்பினும் க ணவர் தினேஷ்ராம், சவுமியாவுக்கு தொ டர்ந்து தொ ந் த ர வு கொ டுத்து வ ந்ததாக தெ ரிகிறது. இ ந்த நி லையில் நே ற்று கா லை 11 ம ணி அ ளவில் தினேஷ்ராம், சவுமியாவின் அ ப்பாவை தொ டர்பு கொ ண்டு அ வ ர் இ ற ந் து வி ட் ட தா க கூ றி போ னை து ண் டி த் து வி ட் டா ர்.

அ தி ர் ச் சி அ டை ந் த சவுமியாவின் பெ ற்றோர் கேளம்பாக்கத்திற்கு வ ந்தனர். சவுமியாவின் இ ட து கை யி ல் வெ.ட்.ட.ப்.ப.ட்.ட த ழு ம் பு இ ருந்ததை பா ர்த்து அ தி ர் ந் து போ யினர்.

இ தையடுத்து கா வ ல் நி லையத்துக்கு செ ன்ற பெ ற்றோர், த ங்கள் ம களின் சா வி ல் ம ர் ம ம் உ ள்ளது. அ வ ரை அ.டி.த்.து.க் கொ.லை செ ய் து ள் ள ன ர் எ ன்று பு கா ர் கூ றினர்.

இ தை ய டு த் து பொ லி சா ர் சவுமியாவின் உ ட லை கை ப் ப ற் றி பி ரே த ப ரி சோ த னை க் கா க செங்கல்பட்டு அ ர சு ம ரு த் து வ ம னை க் கு அ னு ப் பி வை த் த ன ர். மே லு ம் சவுமியாவின் க ண வ ர் தினேஷ்ராம், மா ம னா ர் பாலச்சந்தர் ஆ கி யோ ரை கை து செ ய் து வி சா ரி த் து வ ரு கி ன் ற ன ர்.

முல்லைத்தீவில் பிறந்து 10 நாளான குழந்தைக்காக ஏணை கட்ட முயற்சித்த தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இருட்டுமடு பகுதியில் தனது குழந்தைக்காக ஏணை கட்ட முற்பட்ட குடும்பஸ்தர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இருட்டு மடுவினை சேர்ந்த இராமசாமி மோகன்றாச் (36 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றுமுன் தினம் ஏணை கட்ட முற்பட்ட நிலையில் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஏணை கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமையானது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் விபத்திற்கு இலக்கானவரை காப்பாற்ற சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!!

பனிக்கநீராவியில்..

வவுனியா – பனிக்கநீராவியில் இடம்பெற்ற தொடர் விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து மரக்கறியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் மூவர் அவருக்கு உதவி செய்வதற்காக சென்ற போது வேகமாக வந்த மகேந்திரா ரக வாகனமொன்று குறித்த நால்வர் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பில் திடீரென சுகயீனமடைந்த கர்ப்பிணிப் பெண் மரணம்!!

கர்ப்பிணிப் பெண் மரணம்..

கொழும்பில் கர்ப்பிணி பெண்ணொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த பெண் திடீர் சுகயீனமடைந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அந்த வைத்தியசாலை கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமையினால் அவரை களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது. அதற்கமைய அந்த பெண் அழைத்து வரப்பட்ட வாகனத்திலேயே களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலை கொரோனா வைத்தியசாலையாக பெயரிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஒரு பகுதி சாதாரண நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் சித்ரமாலிடி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்தமையினால் சாதாரண நோயாளிகளின் பகுதிகளும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் உயிரிழந்த கர்ப்பிணி பெண் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்ட போது வைத்தியசாலையின் நோயாளர்காவு வண்டியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. மேலும் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா நகரசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 88 68 8000 ரூபா நிதி ஒதுக்கீடு!!

வவுனியா நகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் 19.11.2020 அன்று சபையின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பாதீட்டில் வீதி திருத்தம், வீதிவிளக்குகள், டெங்குக் கட்டுபாடு, நகரை அழகுபடுத்தல், திண்மக்கழிவு முகாமைத்துவம், மரம்நடுகை, கர்ப்பிணி தாய்மாருக்கான பால்மா வழங்கல், வடிகால்கள் புனரமைப்பு போன்ற தலைப்பின் கீழ் செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டு 88688000.00 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு

வட்டாரம்-1 தாண்டிக்குளம்-4000000

திருநாவற்குளம் : 5ம்ஒழுங்கை உள்ளகவீதி கல்லிட்டு தாரிடல்-100000.00, முதியோர் முற்றவீதி நகரசபை விடுதி கிரவலிட்டு தாரிடல்-800000.00, தாய்சேய் தற்காலிக அறை புனரமைப்பு திருநாவற்குளம்-100000.00, குருமன்காடு கிராம அபிவிருத்தி சங்க பின் வீதி கிரவலிட்டு தாரிடல்-800000.00, பத்தினியார் மகிழங்குளம் 2ம் ஒழுங்கை மரக்காரம்பளை வீதி 2ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1000000.00, வட்டார புதிய மின்விளக்குகள் பொருத்தல்-200000.00, குப்பைத்தொட்டி வழங்கல்-100000.00

வட்டாரம்-2 பட்டாணிச்சிபுளியங்குளம்-4000000.00

வேப்பங்குளம் 6ம் ஒழுங்கை 2ம் ஒழுங்கை(அறபாவீதி) கல்வெட்டு அமைத்தல் தாரிடல்-2000000.00, 60 ஏக்கர் ரகு பாக்கம் உள்ளக வீதி கல்லிட்டு தாரிடல்-500000.00, உஸ்மானியா வீதி 3ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1500000.00

வட்டாரம்-3 பண்டாரிகுளம்-4000000.00

திருச்செந்தூர் மில் வீதி கல்லிட்டு தாரிடல்-700000.00, யாழ் ஐஸ்கிறீம் சந்தியில் இருந்து சூசையப்பர் வீதி வரை கல்லிட்டு தாரிடல்-800000.00, குலோப் மில் வீதி மிகுதி வடிகால்-1000000.00, பண்டாரிகுளம் 4ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-700000.00, நாவலர் வீதி கல்லிட்டு தாரிடல்-800000.00

வட்டாரம்-4 வைரவபுளியங்குளம்-4000000.00

வைரவபுளியங்குளம் புகையிரத வீதி 4ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1200000.00, வைரவபுளியங்குளம் புகையிரத வீதி 6ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-800000.00, ஆதிவிநாயகர் கோவிலுக்கு பக்கமாக உள்ள வீதிக்கு கல்லு பதித்து தார் இடலும் வடிகால் அமைத்தலும்-2000000.00

வட்டாரம்-5 குடியிருப்பு – 4000000.00 : குடியிருப்பு சனசமூக நிலையம் அமைத்தல் – 4000000.00

வட்டாரம்-6 கடைவீதி-4000000.00

கற்குழி 1ம் குறுக்குத்தெரு மீதி வேலை கல்லிட்டு தார் இடலும் வடிகால் அமைத்தலும்-1200000.00, கற்குழி 1ம் குறுக்குத்தெரு 1ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல் – 800000.00, தர்மலிங்கம் வீதி இரு புறமும் வடிகால் அமைத்தல்-1500000.00, இறம்பைக்குளம் மயான பக்க கோவில் வீதி-500000.00

வட்டாரம்-7 மூன்றுமுறிப்பு-4000000.00

டிப்போ பின்புற வீதி-1000000.00, 13ம் ஒழுங்கை வடிகால் புனரமைப்பு-800000.00, தேக்கம் தோட்டம் மயான மதில் மீதி வேலை-500000.00, ஆலடி வீதி கல்லிட்டு தாரிடல்-700000.00, மூன்றுமுறிப்பு 3ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-1000000.00

வட்டாரம்-8 இறம்பைக்குளம்-4000000.00

ஹொரவப்பொத்தன வீதியில் முதலாவது கி.மீ தூணுக்கு அருகில் இருக்கும் ராணி மில்லிற்கு போகும் பாதை புனரமைப்பு செய்தல்-2000000, சூசைப்பிள்ளையார்குளம் வடிகால்-800000, சூசைப்பிள்ளையார்குளம் 2ம் குறுக்குத்தெரு வடிகால்-1200000

வட்டாரம்-9 சின்னப்புதுக்குளம்-4000000

சின்னப்புதுக்குளம் ராணி மில்வீதி-3ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல்-800000.00, சிவன் கோவில் முன் ஒழுங்கை சின்னப்புதுக்குள இணைப்பு வீதி கல்லிட்டு தாரிடல்-700000.00, சின்னப்புதுக்குளம் 1ம் ஒழுங்கை குளப் பள்ளவீதி வடிகாலமைப்பு – 500000.00, 1ம் வீதி வளைவில் பாலம் அமைத்தல்-300000.00, 2ம் வீதியின் குறுக்கு வீதியில் பாதை புனரமைப்பு-700000.00, நீர் ஓடும் வடிகால் அமைத்தல் வெளிக்குளம்-1000000.00

வட்டாரம்-10 கோவில்குளம்-4000000.00

கோவில்குளம் 9ம் ஒழுங்கை கல்லிட்டு தாரிடல் – 2000000.00, செபஸ்ரியார் கோவில் வீதி கோவில்புதுக்குளம் கல்லிட்டு தாரிடல் – 1200000.00, கோவில்புதுக்குளம் 2வது வீதி கல்லிட்டு தாரிடல்-800000.00

வட்டார பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்-10500000.00

வீதி விளக்குகள் மற்றும் நகர அழகு படுத்தல்-2500000.00, வீதி திருத்தப்பொருட்கள் கொள்வனவு-3000000.00, விசேட டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுத்தப்படுத்தல்-5000000.00

வருமான மேம்பாடு-8650000.00

பொதுநூலகம் பூங்கா மேம்படுத்தல்-2000000, ஆதன மீள் மதிப்பீடு சொத்து முகாமைத்துவம்-2600000, ஆதனவரி நிலுவை அறவீட்டு தரகுக் கட்டணம்-2000000, உடல் வலுவூட்டல் பயிற்சியாளர் நியமித்தல் மேம்படுத்தல – 550000, குத்துச்சண்டை அறை பூரணப்படுத்தல்-500000, நகரசபை மைதான வடிகால் அமைத்தல்-1000000

நகர சபை நிர்வாகம்-21600000

அலுவலகத்திற்கு சூரிய மின்கலம் பொருத்துதால்-4000000.00, நகரசபை அலுவலக உபகரணங்கள் கொள்வனவு-1100000.00, உபகரணங்கள் கொள்வனவு வேலைப் பகுதி-400000.00, நூலக தளபாடம் உபகரண மற்றும் புத்தக கொள்வனவு-400000.00, நகரசபைக்கு சொந்தமான கட்டடங்கள் திருத்தம் மற்றும் பாராமரிப்பு-2000000.00, பாதுகாப்பு சேவைக்கட்டணம்-13200000.00, ஆளனி பயிற்சியும் மனிதவள அபிவிருத்தியும்-500000.00

திண்மக்கழிவு முகாமைத்துவம்-5188000.00

திண்மக்கழிவு சேகரிப்பு இடம் புனரமைத்தல்-3000000.00, திண்மக் கழிவு மீள் சுழற்சி-2000000.00, கழிவுப் பொதிகள் கொள்வனவு-188000.00

சமூக மற்றும் பொது விடயங்கள் – 2750000.00

கர்ப்பிணி தாய்மாருக்கு பால்மா வழங்கல் – 200000.00, மரநடுகை மற்றும் கலாச்சார மற்றும் ஏனைய நிகழ்வுகள்-500000.00, உள்ளுராட்சி வாரம் மற்றும் நடமாடும் சேவை-100000.00, தேசியவாசிப்பு மாத நிகழ்வுகள்-250000.00, குருமன்காடு முதியோர் முற்றம் புனரமைத்தல்-500000.00, பூந்தோட்டம் மைதானம் வேலி அமைத்தல் – 1000000.00, பண்டாரவன்னியன் பூங்கா நெற் அடித்தல் – 200000.00

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையும் தோல்வி!!

செட்டிகுளம் பிரதேச சபை..

சுதந்திரக் கட்சி வசமுள்ள வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரு மேலதிக வாக்குகளால் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளது.

வவுனியா செட்டிகுளம் பிரதே சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 05, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 04, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப் 03, ஐக்கிய தேசியக் கட்சி 02, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 01, முஸ்லிம் காங்கிரஸ் 01, பொதுஜன பெரமுன 01 என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (07 உறுப்பினர்கள் ஆதரவுடன்) ஆட்சியமைத்திருந்தது.

இந்நிலையில் பாதீடு மீதான இரண்டாவது தடவை வாக்கெடுப்பு இன்று (23.11) நடைபெற்ற நிலையில் தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு-5, ஈபிஆர்எல்எப்-3, தமிழ் தேசிய மக்கள் முன்னணி-1 என்பன ஒன்று சேர்ந்து 9 உறுப்பினர்கள் இணைந்து வாக்களித்து பாதீட்டை தோல்வி அடையச் செய்தனர்.

பாதீட்டுக்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும், பாதீட்டுக்கு எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடுநிலமை வகித்திருந்தார்.