இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை ஆபத்துகள் குறித்த வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று 08.30 மணியளவில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை இரவு 8.30 மணி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களும் தற்போது கடுமையான மழை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளன.
திடீர் வெள்ளம், மண் சரிவுகள், ஆறுகள் நிரம்பி வழிகின்றன, பலத்த காற்று மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், குறித்த மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமை தொடர்பிலும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகிறது.
மேலும், “நிலவும் வானிலை காரணமாக விமான அட்டவணைகள் அல்லது தரைவழி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று அதிகாரியொருவர் கூறியதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை
இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மி.மீற்றருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும்,
வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது (60-70) கி.மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் விபத்து அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 10 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 17 முதல் இன்று (27) வரை, 17 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன,
மேலும் 79 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் இன்னும் காணவில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் 18 இறப்பு
இதே நேரத்தில், பேரிடர் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் காரணமாக 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தில் 18 இறப்புகளும், சபரகமுவ மாகாணத்தில் 7 இறப்புகளும், மத்திய மாகாணத்தில் 4 இறப்புகளும், தெற்கு மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் தலா ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.
பதுளை – கந்தேகெதர – கெடவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீடொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மூடப்பட்டுள்ளதாக, நேற்று (26) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த வீட்டை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். உயிரிழந்தவர் ஹாலிஎல – கெடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய கந்தேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் செயலியை பயன்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இவ்வாறான பகுதிகளின் சில இடங்களில் மின்தடை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
அறிவிப்பு
இந்த நிலையில் நாடு முழுவதும் மின் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான சூழலிலேயே இலங்கை மின்சார சபையின் தொலைபேசி பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் பொது கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது இன்று (26) பிற்பகல் 03.45 மணி வரை செல்லுபடியாகும்.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, நேற்று (25) காலையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நவம்பர் 25 முதல் 29 வரை நிலவவுள்ள இந்த மோசமான வானிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மொரட்டுவ பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சட்டவிரோத பணத்தில் வீடு மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்தமை குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு சம்பாதித்த பணத்தில் அந்த நபர் தனது மனைவியின் பெயரில் பாணந்துறை பகுதியில் 10 பேர்ச்சஸ் நிலத்தை வாங்கி அதில் இரண்டு மாடி வீடு கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாகப் பெற்ற வீடு மற்றும் சொத்துக்களை வாங்கிப் பயன்படுத்தியதற்காக குறித்த நபரின் மனைவி கடந்த 21 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மறுநாள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் முதல் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26.11.2025) இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
குருநாகல் மாவட்டத்தின் அலவ்வ ராகுல மகா வித்தியாலத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை நிலையத்திற்கு பரீட்சை எழுத சென்ற மாணவி தற்செயலாக வேறொரு ரயிலில் ஏறியதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவியை, பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது.
முதல் முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 19 வயது மாணவி, அலவ்வ செல்லும் நோக்கத்துடன் மீரிகம ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் ஏறியுள்ளார்.
எனினும், சனிக்கிழமை காலை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதால், ரயில் அலவ்வ ரயில் நிலையத்தில் நிற்காமல் பயணித்துள்ளது.
இதனையடுத்து தவறான ரயிலில் ஏறியமை குறித்து மாணவி அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார்.
இதன் போது குறித்த ரயிலில் பயணித்த விரிவுரையாளர் சுரஞ்சித் ரத்னபால, மாணவியை சமாதானம் செய்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.
ரயில் சிக்னலில் நிறுத்தப்படும் போது இறங்கி முச்சக்கர வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறும் அதற்கான நிதியுதவி தருவதாக ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமான செயல்
எனினும் அங்கிருந்து வயல்வெளிகளால் சென்று முச்சக்கர வண்டியை பிடிக்க கால அவகாசம் எடுக்கும் என்பதால், மாணவி மேலும் கலக்கமடைந்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட விரிவுரையாளர் சுரஞ்சித், ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் தனது பல்கலைக்கழக நண்பரான சஜித் விக்ரமசிங்கவுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளார்.
மனிதாபிமானத்தை மனதில் கொண்டு தனது கடமையை மீறி செயல்பட்ட சஜித் விக்ரமசிங்க, உடனடியாக பொல்கஹவெல நிலைய அதிபரை அழைத்து கண்டியிலிருந்து கொழும்புக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை பொல்கஹவெலவில் நிறுத்த ஏற்பாடு செய்தார்.
அதற்கமைய, மாணவி சென்ற ரயில் பொல்கஹவெலவை அடைந்தவுடன், நிறுத்தப்பட்டிருந்த மற்ற ரயிலில் அவரை ஏற்றி அலவ்வவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த மாணவி அலவ்வவில் இறங்கியதும் முச்சக்கர வண்டியின் மூலம் உரிய பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்கான ஒழுங்குகளை, ரயில்வே பாதுகாப்பு அதிகாரி நிமல் ரூபசிங்க மேற்கொண்டிருந்தார்.
காதலன் மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதனை உண்மை செய்தி என்று நம்பி கதறியழுது கொண்டிருந்த பள்ளி மாணவி, மன அழுத்தத்தில் கிராம தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தீபான்ஷு மற்றும் 15 வயது ஜோயா கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
குடும்பங்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உறவைத் தொடர்ந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீபான்ஷு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
இந்தச் செய்தி ஜோயாவுக்கு சென்ற போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டது.
காதலன் மரணமடைந்தார் என்ற நம்பிக்கையில் அதிர்ச்சி அடைந்த ஜோயா, தாங்க முடியாத துயரத்தில் பெண் கிராமத் தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் உண்மையில் தீபான்ஷு உயிருடன் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது பின்னர் தெரியவந்தது. தவறான தகவல் காரணமாக சிறுமி உயிரிழந்த இந்த நிகழ்வு, மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சமூகத்தினர் மத்தியில் பதற்றம் அதிகரித்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வைக்க கூடுதல் பாதுகாப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
சட்டீஸ்கர் மாநிலத்தின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், LKG பயிலும் 4 வயது மாணவன் வீட்டுப்பாடம் முடிக்காமல் பள்ளிக்கு வந்துள்ளார்.
அந்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைகளான காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன், மாணவரை மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர்.
4 வயது மாணவரின் சட்டையில் கயிற்றை கட்டி அவரை மரத்தில் தொங்க விட்ட கொடுஞ்செயலை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த வீடியோ கல்வித்துறையின் கவனத்துக்கு சென்றுள்ள நிலையில், உடனடியாக அதிகாரி ஒருவர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
ஆசிரியரின் நடவடிக்கை தவறு என ஒப்புக்கொண்ட அவர், மாவட்ட கல்வி அதிகாரி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிவித்துள்ளார்.
4 வயது மாணவர் நல்ல உடல்நிலையில் இருந்தாலும், இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.